இந்தப் பகுதி புவியியல் மற்றும் இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதால், இது மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்து வருகிறது - ஆனால், இது இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பையும் வழங்குகிறது.
30-வது காலநிலை மாநாட்டில் இருந்துவரும் செய்தி தெளிவாக உள்ளது: உலகம் ஏற்கனவே 1.5°C வெப்பமயமாதல் வரம்பைத் தாண்டிவிட்டது. மேலும், வேகமாக செயல்பட இன்னும் சிறிது காலம் மட்டுமே உள்ளது. பாரிஸ் ஒப்பந்தம் போதுமான அளவு செய்யாததால், உலகளாவிய தெற்கு அமைப்பின் தலைமையில் காலநிலை நடவடிக்கைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களான நாங்கள், பிராந்திய காலநிலை ஒத்துழைப்பை முன்மொழிகிறோம்
என்று தங்களது கருத்தை தெரிவித்தனர். இது தெற்காசிய நாடுகள் தங்கள் வளங்கள், அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து காலநிலை சவால்களை ஒன்றாகச் சமாளிக்க அனுமதிக்கும்.
2050ஆம் ஆண்டுக்குள், தெற்காசியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1.8 சதவீத இழப்புகள், கடுமையான வெப்பம், கடல் மட்ட உயர்வு, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ஏற்படக்கூடும். மேலும், உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார மரபுகளுக்கு ஏற்படும் மீளமுடியாத இழப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், கூட்டாகச் செயல்பட இப்பகுதியை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன.
தெற்காசிய நாடுகள் பரஸ்பர நன்மை பயக்கும் காலநிலை நடவடிக்கைகளை செயல்படுத்தும் நிறுவன வழிமுறைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். தெற்காசிய காலநிலை ஒத்துழைப்பு கவுன்சில் (South Asian Climate Cooperation Council (SACCC)) என்ற பிராந்திய குழுவை உருவாக்குவது ஒரு முக்கிய படியாகும். பிராந்திய அமைப்புகளை உருவாக்குவதில் கடந்தகால தோல்விகள் நம்மைத் தடுக்கக்கூடாது. 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு குவாட் உருவானது. நேபாள பூகம்பம் மற்றும் மாலத்தீவு நீர் நெருக்கடி போன்ற நெருக்கடிகளின்போது தெற்காசிய நாடுகள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தேவையான உதவியை செய்துள்ளன.
எல்லை தாண்டிய எரிசக்தி ஒத்துழைப்பு முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும். எரிசக்தி ஒத்துழைப்புக்கான 2014ஆம் ஆண்டு சார்க் கட்டமைப்பு ஒப்பந்தம் பிராந்திய மின்சார வர்த்தகத்தை அனுமதிக்கிறது. இந்தியாவின் மின் கட்டமைப்பு மூலம் நேபாளத்திலிருந்து வங்கதேசத்திற்கும் ஒரு முத்தரப்பு மின்சார பரிவர்த்தனை செயல்பாட்டில் உள்ளது. மேலும், ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு மின் கட்டமைப்பு திட்டம் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு இடையே ஆழமான எரிசக்தி ஒருங்கிணைப்புக்கு வழங்குகிறது.
முன்மொழியப்பட்ட தெற்காசிய காலநிலை ஒத்துழைப்பு கவுன்சிலை (South Asian Climate Cooperation Council (SACCC)) மூன்று தூண்கள் வழிநடத்த முடியும். முதலாவதாக, ஒரு பிராந்திய அறிவு மற்றும் புதுமை மையம். தெற்காசியா முழுவதும் இணைந்து நிர்வகிக்கப்படும் மையங்கள் பூர்த்தி செய்யும் பலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலத்தீவுகள் கடல்சார் பகுதிகளுக்கான பவளப்பாறை மறுசீரமைப்பு, மீன்வளம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு கடலோர காலநிலை மீள்தன்மை மையத்தை நடத்த முடியும். இலங்கையின் 30×30 மற்றும் “Life to Our Mangroves” திட்டங்களின் மூலம் இயற்கை சார்ந்த தீர்வுகளை மேம்படுத்த முடியும். பூட்டானின் “Gelephu Mindful City” மற்றும் இந்தியாவின் Mission “LiFE” ஆகியவை நிலையான நகரங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை விரிவுபடுத்த முடியும். இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணத்துவம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வளர்க்கவும், தெற்காசியா முழுவதும் பிராந்திய மின்கட்டமைப்பு ஒருங்கிணைப்பைகளை இணைக்க உதவும்.
இரண்டாவதாக, தெற்காசிய பசுமை காலநிலை நிதி வசதி (green climate finance facility) நிதியுதவியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும். வளங்களைத் திரட்டுவதன் மூலம், அது சர்வதேச நிதிகளை சிறப்பாகப் பயன்படுத்தலாம் மற்றும் முக்கியமான, தயாராக உள்ள திட்டங்களை ஆதரிக்கலாம். ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி அல்லது பசுமை காலநிலை நிதி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன்மூலம், அது பத்திரங்களை வெளியிடலாம், முதலீட்டு அபாயங்களைக் குறைக்கலாம் மற்றும் காலநிலை நிதியை ஈர்க்க திட்ட இலாகாக்களை உருவாக்கலாம்.
மூன்றாவதாக, தெற்காசியாவிற்கான ஒரு அறிவியல் ஆணையம், தேவையான காலநிலை நடவடிக்கைகளின் வகை, அளவு மற்றும் வேகம் குறித்து சுயாதீனமான, ஆதார அடிப்படையிலான வழிகாட்டுதலை வழங்கும். இது மலிவு விலையில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிக்கும்; தரவு பகிர்வை ஊக்குவிக்கும் மற்றும் பல்வேறு நாடுகளின் சிறந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தும். உள்ளூரில் வழிநடத்தப்படும் தெற்காசிய அணுகுமுறை அமைதியை ஊக்குவிக்கும் மற்றும் வளமான, காலநிலை-பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
ஆசிரியர்கள் முறையே இந்தியா, பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
original link:
South Asia needs climate solidarity.