பிரதமர் மோடி குறிப்பிட்ட, “இந்து வளர்ச்சி விகிதம்” (Hindu rate of growth) மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு வளர்ந்தது?

இந்து வளர்ச்சி விகிதம் : 1991 தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியா இந்து வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருந்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தரவுகள் குறிப்பிடுகின்றன. இதை பொருளாதார நிபுணர் பல்தேவ் ராஜ் நாயர் 2006-ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் வார இதழின் கட்டுரையில் கருத்தை முன்வைத்தார்.


"இந்து வளர்ச்சி விகிதம்" என்ற வெளிப்பாடு முந்தைய பத்தாண்டுகளில் இந்தியாவின் மெதுவான பொருளாதார செயல்திறனை அதன் மக்களின் நம்பிக்கை மற்றும் அடையாளத்துடன் இணைத்த ஒரு காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


"இந்தியா 2-3 சதவீத வளர்ச்சியுடன் போராடியபோது இந்து வளர்ச்சி விகிதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது," என்று பிரதமர் இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கூறினார். "இந்த வார்த்தையைப் பயன்படுத்தி நமது முழு நாகரிகத்திற்கும் உற்பத்தித்திறன் குறைவு மற்றும் வறுமை என்ற முத்திரை கொடுக்கப்பட்டது. அப்போது யாரும் அதை வகுப்புவாதமாகக் கருதவில்லை."

இந்து வளர்ச்சி விகிதம் (Hindu rate of growth) என்றால் என்ன?


இந்து வளர்ச்சி விகிதத்தில் "இந்து" என்ற சொல் உண்மையில் எதிர்மறையான அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை. தி நியூ ஆக்ஸ்போர்டு கம்பேனியன் டு எகனாமிக்ஸ் இன் இந்தியா பத்திரிகையின் படி, பொருளாதார நிபுணர் ராஜ் கிருஷ்ணா இந்த சொற்றொடரை "நீண்ட காலமாக இந்தியா அனுபவித்த 3.5 சதவீத வளர்ச்சி விகிதத்திற்கு கவனத்தை ஈர்க்கும் நோக்கில் ஒரு விவாத சாதனமாக" பயன்படுத்தினார். அரசாங்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், போர்கள், பஞ்சங்கள் மற்றும் பிற நெருக்கடிகள் மூலம் இந்த வளர்ச்சி விகிதம் நிலையாக இருந்தது. அது அவருக்கு ஒரு உள்ளார்ந்த கலாச்சார நிகழ்வாக மாறியது. அதனால்தான் அவர் அதற்கு அந்தப் பெயரைக் கொடுத்தார்”.


குறிப்பாக, கிருஷ்ணாவின் கருத்துக்கள் அந்தக் கால காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களின் கருத்துகளிலிருந்து வேறுபட்டன. சக பொருளாதார நிபுணர் புலப்ரே பாலகிருஷ்ணன் அவரை "சிகாகோவில் பயிற்சி பெற்றவர். அந்தக்கால அரசியல் சூழலில், ஓரளவு வலதுசாரி என்ற நற்பெயரைக் கொண்டவர்" என்று "இந்தியாவின் மீட்பு: நேரு காலத்தில் பொருளாதார வளர்ச்சி" (The recovery of India: Economic growth in the Nehru era) என்ற தனது கட்டுரையில் விவரித்தார்.


இந்து வளர்ச்சி விகிதத்திற்கு நேரு காரணமா?


பேராசிரியர் பாலகிருஷ்ணன், உமா கபிலாவின் ”சுதந்திரத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம்” (Indian Economy since Independence) என்ற கட்டுரையில் நேரு காலத்தில் (1951-64) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பகுப்பாய்வு செய்தார். காலனித்துவ ஆட்சியின்போது (1900-1946) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதங்கள் 0.9% மற்றும் 0.1%-ஆக இருந்து 1950-1964-ஆம் ஆண்டுகளில் 4.1% மற்றும் 1.9%-ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேபோல், இந்தியாவின் 4.1% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதே காலகட்டத்தில் சீனாவின் 2.9%-ஐ விட அதிகமாக இருந்தது. அதேநேரத்தில், கொரியாவின் 6.1%-ஐ விட பின்தங்கியிருந்தது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் 1820 மற்றும் 1992-க்கு இடையில் 3.6%, 1.9% மற்றும் 2.8% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்டிருந்தன.


1970-களின் பிற்பகுதி வரை இந்தியா 100 பொருளாதாரங்களுக்குக் கீழே தரவரிசைப்படுத்தப்பட்டது என்ற ராஜ் கிருஷ்ணாவின் கூற்று தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று பேராசிரியர் பாலகிருஷ்ணன் வாதிட்டார். இது "நேரு காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அளவை மறைத்தது" என்றும் அவர் வாதிட்டார். குறிப்பாக, மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுதோறும் 0.8%-ஆக இருந்த (1900-1946) நேரு காலத்தில் 2%-ஆக அதிகரித்தது. மக்கள்தொகை வளர்ச்சி காலனித்துவ விகிதத்தில் இருந்திருந்தால், தனிநபர் வருமான வளர்ச்சி 3%-ஐத் தாண்டியிருக்கும். இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விகிதங்களைவிட (1820-1992) இரு மடங்கிற்கும் அதிகமாகவும், ஜப்பானை விஞ்சியதாகவும் இருக்கும்.


1982-ம் ஆண்டில், திறன் மேம்பாடு மற்றும் தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமாகும் என்று பொருளாதார நிபுணர் கிருஷ்ணா எடுத்துரைத்தார். "இன்று நாம் ஒரு பெரிய அளவிலான தன்னிறைவைப் பற்றி பெருமை கொள்ள முடிந்தால், அது உலோகவியல், இயந்திரவியல், வேதியியல், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் கணிசமான திறன் உருவாக்கப்பட்டுள்ளதால்தான். இந்தத் துறைகள் பாதுகாப்பு, பெரிய அளவிலான நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, சிறு தொழில் மேம்பாடு மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு சமமாக இன்றியமையாதவை என்பதால் அவை அடிப்படையானவை," என்று அவர் கூறினார்.


இந்தியா எப்போது இந்த வளர்ச்சி விகிதத்தை மிஞ்சியது?


1991 தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே இந்தியா இந்து வளர்ச்சி விகிதத்தை விஞ்சியிருந்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தரவுகள் குறிப்பிடுகின்றன. இதை பொருளாதார நிபுணர் பல்தேவ் ராஜ் நாயர் 2006-ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் வார இதழின் (Economic and Political Weekly) கட்டுரையில் வாதிட்டார். தாராளமயமாக்கல் வளர்ச்சியை தீவிரப்படுத்தினாலும், "பொருளாதார வல்லுநர்களின் சமீபத்திய ஆய்வுகள் காட்டியுள்ளபடி, 1980-களின் அமைப்புக்குள் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் சமமாக உண்மை" என்று அவர் கூறினார்.


1956 மற்றும் 1975-க்கு இடையில், இந்தியாவின் சராசரி ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.4%-ஆக இருந்தது. இது இந்து வளர்ச்சி விகிதத்துடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், 1981 மற்றும் 1991-க்கு இடையில் சராசரியாக வளர்ச்சி 5.8%-ஆக இருந்தது. இது 1991 நெருக்கடி மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஒரு முழு பத்தாண்டிற்கு முன்பு. அரவிந்த் விர்மானி மற்றும் அரவிந்த் பனகாரியா போன்ற பொருளாதார வல்லுநர்கள் 1980 அல்லது 1980களை திருப்புமுனையாக அடையாளம் கண்டுள்ளனர். இந்திரா காந்தி (அவசரநிலைக்குப் பிந்தைய) மற்றும் ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்களை அவர்கள் பாராட்டுகிறார்கள்.


தாராளமயமாக்கலின் முதல் கட்டம் அவசரநிலையின் ஆண்டான 1975-ல் தொடங்கியது என்று நாயர் வாதிடுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1976 முதல் 2006 வரை சராசரியாக 5.6%-ஆக இருந்தது, இது இந்து விகிதத்தைவிட மிக அதிகம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

original link:

What is the Hindu rate of growth mentioned by PM Modi, and how did India’s economy grow after Independence?

 

Share: