தமிழ்நாடு அரசு கோயில் நிலங்களின் விற்பனை, பரிமாற்றம், குத்தகை மற்றும் அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்துள்ளது. -முகமது இம்ரானுல்லா



மத நிறுவனங்களின் அசையாச் சொத்துக்களை (Alienation of Immovable Property) அந்நியப்படுத்துதல் விதிகள், 2025 விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.


கோயில் நிலங்களை விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்தல், குத்தகைக்கு விடுதல் அல்லது அடமானம் வைப்பதற்கு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை வகுத்து, மத நிறுவனங்களின் அசையாச் சொத்துக்களை அந்நியப்படுத்துதல் விதிகள், 2025-ஐ தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.


கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் ஆஜரான இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் N.R.R. அருண் நடராஜன், புதிய சட்ட விதிகளை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட டிசம்பர் 1, 2025 அன்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததாகக் கூறினார்.


திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 9.74 ஏக்கர் நிலத்தை கல்லூரி பயன்படுத்தி வந்தது, மேலும் கோயிலின் நிலத்திற்கு ஈடாக வேறொரு இடத்தில் ஒரு பெரிய நிலத்தை வழங்கியது. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் (Sri Sivasubramaniya Nadar (SSN)) பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தபோது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 


1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவுகள் 166(1) மற்றும் 34(1) & (3)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி 2025-ஆம் ஆண்டில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இந்த புதிய விதிகள் மே 18, 1960 முதல் நடைமுறையில் இருந்த பழைய வருவாய்த் துறை விதிகளை மாற்றுகின்றன.


புறம்போக்கு நில விதிகள், அதில் பயன்படுத்தப்படும் 'நகர்ப்புறப் பகுதி' என்ற சொல், 2017-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை (Tamil Nadu Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules) விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றன.


2017ஆம் ஆண்டு விதிகளின்படி, "நகர்ப்புறப் பகுதி" என்பது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (Chennai Metropolitan Development Authority (CMDA)) எல்லைக்குள் உள்ள இடங்களையும், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இடங்களையும் உள்ளடக்கியது. கிராம பஞ்சாயத்துகளாக இருந்தாலும்கூட, இந்த நகர எல்லைகளைச் சுற்றி 8 கி.மீ வரையிலான அருகிலுள்ள பகுதிகளையும் இது உள்ளடக்கியது.


இந்தச் சொல்லின் வரையறை, மற்ற அனைத்து நகராட்சி அமைப்புகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மண்டலங்கள் மற்றும் பேரூராட்சிகளின் கீழ் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. எதிர்காலத்தில் தேவைப்படும் போதெல்லாம் அரசாங்கம் இந்த வரையறையில் கூடுதல் பகுதிகளைச் சேர்க்கலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.


கோயில் நிலங்களின் விற்பனை மதிப்பு


வரையறையை ஏற்றுக்கொண்ட பிறகு, 2025ஆம் ஆண்டு விதிகள், கோயில் நிலங்களின் மதிப்பு சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றும், விற்பனையைப் பொறுத்தவரை, நகர்ப்புறத்தில் அமைந்துள்ள கோயில் நிலத்தின் விற்பனை மதிப்பு நில மதிப்பில் 225%-ஆக நிர்ணயிக்கப்படும் என்று புதிய விதி கூறுகிறது.


நகர்ப்புறத்திலிருந்து 30 கி.மீ.க்குள் அமைந்துள்ள கோயில் நிலங்களின் விற்பனை மதிப்பு நில மதிப்பில் 275%-ஆகவும், நகர்ப்புறத்திலிருந்து 30-50 கி.மீ.க்குள் உள்ள சொத்துக்களின் விற்பனை மதிப்பு 325%-ஆகவும், நகர்ப்புறத்திலிருந்து 50

கி.மீ.க்கு வெளியே உள்ள கோயில் நிலங்களுக்கு, விற்பனை மதிப்பு நில மதிப்பில் 425% ஆகவும் நிர்ணயிக்கப்படும்.


கோயில் நிலங்களை மாற்றுதல் (Exchange of temple lands)


மற்றொரு அசையாச் சொத்திற்கு ஈடாக கோயில் நிலத்தை வழங்கும்போது, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) சட்டத்தின் பிரிவு 34-ன் கீழ் பரிமாற்றம் செய்ய முன்மொழியப்பட்ட தனியார் நிலம் தெளிவான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு வில்லங்க (encumbrances) சொத்துகள், ஆக்கிரமிப்புகள், வழக்குகள் அல்லது மோதல்கள் இல்லாமல் விண்ணப்பதாரரின் வசம் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.


மாற்றாக வழங்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு, திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதி (Open Space Reserve Area) அல்லது சாலை அமைப்பது, பொது வசதிகள் போன்றவற்றுக்காக உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எந்த நிலமாகவும் இருக்கக்கூடாது. மேலும், பின்வரும் உணர்திற பகுதிகளில் உள்ள நிலங்களை பரிமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்று புதிய விதிகள் கூறுகின்றன அவை:


இடையக மண்டலங்கள் (Buffer Zones)


மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்


யானை/புலி வழித்தடங்கள் (Elephant/Tiger Corridors)


சூழல் உணர்திற பகுதிகள் (Eco-Sensitive Zones)  ஆகும்.


மாற்றாக வழங்கப்படும் நிலம், மாவட்ட முக்கிய சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளுக்கு எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், மற்ற நிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்ககூடாது என்று விதிகள் கூறுகின்றன. கோயில் நிலத்தின் மதிப்பும், மாற்றாகக் கொடுக்கப்படும் தனியார் நிலத்தின் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும் சூழல்களில், மாற்றப்படும் நிலத்தின் அளவும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


மத நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு, மாற்றாக வழங்கப்படும் நிலத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தால், மதிப்பில் உள்ள வித்தியாசத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட தனியார் நிலம் கோயில் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப பெரியதாக இருக்க வேண்டும்.


அறிவிப்பின் வெளியீடு


ஒரு கோவிலின் நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாற்றவோ, விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ வேண்டுமென்றால், அந்த திட்டத்தின் முழு விவரங்களும் தமிழ்நாடு அரசு அரசிதழிலும் மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வ விதி 5 கூறுகிறது.

முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை தொடர்பாக ஏதேனும் பரிந்துரைகள்/ஆட்சேபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் ஒரு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் இவற்றை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கோயிலின் அறங்காவலர்களுக்கு உரிய ஒப்புதலுடன் கூடிய ஒரு விரைவு அஞ்சல் அனுப்பப்பட வேண்டும்.

மேலும், விதி 5-ன் கீழ் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் நகல்கள், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களிலும், சம்பந்தப்பட்ட கோவிலில் ஒரு தெளிவான இடத்திலும், அதிகார வரம்பிற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அறிவிப்பு பலகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிட வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.


Original link:

Tamil Nadu Government frames rules for sale, exchange, lease and mortgage of temple lands.


Share: