பயிர்க்கழிவுகளை எரிப்பதாலோ அல்லது பட்டாசுகளாலோ அல்ல: டெல்லி அதன் சொந்த உமிழ்வுகளால் மூச்சுத்திணறுகிறது -குஃப்ரான் பெய்க்

காற்று அசையாமல் இருக்கும்போது, ​​தேக்கநிலை ஏற்படுகிறது. காற்றோட்டம் தடைபடுகிறது. மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புக்கு எந்தப் பாதுகாப்பு நிலையும் இல்லாமல் போய்விடுகிறது. வானிலை மோசமடையும்போது, ​​தப்பித்துக்கொள்ள வேறு வழியே இருப்பதில்லை. இருந்தபோதிலும், நமது உமிழ்வுகளைக் குறைகூறாமல், நாம் தொடர்ந்து வானிலையையே குறை கூறுகிறோம்.


டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படவில்லை, பண்டிகைகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. மேலும், குளிர்காலக் குளிரும் இன்னும் உச்சத்தை அடையவில்லை. இருந்தபோதிலும், டிசம்பர் 13 முதல் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) கடுமையான நிலைக்கு உயர்ந்ததுள்ளது. இது ஏன் நடந்தது?, இது நமக்கு என்ன கற்பிக்கிறது?


இந்த காற்றின் தரக் குறியீடு விரைவில் 'மிகவும் மோசமான' நிலைக்குக் குறையக்கூடும். இருப்பினும், அது மீண்டும் உயரும். இன்னும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது இது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். PM 2.5 துகள்களின் அளவு மணிக்கு 380 µg/m³ (AQI 500-க்கு சமம்) என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மென்பொருள் கோளாறுகள் மற்றும் பரவலாக விவாதிக்கப்பட்ட பிற வரம்புகள் இருந்தபோதிலும், காற்றின் தரக் குறியீடு கிட்டத்தட்ட 500-ஐ எட்டியுள்ளது. இது ஒரு கடுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் ஒரு தீவிரமான எச்சரிக்கையை வழங்குகிறது.


இத்தகைய தீவிர மாசுபாடு, பகல் அல்லது இரவு நேரத்தைப் பொருட்படுத்தாமல், மாசுபாடு நீண்டகாலத்திற்கு, பொதுவாக 24-48 மணிநேரம் அல்லது அதற்கு மேல், உச்சக்கட்ட நிலைகளில் நீடிக்கும்போது ஏற்படுகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதன் பொருள், புதிய காற்று உள்ளே வரவில்லை, மற்றும் மாசடைந்த காற்று வெளியே செல்லவில்லை. சுமார் 500-700 மீட்டர் தீவிரம் கொண்ட ஒரு மேலோட்டமான வெப்பநிலை தலைகீழ் அடுக்குக் காரணமாக செங்குத்து பரவலையும் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நிலையான மூலங்களிலிருந்து வரும் உமிழ்வுகள், கிட்டத்தட்ட காற்று இல்லாததால், பரவாமல், அவை வெளியிடப்பட்ட இடங்களிலேயே தங்கி, உள்ளூர்மயமாக்கப்பட்ட மாசுபாட்டு மையங்களை உருவாக்குகின்றன. ஆனால், நகரமெங்கும் பரவியுள்ள மாறும் மாசுபாட்டு மூலங்கள்தான் டெல்லியின் காற்றின் தரத்தில் ஏற்படும் இந்தத் திடீர் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.


அறிவியல்பூர்வமாக, இந்த கடுமையான காற்றின் தரக் குறியீட்டு நிகழ்வு நகரத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது டெல்லியின் சொந்த உமிழ்வுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வுகள், டெல்லி தனது காற்றின் தரக் குறியீட்டைக் கடுமையான நிலைக்குக் கீழே வைத்திருக்க தினசரி வளிமண்டல நீர்த்தலை எவ்வளவு நம்பியுள்ளது என்பதையும், இந்தச் சார்பு உண்மையான குற்றவாளியான உள்ளூர் மூல உமிழ்வுகளைப் பற்றி எவ்வாறு ஒரு மாயையை உருவாக்குகிறது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், காலநிலை மாற்றம் காரணமாக இத்தகைய தேக்கநிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்று அசையாமல் இருக்கும்போது, ​​தேக்கநிலை ஏற்படுகிறது, காற்றோட்டம் தடைபடுகிறது. மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புக்கு எந்தப் பாதுகாப்பு அரணும் இல்லாமல் போய்விடுகிறது. வானிலை செயலற்று இருக்கும்போது, ​​மறைந்துகொள்ள எங்கும் இடமில்லை. இருப்பினும், நமது உமிழ்வுகளுக்குப் பதிலாக நாம் தொடர்ந்து வானிலையையே குறை கூறுகிறோம்.


வளிமண்டலம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் திறனை தற்காலிகமாக இழக்கும்போது, ஒரு சில நாட்களுக்கு மட்டும்கூட டெல்லியின் உமிழ்வுகளின் உண்மையான தீவிரம் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு பிரம்மாண்டமான மற்றும் நாமே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடியாக வெளிப்படுகிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் PM2.5 துகள்களின் உமிழ்வில் கிட்டத்தட்ட பாதி போக்குவரத்துத் துறையிலிருந்து (43 சதவீதம்) வருகிறது. மேலும், கழிவுகளை எரிப்பதிலிருந்து 15 சதவீதமும், குடியிருப்பு மற்றும் தொழில்துறை உமிழ்வுகளிலிருந்து தலா 13 சதவீதமும், மீண்டும் காற்றில் கலக்கும் தூசியிலிருந்து 8 சதவீதம் மட்டுமே வருகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய முன்னுரிமையான பகுதிகளைத்  தெளிவாகக் காட்டுகிறது.


கணக்கீடு எளிமையானது. இதுபோன்ற தீவிரமான காற்று தேக்க நிலைகளில், டெல்லி தனது உள்ளூர் உமிழ்வுகளை 50 சதவீதம் குறைத்தால், காற்று மாசுபாடு அளவு தோராயமாக 50 சதவீதம் குறையும். வானிலை மாறும்போது, ​​அதே கருத்து பொருந்தும். ஆனால், காற்று மண்டலம் முழுவதும் உமிழ்வுக் குறைப்புகள் செய்யப்பட வேண்டும். மாசுபாட்டைக் திறம்படக் குறைக்க, புகைக்கோபுரங்கள், மேக விதைப்பு, தண்ணீர் தெளித்தல் அல்லது காற்று சுத்திகரிப்பான்கள் போன்ற குறுகியகால வெளித்தோற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், மூல உமிழ்வுகள் மீது ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான, நீண்டகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.


கட்டுரையாளர், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், ஐஐஎஸ்சி வளாகத்தின் தலைவர் பேராசிரியர் மற்றும் SAFAR-இன் நிறுவனத் திட்ட இயக்குநர் ஆவார்.

Original link: 

It’s not stubble burning or firecrackers: Delhi is choking on its own emissions


Share: