முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவில் உள்ள முக்கிய மாற்றங்கள்: மாநிலங்களிடம் குறைந்த நிதி இருக்கும் நேரத்தில், அவற்றின் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், இது 125 நாள் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பயனடைவதற்கான கால அளவையும் குறைக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) மறுசீரமைப்பு விளக்கம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2005ஆம் ஆண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஊரக பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வலையாக (social security net) நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை திறம்பட மாற்றியமைக்க முன்மொழியும் ஒரு மசோதாவை அரசு கொண்டு வரப் பார்க்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) மசோதா அல்லது VB-G RAM G மசோதா, ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை ஆண்டுக்கு 100-லிருந்து 125-ஆக உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தில் ஒன்றிய அரசு பெரும்பாலான செலவை ஏற்றது போல் இல்லாமல், இந்த புதிய மசோதா நிதியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இது மாநிலங்கள் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், முதன்முறையாக, இந்த மசோதா, அதிகபட்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் இந்தத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் இருப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை என்று ஒன்றிய அரசால் கூறப்படுகிறது.
தற்போதைய ஊரகப் பகுதிகளில் உள்ள வேலை உறுதியளிப்பு கட்டமைப்பில் VB-G RAM G மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்கள் இங்கே:
உத்தரவாதமான கூலி வேலை நாட்கள் (Guaranteed wage employment days)
முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 5(1), திறமையற்ற உடல் உழைப்பைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் குடும்பத்திற்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்தாலும், கிடைக்கும் வேலைகளைப் பல தொழிலாளர்கள் பகிர்ந்துகொள்வதால், மிகச் சில குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது.
உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு சராசரியாக வேலை நாட்கள் 50 மட்டுமே வேலை நாட்கள் கிடைத்தன.
உண்மையில், கடந்த நிதியாண்டில் 100 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாள் வேலை உச்சவரம்பை எட்டியுள்ளன. மொத்தம் 8.61 கோடி வேலை அட்டைகள் உள்ளன. இது வேலை செய்துவரும் 12.16 கோடி தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ளது..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின் பிரிவு 3(1) ஒரு நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு "நூறு நாட்களுக்குக் குறையாத" வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பிரத்யேகமாகக் கோரினால் தவிர, 100 நாட்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்கான தரவுகளைப் பதிவு செய்ய அந்தத் திட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு புதிய உச்சவரம்பாக மாறிவிட்டது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக 50 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை அரசாங்கம் அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது வேறு ஏதேனும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஊரக பகுதிகளில், 100 நாள் வரம்பிற்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை அரசாங்கத்தால் வழங்க முடியும்.
நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.
வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, நிதிப் பகிர்வு முறை (fund-sharing pattern) ஆகும். MGNREGA போல் இல்லாமல், ஒன்றிய அரசு முழு ஊதிய மசோதாவையும் செலுத்துகிறது. VB-G RAM G திட்டத்தின்கீழ், ஊதிய சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்கனவே பல மாநிலங்களிடம் செலவிடுவதற்குப் போதிய நிதி இல்லாத நிலையில், ஒன்றிய அரசு இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறையை முன்மொழிந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வரிகளை அதிக அளவில் பயன்படுத்தியதன் காரணமாக மாநிலங்களின் வருவாய் குறைந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களின் நிதிநிலை நல்ல நிலையில் இல்லாத நிலையில், பல மாநிலங்கள் பணப் பரிமாற்றம் (cash transfers,) போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் உள்ளிட்ட அதிகரித்து வரும் கடன் மற்றும் கட்டாயப் பொறுப்புகளையும் எதிர்கொண்டுள்ளன.
கடந்த நித்தியாண்டின் செலவினத் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,000 கோடி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. இந்தத் தொகையில் ஒன்றிய அரசு ரூ.85,640 கோடியை வழங்கியதுடன், ரூ.73,337 கோடி மதிப்பிலான முழு ஊதியச் செலவையும் செலுத்தியது.
புதிய மசோதாவின் பிரிவு 22(1) இதை "ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டம்" என்று கூறினாலும், பிரிவு 22(2) கூறுகிறது: இந்தச் சட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநிலங்கள் 10 சதவீதமும் நிதி வழங்கும். சட்டமன்றங்களைக் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் நிதி வழங்கும்.
சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு முழு செலவையும் ஏற்கும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின்கீழ், ஒன்றிய அரசு செலுத்துகிறது.
திறமையற்ற உடலுழைப்பு வேலைக்கான முழுமையான ஊதிய மசோதா.
திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட (அட்டவணை II-இன்படி) இந்தத் திட்டம் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% வரை உள்ளடக்கியது.
நிர்வாகச் செலவுகளுக்காக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் திட்டத்தின் மொத்த செலவில், திட்ட அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மத்திய கவுன்சிலின் நிர்வாகச் செலவுகள், அட்டவணை II-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மாநில அரசுகள் இதற்கு பணம் செலுத்துகின்றன:
வேலையின்மை உதவித்தொகைக்கான செலவு
அட்டவணை II-ன்படி, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 25% பொருள் செலவுகள், திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் தனித்தனியாக வழங்கப்படும்.
மாநில அரசுகளுக்கான நிர்வாகச் செலவுகள்.
‘இயல்பான ஒதுக்கீடு’: மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை
புதிய “நெறிமுறை ஒதுக்கீடு” சூத்திரம், வளங்களை ஒதுக்கும் முறையை முற்றிலும் மேலிருந்து கீழான செயல்முறையாக (top-down process) மாற்றுகிறது. இந்த மசோதா இதை, “ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு” என்று வரையறுக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 4(5)-ன் படி: ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசாங்கம் தான் வகுக்கும் விதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும்.
பிரிவு 4(6)-ன் படி, ஒரு மாநிலம் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, அந்த கூடுதல் செலவை மாநிலமே ஏற்க வேண்டும்.
நெறிமுறை அடிப்படையிலான (Normative allocation) நிதி ஒதுக்கீடு என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் (MGNREGA) தற்போது செயல்படும் விதத்திலிருந்து வேறுபட்டது. தற்போது, மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசுக்கு ஒரு வருடாந்திர பணித் திட்டத்தையும் ஒரு 'தொழிலாளர் வரவுசெலவுத் திட்டத்தையும்' சமர்ப்பிக்கின்றன. மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம், மக்களுக்கு எவ்வளவு திறனற்ற வேலை தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மாநிலம் அதைத் தொகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. பின்னர், ஒன்றிய அரசு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்த விதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் அதிக தேவை உள்ள மாநிலங்களைப் பாதிக்கக்கூடும். 2024-25ஆம் ஆண்டில், 5.78 கோடி குடும்பங்கள் (மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து) ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்திற்கான தேவை அதிகமாக இருந்தது.
விவசாயப் பருவத்தின்போது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் இடைநிறுத்தம்.
வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவானது, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்புத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.
"இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் எதுவாக இருந்தாலும், விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை எளிதாக்கும் வகையில், துணைப்பிரிவு (2)-ன் கீழ் அறிவிக்கப்படும் உச்சத்தில் இருக்கும் பருவங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது" என்று வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மசோதாவின் பிரிவு 6(1) கூறுகிறது.
மாநிலங்கள் இந்த 60 நாள் காலக்கெடுவை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வேளாண்-காலநிலை மண்டலங்கள் (agro-climatic zones), உள்ளூர் விவசாய நடவடிக்கைகளின் முறைகள் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில், வெவ்வேறு பகுதிகளுக்கு அவை தனித்தனி அறிவிப்புகளை வெளியிடலாம்.
இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது, விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. ஆனால், இது தொழிலாளர்கள் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தையும் குறைக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுவதால், இந்த விதி முக்கியத்துவம் வாய்ந்தது.
உதாரணமாக, காரீஃப் பருவத்தில் நெல் விதைப்பு காலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். அறுவடை செப்டம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.
முக்கிய ரபி பயிரான கோதுமை விதைப்பு அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை தொடர்கிறது. அறுவடை பிப்ரவரி முதல் ஜூன் வரை நடைபெறும்.
உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டங்கள்
இந்த மசோதாவின்படி, புதிய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்துத் திட்டங்களும் கிராம அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில நிலைகளில் ஒருங்கிணைக்கப்படும். பின்னர் இந்தத் திட்டம், நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய 'வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்பு அடுக்கு' (Viksit Bharat National Rural Infrastructure Stack) எனப்படும் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படும்.
வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்புத் திட்டம் நான்கு கருப்பொருள் சார்ந்த மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: அவை
(அ) நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பு
(ஆ) அடிப்படை உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்
(இ) வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு
(ஈ) தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் ஆகும்.
இந்தத் திட்டங்கள் e PM Gati Shakti தேசிய முதன்மைத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
வேலை அட்டைகளுக்குப் பதிலாக கிராமின் வேலைவாய்ப்பு (Gramin Rozgar) உத்தரவாத அட்டை
ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் திறமையற்ற உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு வயதுவந்த உறுப்பினருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்க வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக, அத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயதுகள் மற்றும் முகவரிகளைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், தனிமையில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமைத் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்கும். இந்த அட்டைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவை ஒரு தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் தற்போதைய வேலை அட்டைகளைப் போல் இல்லாமல், கிராமின் வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சரிபார்ப்பின் பின்னர் அதைப் புதுப்பிக்கலாம்.
அதிக அபராதம்
புதிய மசோதாவின் பிரிவு 27, விதிகளை மீறினால் அதிக அபராதம் விதிக்க வழங்குகிறது. அபராதம் முன்பு ரூ.1,000-ஆக இருந்தது; இப்போது அது ரூ.10,000-ஆக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
ஆண்டு பட்ஜெட்
இந்த ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) அரசாங்கம் ரூ.86,000 கோடியை ஒதுக்கியுள்ளது. புதிய திட்டத்திற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மொத்த ஆண்டுச் செலவை ₹1,51,282 கோடி என மதிப்பிட்டுள்ளது. மாநிலங்களின் பங்கு உட்பட இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ.95,692 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
original link:
MGNREGA Revamp Explained: Key features of VB-G RAM G Bill, how its different from earlier scheme.