“சஹ்யோக் (Sahyog)” இணையதளம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


இந்தக் காலகட்டத்தில், சஹயோக் செயல்படத் தொடங்கிய பிறகு வந்த முதல் ஆண்டாகும். முதல் முறையாக, இந்த சர்ச்சைக்குரிய இணையதளம் இந்தியாவின் வளர்ந்து ரும் இணையத் தணிக்கை அமைப்பில் ஒரு முக்கிய கருவியாக விரைவாக மாறியுள்ளது என்பதை எண்ணிக்கை காட்டுகிறது. இந்த உத்தரவுகள், இணையத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்டவிரோதமான பதிவுகள் அல்லது முழு கணக்குகள் உட்பட, பரந்த அளவிலான இணைய இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன.


Sahyog இணையதளத்திற்குப் பொறுப்பான உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தால் (Indian Cybercrime Coordination Centre (I4C)) பகிரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத் தரவுகளின்படி, மெட்டா நிறுவனத்தின் இணைய சேவைகளான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை, ஓராண்டு காலத்தில் அனுப்பப்பட்ட மொத்த 2,312 முடக்க உத்தரவுகளில் 78 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைப் பெற்றுள்ளன.


வாட்ஸ்அப் அதிகபட்சமாக 1,392 முடக்க உத்தரவுகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் 255 உத்தரவுகளையும், இன்ஸ்டாகிராம் 169 உத்தரவுகளையும் பெற்றுள்ளன. மொத்தத்தில், இந்த தளங்கள் 1,816 முடக்க உத்தரவுகளைப் பெற்றுள்ளன.


118-க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் சஹயோக் திட்டத்தில் இணைந்துள்ளதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான தளங்கள் உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பான அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்தத் தடுப்பு உத்தரவுகள் ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளிடமிருந்து வந்தன.

— அறிவிப்புகள் வடிவில் வெளியிடப்படும் இந்த முடக்க உத்தரவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் அனுப்பப்படுகின்றன. இந்தப் பிரிவின்கீழ், இணையத் தளங்கள் அரசாங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளடக்கத்திற்கான அணுகலைத் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவை தங்களின் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். இந்தச் சட்டப் பாதுகாப்பு அம்சங்கள், பயனர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதிலிருந்து சமூக ஊடக தளங்களுக்கு சட்டப்பூர்வ விலக்கு அளிக்கின்றன.


— இந்த உத்தரவுகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69(A)-ன் கீழ் வருவதில்லை. இந்த பிரிவு பொதுவாக இணையத் தள தணிக்கை உத்தரவுகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டாலும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?

— Sahyog இணையதளம் அக்டோபர் 2024-ல், அரசு முகமைகள் பிரிவு 79(3)(b)-ன் கீழ் முடக்க உத்தரவுகளை வழங்குவதற்கான ஒற்றைச் சாளர தளமாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தத் தளம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, அத்தகைய உத்தரவுகளை முகமைகள் மின்னஞ்சல் வழியாக தனிப்பட்ட இணையத் தளங்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டியிருந்தது. 


— இந்த ஆண்டின் தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ன் கீழ் அனுப்பப்பட்ட முடக்க உத்தரவுகளுக்கு எதிராக “X” நிறுவனம் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது. ஒன்றிய அரசு ஒரு 'இணையான' உள்ளடக்கத் தடுப்பு முறையை நிறுவ முயற்சிப்பதாக வாதிட்டதுடன், Sahyog தளத்தை ஒரு "தணிக்கை இணையதளம்" என்றும் குறிப்பிட்டிருந்தது. செப்டம்பரில், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து “X”  நிறுவனம் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.


— அக்டோபரில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரிவு 79(3)(b)-ன் கீழ் முடக்க உத்தரவுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிடும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திருத்தியதுடன், மாதாந்திர ஆய்வுகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கியது.


Original link:

Share: