செய்திகளில் நானேகாட் குகைகள் -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி :


சில நாட்களுக்கு முன்பு, புனே மாவட்டத்தின் ஜூன்னார் தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நானேகாட் குகைகளுக்கு அருகில் சட்டவிரோத கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து புனே காவல்துறை ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு, இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உணவகங்கள் மற்றும் வீடுகளின் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக 8 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) அதிகாரிகளின் புகாரைத் தொடர்ந்து, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தின் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தம் மற்றும் சமண மத காலத்தில் எழுச்சியுடன் இந்தியாவில் குகைக் கட்டிடக்கலை வளர்ச்சி அடைய தொடங்கியது. இந்த குகைகள் பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் அஜீவிகா பிரிவைப் பின்பற்றுபவர்கள் தியானம் செய்வதற்கும், சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு தனித்துவமான தனிமையை வழங்கின. இது இந்தியாவில் பாறையில் வெட்டப்பட்ட குகைக் கலை மற்றும் கட்டிடக்கலையின்  வளர்ச்சிக்கு வழிவகுத்தது.


முக்கிய அம்சங்கள்:


1. புனேவின் ஜூன்னார் தாலுகா பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பல வரலாற்று தளங்களைக் கொண்டுள்ளது. இவற்றில், நானேகாட் பாறையில் வெட்டப்பட்ட குகைகள், ஷிவ்னேரி கோட்டை மற்றும் லென்யாத்ரி குகைகள் போன்ற மூன்று தளங்கள் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளன.


2. கிமு 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நானேகாட் குகைகள், சாதவாகன வம்சம் மற்றும் பண்டைய வர்த்தக பாதைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் ஆரம்பகால பிராமி கல்வெட்டுகளுக்கு பெயர் பெற்றவை. தொல்லியல் துறையின் பார்வையில், பீடபூமிக்கும் மேற்கு கடற்கரைக்கும் இடையிலான ஒரு வழித்தடமாக இப்பகுதியின் பங்கைப் புரிந்துகொள்வதற்கு குகைகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.


3. சிவனேரி கோட்டை அதன் பழங்கால கோட்டைகள், நீர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் ஆரம்பகால வரலாற்று காலம் முதல் இடைக்காலம் வரையிலான ஆக்கிரமிப்பு அடுக்குகளைக் காட்டும் கட்டமைப்புகள் காரணமாக தொல்லியல்துறை இந்த கோட்டைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கட்டமைப்பு ஆய்வுகள் தக்காண இராணுவ கட்டிடக்கலை மற்றும் குடியேற்ற முறைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. மராட்டியப் பேரரசை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி பிறப்பிடமாக இந்தக் கோட்டை இருந்து வருவதால் இது வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.


4. மறுபுறம், லென்யாத்ரி குகைகள் பௌத்த பாறையில் வெட்டப்பட்ட குகைகளின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த குகைகள் மலைச்சரிவில் செதுக்கப்பட்ட வழிபாட்டு மண்டபங்கள் (chaitya) மற்றும் மடாலயங்களுக்கு (viharas) பெயர் பெற்றவை.


மேற்கு இந்தியாவில் உள்ள (Western India) முக்கிய குகைகள்:


1. அஜந்தா குகைகள்: மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தா குகைகள், 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாறையில் வெட்டப்பட்ட புத்த குகை மடாலயமாகும். இந்த குகை 1983-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது. அருகிலுள்ள அஜிந்தா என்ற ஊரக பகுதியில் இருந்து பெறப்பட்டதாக பலர் கூறும் அஜந்தா, ஒரு புனித யாத்திரைத் தலமாகவும், புத்த மதத்தின் கற்றல் மையமாகவும் செயல்பட்டது. இந்த குகையில் 29 வழிபாட்டு மண்டபங்கள் (chaitya) மற்றும் புத்த துறவிகள் தங்கும் குகை மடாலயங்கள் (viharas) உள்ளன.


இந்த குகைகளில் புத்த புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் கருப்பொருள்களை சித்தரிக்கும் ஓவியங்களும், பல்வேறு இறைபணி செய்த நபர்களின் சிற்பங்களும் உள்ளன. அஜந்தாவில் உள்ள புகழ்பெற்ற ஓவியங்களில் பத்மபாணி போதிசத்வா, வஜ்ரபாணி போதிசத்வா, மகாஜனக ஜாதகம், உமக ஜாதகம் போன்றவை  இடம்பெற்றுள்ளன.


2. எல்லோரா குகைகள்: எல்லோராவின் 34 பாறையில் வெட்டப்பட்ட குகைகள் தனித்துவமானவை. ஏனெனில், இந்த குகையில் பண்டைய இந்தியாவின் மூன்று முக்கிய மதங்களான புத்த மதம், இந்து மதம் மற்றும் சமண மதத்தின் மடங்கள் மற்றும் கோயில்கள் இடம்பெற்றுள்ளன. அஜந்தா குகைகளுடன்சேர்த்து இந்த குகை 1983-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது. இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள 34 குகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய குகைகளில் மூன்றில் ஒரு பங்கு பௌத்த மதத்தைச் சேர்ந்தவை. 14-29 குகைகள் இந்து மதத்தின் உருவப்படங்களைக் (iconography) காட்டுகின்றன. மேலும், கடைசி ஐந்து குகைகள் சமண மதத்தைச் சேர்ந்தவை.


இந்த வளாகத்தில் உள்ள ஒரு முக்கியமான கோவில் கைலாசநாத ஒற்றைக்கல் கோவில் ஆகும்.  இது எல்லோராவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் கோவிலாகவும் கைலாசநாத ஒற்றைக்கல் கோவில் கருதப்படுகிறது. தசாவதாரத்திற்கு (குகை 15) வெளியே அமைந்துள்ள இந்த கோவில் ஒற்றைக்கல் 8ம் -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.


3. எலிஃபண்டா குகைகள்: மும்பைக்கு அருகில் அமைந்துள்ள எலிஃபண்டா குகைகள், சிவபெருமானுக்காக கட்டப்பட்ட பாறையில் வெட்டப்பட்ட கோயில்களைக் கொண்டுள்ளன. கி.பி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைகள், எலிஃபண்டா தீவில் அமைந்துள்ளன மற்றும் அவற்றின் சிற்பங்களுக்காக பெயர்பெற்றவை. எலிஃபண்டா குகைகள் அமைந்துள்ள தீவு முதலில் குகைகளின் இல்லம் (Gharapuri)  என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், போர்த்துகீசியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு, அவர்கள் தீவில் ஒரு பெரிய கல் யானையை அமைத்ததால், அதற்கு எலிஃபண்டா என்று பெயர் மாற்றினர்.


4. வராஹ குகைக் கோயில்: தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான மகாபலிபுரத்தில், கி.பி 7-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பட்டியலிடப்பட்ட நினைவுச்சின்னமான வராஹ குகைக் கோயில் உள்ளது. பண்டைய பல்லவ கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்கும் இந்த குகைக் கோவில், பூமி தேவியை காப்பாற்றுவதற்காக விஷ்ணுவின் அவதாரம் அல்லது அவதாரம் வராஹ (பன்றி) உட்பட பல்வேறு வடிவங்களை வெளிக்காட்டும் சிக்கலான அடிப்படை-புனரமைப்பு (bas-relief sculptures) சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.ellora caves


5. கிருஷ்ண மண்டபம்: மகாபலிபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபம் இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பட்டியலிடப்பட்ட உலக பாரம்பரிய தளமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த மண்டபம், இந்திய தொல்லியல் துறையின்யால் (ASI) பாதுகாக்கப்படும் மிகவும் பிரமிக்க வைக்கும் அடிப்படை-புனரமைப்பு சிற்பங்களைக் கொண்ட மற்றொரு பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயிலாகும். இந்த குகைக் கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பெருமான் கோவர்தன் மலையைத் தூக்குவது போன்ற இந்து மதத்தின் புராணக் கதைகளைக் காட்டும் அழகிய சிற்பங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.


6. பாக் குகைகள்: பாக் குகைகள் அஜந்தாவிலிருந்து வடமேற்கே  150 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள ஒன்பது குகைகள் கி.பி 500–600 காலத்தைச் சேர்ந்தவை. அஜந்தாவைப் போலவே, திட்டத்திலும், அமைப்பிலும், பாக் குகைகள் எளிமையானவையாக உள்ளன.


7. பாதாமி குகைகள்: பாதாமி குகைகள்: கர்நாடகாவில் அமைந்துள்ள பாதாமியின் பாறையில் வெட்டப்பட்ட குகைகள், ஒரு குளத்தை நோக்கியவாறு சிவப்பு மணற்கல் மலைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று முக்கிய குகைகளில், மிகப்பெரியது வைணவம், சைவம் மற்றும் ஜைனம் சார்ந்தவை. குகைகளின் சுவர்கள் மற்றும் கூரைகள் செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. குகை 3-ல் வராக (பன்றி), நரசிம்மர் (சிங்கம்) மற்றும் வாமன (குள்ளன்) உள்ளிட்ட பல்வேறு விஷ்ணு அவதாரங்களின் மிகப்பெரிய புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஹரி-ஹரர் என்பது விஷ்ணு (ஹரி) மற்றும் சிவன் (ஹரர்) ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமாகும். ஹரி-ஹரரின் ஆரம்பகால சிற்ப சித்தரிப்புகளில் ஒன்று பாதாமி குகைகளில் (6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) செதுக்கப்பட்டுள்ளது.


இந்த நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு


1. ஜூன்னார் தாலுகாவின் மூன்று தளங்களும் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தின் கீழ் வருகின்றன. பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வுப்பகுதிகள், அழிபாட்டுச் சின்னங்கள் சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains (AMASR)) சட்டம் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் கட்டுமான நடவடிக்கைகளைத் தடை செய்கிறது.


2. பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவு தடைசெய்யப்பட்ட பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு எந்த சூழ்நிலையிலும் புதிய கட்டுமானம் அனுமதிக்கப்படாது. 1992-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த கட்டமைப்புகள் மட்டுமே சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். தொல்லியல் துறையில் உள்ள அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள முடியும்.


3. 100 மீட்டர் மண்டலத்திற்கு வெளியே 200 மீட்டர் தடைசெய்யப்பட்ட பகுதி உள்ளது. இந்த மண்டலத்திற்குள் கட்டுமானம் உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும், தேசிய நினைவுச்சின்ன ஆணையத்திடம் (National Monuments Authority (NMA)) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எந்தவொரு கட்டிட பணியையும் ஆணையம் முறையான ஒப்புதலை வழங்கிய பின்னரே மேற்கொள்ள முடியும்.

 

Original article :Naneghat Caves in news -Khushboo Kumari

Share: