இந்தியாவில் கல்வித் துறைக்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு எவ்வளவு? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


 வடிவமைப்பு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை (Science, Technology, Engineering, and Mathematics (STEM)) அணுகல், பல்கலைக்கழக-தொழில் இணைப்பு மற்றும் அறிவியல் உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் 2026–27-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, தெளிவான நோக்கத்தைக் காட்டுகிறது: இந்தியாவின் எதிர்கால போட்டித்தன்மை அளவை மட்டும் சார்ந்திருப்பதைவிட, கல்வி முறையின் தரம் மற்றும் ஒற்றுமையையே அதிகம் சார்ந்திருக்கும் என்பதைக் குறிக்கிறது.


உதாரணமாக, பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தில் பாடங்களுக்கு இடையில் எந்தப் பிரிவுகளும் இல்லை. வானியல், சட்டம், இலக்கியம், இறையியல் மற்றும் கணிதம் போன்ற சில அடிப்படை பாடங்களை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல பகுதிகள் ஒன்றாக இந்தக் தொலைநோக்குப் பார்வையை நோக்கிச் செல்கின்றன.


 எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்கள், துறைகளுக்கு இடையேயான கற்றல் மற்றும் புதுமை சார்ந்த கல்வி ஆகியவற்றின் மீதான தொடர்ச்சியான முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு நிறைந்த உலகில் தொழில்நுட்பத் திறன் மட்டும் போதுமானதாக என்பதை ஒப்புக்கொள்கிறது. இயந்திரங்கள் வடிவங்களை அங்கீகரிப்பதில் சிறப்பாக செயல்படும் போது, ​​விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், சூழல் தீர்ப்பு மற்றும் துறைகள் முழுவதும் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கும் திறன் போன்ற பகுதிகளில் மனிதர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.


கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான உறவை இனி நேரியல் அல்லது நிலையானதாகக் கருத முடியாது என்பதை நிதி நிலை அறிக்கை  ஒப்புக்கொள்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை, குறிப்பாக சேவைகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், ஆய்வு செய்வதற்கு உயர் அதிகாரம் கொண்ட நிலைக்குழுவை அறிவிப்பது சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.


இருந்தபோதிலும், அடுக்கு 2-3 பகுதிகளில் வாழ்ந்துவரும் பெண்கள் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித கட்டமைப்பு தடைகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். STEM துறைகளில் இளம் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வழிகளில் முதலீடு செய்வது, இந்தியாவின் திறமை வளர்ச்சியில் உள்ள ஒரு முக்கிய பலவீனத்தை சரிசெய்ய உதவுகிறது.


வகுப்பறைகளில் உள்ள பன்முகத்தன்மை சிறந்த அறிவியல், சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த முடிவெடுப்பதற்கு உந்து சக்தியாக மாறுகிறது. வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். தங்கள் பார்வைகளை விரிவுபடுத்துகிறார்கள். மேலும், எந்தவொரு பாடத்திட்ட சீர்திருத்தமும் தானாக அடைய முடியாத வழிகளில் கற்றல் சூழலை வளப்படுத்துகிறார்கள்.


கல்வி மற்றும் படைப்புத் திறன்களை வடிவமைப்பதில், குறிப்பாக கிழக்குப் பகுதியில், நிதி நிலை அறிக்கை அறிக்கை கவனம் செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வடிவமைப்புத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. ஆனால், வடிவமைப்பாளர்களின் பற்றாக்குறை உள்ளது.


இத்தகைய சிந்தனைக்கு பொறியியலைப் போலவே ஒத்துணர்வும், பகுப்பாய்வைப் போலவே கற்பனையும் தேவைப்படும். தேசிய வளர்ச்சிக்கான திறவுகோலாக வடிவமைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், எதிர்காலத் துறைகளில் வாய்ப்புகளை அணுகக்கூடியதாகவும் திறமையை வளர்ப்பதற்கும் இந்தக் கொள்கை தெளிவான முயற்சியைக் காட்டுகிறது.

 மிக முக்கியமாக, அறிவியல் உள்கட்டமைப்பை, குறிப்பாக வானியலை உருவாக்குவதில் நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்துவது, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இமயமலை சந்திரா தொலைநோக்கியை மேம்படுத்துவதில் முதலீடுகள் மற்றும் லடாக்கில் தேசிய பெரிய ஒளியியல் தொலைநோக்கிக்கான திட்டங்களை முன்னெடுப்பது இந்திய வானியல் சமூகத்திற்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


சந்திரயான்-3-ன் வெற்றி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களை வானியற்பியல் தொழில்களில் ஈடுபடத் தூண்டியது போலவும், ககன்யானின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு இந்தியா தயாராக இருப்பது போலவும், இந்த தொலைநோக்கிகளை நிறுவுவதும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.


இது போன்ற மாறுபட்ட முயற்சிகள் கல்விக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் யோசனையால் இணைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் பாடங்களுக்கு இடையிலான தடைகளை நீக்கி, பொறியாளர்கள் நெறிமுறையாக சிந்திக்கவும், விஞ்ஞானிகள் வரலாறு மற்றும் தத்துவத்தைப் படிக்கவும், வடிவமைப்பாளர்கள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மாணவர்கள் வேறுபாடுகளைக் கடந்து தொடர்புகொள்ளக் கற்றுக்கொள்ளும் இடங்களாகச் செயல்பட வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கை, 2020 வழங்கிய முற்போக்கான கண்ணோட்டம், உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தைப் பார்க்கும், இடைநிலைக் கல்வி முறையை நோக்கிச் செல்வதற்கான தெளிவான பாதையை வழங்கியது.


இளம் மக்கள்தொகை மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய செல்வாக்குடன், இந்தியா செயற்கை நுண்ணறிவு- கல்வி சிறப்பை மறுவரையறை செய்து, வளர்ந்த இந்தியாவிற்கான முயற்சியை நம்பகத்தன்மையுடன் தொடர முடியும்.


கல்வி, அறிவியல், வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவை ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரிப்பதன் மூலம் இந்த சாத்திய தன்மையை நிதி நிலை அறிக்கை தெளிவாக காட்டுகிறது. அடுத்தகட்டமாக, இந்தப் பகுதிகளை ஒரு தெளிவான திட்டமாக இணைப்பது, மாணவர்கள் எதிர்காலத்தில் பங்கேற்க உதவுவது மட்டுமல்லாமல், அதை புத்திசாலித்தனமாகவும் பொறுப்புடனும் வழிநடத்த உதவும்.


உங்களுக்குத் தெரியுமா:


  2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையாகும். முதல் தேசிய கல்விக் கொள்கை 1968-ல் வந்தது மற்றும் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை 1986-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டின் கல்வி வளர்ச்சியை வழிநடத்தும் ஒரு விரிவான கட்டமைப்பாகும்.


2005-ஆம் ஆண்டு முதல், Pratham என்ற அரசு சாரா நிறுவனம் ஊரக பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின், பள்ளிக் குழந்தைகளிடையே அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித அளவுகள், பள்ளி வருகை மற்றும் பிற குறிகாட்டிகளை அளவிடுவதற்காக வருடாந்திர கல்வி நிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.


ஜனவரி 2025-ல் வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு, தொடக்க நிலை மழலையர் வகுப்பு, மேல் நிலை மழலையர் வகுப்பு, அங்கன்வாடி அல்லது பிற நிறுவனங்களில் சேரும் முன் தொடக்கக் குழந்தைகளின் (3-5 வயது வரையிலான குழந்தைகளின்) எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டியது.


கோவிட்-19 கற்றல் இழப்புகளுக்குப் பிறகு வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்கள் பெரிய முன்னேற்றங்களைக் கண்டன. இது ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். இது வயதான குழந்தைகளின் (15–16 வயது) டிஜிட்டல் திறன்களை அளவிடுவதற்கான முதல் முழுமையான வருடாந்திர கல்வி நிலை கணக்கெடுப்பு (ASER) ஆகும். சமீபத்திய, போக்குகளின்படி, இந்த வயதுப் பிரிவில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 7%-ஆகக் குறைந்துள்ளது.


Original article :What is the Budget allocation to the education sector in India? -Roshni Yadav, Khushboo Kumari

Share: