கோவா இரவு விடுதி தீ விபத்து: தீ விபத்து தொடர்பாக ஆர்வலர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தீ பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், குறியீடுகள் மற்றும் சட்டங்கள் யாவை?
தற்போதைய செய்தி :
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தொழில்நுட்ப மதிப்பாய்வில், அவசரகால குழு விரைவாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும், "அடிப்படை தீ பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆபத்தான வெளிப்புற நடவடிக்கைகள் சம்பவத்தின் தீவிரத்திற்கும் உயிர் இழப்புக்கும் முக்கியக் காரணியாக இருந்தன.
தீயணைப்புத் துறையால் தொகுக்கப்பட்ட தொழில்நுட்ப தீ பாதுகாப்பு சம்பவ அறிக்கை, தீயணைப்புத் துறையின் பதிவுகளின்படி, அந்த உணவகம் தீயணைப்புத் துறையிடமிருந்து செல்லுபடியாகும் தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெறவில்லை என்று கண்டறிந்துள்ளது. இந்த உணவகத்தில் தேவையான தீ பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உயரமான கட்டிடமும் பொது கட்டிடமும் தீ பாதுகாப்புக்கான ஒப்புதலை கண்டிப்பாக பெற வேண்டும். இந்திய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code) கட்டிடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தீ பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விதிகள் பரிந்துரைகள் மட்டுமே, கட்டாயமல்ல. தடையில்லாச் சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்கள் மாநில அரசு அல்லது உள்ளூர் குடிமை அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன.
2. கோவாவின் தீ பாதுகாப்பு சட்டங்கள் முதன்மையாக கோவா, டாமன் மற்றும் டையூ தீயணைப்பு படை சட்டம், 1986-ல் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின்படி, அதிக ஆபத்துள்ள கட்டிடங்களுக்கு கட்டாய தீ அனுமதி தேவை, எச்சரிக்கை கருவிகள், தீ அணைப்பான்கள் மற்றும் தெளிவான வெளியேறும் வழிகள் ஆகியவை அடங்கும். உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க முடியும். கோவா தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை சரிபார்க்கின்றன. அவசரகாலத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்ற தீயணைப்பு பாதுகாப்பு விதிகள் திறந்தவெளிகளும் கட்டாயமாக தேவைப்படுகின்றன.
3. தீயணைப்பு சேவை என்பது இந்திய அரசியலமைப்பின் XII அட்டவணையில் பிரிவு 243(W)-ன்கீழ் நகராட்சி செயல்பாடாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு மாநிலப் பட்டியலில் இருப்பதால், அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலத்திடமே உள்ளது. இருப்பினும், இந்தியா முழுவதும் தீயணைப்பு சேவைகளை மாதிரி தீயணைப்பு மற்றும் அவசர சேவை மசோதா (Model Fire service Bill), இந்திய அரசு 1958-ல் ஒரு நிலையான தீயணைப்பு சேவை மசோதாவையும் 2019-ல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் பகிர்ந்து கொண்டது. மசோதாக்களை ஏற்றுக்கொள்வதற்காக சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது
3. தீ பாதுகாப்பு, பசுமை கட்டிடம், பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட திட்டமிடல் மற்றும் செயல்திறன் விதிமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் அல்லது முன்வடிவுகளை வழங்குவதற்காக, மாதிரி கட்டிட துணைச் சட்டங்கள் (Model Building Bye-Laws, 2016) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
4. கடந்தமாதம், அசாம் அமைச்சரவை, மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான தீ பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதற்காக, அசாம் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மசோதா (Assam Fire and Emergency Services Bill), 2025-ஐ அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது. 2022ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச அரசு உத்தரப் பிரதேச தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் சட்டம் (Uttar Pradesh Fire and Emergency Services Act), 2022-ஐ அமல்படுத்தியது.
5. 2025ஆம் ஆண்டு மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், 15வது நிதிக் குழு மாநில அளவில் தீயணைப்பு சேவைகளை வலுப்படுத்த ரூ.5000 கோடி ஒதுக்க பரிந்துரைத்ததால், அரசாங்கம் 2023ஆம் ஆண்டில் "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை" தொடங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவித்தது.
6. “தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல்" என்ற 2021-2026ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான நிதியும் அடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் சிறந்த தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு அமைப்புகளை உருவாக்க உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (National Disaster Response Fund (NDRF)) ரூ. 5,000 கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
மாதிரி தீ பாதுகாப்பு மசோதா (Model Fire Safety Bill) 2019 என்றால் என்ன?
1. 2019ஆம் ஆண்டு மாதிரி தீ பாதுகாப்பு மசோதா, மாநிலங்கள் முழுவதும் தீ பாதுகாப்புக்கான ஒரே மாதிரியான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இந்த மசோதா மாநிலம் முழுவதும் ஒரே ஒரு தீயணைப்பு மற்றும் அவசர சேவை இருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு மற்றும் அவசர சேவையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் துணைப் பதவிகளில் இருப்பவர்கள் தீயணைப்பு மற்றும் அவசர சேவையின் எந்தவொரு கிளையிலும் பணியமர்த்தப்படுவதற்கு பொறுப்பாவார்கள் என்றும் கூறுகிறது.
2. இந்த மசோதாவின்படி, தீ விபத்து காரணமாக மட்டுமே ஏற்படாத எந்தவொரு பேரழிவையும் நிர்வகிப்பதில் உதவுவதற்காக அனைத்து தீயணைப்பு சேவைகளும் அவசர சேவைகளாகக் கருதப்படும். இந்த மசோதா, பல ஆபத்து மீட்புப் பிரிவாக தீயணைப்பு சேவையின் (Multi-Hazard Response Unit) பங்கைக் குறிப்பிடுகிறது.
3. இந்திய தேசிய கட்டிடக் குறியீடுகளைப் பின்பற்றி, கட்டிட உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதும் பராமரிப்பதும் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளரின் பொறுப்பு என்று மசோதா கூறுகிறது.
4. பல மாடி மற்றும் சிறப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் தீ ஏற்படுவதைத் தடுக்க அல்லது அணைக்க தானியங்கி தெளிப்பான் அமைப்புகள் (automatic sprinkler systems), தீயணைப்பு எச்சரிக்கைகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை பொருத்துவது கட்டாயம் என்று மசோதாவில் ஒரு விதி உள்ளது. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் அல்லது கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய ஒரு தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
உபார் சினிமா தீ விபத்து
1. 1997ஆம் ஆண்டு தேசிய தலைநகரில் நடந்த உப்ஹார் சினிமா தீ விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த ஆர்வலர் நீலம் கிருஷ்ணமூர்த்தி, கோவா சம்பவத்தை “முன்பு கண்டதை போன்ற உணர்வு” ஏற்பட்டதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள் இரவு விடுதி தரையில் மக்கள் நடனமாடும்போது துப்பாக்கிகள் போன்ற எரியக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2. இந்த ஆண்டு ஜூன் 13, 1997 அன்று நடந்த உபார் சினிமா தீ விபத்துக்கு 28வது ஆண்டு நினைவு நாளாக இருந்தது. இந்த தீ விபத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 59 பேர் இறந்தனர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
3. உபார் தீ விபத்து தொடர்பான விசாரணையில், முறையான பொது அறிவிப்பு அமைப்பு இல்லாதது, வெளியேறும் வழிகளைத் தடுத்தது மற்றும் மின்மாற்றிகளைப் பராமரிக்காதது உள்ளிட்ட ஏராளமான ஊழல்கள் மற்றும் தீ விதி மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. விதிமுறைகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், உபார் திரையரங்க உரிமையாளர் சுஷில் அன்சாலும் அவரது சகோதரர் கோபால் அன்சாலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான மக்களை அரங்கிற்குள் அனுமதித்தாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
4. துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அன்சால் சகோதரர்களை குற்றவியல் விதிகளை பின்பற்றதற்காக குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து. அதிகபட்சமாக அவர்களுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஒரு வருடம் கழித்து, டெல்லி உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனையை ஒரு வருடமாகக் குறைத்தது.
5. உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஏறக்குறைய பத்தாண்டு காலம் நீடித்தது. 2017ஆம் ஆண்டில், இரண்டு சகோதரர்களும் தலா ரூ.30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த சுஷில் அன்சலுக்கு 77 வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டார். அவரது சகோதரர் கோபாலுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Original article : Goa nightclub blaze renews spotlight on fire safety. -Khushboo Kumari