இந்தப் பொது உள்கட்டமைப்பு நெறிமுறை, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI) பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் (zero-cost rail for users) என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையில் காணலாம். இது டிஜிட்டல் உள்கட்டமைப்பை திறந்ததாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பெரும்பாலான இந்தியர்கள் பெரிய டிஜிட்டல் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் டிஜிட்டல் சந்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளில் தொழில்நுட்பம், தரவு, மென்பொருள் மற்றும் பயனர்களுக்கான சேவைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அவை இயற்கையாக வளரவில்லை. ஆனால், சக்திவாய்ந்த நிறுவனங்களால் கவனமாக உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்கள் இயக்க முறைமைகள், செயலி அங்காடிகள் மற்றும் தரவு ஓட்டங்கள் போன்ற அடிப்படை அடுக்குகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த நிறுவனங்கள் சந்தைகளில் பணமும் சலுகைகளும் எவ்வாறு ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
இதுபோன்ற பல டிஜிட்டல் அமைப்புகள் இருப்பது போட்டியைக் குறிக்கலாம். ஆனால், அது ஒரு தோற்றம் மட்டுமே. இந்த நிறுவனங்கள் மற்றவற்றைத் தடுக்க இதே போன்ற உத்திகளைப் பயன்படுத்துகின்றன. முக்கிய சேவைகளை தொடர்புடைய சேவைகளுடன் இணைப்பது, முக்கியமான தரவைக் கட்டுப்படுத்துவது மற்றும் பயனர்கள் தளங்களுக்கு இடையில் மாறுவதை கடினமாக்குவது போன்ற பணிகளை செய்கினறன. இதன் காரணமாக, சந்தைகள் நியாயமானவையாகவோ அல்லது போட்டிக்கு திறந்தவையாகவோ இல்லை. டிஜிட்டல் சந்தைகள் போட்டியிலிருந்து கட்டுப்பாட்டுக்கு மாறும்போது, ஒரு கேள்வி எழுகிறது: அரசு இந்த சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக நிறுவனக் கட்டமைப்பு மூலம் மறுவடிவமைப்பு செய்ய முடியுமா?
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) மீதான இந்தியாவின் அணுகுமுறை, அனைவரும் பயன்படுத்த அடிப்படை டிஜிட்டல் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான திட்டமாகும். இந்த அடிப்படை அமைப்புகள், பல்வேறு சேவை வழங்குநர்கள் தனியார் நிறுவனங்களை நம்பியிருக்காமல் புதிய சேவைகளை வழங்க அனுமதிக்கின்றன. இந்தப் பொது உள்கட்டமைப்பு நெறிமுறை, பயனர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கும் (zero-cost rail for users) என்ற RBI-யின் சமீபத்திய மறு உறுதிமொழியில் தெளிவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் திறந்ததாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) சந்தையை வடிவமைக்க உதவுகிறது. இந்தியா ஸ்டேக்குடனான இந்தியாவின் அனுபவம், அரசாங்கம் இந்த அமைப்புகளை முன்கூட்டியே பயன்படுத்துவதன் மூலமும், இந்திய தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India (NPCI)) போன்ற முக்கியமான நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலமும், வடிவமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் எவ்வாறு வழிநடத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. டிஜிட்டல் சந்தைகள் எந்த நிலைமைகளின்கீழ் உருவாகின்றன என்பதைத் தீர்மானிக்கும் ஒரு கட்டமைப்பாளராக அரசின் பங்கை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மறுவடிவமைக்கிறது.
இருப்பினும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும். அவை பயனுள்ள வடிவமைப்பு மற்றும் சரிபார்ப்புகள் மற்றும் சமநிலைகள் மூலம் முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டும். சேவைகள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன, வழங்கப்படுகின்றன அல்லது தரவு எவ்வாறு கையாளப்படுகிறது போன்ற முக்கியப் பகுதிகளை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் பெரிய நிறுவனங்கள் மீண்டும் கட்டுப்படுத்தக்கூடும். இதனால் மற்றவர்கள் போட்டியிடுவது கடினமாகிவிடும். கட்டுப்பாடு வலைத்தளங்களிலிருந்து விநியோகம் அல்லது பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு மாறக்கூடும். பல DPI அமைப்புகள் பொது-தனியார் கூட்டாண்மைகள் (Public-Private Partnership (PPP)) மூலம் கட்டமைக்கப்படுகின்றன. அங்கு தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் முக்கியமான தொழில்நுட்ப விதிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வோடு இல்லை. சிக்கல்களைத் தடுக்க, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை, தரவின் வரையறுக்கப்பட்ட பயன்பாடு மற்றும் முடிவெடுப்பதில் வெவ்வேறு குழுக்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்கான தெளிவான விதிகள் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) "பொது" என்பது அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், அரசாங்கத்தால் மட்டும் வழங்கப்படாமல் தெளிவான விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதாகும். உள்கட்டமைப்பு பொதுவாக இருந்தாலும், தரவு பெரும்பாலும் ஒரு சில தனியார் கிளவுட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது கட்டுப்பாடு, அணுகல் மற்றும் இந்த நிறுவனங்களைச் சார்ந்திருத்தல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. ஆய்வுகள் இதை 'ஒரு சேவையாக இறையாண்மை' என்று அழைக்கப்படுகிறன. இங்கு அரசாங்கங்கள் பொறுப்பில் இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் கட்டுப்படுத்தாத தனியார் மேகக் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. இதைச் சரிசெய்ய, மேகக் கணினி சேவைகளின் பொது உரிமை, அமைப்புகள் ஒன்றாகச் சிறப்பாகச் செயல்பட உதவும் விதிகள் மற்றும் இந்த அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதில் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டப் பொறுப்புகள் போன்ற யோசனைகள் நமக்குத் தேவை.
தற்போதைய விதிகள் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை (partial protection) மட்டுமே வழங்குகின்றன. பொதுத் தரவு எவ்வாறு விற்கப்படுகிறது அல்லது தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் மோசமான கண்காணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகளை தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டிருக்கவில்லை. பொது-தனியார் கூட்டாண்மைகளில் பொறுப்பு வெவ்வேறு குழுக்களிடையே வழங்கப்பட்டிருப்பதால் அது ஒரு நிர்வாக வெற்றிடத்தை (governance vacuum) உருவாக்குகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அனுபவம், அரசு டிஜிட்டல் சந்தைகளின் கட்டமைப்பை தீவிரமாக வடிவமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இது வடிவமைப்பு மூலம் திறந்த தன்மை, உள்ளடக்கம் மற்றும் போட்டித்தன்மையை உருவாக்க முடியும். இந்த நிறுவன அணுகுமுறை இன்றைய வேரூன்றிய ஏகபோகங்களை எதிர்ப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு போன்ற நாளைய தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதற்கான அடித்தளங்களையும் உருவாக்குகிறது.
பகிரப்பட்ட வளங்களின் வழிகாட்டியாகவும் பராமரிப்பாளராகவும் பொறுப்பேற்பதன் மூலம், பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் செழித்து வளரும் சூழலை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். இருந்தபோதிலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்பார்வைக்கான தேவையைக் குறைக்காது.
எழுத்தாளர்கள் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) Prosus மையத்தில் உள்ளனர்.
Original article : State should reclaim its role, shape digital markets. -Payal Malik, Nikita Jain