தற்போதைய செய்தி :
பாரபட்சமான நடத்தை மற்றும் "தேர்தல் மோசடி மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையை ஏற்படுத்துதல்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கான அறிவிப்புகளைச் சமர்ப்பித்தன. இது அரசியலமைப்பின் பிரிவு 324-ஐ மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
பிரிவு 324 (1): அரசியலமைப்பின்கீழ், நாடாளுமன்றத்திற்கும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு நடைபெறும் அனைத்துத் தேர்தல்களுக்கும், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கும் உரிய வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் அத்தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
பிரிவு 324 (2): தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேவையான அளவில் குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப பிற தேர்தல் ஆணையர்களையும் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையரும் மற்ற தேர்தல் ஆணையர்களும், இதற்காக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது.
பிரிவு 324 (3): வேறு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டால், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என்று குறிப்பிடுகிறது.
பிரிவு 324 (4): "மக்களவைக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கும் நடைபெறும் ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு முன்னரும், அத்துடன் சட்டமன்ற மேலவையைக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்தின் மேலவைக்கு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு முன்னரும், அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலுக்கு முன்னரும், பிரிவு (1)-ன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில் ஆணையத்திற்கு உதவுவதற்காக, குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, அவர் முக்கியமெனக் கருதும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கலாம் என்று குறிப்பிடுகிறது.
பிரிவு 324 (6): தேர்தல் ஆணையம் ஏதேனும் கோரிக்கையை முன் வைக்கும் போது, குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர், தேர்தல் ஆணையத்திற்கோ அல்லது மாநில தேர்தல் ஆணையருக்கோ, அவர்களின் பணிகளை நிறைவேற்ற தேவையான பணியாளர்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
சிறப்புக் கவனம்: பெற்றுள்ள பிரிவு 324 (5) பற்றி
அரசியலமைப்பின் பிரிவு 324 (5), தலைமைத் தேர்தல் ஆணையரை உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவது போன்ற நடைமுறை (impeachment) மூலம் மட்டுமே நீக்க முடியும். வேறு காரணங்களுக்காக அவர்களை பதவியில் இருந்து நீக்கமுடியாது என்று குறிப்பிடுகிறது.
தேர்தல் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில், அது தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையிலே செய்ய வேண்டும் என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது.
இந்த பிரிவு, இந்த செயல்முறை “நாடாளுமன்றம் உருவாக்கும் சட்டங்களுக்கு உட்பட்டது” (provisions of any law made by Parliament) என்றும் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 11, ராஜினாமா மற்றும் நீக்குதல் பற்றிய விதிகளை குறிப்பிடுகிறது. இந்த சட்டம் அரசியலமைப்பில் கூறியுள்ள அதே முறையையே பின்பற்றுகிறது.
'நீதிபதிகள் விசாரணை சட்டத்தின் பிரிவு (Judges Inquiry Act) பிரிவு 3-ன் படி, ஒரு நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு ஒரு கோரிக்கை மனுவை (address) சமர்ப்பிப்பதற்கான தீர்மானம், மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறைந்தது 100 உறுப்பினர்களாலும், மாநிலங்களவையில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறைந்தது 50 உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.
மக்களவை சபாநாயகரோ அல்லது மாநிலங்களவை தலைவரோ ஒரு தீர்மானத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் முடிவு செய்யலாம். அந்தத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், விசாரணை மேற்கொள்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை சபாநாயகரோ அல்லது தலைவரோ அமைக்க வேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களாக, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு புலமை பெட்ரா சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
அந்தக்குழுவின் விசாரணை அறிக்கை பின்னர் சபாநாயகரிடமோ அல்லது தலைவரிடமோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதிபதி ஒருவர் முறைகேடான நடத்தை கொண்டவர் என்றோ அல்லது பணிபுரிய இயலாத தகுதிக்குறைபாடு கொண்டவர் என்றோ அக்குழு கண்டறியுமானால், அந்தத்தீர்மானம் எந்த அவையிலோ உள்ளதோ, அந்த அவைகளால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டம் கூறுகிறது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான கோரிக்கை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
2023-ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் பற்றி…
டிசம்பர் 2023-ல் நிறைவேற்றப்பட்ட, 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிப்பதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு ஒன்றிய அமைச்சர் (Union Cabinet Minister) ஆகியோரைக் கொண்ட ஒரு தேர்வுக் குழுவை அமைக்கிறது. புதிய சட்டம், முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, உச்சநீதிமன்றத்தின தலைமை நீதிபதியை (CJI) மாற்றி ஒன்றிய அமைச்சரை கொண்டு வந்தது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023'-ன் பிரிவு 5-ன் படி, இப்பதவிகளுக்கான வேட்பாளர்கள், தற்போது பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற செயலாளர் (Secretary) நிலையிலான அதிகாரிகளாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறது
தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுவதற்காக, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு ஐவர் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிப்பதற்காக, சட்ட அமைச்சரின் தலைமையில், செயலாளர் பதவிக்குக் குறையாத தகுதியுடைய மேலும் இரு நபர்களைக் கொண்ட ஒரு 'தேடல் குழுவை' அமைப்பதற்கான விதிகள் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
பிரிவு 8-ன் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை, தேர்வுக் குழுவானது வெளிப்படையான முறையில் தேர்வுக் குழுவே வகுத்துக்கொள்ளும். தேர்வுக் குழுவால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களைத் தவிர, வேறு எந்தவொரு நபரையுமே தேர்வுக் குழுவானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
Original Link: Impeachment notice against CEC Gyanesh Kumar: What to read in Article 324.