மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: சுயக் கணக்கெடுப்பை மேற்கொள்வது எப்படி?

 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடைபெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பெறும் தரவுகளை மொபைல் செயலிகள் மூலம் பதிவு செய்வார்கள்.


 இந்தியாவில் 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இது நாடு முழுவதும்  நாட்டில் உள்ள மக்கள் தொகை  குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்கும். 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, மக்கள் தாங்களே தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 1, 2026) அன்று தொடங்கியது.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடைபெறும். இதில், கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் தரவுகளை மொபைல் செயலிகள் மூலம் பதிவு செய்வார்கள்.


செயல்முறையை எளிதாக்கும் வகையில், குடிமக்கள் தங்கள் வசதிக்கேற்ப தகவல்களைப் பூர்த்தி செய்துகொள்ள சுயக் கணக்கெடுப்பு வசதி  வழங்கப்பட்டுள்ளது.


சுயக் கணக்கெடுப்பு (self-enumeration) என்றால் என்ன?


இது ஒரு புதிய இணையதள (web-based) வசதி ஆகும். இதன் மூலம், கணக்கெடுப்பாளர் நேரில் வருவதற்கு முன்பே,  மக்கள் தங்கள் வீடு குறித்த விவரங்களை இணையதளத்தின் மூலமாக சமர்ப்பிக்கலாம். இது நெகிழ்வுத்தன்மையை (flexibility) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நேரத்தில்  16 மொழிகளில் ஏதாவது ஒன்றில்  விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.


சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்ய படிப்படியான வழிகாட்டி:


சுயக் கணக்கெடுப்பில் பங்கேற்க,  மக்கள்  சுயக் கணக்கெடுப்பு வலைத்தளம் வழியாக இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


  • உள்நுழைவு: வலைதளத்தை அணுகி, கைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.


  • இருப்பிடத்தைக் கண்டறிதல்: சரியான இருப்பிடத்தைக் கண்டறிய, வழங்கப்பட்டுள்ள வரைபடக் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.


  • விவரங்களை நிரப்புதல்: குடும்பத் தகவல்கள் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அட்டவணையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


  • சமர்ப்பி: தகவல்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.


  • சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணைப் பெறுதல்: சமர்ப்பிக்கப்பட்டவுடன், கணினி அமைப்பு ஒவ்வொரு பதிலளிப்பவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.


  • அடையாள அட்டையைப் பகிரவு: மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் வீடு வீடாகச் செல்லும்போது,  மக்கள் அவரிடம் அடையாள அட்டையை கொடுக்க வேண்டும்.


  • உறுதிப்படுத்தல்: கணக்கெடுப்பாளர் தரவுகளை உறுதிப்படுத்துவார். மேலும், அது அதிகாரப்பூர்வமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படும்.


சுயக்  கணக்கெடுப்புக்கான தேதிகள் (Dates for self-enumeration)


ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் சுயக் கணக்கெடுப்புக்கான தேதிகள் ஒரே மாதிரியாக இல்லை. 

உங்கள் சுயக் கணக்கெடுப்புத் தேதிகளைச் சரிபார்க்கும் வழிமுறை இங்கே:


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, கர்நாடகா, லட்சத்தீவுகள், மிசோரம், ஒடிசா, சிக்கிம், டெல்லி (டெல்லி நகராட்சி மற்றும் இராணுவ குடியிருப்பு வாரியம்) போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.


குஜராத், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: ஏப்ரல் 5 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும்.உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 10 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.


ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 16-20 ஆம் தேதி வரை நடைபெறும்.


பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 17  முதல்  மே 1 ஆம் தேதி வரை நடைபெறும். தெலங்கானாவில் ஏப்ரல் 26முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும்.


பஞ்சாபில்: ஏப்ரல் 30 முதல்  மே 14 ஆம் தேதி வரை நடைபெறும். டெல்லி நகராட்சி, மகாராஷ்டிரா, மேகாலயா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மே 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.


உத்தரப் பிரதேசம்: மே 7 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும். ஜம்மு காஷ்மீர், லடாக், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மே 17முதல் 31 ஆம்தேதி வரை நடைபெறும்.


இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 1 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும். கேரளா, நாகாலாந்து போன்ற மாநிலங்களில் ஜூன் 16 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாடு, திரிபுரா போன்ற மாநிலங்களில் ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.


அசாமில் ஆகஸ்ட் 2 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும்.மணிப்பூரில் ஆகஸ்ட் 17 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில்  தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (census) என்றால் என்ன?


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் புள்ளிவிவர, சமூக மற்றும் பொருளாதாரத் தரவுகளைச் சேகரித்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும். இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, உலகின் மிகப்பெரிய  பணிகளில் ஒன்றாகும். இது  ஒன்றிய  உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறதா?


தேர்தல்களைப் போல் இல்லாமல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்படுவதில்லை. இந்தியாவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.


2021-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை?


நாட்டில் களப்பணிகளையும் தரவு சேகரிப்பையும் பாதித்த கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும்?


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், குடும்பத் தலைவரின் பாலினம், உட்கொள்ளப்படும் தானிய வகை, ஒரு குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் தம்பதியரின் எண்ணிக்கை என்பது வரையிலான 33 கேள்விகள் இடம்பெறும். சாதி கணக்கிடப்படும் இரண்டாம் கட்டம்,  2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும். அந்தக் கட்டத்திற்கான கேள்விகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போது வெளியிடப்படும்?


மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் 2027-ஆம் ஆண்டிற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த முறை கணக்கெடுப்பு செயல்முறை முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. முந்தைய கணக்கெடுப்புகளில், தரவுகள் காகிதத்தில் சேகரிக்கப்பட்டு ஸ்கேன் செய்து செயலாக்கப்பட்டன.  இப்போது மொபைல் செயலிகள் (mobile applications) பயன்படுத்தப்படுவதால், தகவல் சேகரிப்பு மற்றும் செயலாக்கம்  வேகமாக நடைபெறும். இதன் மூலம், தகவல்கள் உடனுக்குடன் செயலாக்கப்படுவதால், முடிவுகள் விரைவாக வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.


Original article : Census 2027: How to do self-enumeration - a step-by-step guide.

Share: