முக்கிய அம்சங்கள்:
• பாதுகாப்புத் துறைப் பொதுத்துறை நிறுவனங்களும் (Defence Public Sector Undertakings (DPSUs)) தனியார் துறையும் முறையே 54.84% மற்றும் 45.16% பங்களிப்பை வழங்கியுள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் இந்தியப் பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களைப் பாராட்டினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தங்களது கருத்துகளை கூறினார்.
• கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 151% அதிகரித்துள்ளது. அதேவேளையில், தனியார் நிறுவனங்கள் 14% வளர்ச்சியைப் பதிவு செய்து வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாதுகாப்பு ஏற்றுமதியில் தனியார் துறை ரூ. 17,353 கோடி மதிப்பிலான பங்களிப்பை அளித்துள்ளது. அதே சமயம், பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.21,071 கோடி மதிப்பிலான பங்களிப்பை வழங்கியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute (SIPRI)) சமீபத்திய அறிக்கையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடுகளுக்கிடையேயான முக்கிய ஆயுதப் பரிமாற்றங்களின் உலகளாவிய அளவு, 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை விட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும், இரண்டு காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதிகள் மூன்று மடங்கிற்கும் அதிகமாக (210 சதவீதம் அதிகரிப்பு) உயர்ந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
• 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய ஆயுதங்களின் சர்வதேசப் பரிமாற்ற அளவு, 2016–20 காலகட்டத்தை விட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது. 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய அதிகரிப்பு இதுவாகும்.
• 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகித்த நாடுகளாக 66 நாடுகளை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) அடையாளம் கண்டுள்ளது. இந்தக்காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகித்த முதல் ஐந்து பெரிய நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகியவை ஆகும். இந்த ஐந்து நாடுகளும் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களிக்கின்றன.
• 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட தரப்புகளாக 162 நாடுகளையும், 4 அரசு சாரா ஆயுதக் குழுக்களையும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இந்தக்காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட முதல் ஐந்து நாடுகள்: உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகும். இவை உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் 35 சதவீதத்தைப் பெற்றுள்ளன. 1966-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சர்வதேச நிறுவனமாகும். இது திறந்த மூலங்களை அடிப்படையாகக் கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தரவுகள், பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.
Original article: What policy reforms are taken for defence sector? -Priya Kumari Shukla