தற்போது மேற்கத்திய இடையூறு (Western Disturbances) நாட்டைப் பாதித்து வருவதால், அவற்றின் செயல்முறை, குளிர்காலத்திலிருந்து கோடைகாலத்திற்கு மாறும் காரணிகள், மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தற்போதைய செய்தி :
கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மார்ச் 27 அன்று பல மாநிலங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஒரு ‘மேற்கத்திய இடையூறு’ (Western Disturbance) மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வரும் ஈரப்பதம் ஆகியவற்றின் விளைவாக, பல்வேறு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.
மேற்கத்திய இடையூறின் செயல்முறை, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்..
முக்கிய அம்சங்கள்:
1. மேற்கத்திய இடையூறு என்பது மழையை கொண்டுவரும் காற்று அமைப்புகள் ஆகும். அவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதிகளைத் தாண்டி உருவாகி, கிழக்குநோக்கி இந்தியாவுக்கு நகரும்போது மத்தியதரைக் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரேபிய கடல் போன்ற கடல்களின் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு வருகின்றன.
2. மேற்கத்திய இடையூறு பருவமழை அல்லாத மாதங்களில் (ஜூன்-செப்டம்பர் வரை), வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழையையும், உயரமான பகுதிகளில் பனிப்பொழிவையும் ஏற்படுத்துகின்றன. மார்ச் மாதத்தின் தொடக்கத்திலும், குளிர்காலத்தின் தாக்கம் இன்னும் நீடிக்கும்போது, இதே நிலை தொடர்கிறது.
3. நமது நாடு குளிர்காலத்திலிருந்து கோடைக்காலத்திற்கு மாறிவரும் நிலையில், வர்த்தகக் காற்றுகளின் திசை, வெப்பநிலை, காற்றழுத்தம் மற்றும் மேற்கத்திய இடையூறு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
4. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, அட்சரேகை மற்றும் உயரத்துடன் சேர்த்து, மேற்பரப்புக் காற்றுகள் மற்றும் மேல் வளிமண்டல சுழற்சிகளை உள்ளடக்கிய காற்றழுத்தக் காற்றுகள்; மேற்கத்திய இடையூறு மற்றும் வளிமண்டலச் சூறாவளிகள் ஆகியவை இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கின்றன.
5. வட இந்தியாவில் பொதுவாக நவம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில், வடகிழக்கு வர்த்தகக் காற்றுகள் நாடு முழுவதும் அதிகமாக வீசும். இந்தக்காற்றுகள் நிலப்பகுதியிலிருந்து கடலை நோக்கி வீசுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இது ஒரு வறண்ட காலநிலையை ஏற்படுத்துகிறது.
6. மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து வளிமண்டலச் சூறாவளிகள் உள்ளே வருவது, வட இந்தியச் சமவெளிகளில் நிலவும் குளிர்காலத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இவை சமவெளிகளுக்கு மிகவும் தேவையான குளிர்கால மழையையும், மலைப்பகுதிகளுக்குப் பனிப்பொழிவையும் கொண்டு வருகின்றன. இந்த குளிர்கால மழை உள்ளூர் மொழியில் 'மஹாவத்' (Mahawat) என்று அழைக்கப்படுகிறது; இந்த மழை 'ரபி பயிர்களைப் பயிரிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
7. இந்தியாவின் தீபகற்பப் பகுதியில், தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குளிர்காலம் இருப்பதில்லை. கடலின் சமநிலைப்படுத்தும் (moderating) தாக்கம் காரணமாக, குளிர்காலத்தில் வெப்பநிலையின் மாற்றம் பெரிதாக உணரப்படுவதில்லை.
கோடைகாலம் (hot weather season) தொடங்கும் போது என்ன மாற்றங்கள் ஏற்படும்?
8. பொதுவாக, மார்ச் முதல் மே வரையிலான காலம் இந்தியாவில் கோடைக்காலமாகக் கருதப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுவதால், உலகளாவிய வெப்ப மண்டலம் வடக்கு நோக்கி நகர்கிறது. இது வட இந்தியச் சமவெளிகளில் வெப்பநிலை உயர்வதற்கு முக்கியக் காரணியாக அமைகிறது. மே மாதத்தில், நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவது ஒரு இயல்பான நிகழ்வாகும். தீபகற்ப இந்தியாவில், பெருங்கடல்களின் சமநிலைப்படுத்தும் (moderating) தாக்கத்தினால் வெப்பநிலை குறைவாகவே உள்ளது.
9. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘லூ’ எனப்படும் வலுவான, வேகமான, வெப்பமான வறண்ட காற்று, கோடைகாலத்தின் முக்கிய காற்றுகளில் ஒன்றாகும். வட இந்தியாவில் மே மாதத்தில் உருவாகும் புழுதிப் புயல்களும் இயல்பானவை, அவை தற்காலிகமாக வெப்பத்தை குறைக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஏற்படும் உள்ளூர் இடியுடன் கூடிய மழையானது ‘கால் பைசாகி’ (Kaal Baisakhi) அல்லது ‘நார்வெஸ்டர்ஸ்’ (Nor’westers) என்று அழைக்கப்படுகிறது.
10. கோடை காலத்தின் இறுதியில், குறிப்பாகக் கேரளாவிலும் கர்நாடகாவிலும் பருவமழைக்கு முந்தைய சாரல் மழைகள் பெய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். இவை மாம்பழங்கள் விரைவாகப் பழுக்க உதவுவதால், பெரும்பாலும் இவை ‘மாம்பழ மழை’ (Mango showers) என்று அழைக்கப்படுகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வண்ணக் குறியீட்டு எச்சரிக்கைகள்
‘பச்சை’ என்பது ‘எச்சரிக்கை இல்லை’ என்பதைக் குறிக்கிறது: அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை, மேலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்ற முன் அறிவிப்பாகும். ‘மஞ்சள்’ எச்சரிக்கை “கண்காணிக்கவும்” என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் நிலைமை குறித்து “தகவல்களைத் தெரிந்துகொள்ள” அறிவுறுத்தப்படுகிறார்கள். ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை “எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் “தயாராக இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரஞ்சு எச்சரிக்கையின்போது, கன முதல் மிகக் கனமான மழைப்பொழிவுக்கான முன்னறிவிப்பு இருக்கும். 'சிவப்பு' எச்சரிக்கை என்பது "எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்பதைக் குறிக்கிறது. மேலும் "நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த முன்னறிவிப்பு மிக அதிக மழைப்பொழிவுக்கானதாகும். இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), "சிவப்பு நிற எச்சரிக்கை என்பது 'சிவப்பு எச்சரிக்கை' என்று பொருளல்ல," என்றும், அது "நடவடிக்கை எடுங்கள்" என்பதை மட்டுமே குறிக்கிறது என்று தெளிவுபடுத்துகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு பற்றி
1. 2003-ஆம் ஆண்டு முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது செயல்பாட்டு வானிலை ஆய்வு நோக்கங்களுக்காக இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (Indian National Satellite System (INSAT)) தரவுகளைப் பயன்படுத்தி வருகிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான தயாரிப்புகளின் வருகையானது, முன்னறிவிப்புத் துல்லியம், வளிமண்டலம் மற்றும் கடல் அளவுருக்களைக் கண்காணித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவந்ததுடன், ஒட்டுமொத்த வானிலை ஆய்வு சேவைகளையும் மேம்படுத்தி, சொத்து, உயிர் மற்றும் வாழ்வாதார இழப்புகளைக் குறைத்தது.
2. செயற்கைக்கோள்கள்: இந்தியாவிடம் INSAT-3D, INSAT-3DR மற்றும் INSAT-3DS என மூன்று செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ளன. இவை முக்கியமாக வானிலை ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், INSAT-3D மற்றும் INSAT-3DR ஆகியவை 8 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருந்து, தங்களின் திட்டக் காலத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளன. INSAT-3DS 2024-ல் ஏவப்பட்டது.
3. பருவமழைத் திட்டம்: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன் முதன்மையான முன்னெடுப்புகளில் ஒன்று 'பருவமழைத் திட்டம்:' (Monsoon Mission) ஆகும். இது பல்வேறு கால அளவுகளில் பருவமழைப் பொழிவைச் சிறப்பாகக் கணிப்பதற்காக, 'உயர் செயல்திறன் கணினி' (High-Performance Computing (HPC)) தொழில்நுட்பத்தால் இயங்கும் மேம்பட்ட 'எண்முறை வானிலை முன்னறிவிப்பு' (Numerical Weather Prediction (NWP)) மாதிரிகளைப் பயன்படுத்தும் ஒரு விரிவான திட்டமாகும்.
4. பாரத் முன்னறிவிப்பு அமைப்பு (Bharat Forecast System (BFS)): இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) உள்நாட்டிலேயே உருவாக்கிய ஒரு புதிய வானிலை மாதிரியான 'பாரத் முன்னறிவிப்பு அமைப்பை' (BFS), இந்திய வானிலை ஆய்வு மையம் 2025 மே 26 அன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
5. இந்த மாதிரி 6 கி.மீ x 6 கி.மீ என்ற உயர் இடம்சார்ந்த தெளிவுத்திறனைக் (spatial resolution) கொண்டுள்ளது. இதன் மூலம் 36 சதுர கி.மீ பரப்பளவை ஒரு அலகாகக் கொண்டு வானிலை முன்னறிவிப்புகளை வழங்கமுடிகிறது. இது, 144 சதுர கி.மீ பரப்பளவை ஒரே அலகாகக் கொண்டு செயல்பட்டுவந்த, தற்போது பயன்பாட்டிலுள்ள 12 கி.மீ x 12 கி.மீ தெளிவுத்திறன் கொண்ட மாதிரியிலிருந்து ஒரு வந்த ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பாரத் முன்னறிவிப்பு அமைப்பானது, இந்திய வானிலை ஆய்வு மையயத்தின் முன்னறிவிப்புகளின் துல்லியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, ஊராட்சி (Panchayat) நிலை வரையிலும் மிகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. மௌசம் திட்டம் (Mission Mausum): மற்றொரு முக்கிய முன்னெடுப்பு ‘மௌசம் திட்டம்' ஆகும். இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 150 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனவரி 14 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் 'மௌசம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு, மாதிரி உருவாக்கம் மற்றும் தகவல்களைப் பரப்புதல் ஆகிய துறைகளில் இந்தியாவின் வானிலை ஆய்வுத் துறையின் திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடாக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Original Link: Western Disturbances explained amid IMD ‘Orange alert’ in some states.