அரசுப் பள்ளிகளைவிட முன்னுரிமை பெறும் தனியார் பள்ளிகள்; குறைந்துவரும் மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் விகிதங்கள்: இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் நிலை என்ன? -அபினய ஹரிகோவிந்த்


2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறித்து நிதி ஆயோக் மேற்கொண்ட ஓர் ஆய்வு, பரந்த அளவிலான போக்குகள் மற்றும்  சவால்களை தாண்டி, பள்ளிப் படிப்புச் சுழற்சியிலேயே இடைநிலைக் கல்வியை “மிகவும் பலவீனமான இணைப்பு” (most fragile link) என்று அடையாளப்படுத்தியுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே:


கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பள்ளிக் கல்வி எப்படி இருந்துள்ளது? தனியார் கல்வியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் 8 ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்களைத் தக்கவைப்பதில் அதிகரித்து வரும் சவால்கள் என, இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தியப் பள்ளிக் கல்வி அமைப்பு குறித்த நிதி ஆயோக்கின் பகுப்பாய்வு, அதன் போக்குகளையும் சவால்களையும் சுட்டிக்காட்டுகிறது.


கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE)), தேசிய சாதனை கணக்கெடுப்பு மற்றும் 2017 முதல் 2024 வரை கற்றல் விளைவுகளை அளவிட ஒன்றிய அரசு பயன்படுத்திய பராக் ராஷ்ட்ரிய சர்வேக்ஷன் மற்றும் பிரதம் என்ற தன்னார்வ அமைப்பின் வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை ஆகியவற்றில் உள்ள தற்போதைய தரவுகளைப் பயன்படுத்தி, 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்தாண்டு காலத்திற்க்கான  பள்ளிக் கல்வியின் நிலையைப் பற்றிய ஒரு பகுப்பாய்வை நிதி ஆயோக் வழங்கியுள்ளது.





பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் ஒட்டுமொத்த போக்கு எவ்வாறு இருந்துள்ளது?


ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், கடந்த பத்தாண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  8% குறைந்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 26.95 கோடியாக இருந்த எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 24.69 கோடியாகச் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மூன்று காரணங்களை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது:  அவை, "மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறிப்பாகக் குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் காரணமாகப் பள்ளி செல்லும் வயதுடைய மக்கள் தொகை அளவு குறைவது, பள்ளிகளை ஒருங்கிணைக்கும் அல்லது இணைக்கும் நடவடிக்கைகளின் விளைவுகள் மற்றும் உயர்கல்வி நிலைகளில் மாணவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் உள்ள சவால்களாகும்.


தனியார் பள்ளிக் கல்வியின் மீதான தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் இந்த பகுப்பாய்வு, 2014-15-ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களில்  54.3% பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர் என்றும், இந்த விகிதம் 2024-25-ஆம் ஆண்டில் 49.25%-ஆகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 31.7% என்பதிலிருந்து 38.8%-ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது பிற   பள்ளிகளில் பயில்கின்றனர்.


மாணவர் சேர்க்கைப் போக்குகளில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: இந்த ஆய்வின்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 2005-ஆம் ஆண்டில் 71%-ஆக இருந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் அது 49.24%-ஆகக் சரிந்துள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது?


2014-15 ஆம் ஆண்டில் 11.07 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 10.13 லட்சமாகச் சரிந்துள்ளது. எண்ணிக்கை 8% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2.88 லட்சத்திலிருந்து 3.39 லட்சமாக உயர்ந்து, 18% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, "பள்ளிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சீரமைத்தல்" (consolidation and rationalization measures) தொடர்பான நடவடிக்கைகளின் தாக்கமே காரணம் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பல மாநிலங்களில், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஒன்றிணைக்கும் வகையில் பள்ளி இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசியல் விவாதத்தை அதிகரிக்க செய்துள்ளன.


2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிதி ஆயோக் திட்டமானது, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த பள்ளிகளை ஒன்றிணைத்து மறுசீரமைத்தது. அதன் பின்னர், வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பள்ளி வளாகங்களை (School Complexes) அமைக்குமாறு 2020-ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரை செய்தது.


கல்விச் சுழற்சியில் மிகவும் ‘பலவீனமான இணைப்புகள்’ யாவை?


இடைநிலைக் கல்வியை ஒரு முக்கிய இடைவெளியாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது: தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் 90%-க்கும் அதிகமாக உள்ள மொத்த சேர்க்கை விகிதம் (gross enrollment ratio (GER)), இடைநிலைக் கல்வியில் 78.7%-ஆக உள்ளது. இது, ஒரு குறிப்பிட்ட கல்வி மட்டத்திலுள்ள மொத்த சேர்க்கையை, அந்த அளவிற்கான அதிகாரப்பூர்வ வயதுக் குழு மக்கள்தொகையின் சதவீதமாகக் குறிப்பிடுவதாகும். மேல்நிலைக் கல்வி நிலையில், மொத்த சேர்க்கை விகிதம் குறைந்து 58.4% ஆகிறது. மேலும், பள்ளியில் சேரும் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஏறக்குறைய நான்கு பேர் மேல்நிலைக் கல்வி வரை படிப்பைத் தொடர்வதில்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


பள்ளிக்கல்விச் சுழற்சியில் இடைநிலைக் கல்வியை “மிகவும் பலவீனமான இணைப்பு” என நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. இதில், “பொருளாதாரக் கட்டுப்பாடுகள், சமூகக் காரணிகள் மற்றும் பலவீனமான நிறுவன ஆதரவு ஆகியவை ஒன்றிணைந்து மாணவர்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இடைநிலைக் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் (GER) 75.68%-இலிருந்து 78.7%-ஆக சிறிய அளவில்  மட்டுமே அதிகரித்துள்ளது.


கல்வி உரிமைச் சட்டமானது, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது என்றும், 8-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடர்வதற்கான நிதிச்சுமை குடும்பங்களின் மீதே விழுவதால், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியிலிருந்து பாதியிலேயே விலகும் நிலை ஏற்படுகிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.


குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்கு முன்னேறுவதைத் தடுக்கும் மற்றொரு காரணியாக இது அமையலாம். மிகச் சில பள்ளிகளே மொத்தம் உள்ள 14.71 லட்சம் பள்ளிகளில் 5% மட்டுமே, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான கல்வியை வழங்குகின்றன. 7 லட்சத்திற்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் இருந்தாலும், இடைநிலைப் பள்ளி அளவில் இந்தப் எண்ணிக்கை 1.42 லட்சமாகத் குறைகிறது. 7 லட்சத்திற்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் (Primary Schools) உள்ள நிலையில், மேல்நிலை/இரண்டாம் நிலைப் பள்ளிகளின் (Secondary Schools) எண்ணிக்கைக் குறைந்து 1.42 லட்சம் என்ற அளவில் உள்ளது.


பள்ளிகளுக்கு இடையில் நிலைமாற்றம் செய்வதற்கான எந்தவொரு முறையான இணைப்பும் இல்லாத இந்தத் நிலை, உள்ளூர் வசதிகளைப் பொறுத்து மாணவர்கள் முக்கியக் கட்டங்களில் பள்ளிகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்கும் விகிதம் குறைகிறது. மேலும், உயர் கல்வி நிலைகளுக்கு முன்னேறும் வாய்ப்பும் கட்டுப்படுகிறது  என்று  பகுப்பாய்வு குறிப்பிடுகிறது.


கடந்த பத்தாண்டுகளில் இடைநிற்றல் விகிதங்கள் எவ்வாறு மாறியுள்ளன?


தொடக்கக் கல்வி மட்டத்தில் இடைநிற்றல் விகிதம், 2014-15-ல் 4%-ஆக இருந்ததிலிருந்து 2024-25-ல் 0.3%-ஆகக் குறைந்து, பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது. உயர் தொடக்க நிலையிலிருந்து இடைநிற்றல் அளவுகள் கவலைக்குரியதாக மாறுகின்றன. உயர் தொடக்க நிலையில், 2024-25-ல் இந்த எண்ணிக்கை 3.5%-ஆக இருந்தது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.77%-க்கு நெருக்கமாக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இடைநிலைக் கல்வி இடைநிற்றல் விகிதம் 17.86%-லிருந்து 11.5%-ஆகக் குறைந்துள்ளது. கல்வியின் இந்த நிலையில் இந்த  விகிதம் அதிகமாக உள்ளது.


பலவீனமான அடிப்படைக் கற்றல், சிறுமிகளுக்கான சமூக அழுத்தங்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் உள்ளிட்ட தடைகளைச் சுட்டிக்காட்டி, வருகைப்பதிவு, கற்றல் நிலைகள் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்புகளின் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, "ஆபத்தில் உள்ள" மாணவர்களைக் கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE)) பள்ளிப் பதிவேடுகளில் ஒரு "ஆரம்பகால எச்சரிக்கை முறை” (Early Warning System) முறையை" அறிமுகப்படுத்த வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.


2024-25-ஆம் ஆண்டில், 5-ஆம் வகுப்பிலிருந்து 6-ஆம் வகுப்புக்கும், 8-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்புக்கும் மற்றும் 10-ஆம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்புக்கும் இடையிலான மாறுதல் நிலைகளில், மாறுதல் விகிதம் (ஒரு கல்வி நிலையிலிருந்து மற்றொரு கல்வி நிலைக்கு முன்னேறும் மாணவர்களின் விகிதம்) சிறுவர்களைவிட சிறுமிகளிடையே அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக, இடைநிலையிலிருந்து மேல்நிலைக்கான மாற்ற விகிதம், சிறுவர்களிடையே 72.4 சதவீதமாக இருந்த நிலையில், சிறுமிகளிடையே 77.9 சதவீதமாக இருந்தது.






Share: