கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடபட்ட அறிக்கை ஒன்றில், கடுமையான வெப்பம், உலகளாவிய உணவு அமைப்புகளைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளி வருவதாக ஐ.நா. முகமைகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் உணவு அமைப்பு எது போன்ற பாதிப்புகளை எதிர் கொள்கிறது?
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் அதிகரிப்பதும், கடும் வெப்பமானது வேளாண் உணவுப் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) மற்றும் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)) ஆகியவை இணைந்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த அரை நூற்றாண்டில் தீவிர வெப்ப நிகழ்வுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது வேளாண் உணவு அமைப்புகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீது அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் உணவு அமைப்பானது வெப்பம் சார்ந்த அழுத்தங்களுக்கு ஏன் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது? இதனை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் வேளாண் கொள்கைக் கட்டமைப்பு போதுமானதாக உள்ளதா?
கடும் வெப்பமும் இந்தியாவின் உணவு அமைப்பும்: FAO-WMO அறிக்கை என்ன வெளிப்படுத்துகிறது.
காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பு — விளக்கவுரை
ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization of the United Nations (FAO)) மற்றும் உலக வானிலை அமைப்பு World Meteorological Organization (WMO)) ஆகியவற்றின் கூட்டு அறிக்கை, மிக அதிக வெப்பநிலை தற்போது உலகளாவிய வேளாண்-உணவு (agrifood) அமைப்புகளுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அந்த அபாயத்தின் முக்கிய கட்டத்தில் இந்தியா இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வேளாண்மை
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றின் சமீபத்திய கூட்டறிக்கை ஒன்றின்படி, கடந்த அரை நூற்றாண்டில் கடும் வெப்ப நிகழ்வுகளின் அதிர்வெண், தீவிரம் மற்றும் கால நிலை மாற்றங்கள் அதிகரித்துள்ளன. இது உலகளாவிய வேளாண் உணவு அமைப்புகளுக்கும் நிலப்பரப்புகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதீத வெப்பம் (extreme heat) என்றால் என்ன?
வரையறை
அதீத வெப்பம் என்பது, பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் அவற்றின் வழக்கமான வரம்புகளை விட நீண்ட காலத்திற்கு உயர்ந்து, பயிர்கள், கால்நடைகள், மீன்கள், காடுகள் மற்றும் மனிதர்களுக்கு உடல் ரீதியான அழுத்தத்தையும் நேரடி உடல்ரீதியான சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக வரையறுக்கப்படுகிறது. கால அளவையும் கொண்டிருக்கும் வெப்ப அலைகளைப் போல் இல்லாமல், கடும் அதீத என்பது முற்றிலும் வெப்பநிலையின் அளவைக் கொண்டே வரையறுக்கப்படுகிறது.
அதீத வெப்பம், “அச்சுறுத்தலை அதிகரிக்கும் காரணி”
‘அதிதீவிர வெப்பமும் விவசாயமும்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, தீவிர வெப்பத்தை “பகலும் இரவும் உள்ள வெப்பநிலைகள் நீண்டகாலமாக வழக்கமான அளவை மீறி அதிகரிக்கும் ஒரு நிலையாகும். இது உணவு பயிர்கள், கால்நடைகள், மீன்கள், மரங்கள் மற்றும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்று சுட்டிக் காட்டுக்கிறது.
தீவிர வெப்பம் குறித்த குறிப்புகள் வெப்ப அலைகளின் பின்னணியிலேயே குறிப்பிடப்பட்டாலும், தீவிர வெப்பம் என்பது முழுமையாக வெப்பநிலையின் அளவை மட்டுமே கொண்டு வரையறுக்கப்படுகிறது. மாறாக, வெப்ப அலைகள் என்பவை நாட்கள் முதல் மாதங்கள் வரையிலான, குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லாமல் ஒரு காலப்பரிமாணத்தையும் உள்ளடக்கியுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுக்கிறது.
முக்கிய வேளாண் உற்பத்தி (பயிர்கள், கால்நடைகள், மீன்வளம் மற்றும் காடுகள்) மீது கடும் வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்த அந்த அறிக்கை, அது ஒன்றோடொன்று இணைந்த அழுத்தங்களின் ஒரு சிக்கலான வலைப்பின்னல் மூலம் உணவு அமைப்பைப் பாதிக்கிறது என்று கூறுகிறது.
இது மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதை வேகப்படுத்துகிறது, பயிர்களின்மீது பாதிப்பை ஏற்பத்துகிறது மற்றும் நீர்வாழ் சூழல் மண்டலத்தின் வெப்பப் பண்பை மாற்றுகிறது. அதுமட்டுமின்றி, இது காட்டுத்தீக்கு வழிவகுத்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், முழு உணவுச் சங்கிலியையும் சீர்குலைக்கிறது.
வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில், கடும் வெப்பம் என்பது ஏற்கனவே நிலவிவரும் பாதிப்புகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மோசமாக்கி, நிலைநிறுத்தும் ஒரு "அச்சுறுத்தலைப் அதிகரிக்கும் காரணியாக" செயல்படுகிறது. உதாரணமாக, நிலப்பரப்பில் அதிகமாக நெல் மற்றும் கோதுமை போன்ற ஒரே பயிரை மட்டும் பயிரிடும் முறையான ஒற்றைப் பயிர் சாகுபடியை இந்தியா சார்ந்திருப்பதும், அதனுடன் இணைந்த அதன் பிரம்மாண்டமான கடற்கரை மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் பெரும் மக்கள்தொகையும், பல வழிகளில் பாதிப்பை உருவாக்குகின்றன.
உணவு அமைப்புகள் மீதான தாக்கம்
உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு அமைப்பு, வெப்பநிலை மாற்றங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாகும். வெப்ப அலைகள் இந்தச் சங்கிலியின் ஒவ்வொரு முனையையும் சீர்குலைக்கின்றன. வெப்ப அலை ஆவியாதலை அதிகரித்து, மண் மற்றும் விளைநிலங்களை உலரச் செய்வதன் மூலம் மழைப்பொழிவு முறைகளைச் சீர்குலைக்கிறது. பயிர்களுக்குத் தேவையான நீர் உறிஞ்சுதலுக்குப் பதிலாக, இது தீவிரமான மழைப்பொழிவுக்கு வழிவகுத்து, வெள்ளம் மற்றும் மண் அரிப்பை ஏற்படுத்துகிறது.
இது, உலக வேளாண் நிலப்பரப்பில் 80 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள மழையை நம்பிய வேளாண் பணிகளுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலையானது கோதுமை போன்ற ரபி பயிர்களின் தானியம் நிரம்பும் நிலையையும் பாதிக்கிறது. இது பயிர்கள் முன்கூட்டியே முதிர்வடையவும், மகசூல் குறையவும் வழிவகுக்கிறது.
வெப்ப அலைகள் கால்நடைகளை, குறிப்பாக பால் மற்றும் கோழி வளர்ப்புத் துறையை, கடுமையாகப் பாதிக்கின்றன. ஏனெனில், அவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தமானது, பால் மற்றும் முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு, இறப்பு விகிதங்களையும் அதிகரிக்கிறது.
மீன்வளம் ஒரு தனித்துவமான மற்றும் கண்ணுக்குப் தெரியாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதிகரித்துவரும் நீரின் வெப்பநிலை, நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனைக் குறைத்து, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதனால் மீன்கள் ஆழமான மற்றும் குளிர்ந்த நீருக்கு இடம்பெயர்கின்றன அதீத வெப்ப அழுத்தம் காடுகளின் பாதுகாப்பை சீர்குலைத்து, காட்டுத்தீ அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த காட்டுத்தீக்கள் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழித்து, பழங்கள், தேன் மற்றும் மருத்துவத் தாவரங்களின் விளைச்சலையும் குறைக்கின்றன.
உணவு அமைப்பின் மீது வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக, கவனிக்கப்படாமல் விடப்படும் மிக முக்கியமான அம்சம், வேளாண்துறையில் பணியாற்றும் மக்கள்மீது அது ஏற்படுத்தும் விளைவாகும். 2019-ஆம் ஆண்டில் வெளியான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அழுத்தத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய துறையாக வேளாண்துறையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 94 கோடி மக்கள் வேளாண்துறையில் பணிபுரிகின்றனர். 2030-ஆம் ஆண்டில், வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் உலகளாவிய வேலைநேர இழப்புகளில் 60 சதவீதம் இந்தத் துறையால் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள்
அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு வளரும் நாடு என்பதால், இந்தியா தனது உணவு அமைப்பில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வெப்பத்தால் எளிதில் பாதிப்படையக்கூடிய கோதுமை மற்றும் அரிசியை அதிக அளவில் சார்ந்துள்ளது.
இந்தியாவின் உணவுக் கிண்ணம் (food bowl) என்று அழைக்கப்படும் இந்தோ-கங்கைச் சமவெளிகள், இறுதிக்கட்ட வெப்ப அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகும். பருவகால நிலை சராசரி வெப்பநிலையைவிட 1-2°C வெப்பநிலை உயர்ந்தால், தானி உற்பத்தி குறைந்து (உலர்ந்து, இயல்பைவிடச் சிறியதாகி) கோதுமை விளைச்சல் கணிசமாகக் குறைந்துவிடும்.
2022-ஆம் ஆண்டின் வெப்ப அலை இதற்கு ஒரு தெளிவான உதாரணமாகும். இது சில மாநிலங்களில் கோதுமை விளைச்சலைக் குறைத்தது. இந்தியாவின் கலோரி உட்கொள்ளலில் 70 சதவீதத்திற்குப் அதிகமாக அரிசி, காலநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாகவும், மழையை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு பயிராகவும் உள்ளது. அதிகரித்து வரும் வெப்ப அலைகள், நெல் சாகுபடியையும் உணவுப் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் 45 சதவீதம் பேருக்கு வேளாண்மைத்துறை வேலைவாய்ப்பு அளிக்கிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு இது முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. வெப்பத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் நிதிச்சுமை ஆகியவற்றின் கலவையே உழவர்களின் கவலைகளுக்கு ஒரு முக்கிய காரணியாகும். வேளாண் தொழிலாளர்கள் திறந்தவெளியில் வேலை செய்வதால், கடும் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சராசரி தொழிலாளியைவிட வெப்பத்தால் இறப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
மேலும், இந்தியப் பெருங்கடல் அதிக வெப்பமடைவது, மீன்வளத்தை சார்ந்து இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது பவளப்பாறைகள் வெளுத்தல், மீன் இனங்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் கடல் உணவுச் சங்கிலிகளில் சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற அபாயத்தைச் சமாளிக்க இந்தியாவின் வேளாண் கொள்கைக் கட்டமைப்பு போதுமானதாக உள்ளதா?
வேளாண்கொள்கை கட்டமைப்பு
இந்தியாவின் வேளாண் கொள்கை அமைப்பு நீண்டகாலமாக, நிலைத்தன்மையைவிட உற்பத்தி அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. இதனால், அதிகரித்துவரும் காலநிலை அபாயங்களை சமாளிக்க நாட்டுக்கு போதிய தயாரிப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. உழவர்களின் வருமான நிலைத்தன்மையை உறுதிசெய்ய அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) முறை, நடைமுறையில் கோதுமை மற்றும் அரிசியின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்துள்ளயுள்ளது. மின்சாரம் மற்றும் உரங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் காரணமாக, அரை வறண்ட பகுதிகளிலும் நீர்மிகு பயிர்களான நெல் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
சிறுதானியங்கள் போன்ற பாரம்பரிய மற்றும் பருவநிலையைச் சார்ந்த பயிர்கள், அவற்றின் சூழலியல் நன்மைகள் இருந்தபோதிலும், உழவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பயனற்றவையாகவே இருக்கின்றன. அரசு சிறுதானியங்கள் (Shree Anna) திட்டத்தை ஆதரிக்கவும், பயிர் வகைகள் போன்ற பயிர் பல்வகைப்படுத்தலையும் தோட்டக்கலைப் பயிர்களையும் ஊக்குவிக்கவும் தொடங்கியுள்ள நிலையில், மாநில அளவிலான ஊக்கத்தொகைகள் வேறு திசையில் செயல்படுகின்றன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செலவினத் துறையால் சுட்டிக்காட்டப்பட்டபடி, பல மாநிலங்கள் நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலாக நிதி ஊக்கத்தொகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பாரம்பரிய பயிர்களும் விதைகளும், உள்ளூர் வெப்பம் மற்றும் வறட்சி நிலைகளைத் தாங்கும் வகையில் பல நூற்றாண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், காலநிலை மாற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், இந்த விதைகள் மற்றும் பயிர்களில் பல, செழித்து வளர அதிக நீரும் நிலையான வெப்பநிலையும் தேவைப்படும் அதிக மகசூல் தரும் இரகங்களால் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, மீன் வளர்ப்பில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வெப்பக் காப்பிடங்கள் (thermal shelters) அல்லது காடுகளில் வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயைத் தடுக்கும் எரிபொருள் மேலாண்மை போன்ற கொள்கைகள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை.
மற்றொரு முக்கிய இடைவெளி தொழிலாளர் பாதுகாப்பு ஆகும். இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் இன்னும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்கபடவில்லை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான விதிகள் இருந்தாலும், பருவநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகளின் தீவிரமடைந்துவரும் தாக்கத்தைக் கையாள்வதற்கான குறிப்பிட்ட மற்றும் அமல்படுத்தக்கூடிய சட்ட பாதுகாப்புகள் எதுவும் இல்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் (National Disaster Management Authority (NDMA)) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும், தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஏப்ரல் 2026-ல் நாடு தழுவிய வெப்ப அலை குறித்த ஆலோசனையை வெளியிடுகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் பொதுவாகக் கட்டுப்படுத்தாத தன்மையைக் கொண்டவை.
வேளாண் உணவு அமைப்புகளை அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாற்றுவதை நோக்கி
உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். இருப்பினும், 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் 8 சதவீதத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து பசியை எதிர்கொண்டனர். மேலும், 230 கோடி மக்கள் மிதமான முதல் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர். இதற்கிடையில், அதீத வெப்பம் உலகிற்கு ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. வெப்பமடைந்துவரும் இந்த உலகில் உணவுப் பாதுகாப்பின் எதிர்காலத்தை உறுதிசெய்ய, ஒரு பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையும், ‘சம்பவங்களுக்குப் பின் செயல்படும் தப்பிப்பிழைப்பு’ (reactive survival’) என்ற நிலையிலிருந்து ‘முன்கூட்டியே செயல்படும் மீள்திறன்’ (proactive resilience) நிலைக்கு மாறுவதும் முக்கியமான நடவடிக்கையாகும்.
மாநில அளவிலான நிதிச் சலுகைகளின் கட்டமைப்பை மறுசீரமைப்பதே மிகவும் பயனுள்ள தகவமைப்பு உத்திகளில் ஒன்றாக இருக்கும். இதில், அதிக நீர் தேவைப்படும் ஒற்றைப் பயிர் சாகுபடிக்கான ஊக்கத்தொகைகளைப் படிப்படியாக நீக்கி, வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு ஆதரவளிப்பது அடங்கும். ஏனெனில், இந்தப் பயிர்கள் பருவநிலை மாற்றங்களைத் ஏற்ற திறன் கொண்டவை மற்றும் மற்ற பயிர்களைவிட இதற்கு மிகவும் குறைவான நீரே தேவைப்படுகிறது.
சிறுதானிய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னிலை வகித்தாலும், அதன் ஒட்டுமொத்த உற்பத்தி கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியைவிட மிகவும் குறைவாக உள்ளது. பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய பயிர்களின் அதிக உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் முதலீட்டை அதிகரிப்பதும், அறுவடைக்குப் பின்னர் இழப்புகளைக் குறைப்பதும் இந்த இடைவெளியைக் குறைக்க உதவக்கூடும்.
உணவு அமைப்பின் மனிதக் கூறினைப் பாதுகாப்பது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். வெளிப்புறப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பணி நேர மாற்றம், நீர் அருந்தும் நடைமுறைகள் மற்றும் வெப்பக் காப்பீடு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில், துறைசார்ந்த வெப்பச் செயல் திட்டங்களை ஊரகத் தொழிலாளர் நலத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கலாம்.
மேலும், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான வெப்பப் புகலிடங்களை உருவாக்குவதன் மூலமும், மரம் அதிகமாக உள்ள வனப் பொருட்களுக்கு அமைப்புரீதியான பாதுகாப்பை வழங்குவதன் மூலமும், ‘நீல’ மற்றும் ‘பசுமைப்’ பொருளாதாரங்களை உணவுப் பாதுகாப்பு உத்திகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும். பசிப் பிணி இல்லாத நிலையை (zero hunger) அடைவதற்கு, வேளாண் உணவு அமைப்புகளை மிகவும் சமத்துவமானதாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகவும் மாற்றியமைப்பதற்கான அதிக முயற்சிகள் தேவைப்படும்.
Original Link: How is India particularly vulnerable to heat-related stress on its food system?