நீதிமன்றங்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தும்போது, அதன் தவறான பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சமீபத்தில், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நீண்டகால முயற்சியின் விளைவாக, இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், 'ஒரே வழக்கு, ஒரே தரவு' (One Case, One Data (OCOD)) என்ற ஒருங்கிணைந்த நீதித்துறை தரவுத் தளம் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற இணையதளத்தில் உள்ள 'சு-சஹாயக்' (Su-Sahayak) என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் உரையாடல் செயலி (chatbot) போன்ற இரண்டு முன்முயற்சிகளை அறிவித்தார். 'ஒரே வழக்கு, ஒரே தரவு' (One Case, One Data (OCOD)), ஆனது ஒரு வழக்கு வெவ்வேறு நீதிமன்றங்கள் வழியாகச் செல்லும்போது அதற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல், நீதிமன்றப் பதிவுகளுக்கும் மனுதாரரின் நடவடிக்கைகளுக்கும் (மேல்முறையீடுகள் போன்றவை) இடையேயான இணைப்புகள், பல்வேறு ஆவணங்களை எளிதாக அணுகுதல், கைமுறை சரிபார்ப்பின் (manual verification) தேவையைக் குறைத்தல், உயர்நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களை பரஸ்பர அணுகலை வழங்குதல் மற்றும் நீதித்துறை புள்ளிவிவரங்களின் துல்லியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மென்பொருள் நடைமுறைகள் மற்றும் பதிவுகளின் தரத்தில் காணப்படும் பரந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், தரப்படுத்தப்பட்ட தரவுகள், வழக்குகள் எங்கு தேக்கமடைந்துள்ளன என்பதைக் கண்டறியவும், நடைமுறைத் தடைகளை எளிதாக்கவும், ஒட்டுமொத்தமாகத் தரவு அடிப்படையிலான முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பயனர்களின் வழக்கு நிலை, வழக்குப் பட்டியல்கள், உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள், மின்-சேவைகள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றை எளிதாகப் பார்க்க உதவும் வகையில், 'சு-சஹாயக்' (Su-Sahayak) நீதிமன்ற இணையதளத்தின் முகப்புப் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் அரசு முன்னெடுக்கும் மற்ற பெரிய தொழில்நுட்பத் திட்டங்களைப் போலவே, இதிலும் வெவ்வேறு அமைப்புகளுக்கிடையிலான இணக்கம், பழைய ஆவணங்களின் நம்பகத்தன்மை, தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி போன்ற சவால்கள் உள்ளன. ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள 'ஒரே வழக்கு, ஒரே தரவு' (One Case, One Data (OCOD)) திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் “நீதிக்கான அணுகலை” (access to justice) மேம்படுத்தும் என்று தலைமை நீதிபதி கூறியிருந்தாலும், அவற்றின் அறிமுகம் டிஜிட்டல் இடைவெளியை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. 'ஒரே வழக்கு, ஒரே தரவு' (One Case, One Data (OCOD)) முறையானது, வழக்கறிஞர்கள் டிஜிட்டல் ஸ்கேனர்கள் (digital scanners), ‘cloud backup’ வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடும். பெருநகரங்களில் உள்ள பெருநிறுவனங்கள் இந்தச் செலவுகளை எளிதாக ஏற்க முடியும். ஆனால், மாவட்ட மற்றும் தாலுகா அளவில் உள்ள சுதந்திரமான வழக்கறிஞர்களிடம் அவ்வாறு செய்வதற்குப் போதுமான மூலதனம் இல்லாமல் இருக்கலாம். மேலும், இணையதளம் வழியாக வழக்குகளைத் தாக்கல் செய்யத் தெரியாத சாமானிய மக்களுக்கு உதவ 'டிஜிட்டல் இடைத்தரகர்கள்' உருவாகக்கூடும். இது மக்களிடம் மறைமுகமான மற்றும் முறைப்படுத்தப்படாத கூடுதல் செலவுகளை உண்டாக்கும். ஜன் சஹாயக் (Jan Sahayak) போன்ற குரல்வழித் திறன்கொண்ட உதவியாளர்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ‘சு-சகாயக்' (Su-Sahayak) பெரும்பாலும் தட்டச்சு முறையிலேயே இயங்குகிறது. இதனால், தட்டச்சு செய்வதிலோ அல்லது சிக்கலான இணையதள மெனுக்களைப் பயன்படுத்துவதிலோ சிரமம் உள்ளவர்கள் இச்சேவையைப் பயன்படுத்துவதில் இருந்து விடுபடும் சூழல் ஏற்படலாம். குறிப்பாக, வரலாற்று ரீதியாக அதிக அளவில் கைது செய்யப்பட்ட அல்லது பிணை மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி பாரபட்சமாகச் செயல்படாமல் இருப்பதை அரசும் நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும். இந்திய நீதிமன்றங்கள் வழக்கமாக தீர்ப்பு வழங்கும் பணிகளைவிட, தரவுகளைத் திரட்டும் உதவிப் பணிகளுக்கே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகின்றன. தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் 'சுவாஸ்' (SUVAS) மற்றும் சட்டப்பூர்வமான தகவல்களைச் சேகரிக்கும் 'சுபேஸ்' (SUPACE) ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இந்த 'சு-சகாயக்' அமைகிறது. மற்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், நீதித்துறை இன்னும் வலிமையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தும்போது, அதன் அடிப்படை மாண்புகள் சிதையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
Original Link: Data and justice: On courts in India and AI tools