நெகிழ்வான விதிகள்: 2026-ஆம் ஆண்டு நெகிழி கழிவு மேலாண்மை (திருத்த) விதிகள் குறித்து…

 இந்தியாவிற்கு நெகிழி சேகரிப்பு மற்றும் மறுபயன்பாட்டு இலக்குகள் குறித்து முறையான கணக்கீடு தேவைப்படுகிறது.


மார்ச் 31 அன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் திருத்தங்கள், நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சியை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் ஒரு நிலைப்பாட்டை எட்டியுள்ளதை காட்டுகின்றன. 2016-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள் ஆண்டுதோறும் திருத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்ந்து மாற்றம் அடையும் கொள்கை அமைப்பை வெளிக்காட்டுகிறது. நெகிழியை உற்பத்திசெய்து பயன்படுத்தும் நிறுவனங்கள், நெகிழி மறுசுழற்சியில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதன்மூலம், குறைவான நெகிழி மட்டுமே குப்பைத்தொட்டிகள், நதிகள், கடல்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும். நெகிழி தயாரிப்பதற்கு எளிதானதாகவும், மலிவானதாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், பல வகையான பொருட்களுக்குப் பயன்படக்கூடியதாகவும் இருப்பதால், அது செல்வந்தர் முதல் வரை ஏழை மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது. உலோகத்தைவிட நெகிழி அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டது. இதுவே, நெகிழியை சேகரிப்பதையும் மறுசுழற்சி செய்வதையும் மிகவும் கடினமாக்குகிறது. இது போன்ற சூழலில் தான்    விதிகள் தேவைப்பட்டன.


2022-ல் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) விதிமுறை அமல்படுத்தப்பட்டபோது, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்கள் நெகிழி பொதிகள் மற்றும் மூலப்பொருட்களை தயாரிப்பவர்களும் பயன்படுத்துபவர்களும் 2021-22-ஆம் ஆண்டில் சந்தையில் வெளியிட்ட நெகிழியின் 35% அளவுக்கு சமமான கழிவுகளை சேகரித்து அதை பயன்படுத்த  வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இது 2022-23-ல் 70% ஆகவும், 2024-25-ஆம் ஆண்டில் 100% ஆகவும் உயர்த்தப்பட்டது. 2026-ஆம் ஆண்டு திருத்தங்கள் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இப்போது, நிறுவனங்கள் தங்கள் நெகிழி பொதிகளில் ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக (மேலும் அதிகரிக்கும்) ஒரு சதவீத அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, கடின நெகிழி பொதிகள் (வகை I) குறைந்தது 30% மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டிருக்க வேண்டும். இது 2028-29-ஆம் ஆண்டுக்குள் 60% ஆக உயர வேண்டும். இதற்கு இணையாக ‘மறுபயன்பாடு’ (reuse) குறித்த செயல்முறைகளும்  உள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் தங்கள் இலக்குகளை அடையத் தவறும் நிறுவனங்கள், ஆண்டுதோறும் அந்தப் பற்றாக்குறையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கையாவது ஈடுசெய்யும் பட்சத்தில், அந்தப் பற்றாக்குறையை மூன்று ஆண்டுகள்வரை கொண்டு செல்லலாம் என்று அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது, ​​அனைத்து நிறுவனங்களும் தங்களின் கடமைகளை 100% நிறைவேற்றுகின்றன என்பதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த ஆதாரமும் இல்லை. நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அளித்த பதில்களின்படி, இது 50%-60% அளவிலேயே உள்ளது. இருப்பினும், 2025-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு எந்த இலக்குகளும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், அரசு நிறுவனங்களை நெகிழி சேகரிப்பு அல்லது மறுசுழற்சிக்கு வலியுறுத்துவதை கைவிட்டுவிட்டதோ அல்லது அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை பொருட்படுத்தாமல் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்பதோ போல தெரிகிறது. வர்த்தகச் சான்றிதழ்களைப் (trading certificates) பயன்படுத்துவதற்கு விதிகள் உள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தை பொருளாதாரமே தீர்மானிக்கட்டும் என்று விதிகள் குறிப்பிடுகினறன. சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி இலக்குகளை சரியாக கணக்கிடாவிட்டால், ஏற்கனவே தளர்வாக உள்ள மறுபயன்பாட்டு இலக்குகள் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) நடைமுறையின் நோக்கம் பாதிக்கப்படும்.


Original article: Elastic rules: On the Plastic Waste Management (Amendment) Rules, 2026

Share: