2025-ஆம் ஆண்டு உலகளாவிய காலநிலை அறிக்கை: முன்னெப்போதும் இல்லாத வெப்பம், பெருங்கடல் வெப்பமயமாதல், பனிப்பாறை உருகுதல் மற்றும் அதிகரித்துவரும் சுகாதார அபாயங்களின் காரணமாக, நமது பூமி தற்போது 'நெருக்கடி நிலையை’ எதிர்கொண்டு உள்ளது. நமது பூமி ஏன் ஒரு "நெருக்கடி நிலையில்" (State of Emergency) இருக்கிறது? 2025-ஆம் ஆண்டு உலகளாவிய காலநிலை, காலநிலை குறித்து எது போன்ற தகவல்களை வழங்குகிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே.
தற்போதைய செய்தி :
பூமியானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆற்றல் சமநிலையின்மையை (energy imbalance) எதிர்கொண்டு வருவதால், உலகளாவிய காலநிலை ஒரு அவசர நிலையை அடைந்துள்ளது என்று உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)), சமீபத்தில் வெளியிட்ட 'உலகளாவிய காலநிலையின் நிலை 2025' (State of the Global Climate 2025) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், இந்த அறிக்கையின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. மார்ச் 23 'உலக வானிலை தினத்தன்று' (World Meteorological Day) வெளியிடப்பட்ட 'உலக காலநிலையின் நிலை 2025' அறிக்கையானது, தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகள், உலக வானிலை அமைப்பின் பிராந்திய காலநிலை மையங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள நட்பு நாடுகளின் அமைப்புகள் மற்றும் 12 நிபுணர்களின் அறிவியல் பங்களிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2. இந்த அறிக்கையின்படி, காலநிலையின் ஒவ்வொரு முக்கியக் குறியீடும் அதிகரித்து வரும் அபாய எச்சரிக்கையை காட்டுகின்றன. மேலும், 2015 முதல் 2025 வரையிலான ஆண்டுகள், மிகவும் வெப்பமான 11 ஆண்டுகளாக இருந்துள்ளன. 2025-ஆம் ஆண்டு பதிவுகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்றும், அது 1850–1900 கால சராசரியைவிட 1.43°C அதிகமாக இருந்தது என்றும் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
3. 2025-ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையில், முதன்முறையாக 'பூமியின் ஆற்றல் சமநிலையின்மை’ என்பது காலநிலையின் முக்கியக் குறியீடுகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பூமியின் ஆற்றல் சமநிலையின்மை, கடந்த 65 ஆண்டுகாலப் பதிவுகளிலேயே மிகவும் அதிகமாக உள்ளது.
4. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, பூமியின் ஆற்றல் சமநிலை என்பது, ஆற்றல் எந்த விகிதத்தில் பூமி அமைப்பிற்குள் வருகிறது மற்றும் எந்த விகிதத்தில் அதிலிருந்து வெளியேறுகிறது என்பதை அளவிடும் ஒரு குறியீடாகும். ஒரு நிலையான தட்பவெப்ப நிலையில், சூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலானது, பூமியிலிருந்து வெளியேறும் ஆற்றலின் அளவிற்கு ஏறக்குறையச் சமமாக இருக்கும்.
5. இருப்பினும், வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் செறிவுகள் கடந்த 8,00,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சநிலையை அடைந்திருப்பது பூமியின் ஆற்றல் சமநிலையை வெகுவாக குலைத்துள்ளது.
6. அறிக்கையின்படி, கடல் தொடர்ந்து வெப்பமடைந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் வருடத்திற்கு பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் 18 மடங்கு அளவிற்கு சமமான ஆற்றலை இது உறிஞ்சி வருகிறது.
7. உலகம் முழுவதும் ஏற்பட்ட கடுமையான வெப்பம், மிகுந்த மழைப்பொழிவு மற்றும் வெப்பமண்டல புயல்கள் போன்ற நிகழ்வுகள் பெரிய அளவில் பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்தின. மேலும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களும், சமூகங்களும் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளும் தன்மையுடையவை என்பதை இது வெளிப்படுத்தியது.
8. அறிக்கையின் படி, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுதோறும் காணப்படும் கடல் பனியின் பரப்பு பதிவு செய்யப்பட்ட அளவுகளில் மிகக் குறைந்த அளவில் அல்லது அதற்கு அருகில் இருந்தது. அண்டார்டிக் கடல் பனியின் பரப்பளவு இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மூன்றாவது மிகக் குறைந்த அளவாக இருந்தது. மேலும், பனிச்சரிவுகள் (glaciers) உருகுதல் எந்தத் தளர்வும் இன்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
9. காலநிலை மாற்றம், இறப்பு விகிதம், வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுகாதார அமைப்புகள் போன்றவை அதிக தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே, பூச்சி மற்றும் நீரினால் பரவும் நோய்கள், மனநல அழுத்தங்கள் போன்ற அபாயங்களை இது அதிகரிக்கிறது.
10. டெங்கு உலகில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொசு மூலம் பரவும் நோயாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் படி, உலக மக்கள்தொகையில் பாதி மக்கள் இந்த நோய்க்கு ஆளாகும் சூழலில் உள்ளனர். மேலும், பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
11. வெப்ப அழுத்தம் (Heat stress) என்பது வளர்ந்துவரும் ஒரு பிரச்சினையாக உள்ளது. உலகளாவிய பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (1.2 பில்லியன் மக்கள்), குறிப்பாக வேளாண்மை மற்றும் கட்டுமானத் துறைகளில் பணி செய்து வருபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பணி இடத்தில் வெப்ப அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சூழல் உடல்நல பாதிப்புகளை தாண்டி, உற்பத்தித்திறன் மற்றும் வாழ்வாதார இழப்புகளுக்கும் வழிவகுக்கிறது.
2025-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை
1. கடந்த ஆண்டு மார்ச் 21 அன்று முதல் முறையாகக் கொண்டாடப்பட்ட உலக பனிச்சரிவு தினம் (World Day for Glaciers) நிகழ்வை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் 2025-ஆம் ஆண்டு உலக நீர் மேம்பாட்டு அறிக்கை – மலைகளும் பனிப்பாறைகளும்: நீர் கோபுரங்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது.
2. இந்த அறிக்கையின்படி, பெரும்பாலான மலைப்பகுதிகளில் பனிப்பரப்பு (snow cover) குறைந்துள்ளது. குறிப்பாக, வசந்த மற்றும் கோடை காலங்களில் பனிப்பரப்பின் அளவு அதிகமாக குறைந்துள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் பனிப்பரப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பரப்பு என்பது நிலத்தில் உள்ள மொத்த பனி மற்றும் உறைந்த நீரைக் குறிக்கும். இதில் புதிய பனியும், இன்னும் உருகாத பழைய பனியும் அடங்கும்.
3. அறிக்கையின்படி, பல பிராந்தியங்களில், தாழ்வான பகுதிகளைவிட உயரமான இடங்கள் வேகமாக வெப்பமடைந்து வருகின்றன. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன; நிரந்தர உறைபனி அதிக வேகத்தில் உருகி வருகிறது; பனிப்பரப்பு குறைந்துள்ளது; மேலும், பனிப்பொழிவு முறைகள் மிகவும் ஒழுங்கற்றதாக (erratic) மாறிவிட்டன.
Original link:
Global Climate in ‘Emergency’: record heat, melting ice, and rising health risks — WMO Report 2025.