பருத்தி உற்பத்தித்திறனுக்கான திட்டம் என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 ஒன்றிய அரசு தனது '5F' தொலைநோக்குத் திட்டத்துடன் இணைந்த, பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டம் எத்தகைய அம்சங்களைக் கொண்டுள்ளது? பருத்தி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? 'கஸ்தூரி பருத்தி பாரத்' (Kasturi Cotton Bharat) என்பது என்ன?


தற்போதைய  செய்தி :


ஒன்றிய அரசு, ஐந்து ஆண்டுகளுக்கான (2026-27 முதல் 2030-31 வரை) பருத்தி உற்பத்தித்திறன் திட்டத்திற்காக ரூ. 5,659.22 கோடியை செவ்வாய்க்கிழமை  ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2025-26-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உழவர்களுக்கு "சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை" வழங்குவதையும், இந்திய ஜவுளித் தொழிலுக்கு "தரமான பருத்தியின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதையும்" இந்தத் திட்டம்  நோக்கமாகக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஜவுளித் துறைக்கான அரசின் 5F தொலைநோக்குப் பார்வைக்கு (பண்ணையிலிருந்து இழை, தொழிற்சாலையிலிருந்து ஆடை, ஆடையிலிருந்து வெளிநாடு) ஏற்ப, இந்தத் திட்டம் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளித் துறைக்குப் புத்துயிர் அளிப்பதற்காகத் தரமான பருத்தியின் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் உதவும்.


2. இந்தத் திட்டம் பின்வருவனவற்றில் கவனம் செலுத்துகிறது: அவை,


(i) அதிக மகசூல் தரும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய மற்றும் பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட விதைகளை உருவாக்குதல்,


(ii) அதிக அடர்த்தி நடவு முறை (High Density Planting System (HDPS)), நெருக்கமான இடைவெளி (Closer Spacing (CS)), ஒருங்கிணைந்த பருத்தி மேலாண்மை போன்ற பருத்தி உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் மிக நீண்ட இழை (Extra Long Staple (ELS)) பருத்தியை ஊக்குவித்தல்,


(iii) சிறந்த பதப்படுத்தும் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது உட்பட, பருத்தியை பிரித்தல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் நவீனமயமாக்கலை ஊக்குவித்தல்,


(iv) நம்பகமான தர மதிப்பீடு மற்றும் உலகளாவிய ஒப்பீட்டை உறுதி செய்வதற்கான நவீன, தரப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற பருத்தி சோதனை உள்கட்டமைப்பு.


(v) கஸ்தூரி காட்டன் பாரத் (Kasturi Cotton Bharat initiative) முன்முயற்சியின் கீழ் பருத்தியை உலகளவில் நம்பகமான பொருளாக நிலைநிறுத்துவதற்காக, அதற்கு வர்த்தக முத்திரை இடுதல் மற்றும் அதிக மதிப்பை உருவாக்குதல் போன்றவையாகும்.

கஸ்தூரி பருத்தி பாரத்


இந்தியப் பருத்தியின் மதிப்பை மேம்படுத்துவதற்காக, கஸ்தூரி பருத்தி பாரத் திட்டமானது, அதன் மூலத்தைக் கண்டறியும் தன்மை, சான்றளிப்பு மற்றும் வர்த்தகக்குறியாக்கம் ஆகிய மூன்று தூண்களில் கவனம் செலுத்துகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் ‘கஸ்தூரி பருத்தி பாரத்திட்டத்தை’ ஒரு உயர்தரமான, போட்டி விலையிலான பொருளாக நிலைநிறுத்துவதன் மூலம், இந்தியப் பருத்தியின் உலகளாவிய கண்ணோட்டத்தையும் மதிப்பையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். கஸ்தூரி பருத்தி பாரத் என்பது, பதப்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் பஞ்சுப் பருத்திக் கட்டுகளுக்கான ஒரு சான்றளிப்பு மற்றும் வர்த்தகக்குறியாக்க முன்னெடுப்பாகும்,


(vi) பருத்தி நிலையங்களை டிஜிட்டல் மயமாக்குதல், வெளிப்படையான விலை நிர்ணயம், நேரடி சந்தை அணுகல் ஆகியவற்றைச் சாத்தியமாக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க மின்-தளங்களை இணைத்தல்,


(vii) வளத்திறனை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும், தொழில்துறைக்குக் கூடுதல் மதிப்பு நீரோட்டங்களை உருவாக்குவதற்கும் பருத்திக் கழிவு மறுசுழற்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்தை (circular economy) ஊக்குவித்தல்,


(viii) பருத்திக்குத் உதவியாக ஆளி, ராமி, சிசல், மில்க்வீட், மூங்கில் மற்றும் வாழை போன்ற இயற்கை நார்களைச் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் நார் வளத்தைப் பன்முகப்படுத்துவதும், மாறிவரும் உலகளாவிய தேவைப் போக்குகளுக்கு ஏற்ப இந்தியாவின் ஜவுளித் துறையை சீரமைப்பதும் ஆகும்.


3. 2031-ஆம் ஆண்டிற்குள், ஒரு ஹெக்டேருக்கு 440 கிலோவாக உள்ள பருத்தி இழை உற்பத்தித்திறனை 755 கிலோவாக உயர்த்துவதன் மூலம், 498 லட்சம் பருத்தி பேல்களை (ஒவ்வொன்றும் 170 கிலோ பருத்தி இழை கொண்டது) உற்பத்தி செய்வதை இந்தத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.




4. வேளாண்மை அமைச்சகத்தின்படி, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 290.91 லட்சம் பேல்களாக இருந்தது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நாட்டின் முதல் ஐந்து உற்பத்தியாளர்களாக  விளங்கின.


பருத்தி உற்பத்தி மற்றும் பருத்தித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்


1. பகுதியாளவு வறட்சித் தாவரமான பருத்தி, வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலச் சூழல்களில் பயிரிடப்படுகிறது. வயல் நிலைமைகளின் கீழ், சிறந்த முளைப்புத்திறனுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.


பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கம் — இந்தியாவின் வெண்மை தங்கம் பற்றிய விளக்கம் இங்கே:


வேளாண்மை — அரசுத் திட்டம்


பருத்தி விளைச்சலுக்கு  ஏற்ற  சூழல் முதல் ₹5,659 கோடி மதிப்பிலான அரசுத் திட்டம் வரை இந்தியாவில் பருத்தி குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை ஆகும்.  இது 43 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடியது என்றாலும், 21 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை இதன் வளர்ச்சியைப் பாதிக்கிறது.


3. பருத்தி காய்க்கும்  காலத்தில், பகல் நேரத்தில் மிதமான வெப்பதோடும், இரவு நேரத்தில் குளிர்ச்சியாகவும், அன்றாட வெப்பநிலையில் பெரிய மாறுபாடுகள்  இருப்பதும் நல்ல காய்கள் (bolls) மற்றும் இழை (fibre) வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையும்.


4. பருத்தி சாகுபடிக்கு, நீர் நன்கு வடியக்கூடிய பல்வேறு வகையான மண் வகைகள் ஏற்றவையாகும். இது மண்ணின் உவர்ப்புத்தன்மையை ஓரளவிற்குத் தாங்கக்கூடியது. ஆனால், நீர் தேங்குவதற்கு மிகவும் உணர்திறன் கொண்டது. வட மாநிலங்களில் சிறந்த வசதி கொண்ட வண்டல் மண், மத்திய மாநிலங்களில் கருப்பு களிமண், மற்றும் தென் மாநிலங்களில் கருப்பு மண் மற்றும் கலப்பு கருப்பு-சிவப்பு மண் ஆகியவை  உற்பத்தியிக்கு ஏற்றவையாகும்.


5. ஜவுளி அமைச்சகத்தின்படி, இந்தியாவில் பருத்தி அதிகம் விளையும் 9 முக்கிய மாநிலங்கள் உள்ளன. இவை 3 மாறுபட்ட வேளாண்-சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:


(i) வடக்கு மண்டலம் – பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களகும்.


(ii) மத்திய மண்டலம் - குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களகும்.


(iii) தெற்கு மண்டலம் – தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களகும்.


6. ஜவுளி அமைச்சகத்தின்படி, ஜி. ஆர்போரியம் மற்றும் ஜி. ஹெர்பேசியம் (ஆசியப் பருத்தி), ஜி. பார்படென்சி (எகிப்தியப் பருத்தி) மற்றும் ஜி. ஹிர்சுட்டம் (அமெரிக்க மேட்டுநிலப் பருத்தி) ஆகிய நான்கு வகையான பருத்தி இனங்களையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.


7. ஒரு காலத்தில் “வெள்ளை தங்கம்” (white gold) என்று போற்றப்பட்ட, இந்தியாவின் ஜவுளிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான பருத்தி, பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பயிரிடப்படும் பரப்பளவு குறைதல், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெப்பநிலை போன்ற காரணங்களால் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறது.


8. பருத்தி, பூச்சிகள் மற்றும் நோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இளஞ்சிவப்பு காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈ போன்ற முக்கியப் பூச்சிகளின் தொடர்ச்சியான தாக்குதலும், பருத்தி இலைச்சுருள் வைரஸ், காய் அழுகல், புகையிலைக் கீற்று வைரஸ் மற்றும் புதிதாகத் தோன்றும் பிற இரண்டாம் நிலை பூச்சிகளின் பாதிப்பும் உழவர்களுக்கு அதிக  சிரமத்தை ஏற்படுத்துகின்றன.


9. பருத்தி விலையில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கம், போதுமான சந்தை உள்கட்டமைப்பு இல்லாத நிலை மற்றும் பருத்தி ஏற்றுமதி ஆகியவை உழவர்கள் எதிர்கொள்ளும் மற்ற சவால்களாகும். மேலும், பருத்தி சாகுபடிப் பரப்பில் ஏறக்குறைய 65 சதவீதம், மத்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களில், மழையை நம்பியே உள்ளது.


10. பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிடி பருத்தி உற்பத்தியை அனுமதிப்பது முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) வழங்குவது வரை, அரசாங்கம் பருத்தி உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பருத்தியை எந்த விதமான தடையுமின்றி கொள்முதல் செய்வதை எளிதாக்கும் வகையில், 'Kapas Kisan App'  செயலி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.


பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை


1. பருத்தி உழவர்களால் வழங்கப்படும் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக, விதைப்பருத்தியின் (kapas) விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  கீழே குறையும் பட்சத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்தியப் பருத்திக் கழகம் (Cotton Corporation of India Limited (CCI)) இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.


2. சந்தை விலை ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கீழே குறையும் பட்சத்தில், அரசாங்கம் உழவர்களிடமிருந்து அந்தப் பயிரைக் கொள்முதல் செய்ய வேண்டிய விலையே குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் சந்தை விலைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குவதோடு, உழவர்கள் தங்களின் சாகுபடிச் செலவுகளையும் மற்றும் சிறிதளவு லாபத்தையும் மீட்டெடுக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட "குறைந்தபட்ச" ஊதியத்தைப் பெறுவதையும் உறுதி செய்கின்றன.


3. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices (CACP)) பரிந்துரைகளின் பேரில், ஒன்றிய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSPs) அறிவிக்கப்படுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் என்பது வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அலுவலகமாகும். இது ஒரு ஆலோசனைக் குழுவாகும். இதன் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதில்லை.


4. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையமனது, 22 கட்டாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் (MSP), கரும்புக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலையையும் (fair and remunerative price (FRP)) பரிந்துரைக்கிறது.




குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் வரும் பயிர்கள்: 


14 காரீஃப் பயிர்கள்: நெல், ஜோவர், பஜ்ரா, சோளம், ராகி, துர் (அர்ஹர்), மூங், உரட், நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், நைஜர்சீட் மற்றும் பருத்தியாகும்.


 6 ராபி பயிர்கள்: கோதுமை, பார்லி, கொண்டைக்கடலை, மசூர் (பருப்பு), ரேப்சீடு மற்றும் கடுகு, மற்றும் குங்குமப்பூவாகும்.


2 வணிகப் பயிர்கள்: சணல் மற்றும் கொப்பரையாகும்.


Original article :  What is Mission for Cotton Productivity? -Khushboo Kumari

Share: