நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பை (Land Port Management System (LPMS)) அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்ன, அது திறன்மிகு எல்லை மேலாண்மை அமைப்புக்கு எவ்வாறு உதவியாக அமையும்? எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட முக்கியத் திட்டங்கள் யாவை?
தற்போதைய செய்தி
இந்தியாவின் தரை எல்லைகள் முழுவதும் சரக்குக் கையாளுதலையும் பயணிகள் போக்குவரத்தையும் டிஜிட்டல் மயமாக்கி நெறிப்படுத்தும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 ஜூன் 9 அன்று புது டெல்லியில் 'வினிமே' (VINIMAY) எனும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பைத் தொடங்கி வைத்தார். நிலத்துறைமுக ஆணையத்தின் இந்த முயற்சி, ‘அறிவார்ந்த எல்லைத் திட்டம்’ (Smart Borders) என்ற தொலைநோக்குப் பார்வையை முழுமையாக நனவாக்க உதவும் என்று அவர் கூறினார்.
நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பின் தொடக்கமானது, 2047-ஆம் ஆண்டிற்குள் வர்த்தக வசதி, இணைப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்த இந்தியா ஆகியவற்றை வலுப்படுத்துவதில் நாட்டின் ராஜதந்திரக் கவனத்தை வெளிக்காட்டும் வகையில், ஒரு நவீன, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட திறன்மிகு எல்லை மேலாண்மை அமைப்பை நோக்கிய ஒரு படியாகும்.
முக்கிய அம்சங்கள்:
1. வினிமய் எனப்படும் நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பு, ஒரு அதிநவீன டிஜிட்டல் தளமாகும். இது தரைவழித் துறைமுகங்களின் செயல்பாடுகளை ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தகவல்களைப் பாதுகாப்பாகவும் நிகழ்நேரத்திலும் பரிமாறிக்கொள்ள வழிவகுத்து, விமான நிலையங்கள் மற்றும் கடல் துறைமுகங்களில் செயல்படும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு இணையாக தரைவழித் துறைமுகங்களைக் கொண்டுவருகிறது.
2. நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புபு, தேசிய அளவிலான இணைய தளங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, சரக்கு மற்றும் பயணிகள் செயலாக்கத்திற்கான முழுமையான டிஜிட்டல் பணிப்பாய்வுகளை (Digital Workflows) வழங்குகிறது. இது அரசு அமைப்புகள் முதல் தனியார் இயக்குநர்கள் வரை பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எளிதாக்குவதன் மூலம், தாமதங்களைக் குறைத்து செயல்பாட்டு திறனை (Operational Efficiency) மேம்படுத்துகிறது.
3. இந்த அமைப்பு, ஆவணப் பணிகளைக் கணிசமாகக் குறைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கி, இந்தியாவின் சர்வதேச தரை வழி எல்லைகள் முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒற்றை மின்னணுச் சாளரம் மற்றும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார அடிப்படையிலான செயல்பாடுகள், நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
4. நில எல்லைத் துறைமுகங்களின் நிர்வாகம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்லை மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான 'இந்திய நில எல்லைத் துறைமுக ஆணையத்தின்' (Land Ports Authority of India (LPAI)) கட்டுப்பாட்டில் இருக்கும். நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புபு, 2012-ஆம் ஆண்டில் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
5. நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளபடி, சரக்குகள் மற்றும் பயணிகளின் தடையற்ற மற்றும் திறமையான போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, இந்தியாவின் எல்லைகளில் தரைவழித் துறைமுகங்களைக் கட்டுவதும், அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும், காத்திருப்பு நேரத்தையும் வர்த்தகப் பரிவர்த்தனைச் செலவுகளையும் குறைப்பதும், பிராந்திய வர்த்தகத்தையும் மக்களுக்கிடையேயான தொடர்பையும் ஊக்குவிப்பதும், சிறந்த சர்வதேச நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதே இதன் முக்கிய நோக்கங்களாகும்.
6. தற்போது, நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பு (Land Port Management System (LPMS)) இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் 15 தரை நிலவழித்துறைமுகங்களை இயக்குகிறது. இவை: அட்டாரி (பஞ்சாப்) மற்றும் டேரா பாபா நானக் (பஞ்சாப்) இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும்; ரூபைடியா (உத்தரப் பிரதேசம்), ரக்ஸௌல் (பீகார்) மற்றும் ஜோக்பானி (பீகார்) இந்திய-நேபாள எல்லையிலும்; டாரங்கா (அசாம்) இந்திய-பூட்டான் எல்லையிலும்; பெட்ராபோல் (மேற்கு வங்காளம்), டாகி (மேகாலயா), சுதார்கந்தி, கோலக்கஞ்ச் மற்றும் மன்கச்சார் (அசாம்), அகர்தலா, ஸ்ரீமந்தபூர் மற்றும் சப்ரூம் (திரிபுரா) இந்திய-வங்கதேச எல்லையிலும் மற்றும் மோரே (மணிப்பூர்) இந்திய-மியான்மர் எல்லையிலும் அமைந்துள்ளன.
திறன்மிகு எல்லை மேலாண்மை (Smart Border Management Initiative) முயற்சி
1. அரசு விரைவில் திறன்மிகு எல்லை மேலாண்மை முயற்சியைத் தொடங்கவுள்ளதாகவும், இது நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்புடன் இணைந்து, மேலும் பாதுகாப்பான மற்றும் நவீன எல்லை மேலாண்மை அமைப்பை உருவாக்கும் என்றும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், வலுவான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை நிறுவுவதை உறுதி செய்யவும் உதவும்.
2. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா 15,106.7 கி.மீ நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதியை வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனும், ஆப்கானிஸ்தானுடனான ஒரு சிறிய பகுதியுடனும் பகிர்ந்து கொள்கிறது. இது எல்லை நிர்வாகத்தை அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான பணியாக ஆக்குகிறது.
3. எல்லை மேலாண்மைத் துறை (Department of Border Management (DoBM)): 2004-ஆம் ஆண்டில், சர்வதேச தரை மற்றும் கடலோர எல்லைகளின் மேலாண்மை, எல்லைக் காவல் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், எல்லைகளில் சாலைகள், வேலிகள் மற்றும் மின்விளக்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பிரத்தியேகமாகக் கவனம் செலுத்துவதற்காக, உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை மேலாண்மைத் துறை (DoBM) உருவாக்கப்பட்டது.
4. எல்லைப் பாதுகாப்புத் துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை, எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துதல் மற்றும் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. எல்லை மேலாண்மை பிரிவு-I-னது, சர்வதேச தரை எல்லைகளை வலுப்படுத்துதல், அவற்றின் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்கிறது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவின் சர்வதேச எல்லைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு ஒன்றிய திட்டமான, எல்லை மேலாண்மை பிரிவு-I-னது எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை (Border Infrastructure and Management (BIM)) திட்டத்தை எல்லைப் பாதுகாப்புத் துறை செயல்படுத்துகிறது.
5. எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Border Area Development Programme (BADP)), கடலோரப் பாதுகாப்புத் திட்டம் (Coastal Security Scheme (CSS)), துடிப்பான கிராமத் திட்டம் (Vibrant Village Programme-I and VVP-II) மற்றும் நில எல்லைத் துறைமுக மேலாண்மை அமைப்பு (Land Port Management System (LPMS)) ஆகியவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு எல்லை மேலாண்மை பிரிவு-II இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
6. எல்லை மேலாண்மைக்கான ஒரு விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய ஒன்றிய நிதியுதவித் திட்டமே எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கம், இதன் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிறப்பு மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் நலனைப் பூர்த்தி செய்வதும், சுகாதாரம், கல்வி, சாலை, குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை வழங்குவதும் ஆகும்.
7. கடலோர மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நிதியுதவி வழங்கும் வகையில், கடலோரப் பாதுகாப்புத் திட்டகளாகச் (CSS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8. துடிப்பான கிராமங்கள் முன்முயற்சி: துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் முதல் கட்டம் 2023-ஆம் ஆண்டிலும், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டிலும் தொடங்கப்பட்டது. இது ஒரு ஒன்றிய அரசுத் திட்டமாகும். செழிப்பான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதி செய்வதற்கும், எல்லை தாண்டிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், எல்லைப் பகுதி மக்களை தேசத்துடன் ஒன்றிணைப்பதற்கும், மேலும் அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படைகளின் முக்கியப் பகுதிகளாக உருவாக்குவதற்கும், சிறந்த வாழ்க்கை நிலைமைகளையும், போதுமான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
எல்லை மேலாண்மைக்குப் பொறுப்பான படையில் செய்யப்பட்ட முக்கிய மாற்றத்தைப் பார்ப்போம்.
2026-ஆம் ஆண்டு மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம்,
1. இராணுவத்துடன் சேர்ந்து, சர்வதேச எல்லையின் பாதுகாப்பானது மத்திய ஆயுதக் காவல் படை (Central Armed Police Force (CAPF)) மற்றும் துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces (PMF)) போன்ற பல பாதுகாப்பு முகமைகளால் கையாளப்படுகிறது. இந்த ஆண்டு, அரசாங்கம் மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம், 2026-ஐ இயற்றியுள்ளது.
2. இந்தச் சட்டம் (Act), முன்பு தனித்தனியாக இருந்த விதிமுறைகளை நீக்கி, ஒரே மாதிரியான ஒருங்கிணைந்த கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)), மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF)), மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police (ITBP)) மற்றும் சஷஸ்திர சீமா பல் (Sashastra Seema Bal (SSB)) ஆகிய ஐந்தும் ஒன்றிய அரசின் மேற்பார்வை மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
3. சட்டத்தின்படி, காவல்துறைத் தலைவர் (Inspector General (IG)) நிலையில் உள்ள பதவிகளில் 50% அயற்பணி மூலமாகவும், கூடுதல் காவல்துறைத் தலைவர் நிலையில் உள்ள பதவிகளில் குறைந்தபட்சம் 67% அயற்பணி மூலமாகவும் நிரப்பப்பட வேண்டும். சிறப்பு காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவர் பதவிகள் முழுமையாக அயற்பணி மூலமாகவே நிரப்பப்படும்.
4. ஒன்றிய ஆயுதக் காவல் படைகளில் (Central Armed Police Forces (CAPFs)) இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகளின் அயற்பணியை படிப்படியாகக் குறைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்கிறது. மே 23, 2025 அன்று, உச்ச நீதிமன்றம், ஒன்றிய ஆயுதக் காவல் படைகளில் துணை காவல்துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவர் பதவிகளுக்கு இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகளின் அயற்பணியை இரண்டு வருட காலத்திற்குள் படிப்படியாகக் குறைக்குமாறு உத்தரவிட்டது.
Original article : Why India’s new Land Port Management System matters. -Khushboo Kumari