2025-ஆம் ஆண்டின் அறிக்கைகளும் குறியீடுகளும் 2026-ல் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. -ரோஷ்ணி யாதவ்

2025-ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன? உலகப் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத் துறையில் இந்தியாவின் இடம் என்ன?


1. காலநிலை அழுத்தம், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் இந்தியாவின் பசுமை மாற்றம்


ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2025


ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) மார்ச் மாதம் 21-ஆம் தேதி முதல் உலக பனிப்பாறைகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2025 - மலைகளும் பனிப்பாறைகளும்: நீர் கோபுரங்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் (UNESCO) அறிக்கையின்படி, ஏறக்குறைய அனைத்து மலைப் பகுதிகளிலும் பனிப்போர்வை (snow cover) குறைந்துள்ளது, குறிப்பாக வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் குறைந்துள்ளது. மேலும், வரவிருக்கும் காலங்களில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்போர்வை என்பது தரையில் உள்ள அனைத்து பனி மற்றும் பனிக்கட்டிகளின் மொத்த அளவாகக் கணக்கிடப்படுகிறது. இதில் புதிய பனி மற்றும் உருகாத முந்தைய பனி மற்றும் பனிக்கட்டிகளும் அடங்கும்.


அந்த அறிக்கையின்படி, பல பகுதிகளில், அதிக உயரமான இடங்கள் குறைந்த உயரமான இடங்களைவிட வேகமாக வெப்பமடைகின்றன. பனிப்பாறைகள் விரைவான விகிதத்தில் உருகுகின்றன; நிரந்தர உறைபனி (permafrost) அதிகரிக்கும் அதே விகிதத்தில் உருகுகிறது. பனிப்போர்வை குறைந்துள்ளது; மேலும், பனிப்பொழிவு முறைகள் மென்மேலும் நிலையற்றதாக மாறியுள்ளன.


உலக வானிலை அமைப்பின் (WMO) பசுமை இல்ல வாயு அறிக்கை


உலக வானிலை அமைப்பின் (WMO) வருடாந்திர வெளியீடான பசுமைக்குடில் வாயு அறிக்கையின்படி (Greenhouse Gas Bulletin), உலக அளவில் கார்பன்-டை-ஆக்சைடின் சராசரி மேற்பரப்பு அளவு 2023-ஆம் ஆண்டின் அளவிலிருந்து 3.5 (Parts Per Million (ppm) (ஒரு மில்லியனில் உள்ள பாகங்கள்) அதிகரித்து, 2024-ஆம் ஆண்டில் 423.9 ppm என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், பூமியின் சராசரி வெப்பநிலை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.


உலக வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் (1.5°C) என்ற வரம்பை மீறியது இதுவே முதல் முறையாகும். வளிமண்டலத்தில் தற்போதுள்ள கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவின் (CO2) செறிவான 423.9 ppm (ஒரு மில்லியனுக்கு துகள்கள்) என்பது, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய அளவான 278.3 ppm அளவைவிட 152% அதிகமாகும். தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்திலிருந்து ஏற்பட்ட வெப்பமயமாதலில் சுமார் 66% மற்றும் கடந்த ஆண்டுகளில் சுமார் 79% வெப்பமயமாதலுக்கு கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவே (CO2) காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 2023-2024 ஆண்டுகளில் புவியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைட் (CO₂) அளவு அதிகரித்ததற்கு முக்கிய காரணங்கள்: மனித செயல்பாடுகள் (எரிபொருள் எரித்தல், தொழிற்சாலைகள் போன்றவை), மனிதனால் உருவாக்கப்பட்ட மாசு மூலங்களின் அதிகரிப்பு, காட்டுத்தீக்களின் எண்ணிக்கை அதிகரித்தது போன்றவை  முக்கியக் காரணங்களாக வலியுறுத்தப்படுகின்றன.


2.வெப்பமடைந்து வரும் உலகில் பொது சுகாதாரம்


உலகளாவிய நோய்ச் சுமை அறிக்கை


பெர்லினில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் (World Health Summit) வெளியிடப்பட்டு, 'தி லான்செட்' (The Lancet) பத்திரிகையில் வெளியான உலகளாவிய நோய்ச் சுமை (Global Burden of Disease - GBD) அறிக்கையின்படி, தொற்று அல்லாத நோய்கள் (Non-communicable diseases - NCDs) உலகளவில் ஏற்படும் மொத்த மரணம் மற்றும் நோயுறும் தன்மையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்குக்கு காரணமாக இருக்கின்றன. முக்கியமான தொற்று அல்லாத நோய்கள்: இரத்தக்குழாய் அடைப்பு இதய நோய் (Ischaemic Heart Disease), பக்கவாதம் (Stroke), நீரிழிவு நோய் (Diabetes) ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இறப்புகளுக்கான காரணங்கள் தொற்று நோய்களிலிருந்து தொற்று அல்லாத நோய்களுக்கு  மாறி வருகின்றன.


இந்தியாவில் நோய்த் தாக்கம் குறித்த தகவல் (Information on Disease Impact in India), இந்த அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில், அதிகபட்ச மரணங்களை ஏற்படுத்திய நோய் இரத்தக்குழாய் அடைப்பு இதயநோய் ஆகும். இதன் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் (Age-Standardized Mortality Rate (ASMR)) ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 127.82-ஆக இருந்தது. 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் மரணங்களுக்கான இரண்டாவது முக்கிய காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகும். இதன் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் (ASMR) விகிதம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 99.25-ஆக இருந்தது. மூன்றாவது முக்கிய காரணம் பக்கவாதம்  ஆகும். இதன் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் 2023-ல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 92.88-ஆக இருந்தது.


UPSC Issue at a Glance | Reports and Indices of 2025 that will matter for India in 2026உலகளாவிய காசநோய் அறிக்கை 2025


உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) "உலகளாவிய காசநோய் அறிக்கை 2025"-ஐ வெளியிட்டது. இந்த அறிக்கை, 2015 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியாவில் புதிய காசநோய் பாதிப்புகளில் 21% குறைப்பையும், காசநோய் இறப்புகளில் 28% குறைப்பையும் மட்டுமே எட்டியுள்ளதாகக் காட்டுகிறது. இது, 2025-ஆம் ஆண்டிற்கான "காசநோய் முடிவிற்கான இலக்கை" (End TB milestones) எட்டுவதற்கு அருகில்கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. அந்த இலக்கு என்னவென்றால், காசநோய் பாதிப்பில் 50% குறைப்பும், காசநோய் இறப்புகளில் 75% குறைப்பும் ஆகும்.


குறிப்பாக, காசநோய் (TB) என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (mycobacterium tuberculosis) எனப்படும் ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது, ஆனால் உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது காசநோய் காற்றின் மூலம் பரவுகிறது.


லான்செட் (Lancet) அறிக்கை: உடல்நலம் மற்றும் நெகிழிப் பொருள்கள்


தி லான்செட் (The Lancet) அறிக்கை, பிளாஸ்டிக்கால் மனித மற்றும் பூமியின் ஆரோக்கியத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆனால், திறம்பட செயல்படுத்தப்படும் கொள்கைகள் மூலம் இந்தத் தீங்கைக் குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளது. நெகிழிப் பொருட்கள் நீடித்த தன்மையுடையது மற்றும் சுற்றுச்சூழலில் பல ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தன்மையுடையது. இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்து நெகிழிகளிலும் 80% ஆன, சுமார் 8 ஜிகாடன்கள் நெகிழிக் கழிவுகள் இப்போது இந்த பூமியை மாசுபடுத்துகின்றன. மேலும், இது எந்த அளவுகோலின்படியும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும்.


3. நல்வாழ்வு, சமத்துவமின்மை மற்றும் அமைதி

உலக மகிழ்ச்சி அறிக்கை 2025


UPSC Issue at a Glance | Reports and Indices of 2025 that will matter for India in 2026ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சிக் கழகத்தால் (Wellbeing Research Centre) உலக மகிழ்ச்சி அறிக்கை 2025 வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைகள், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக் குறிக்கோள்கள் தீர்வு வலையமைப்பின் கூட்டமைப்போடு கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வுகள் மூலம் தொகுக்கப்பட்ட, மக்களின் சுய-மதிப்பிடப்பட்ட வாழ்க்கைத் தர மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தவை ஆகும்.


தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாகப் பெயரிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 118-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் (147-வது இடத்தில் உள்ளது) தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாகத் திகழ்கிறது.


உலக சமத்துவமின்மை அறிக்கை 2026


2018 மற்றும் 2022-அறிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (The World Inequality Report 2026) வெளியிடப்பட்டுள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்துடன் (World Inequality Lab) இணைந்த உலகெங்கிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் வருமான சமத்துவமின்மை (income inequality) உலகில் அதிகமாக உள்ளவற்றில் ஒன்றாக உள்ளது. அதாவது, அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 சதவிகிதத்தினர் மொத்த தேசிய வருமானத்தில் 58 சதவிகிதத்தைப் பெறுகின்றனர். ஆனால், வருமானம் குறைவாக உள்ள கடைசி 50 சதவிகிதத்தினர் வெறும் 15 சதவிகிதத்தை மட்டுமே பெறுகின்றனர்.


அறிக்கையின்படி, இந்தியாவில் செல்வச் சமத்துவமின்மை (wealth inequality) இன்னும் அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்த செல்வத்தில், மிகவும் பணக்காரர்களான முதல் 10 சதவிகிதத்தினர் சுமார் 65 சதவிகிதத்தை வைத்திருக்கிறார்கள். இதில், முதல் 1 சதவிகிதத்தினர் மட்டும் சுமார் 40 சதவிகிதத்தை வைத்திருக்கின்றனர். உலக அளவில் பார்த்தால், முதல் 10 சதவிகிதத்தினர் மொத்த செல்வத்தில் நான்கில் மூன்று பங்கிற்கு (three-quarters) உரிமையாளர்களாக உள்ளனர். ஆனால், உலகெங்கிலும் உள்ள கடைசி 50 சதவிகிதத்தினர் மொத்த செல்வத்தில் வெறும் 2 சதவிகிதத்தை மட்டுமே வைத்துள்ளனர்.


உலகளாவிய அமைதி குறியீடு 2025


உலக அமைதி குறியீட்டின் (Global Peace Index (GPI)) 10வது பதிப்பு 2025-ஐ, பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace - IEP) வெளியிட்டது.


இந்த அறிக்கை, உலகின் மக்கள் தொகையில் 99.7 சதவீதம் உள்ள, 163 நாடுகளை உள்ளடக்கியது. உலகளாவிய அமைதியில் 0.36 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் அமைதியில் ஏற்படும் 13-வது சரிவு இதுவாகும். அமைதியில் 74 நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், 87 நாடுகள் மோசமடைந்துள்ளன.


ஐஸ்லாந்து தொடர்ந்து உலகில் மிகவும் அமைதியான நாடாக தனது நிலையைத் தக்கவைத்து, உலகளாவிய தரத்தை அமைத்து, முன்னணியில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகள் உலகின் மிகவும் அமைதியான பகுதிகளாக உள்ளன. இந்தியா உலகளவில் 115-வது இடத்தில் உள்ளது, அதன் உலக அமைதி குறியீட்டு மதிப்பெண் 2.229 ஆகும். இது கடந்த ஆண்டைவிட அமைதி அளவில் 0.58 சதவீதம் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் 116-ஆவது இடத்திலும், 2023-ஆம் ஆண்டில் 126-ஆவது இடத்திலும், 2020 ஆண்டில் 139-ஆவது இடத்திலும், 2019-ஆம் ஆண்டில் 141-ஆவது இடத்திலும், இருந்ததாகக் தரவுகள் காட்டுகின்றன. மேலும், தரவரிசைகளில், இந்தியா படிப்படியாக மேல்நோக்கிச் செல்லும் படிநிலைகளை இது குறிக்கிறது.

4. மனித வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவம்

மனித மேம்பாட்டு அறிக்கை 2025


ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தால் (United Nations Development Programme (UNDP)) வெளியிடப்பட்ட சமீபத்திய மனித மேம்பாட்டு அறிக்கை (Human Development Report (HDR)). மனிதர்கள் "நாடுகளின் உண்மையான செல்வம்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, அதாவது மனிதர்கள் அவர்கள் செய்யும் பணிகளின் கூட்டுத்தொகையை விட மேலானவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. வேறுபாட்டை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மனிதர்களும் இயந்திரங்களும் மனித ஆற்றலை விரிவுபடுத்தும் ஒரு சக்திவாய்ந்த தன்மையைக் கொண்டிருக்கக்கூடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியது. செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு வளர்ச்சியை மீண்டும் மேம்படுத்தக்கூடும் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.


வரலாற்றுப் போக்கில் சமத்துவமின்மைகள் குறைந்து வந்ததற்கு மாறாக, இந்த அறிக்கை, தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குறைந்த மனித மேம்பாட்டுக் குறியீட்டு மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளுக்கும் மிக உயர்ந்த மனித மேம்பாட்டுக் குறியீட்டு (Human Development Index (HDI)) மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளுக்கும் இடையேயான சமத்துவமின்மையில் உள்ள விரிவடைந்துவரும் இடைவெளியைக் குறிப்பிட்டுள்ளது.


இந்தியா, 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) அறிக்கையில் மனித மேம்பாட்டுக் குறியீட்டு (HDI) தரவரிசையில் 130-வது இடத்தைப் பிடித்து, தொடர்ந்து மேல்நோக்கிய சீரான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) என்பது மனித வளர்ச்சியில் சராசரி சாதனைகளை அளவிடும் ஒரு கூட்டுக் குறியீடாகும். இது நான்கு குறிகாட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது:

  1. பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் (Life expectancy at birth) - (நிலையான வளர்ச்சி இலக்கு 3 / ((Sustainable Development Goal (SDG)) 3)

  2. எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள் (Expected years of schooling) - (SDG 4.3)

  3. சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் (Mean years of schooling) - (SDG 4.4)

  4. தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) (2017 PPP$) (Gross national income (GNI) per capita) - (SDG 8.5)

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை


UPSC Issue at a Glance | Reports and Indices of 2025 that will matter for India in 2026உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF)) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன் 19-வது பதிப்பை வெளியிட்டது. இதில், 148 நாடுகளில் உலகளாவிய பாலின இடைவெளி 68.8%-ஆக உள்ளது. இது, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட வலுவான வருடாந்திர முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், தற்போதைய விகிதத்தில் முழுசமத்துவத்தை அடைய இன்னும் 123-ஆண்டுகள் ஆகும்  என்று கூறப்படுகிறது.


2024-ஆம் ஆண்டில் பாலின சமத்துவம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 14 குறியீடுகளில் 11-ல் மதிப்பு உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டைவிட வேகமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இதுவரை எந்த நாடும் முழுமையான பாலின சமத்துவத்தை அடையவில்லை.


ஐஸ்லாந்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக உலகில் பாலின சமத்துவத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 148 நாடுகளில் 131-ஆம் இடத்தில் உள்ளது; கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது.

உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டின் கூறுகளில் இந்தியாவின் செயல்திறன்

கூறுகள்

2025

2024


மதிப்பெண் (0-1)

தரவரிசை

மதிப்பெண் (0-1)

தரவரிசை

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு

0.644 

131 

0.641 

129 

பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு

0.407 

144 

0.398 

142 

கல்வி சாதனை

0.971 

110 

0.964 

112

ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வு

0.954 

143 

0.951 

142 

அரசியல் அதிகாரமளித்தல்

0.245 

69 

0.251 

65 


5. வர்த்தகம், புதுமை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம்.


உலக வர்த்தக அறிக்கை


உலக வர்த்தக அமைப்பால் (World Trade Organization - WTO) வெளியிடப்பட்ட உலக வர்த்தக அறிக்கையின்படி 2025, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI), 2040-ஆம் ஆண்டிற்குள் பண்டங்கள் மற்றும் சேவைகளின் வர்த்தக மதிப்பை ஏறக்குறைய 40% வரை உயர்த்த முடியும். ஆனால், போதுமான கொள்கைகள் இல்லாவிட்டால், இது பொருளாதார ரீதியான பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் அதிகப்படுத்தவும் கூடும் என்கின்றனர். குறைந்த வர்த்தகச் செலவுகள் மற்றும் அதிகரித்த உற்பத்தித் திறன் ஆகியவை 2040-ஆம் ஆண்டிற்குள் வர்த்தகம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணிசமான உயர்வுக்கு வித்திடும். பல்வேறு சூழ்நிலைகளின்கீழ், உலகளாவிய வர்த்தகம் 34% முதல் 37% வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.




உலகளாவிய  புத்தாக்கக் குறியீடு 2025


உலக அறிவுசார் சொத்து அமைப்பினால் ( World Intellectual Property Organisation (WIPO)) வெளியிடப்பட்ட உலகளாவிய புத்தாக்கக் குறியீடானது 2025 (The Global Innovative Index 2025), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வளர்ச்சி 2024-ஆம் ஆண்டில் 2.9 சதவிகிதமாகக் குறைந்து, 2025-ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 2.3 சதவிகிதமாக இருக்கும் என்று காட்டுகிறது. சுவிட்சர்லாந்து (Switzerland) உலகின் மிகவும் புத்தாக்கமிக்க நாடு ஆகும். அதைத் தொடர்ந்து ஸ்வீடன் (Sweden), அமெரிக்கா (United States) மற்றும் பிற நாடுகள் உள்ளன. ஐரோப்பா (Europe) மிகவும் புத்தாக்கமிக்க பிராந்தியமாக முன்னிலை வகிக்கிறது, உலகளாவிய முதல் 25 நாடுகளில் 15 ஐரோப்பிய நாடுகள் உள்ளன.


இந்தியா 38-வது இடத்தில் உள்ளது, குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்கள் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா, அறிவு மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள் (Knowledge & Technology Outputs - #22) மற்றும் சந்தை நுட்பம் (Market Sophistication - #38) ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுகிறது. அதே சமயம், இந்தியாவின் பலவீனமான தரவரிசைகள் வணிக நுட்பம் (Business Sophistication - #64), அடிப்படை வசதிகள் (Infrastructure - #61), மற்றும் நிறுவனங்கள் (Institutions - #58) ஆகியவற்றில் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் - ஏப்ரல் 2025 (World Economic Outlook April 2025) அறிக்கையில், உலகளாவிய வளர்ச்சிக்கான முன்கணிப்பு (forecast) இந்த ஆண்டின் ஜனவரி மாதப் பதிப்போடு ஒப்பிடும்போது திருத்தப்பட்டுள்ளது: 2025-ஆம் ஆண்டிற்கு: 0.5 சதவீதப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 2.8 சதவீதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கு: 0.3 சதவீதப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் ஏப்ரல் 2025

உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்கு  மேலான நிலையான வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், அது நிலையாகிவிட்டதாகத் தோன்றுகிறது. இருப்பினும், அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிவிதிப்புகளாலும் (tariffs), உலகளாவிய நிச்சயமற்ற தன்மையினாலும் தூண்டப்பட்ட வர்த்தகப் போர் (trade-war) பதட்டங்கள் அதிகரிப்பதால், இந்த வளர்ச்சி எதிர்பார்ப்புக்குக் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் - ஏப்ரல் 2025 (World Economic Outlook April 2025) அறிக்கையில், உலகளாவிய வளர்ச்சிக்கான முன்கணிப்பு இந்த ஆண்டின் ஜனவரி மாதப் பதிப்போடு ஒப்பிடும்போது திருத்தப்பட்டுள்ளது: 2025-ஆம் ஆண்டிற்கு: 0.5 சதவீதப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 2.8 சதவீதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கு: 0.3 சதவீதப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.


தற்போது, உலகளவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானுக்கு இணையாக இருக்கும் இந்தியா, அதன் வளர்ச்சிக் கணிப்புகள் சரிசெய்யப்பட்டபோதிலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது உலகளாவிய மற்றும் பிராந்தியப் போட்டியாளர்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க நன்மையைத் தொடர்ந்து தக்கவைக்கும்.

6. நிதி கூட்டாட்சி மற்றும் நிதி உள்ளடக்கம்

நிதி ஆரோக்கியக் குறியீடு


நிதி ஆயோக்கின் "நிதி ஆரோக்கியக் குறியீடு (Fiscal Health Index - FHI)" என்ற தலைப்பிலான அறிக்கையின் முதல் இதழ் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2022-23 நிதியாண்டுக்கான 18 முக்கிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்தக் குறியீடு, ஐந்து அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மதிப்பெண்ணை வழங்கியது:


செலவினத்தின் தரம் (Quality of expenditure)


வருவாய் திரட்டுதல் (Revenue mobilisation)


நிதி விவேகம் (Fiscal prudence)


கடன் குறியீடு (Debt index)


கடன் நிலைத்தன்மை (Debt sustainability)


சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட ஏல மிகைத்தொகையின் (Premium) பலத்தால் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் நிதி ஆரோக்கியக் குறியீட்டில்  முன்னிலை வகித்தன. அதேசமயம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகியவை வருவாய் திரட்டுதல் மற்றும் நிதி விவேகம் உள்ளிட்ட பல அளவுகோல்களில் முக்கியப் பின்தங்கிய மாநிலங்களாகக் குறிப்பிடப்பட்டன.


நிதி உள்ளடக்கல் குறியீடு


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் நிதி உள்ளடக்கம் எந்த அளவில் உள்ளது என்பதைக் குறிக்கும் நிதி உள்ளடக்கல் குறியீடு (FI-Index), மார்ச் 2024-ஆம் ஆண்டில் 64.2 ஆக இருந்த நிலையில், மார்ச் 2025-ஆம் ஆண்டில் 67-ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு, நிதி உள்ளடக்கத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்களை ஒரே மதிப்பில் (0 முதல் 100 வரை) பதிவு செய்கிறது. 0 என்பது முழுமையான நிதி விலக்கத்தை (complete financial exclusion) குறிக்கிறது. 100 என்பது முழுமையான நிதி உள்ளடக்கத்தை (full financial inclusion) குறிக்கிறது.

இந்தக் குறியீடு மூன்று பரந்த அளவுகோல்களைக் (parameters) கொண்டுள்ளது: அணுகல் (Access): 35%, பயன்பாடு (Usage): 45%, தரம் (Quality): 20% இந்த நிதி அமைப்பின் குறியீடு எந்தவொரு அடிப்படை ஆண்டும் (base year) இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், நிதி உள்ளடக்கத்தை நோக்கி பல ஆண்டுகளாக அனைத்து பங்குதாரர்களின் ஒட்டுமொத்த முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.


7. அடிப்படையான நிர்வாகமும் உள்ளாட்சி ஜனநாயகமும்

பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீடு


இந்தியா முழுவதும் உள்ள 68 மாவட்டங்களில் 172 பஞ்சாயத்துகளில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தால் (Indian Institute of Public Administration (IIPA)) நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டை (Panchayat Devolution Index) வெளியிட்டது. அமைப்பு, செயல்பாடுகள், நிதி, ஊழியர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஆறு காரணிகளின் அடிப்படையில் பஞ்சாயத்து அமைப்பின் செயல்திறனை அளவிட இந்திய பொது நிர்வாக நிறுவனம் ஆய்வு செய்தது. இது மாநிலங்களுக்கு 0 முதல் 100 வரையிலான அளவில் மதிப்பெண் வழங்குகிறது.UPSC Issue at a Glance | Reports and Indices of 2025 that will matter for India in 2026UPSC Issue at a Glance | Reports and Indices of 2025 that will matter for India in 2026


இந்தக் குறியீடு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, மேலும் கடந்த பத்தாண்டுகளில் தேசிய சராசரி மதிப்பெண் 39.92-லிருந்து 43.89-ஆக உயர்ந்தது. இந்தக் குறியீட்டில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் இடங்களைப் பிடித்தன, மேலும் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்தன.


குறியீட்டில், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாநிலங்களாக உள்ளன. அதே சமயம், கடந்த பத்தாண்டுகளில் மணிப்பூர், அருணாச்சலம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2.62 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன, இது 2013-14-ஆம் ஆண்டில் இருந்த 2.48 லட்சத்திலிருந்து அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

 Original Article : Reports and Indices of 2025 that will matter for India in 2026. -Roshni Yadav

Share: