ஒரு சீரான தேசிய காலநிலை மீள்திறன் கொண்ட வேளாண் (climate-resilient agriculture) செயல் திட்டம் என் தேவைப்படுகிறது?
தற்போதைய செய்தி:
காலநிலை மாற்றம் உண்மையானது. மேலும், இந்தியா உள்நாட்டு உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிகரித்து வரும் வானிலையின் கணிக்க முடியாத தன்மை, குறைந்து வரும் மண்ணின் பாதுகாப்புத்தன்மை மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆகியவற்றை வேளாண்ப்பணி செய்து வருபவர்கள் சமாளிக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை (climate-resilient agriculture) என்றால் என்ன?
காலநிலை மாற்றத்தைத் எதிர்கொள்ளும் வேளாண்மை, உற்பத்தித்திறனைப் பராமரிக்கும் அல்லது மேம்படுத்தும் அதே வேளையில், வேளாண் நடைமுறைகளுக்கு வழிகாட்டவும் இரசாயன உள்ளீடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் பலவிதமான உயிரித்தொழில்நுட்பம் (biotechnology) மற்றும் துணைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இந்தக் கருவிகளில் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் மண் நுண்ணுயிரிகளை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை அடங்கும். வறட்சி, வெப்பம், உப்புத்தன்மை வாய்ந்த மண் மற்றும் பூச்சிகளைச் சிறப்பாகத் தாங்கி வளரக்கூடிய வகையில் பயிர்கள் மரபணு ரீதியாக மேம்படுத்தப்படலாம். அதேநேரத்தில், செயற்கை நுண்ணறிவால் வானிலை, மண் மற்றும் பண்ணைத் தரவுகளை ஒருங்கிணைத்து, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வேளாண் உத்திகளை உருவாக்க முடியும்.
இந்தியாவிற்கு ஏன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை (climate-resilient agriculture) தேவை?
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு வேளாண்மை நாடாகும். இது அதிக மற்றும் நம்பகமான வேளாண் உற்பத்தித் திறனுக்கான தேவையின்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்தியாவின் நிகர சாகுபடிப் பரப்பில் 51% மழைநீரைச் சார்ந்துள்ளது. மேலும், இந்த நிலம் நாட்டின் உணவு உற்பத்தியில் ஏறக்குறைய 40%-ஐ உற்பத்தி செய்கிறது. இது காலநிலை மாற்றங்களுக்கு எளிதில் பாதிப்படையக்கூடிய சூழலை உருவாக்குகிறது. வழக்கமான வேளாண் முறைகளால் மட்டும் காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் அழுத்தங்களைத் சமாளிக்க முடியாது. உதாரணமாக, சமீபத்திய மாதிரி ஆய்வுகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அரிசி போன்ற முக்கியப் பயிர்களின் விளைச்சல் 3-22% வரை குறையக்கூடும் என்றும், மோசமான சூழ்நிலைகளில் 30%-க்கும் அதிகமாகக் குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தைத் சமாளிக்கக்கூடிய வேளாண்மை என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில், உற்பத்தித்திறனை மேம்படுத்தக்கூடிய பல தொழில்நுட்பங்களை வழங்குகிறது. இது உணவு இறக்குமதிக்கான இந்தியாவின் சார்புநிலையைக் குறைத்து, உணவுத் துறையில் நாட்டின் தற்சார்பு நிலையை (strategic autonomy)வலுப்படுத்தவும் உதவும்.
இன்று இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
வேளாண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நீண்டகாலமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (Indian Council of Agricultural Research (ICAR)) 'காலநிலை மாற்றத்தை தாங்கும் விவசாயத்தில் தேசிய கண்டுபிடிப்புகள்' (National Innovations in Climate Resilient Agriculture) என்ற வலையமைப்பு திட்டத்தைத் தொடங்கியது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக, இந்தத் திட்டம் பகுதிக்கு ஏற்ற, காலநிலையைத் தாங்கும் விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட நெல் சாகுபடி நுட்பங்கள், நெல்லை நேரடியாக விதைத்தல், உழவு செய்யாத கோதுமை சாகுபடி, தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்கக்கூடிய பயிர் வகைகளை வளர்த்தல் மற்றும் வயலில் நெல் கழிவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த நடைமுறைகள் 448 காலநிலை நிகழ்வுகளை சமாளிக்கக்கூடிய ஊரகப் பகுதிகளில் செய்து காட்டப்பட்டன. நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம், மழைநீரை அதிகம் சார்ந்துள்ள பகுதிகளில் வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த விவசாயம், நீர்ப் பயன்பாட்டுத் திறன், மண் ஆரோக்கிய மேலாண்மை மற்றும் வளப் பாதுகாப்பை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology for Economy, Environment and Employment (BioE3)) கொள்கையானது, உயிரித்தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியக் கவனம் செலுத்தும் பகுதியாக காலநிலை மீள்திறன் கொண்ட வேளாண்மையை (CRA) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research (ICAR)), உயிரித்தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)), இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Research Institute (IARI)) மற்றும் வளர்ந்துவரும் தனியார் உயிரித்தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன், காலநிலை மீள்திறன் கொண்ட விவசாயத்தில் இந்தியா வலுவான அறிவியல் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. காலநிலை மீள்திறன் கொண்ட வேளாண்மை தொடர்பான பல தொழில்நுட்பங்கள் ஏற்கனவே வணிகரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை உயிர் உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நுண்ணுயிரிப் பொருட்கள் ஆகியவை ஆகும்.
பயோஸ்டாட், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (Indian Farmers Fertiser Cooperative Limited (IFFCO)), குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (Gujarat State Fertilizers and Chemicals (GSFC)), தேசிய உரங்கள் லிமிடெட் (National Fertilizers Limited (NFL)), மற்றும் IPL உயிரியல் லிமிடெட் போன்ற முன்னணி நிறுவனங்கள் மண்ணின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் ரசாயன உரங்களின் தேவையைக் குறைக்கும் உயிரி உள்ளீடுகளை வழங்குகின்றன. இந்தியாவில் வளர்ந்துவரும் டிஜிட்டல் வேளாண்மைத் துறையும் உள்ளது. நமது நாட்டில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் வேளாண்மை தொடர்பான ஆலோசனை, துல்லியமான நீர்ப்பாசன முறைகள், பயிர் சுகாதார கண்காணிப்பு மற்றும் பயிர் விளைச்சலைக் கணிக்கும் கருவிகள் போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சேவைகளை வழங்குகின்றன.
மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?
அமெரிக்க வேளாண்துறை (United States Department of Agriculture (USDA)) காலநிலை-புத்திசாலித்தனமான வேளாண்மை மற்றும் வனவியல் (Climate-Smart Agriculture and Forestry (CSAF)) முன்முயற்சி மூலம், காலநிலை மாற்றத்தைத் சமாளிக்ககூடிய வேளாண்மை (CRAF) திட்டத்தை அமெரிக்கா தனது தேசிய கொள்கைகளில் வைத்துள்ளது. இது காலநிலை-நெகிழ்வான விவசாய நடைமுறைகளில் அதிக அளவு நிதியை முதலீடு செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union (EU)), காலநிலை மாற்றத்தைத் சமாளிக்ககூடிய வேளாண்மை என்பது பசுமை ஒப்பந்தம் மற்றும் பண்ணை-முள்முனை உத்தியின் ஒரு பகுதியாகும், இது இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்து நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காலநிலை அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பயிர்களை வளர்ப்பது, நீர் சேமிப்பு நீர்ப்பாசன முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் சீனா தனது காலநிலை மாற்றத்தைத் சமாளிக்ககூடிய வேளாண் முயற்சிகளை முக்கிய கொள்கையாக கொண்டிருந்தது. பிரேசிலிய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (Brazilian Agricultural Research Corporation (EMBRAPA)) உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியால் ஆதரிக்கப்படும் வெப்பமண்டலப் பகுதிகளுக்கான காலநிலை மாற்றத்தைத் சமாளிக்ககூடிய வேளாண் பயிர்களை உருவாக்குவதில் பிரேசில் முன்னணியில் உள்ளது.
முன்னோக்கி செல்லும் வழி என்ன?
காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை விரிவுபடுத்துவதில் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. இதில் குறைந்த அணுகல், விழிப்புணர்வு மற்றும் குறைந்த விலை காரணமாக சிறு குறு பணிகளை மேற்கொள்ளும் உழவர்களிடையே குறைந்த உயிரியல் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகளில் தர முரண்பாடுகள் உயிரியல் மாற்றுகளில் நம்பிக்கையை குறைக்கின்றன. காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட விதைகளின் வெளியீடு மெதுவாகவே உள்ளது. மரபணு திருத்தம் போன்ற புதிய கருவிகளின் ஏற்றுக்கொள்ளல் இன்னும் உருவாகி வருகிறது மற்றும் மாநிலங்கள் முழுவதும் சீரற்ற விநியோகம் உள்ளது. மேலும், டிஜிட்டல் பிளவு துல்லியமான விவசாயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு-அடிப்படையிலான முடிவெடுக்கும் கருவிகளின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது. மண் தரம் குறைதல், நீர்ப் பற்றாக்குறை மற்றும் தற்போதைய தீர்வுகளைவிட வேகமாக மாறும் தட்பவெப்ப நிலைமைகள் ஆகியவை இந்தப் பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன. கொள்கைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குறைபாடு முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள், காலநிலை-சகிப்புத்தன்மை கொண்ட மற்றும் மரபணுரீதியாகதிருத்தப்பட்ட பயிர்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை துரிதப்படுத்துதல், உயிரி உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகளுக்கான தரத் தரநிலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய நில உரிமையாளர்கள் தத்தெடுப்பை ஆதரிக்க டிஜிட்டல் கருவிகள் மற்றும் காலநிலை ஆலோசனைகளை வழங்குதல் போன்றவை தேவைப்படுகின்றன. மாற்றத்தின் போது உழவர்களை ஆதரிக்க நிதி ஊக்கத்தொகைகள், காலநிலை காப்பீடு மற்றும் கடன்களை கண்டிப்பாக வழங்க வேண்டும். முக்கியமாக, இந்தியாவுக்குப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology for Economy, Environment and Employment (BioE3)) கட்டமைப்பின்கீழ், காலநிலை மாற்றத்தை சமாளிக்கக்கூடிய வேளாண்மைக்கான ஒரு தெளிவான தேசியத் திட்டம் தேவைப்படுகிறது. இது உயிரித்தொழில்நுட்பம், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்பு மற்றும் கொள்கைகளை ஒருங்கிணைத்து, வேளாண்மையில் பெரிய அளவிலான மீள்திறனை உருவாக்கும்.
சாம்பவி நாயக், தக்ஷஷிலா நிறுவனத்தின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கையின் தலைவர்.
Original Article : Why does India need climate-resilient agriculture? -Shambhavi Naik