தற்போதைய செய்தி?
மார்ச் 4-ஆம் தேதி உலக உடல் பருமன் தினத்தன்று, உலக உடல் பருமன் கூட்டமைப்பு உலகளாவிய உடல் பருமன் அறிக்கை 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டது. வரைபடத்தின் கூற்றுப்படி, அதிக எடை கொண்ட மற்றும் உடல் பருமனுடன் வாழும் குழந்தைகளில் இந்தியா இப்போது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளை இந்தியா முந்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்து, ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் அதிக உடல் நிறை குறியீட்டு எண் (body mass index (BMI)) கொண்ட 41 மில்லியன் குழந்தைகளும், உடல் பருமனுடன் 14 மில்லியன் குழந்தைகளும் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
1. 2025ஆம் ஆண்டின் அறிக்கை முதல் 2040-ஆம் ஆண்டு வரை குழந்தைகளிடையே ஏற்படும் அதிக உடல் எடை (Childhood Obesity) பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளின்படி, இந்த காலகட்டத்தில் இந்தியாவில் 20 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடையுடன் (Obesity) வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்றும் 56 மில்லியன் குழந்தைகள் அதிக எடை (Overweight) அல்லது அதிக உடல் எடையுடன் இருப்பார்கள் என கணித்துள்ளது. அதே காலகட்டத்தில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதிக உடல் நிறை குறியீட்டு எண்ணுடன் தொடர்புடைய ஆரோக்கிய ஆபத்து காரணிகளை உருவாக்கும் வாய்ப்பும் இருப்பதாகவும் கணித்துள்ளது.
2. இந்தியாவில், ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட 14.9 மில்லியன் குழந்தைகளும், 10-19 வயதுக்குட்பட்ட 26 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும் 2025-ல் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருந்தனர். உலகளவில், 5-19 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் (20.7 சதவீதம்) உடல் பருமனுடன் அல்லது அதிக எடையுடன் இருப்பதாக வரைபடம் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2010-ஆம் ஆண்டு முதல் 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. 10 மில்லியனுக்கும் அதிகமான அதிக உடல் நிறை குறியீட்டு எண் (body mass index (BMI)) கொண்ட குழந்தைகள் இருக்கும் என கணிக்கப்பட்ட 8 நாடுகளில், சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 62 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் நிறை குறியீட்டு எண் கொண்டவர்களாகவும், அதில் 33 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடை (Obesity) உடையவர்களாகவும் உள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா அடுத்த இடங்களில் உள்ளன. இந்த இரண்டு நாடுகளிலும் 27 மில்லியன் குழந்தைகள் உயர் அதிக உடல் நிறை குறியீட்டு எண் கொண்டவர்களாக உள்ளனர். அதில் 13 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர்.
4. குழந்தை பருவ உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பாதிப்புகளை கொண்ட வயதானவர்களைப் போலவே நாள்பட்ட நோய்களின் தாக்கம் இளம் வயது குழந்தைகளிடையே உள்ளது. 2040-ஆம் ஆண்டில், 57 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இருதய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் (அதிக கொழுப்புகள்) கொண்டிருப்பார்கள் என்றும், 43 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் உயர் இரத்த அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2040-ஆம் ஆண்டில், 507 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் அல்லது அதிக எடையுடன் குழந்தைகள் இருப்பார்கள் என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பு கணித்துள்ளது.
5. அறிக்கையின் படி, 11–17 வயது குழந்தைகளில் 74% பேர் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி அளவை பின்பற்றவில்லை. பள்ளி வயது குழந்தைகளில் (தொடக்க மற்றும் இடைநிலை) 35.5 சதவீதம் பேர் மட்டுமே பள்ளி உணவைப் பெறுகிறார்கள். 6–10 வயது குழந்தைகள் தினமும் சராசரியாக 0–50 மில்லி இனிப்பு பானங்கள் உட்கொள்கிறார்கள். 5 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 32.6% பேருக்கு சரியான தாய்ப்பால் கொடுப்பதில்லை. 15–49 வயது பெண்களில் 13.4% பேர் அதிக உடல் நிறை குறியீட்டு எண்ணை (body mass index (BMI)) கொண்டுள்ளனர். அதே வயதுக் குழுவில் 4.2% பெண்கள் வகை 2 நீரிழிவு நோயுடன் வாழ்கிறார்கள்.
6. இந்தியாவின் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க அவசர, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று உலக உடல் பருமன் அறிக்கை காட்டுகிறது. ஆரோக்கியமான பள்ளி உணவு சூழல், ஆரோக்கியமற்ற உணவுகளை சந்தைப்படுத்துவதிலிருந்து பாதுகாப்பு மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரிகள் போன்ற நிதி நடவடிக்கைகள் உள்ளிட்ட வலுவான தடுப்புக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார அமைப்புகளில் ஆரம்பகால பரிசோதனை மற்றும் பராமரிப்பும் இந்தப் பாதையை மாற்றும்.
7. அறிக்கையின் கூற்றுப்படி, குழந்தைப் பருவத்தில் அதிக எடை மற்றும் உடல் பருமன், வயது வந்தோரில் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வயது வந்தோர்களிடையே நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குழந்தைப் பருவத்தில் அதிக எடை ஏற்படுவதற்கான ஆபத்து, தாய்மார்களின் உடல்நிலை மற்றும் சுகாதார நடத்தைகள், ஆரம்பகால ஊட்டச்சத்து சூழல்கள் மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணிகளால் அதிகரிக்கிறது.
8. பள்ளிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. பல குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மற்றும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் உடற்பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கும் இடம் பள்ளி மட்டும் தான். அதிக உடல் எடை (Obesity) ஒரு நீண்டகால, சிக்கலான நோய் என கருதப்பட வேண்டும். அனைத்து வயதினருக்கும் எளிதாக கிடைக்கும் மற்றும் மனிதநேயமான சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
உடல் பருமன் (obesity) என்றால் என்ன?
1. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உடல் பருமன் என்பது உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் அசாதாரணமான அல்லது அதிகப்படியான கொழுப்புச் சேர்தல் ஆகும். பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் 5 முதல் 19 வயது வரை உள்ள எந்த ஒரு குழந்தையும், அவர்களின் உடல் நிறை குறியீட்டு எண் (body mass index (BMI)) சராசரியை விட இரண்டு நிலையான விலகல்கள் அதிகமாக இருந்தால் அவர்கள் உடல் பருமனாகக் கருதப்படுகிறார்கள். உடல் நிறை குறியீட்டு எண் என்பது ஒரு நபரின் எடையை கிலோகிராமில் உள்ள உயரத்தின் வர்க்க மீட்டரில் வகுத்து கிடைப்பதாகும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
2. ஜனவரி 2025-ல், லான்செட் கமிஷன் உடல் பருமனின் வரையறையில் மாற்றங்களை முன்மொழிந்தது. இதன் மூலம் இரண்டு புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன: அவை 'மருத்துவ உடல் பருமன்' மற்றும் 'மருத்துவத்திற்கு முந்தைய உடல் பருமன்' ஆகும். புதிய வரையறையில் உயரம், எடை, இடுப்பு சுற்றளவு, தசை நிறை மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடு போன்ற உறுப்புகள் இடம்பெற்றிக்கும்.
3. மருத்துவ உடல் பருமன் நோயறிதலுக்கு, மருத்துவர் மூச்சுத் திணறல், தூக்கத்தில் மூச்சுத்திணறல், அதிக கொழுப்பு அளவுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், இருதய செயலிழப்பு, நாள்பட்ட சோர்வு மற்றும் முழங்கால் மற்றும் மூட்டு வலி அனைத்து வகையான அறிகுறிகளையும் மருத்துவர் சரிபார்க்க வேண்டும். நோயயை பற்றி ஒரு நபர் தெரிந்து கொள்வதற்கு முன்பே, ஒரு நபர் தனது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ளலாம்.
4. புதிய வரையறையில் “அதிக எடை” என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக “நோயயை பற்றி ஒரு நபர் தெரிந்து கொள்வதற்கு முன்பே அதிக எடை உள்ளது” என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உடலில் அதிக கொழுப்பு இருக்கும். ஆனால் தொடர்புடைய நோய் இருக்காது. மருத்துவ உடல் பருமனுக்கான நோயறிதலைப் போலவே, இதற்கும் பல உடல் அளவுருக்களை சரி பார்க்கவேண்டும். மேலும், உறுப்பு செயல்பாடு குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ள ஒரு மருத்துவர் தேவைப்படுகிறார்.
5. ஆணையம், மருத்துவத்திற்கு முந்தைய உடல் பருமனை ஒரு உடல் ரீதியான பண்பு என்று வரையறுக்கிறது. ஒரு நோயாக அல்ல என்று கூறுகிறது: "சிலருக்கு இது மருத்துவ உடல் பருமனின் ஆரம்ப கட்டத்தைக் குறிக்கலாம். சிலருக்கு உடல் உறுப்புகளின் செயல்பாட்டை நேரடியாக பாதிக்காத வகை (phenotype) ஆக இவை இருக்கலாம்.
இந்திய இளைஞர்களை ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை நோக்கித் தூண்டுவதற்கான முயற்சிகள்.
1. பள்ளிகளில் சர்க்கரை வாரியம்: கடந்த ஆண்டு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), குழந்தைகள் சாக்கரை உட்கொள்ளும் அளவை கண்காணிக்கவும் குறைக்கவும் சர்க்கரை வாரியங்களை நிறுவுமாறு இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. 4 முதல் 10 வயதுடைய குழந்தைகள் தினசரி எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அளவு 13 சதவீதமாகவும், 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு இது 15 சதவீதமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பரிந்துரைக்கப்பட்ட 5% வரம்பை மிகவும் மீறுகிறது.
2. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ultra-processed foods (UPFs)) பற்றிய பொருளாதார ஆய்வின் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கான பரிந்துரைகள்: தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது உணவுப் பொருட்களின் தொழில்துறை சூத்திரங்கள் ஆகும். இதில் பெரும்பாலும் கொழுப்பு, சர்க்கரை மற்றும்/அல்லது உப்பு (high in fat, sugar, and/or salt (HFSS)) அதிகமாக உள்ளது. அவை நிலைப்படுத்திகள், எமல்சிபையர்கள் (Emulsifiers), நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் (colorants and flavouring substances) போன்ற அதிக சேர்க்கைகள் ஆகும். இந்தியாவில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை 40 மடங்கு அதிகரித்துள்ளது. இது 2006-ல் $9 பில்லியனில் இருந்து 2019-ல் $38 பில்லியனாக அதிகரித்துள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை சந்தைப்படுத்தல் கட்டுப்பாடுகள், எச்சரிக்கை அடையாளங்கள் மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு கூடுதல் கட்டணங்களுடன் கூடிய மிக உயர்ந்த வரி அடுக்கு போன்றவற்றை பரிந்துரைத்தது. நார்வே மற்றும் ஐக்கிய இராட்சியம் போன்ற நாடுகளில் இதுபோன்ற சந்தைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை ஆராயவும் கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது.
3. Fit India இயக்கம்: 2019-ல் தொடங்கப்பட்ட Fit India இயக்கம் என்பது குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சாரமாகும்.
4. Eat Right India பிரச்சாரம்: இது 2018-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் (Food Safety and Standards Authority of India (FSSAI)) தொடங்கப்பட்டது. இது பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு செயல்முறைகளின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.
5. போஷன் அபியான்: 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போஷன் அபியான், இந்தியாவின் ஊட்டச்சத்து நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு முக்கியத் திட்டமாகும். 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போஷன் 2.0 இயக்கம், குழந்தைகள், இளம் பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை பூர்த்தி செய்ய முயல்கிறது. இது உணவு பன்முகத்தன்மை, உணவு வலுவூட்டல் மற்றும் தினை பயன்பாட்டை பிரபலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
Originala article : World Obesity Atlas 2026 -Khushboo Kumari