டிட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இலங்கையில் குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை அன்று அதிகாரிகள், 191 பேர் இன்னும் காணவில்லை என்றும், நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
முக்கிய அம்சங்கள்:
— டிட்வா புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து உருவாகியுள்ள அவசரநிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தீவு முழுவதும் அவசரகால நிலையை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தியா மேலும் அதிக அளவிலான நிவாரணப் பொருட்களை அந்த நாட்டிற்கு வழங்கியுள்ளது.
— சுமார் 78,000-க்கும் மேற்பட்ட மக்கள், பேரிடர் மேலாண்மை மையத்தால் அமைக்கப்பட்ட, பெரும்பாலும் பள்ளிகளில் உள்ள சுமார் 800 நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான காவல்துறை, கடற்படை வீரர்கள் மற்றும் ராணுவப் படையினர் உணவு விநியோகம் செய்வது, சாலைகளைச் சுத்தம் செய்வது மற்றும் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
— வார இறுதியில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர். இது ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
— டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், இந்தியா தனது “ஆபரேஷன் சாகர் பந்துவின் (Operation Sagar Bandhu)” கீழ் இரண்டு இராணுவ போக்குவரத்து விமானங்களில் சுமார் 21-டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிய பின்னர், மீட்பு விமானங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
— இந்திய விமானப்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் உதவியுடன் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சி திட்டமிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வணிக விமான சேவை தொடங்கும்பட்சத்தில், அவை மீட்பு பணிக்கான விமானங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
— கடந்த சனிக்கிழமை, இந்திய விமானப் படையின் (Indian Air Force (IAF)) C-130J மற்றும் IL-76 என்ற இரண்டு போக்குவரத்து விமானங்கள் இலங்கைக்கு சுமார் 21 டன் நிவாரணப் பொருட்களை கொழும்பில் வழங்கின. இது இந்தியாவின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாகும்.
— இந்திய கடற்படை கப்பலான, சுகன்யா (Indian Naval Ship (INS) Sukanya) கப்பல் மேலும் நிவாரண உதவிகளுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. மேலும் அது விரைவில் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
— இந்திய கடற்படையின் விக்ராந்திலிருந்து வந்த இரண்டு சேட்டக் ஹெலிகாப்டர்கள், இலங்கை விமானப்படை ஊழியர்களுடன் சேர்ந்து, தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுகின்றன. 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) திட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா கடற்படை கப்பல் விக்ராந்த் மற்றும் இந்தியா கடற்படை கப்பல் உதைகிரி ஆகிய கப்பல்களில் இருந்து 4.5 டன் உலர் உணவு, இரண்டு டன் புதிய உணவு மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் இந்தியா அனுப்பியுள்ளது.
— கொழும்பில் உள்ள இந்திய இந்திய உயர் ஆணையம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி வருகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— ஒரு புயல் என்பது குறைந்த காற்றழுத்தப் பகுதியின் மையத்தைச் சுற்றி சுழலும் ஒரு பெரிய அளவிலான காற்று அமைப்பாகும். இது பொதுவாகக் கடுமையான புயல்கள் மற்றும் மோசமான வானிலையுடன் இருக்கும். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) படி, ஒரு புயலானது, வட அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றுக்கு எதிராகவும், தென் அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றின் திசையிலும் சுழலும் உட்புறச் சுழல் காற்றுகளால் வகைப்படுத்தப்படுகிறது. புயல்களைப் பொதுவாக இரண்டு வகைகளாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வகைப்படுத்துகிறது. அவை புறவெப்பமண்டல புயல்கள் மற்றும் வெப்பமண்டல புயல்கள் ஆகும்.
— பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள வெப்பம் அதிகரிக்கும் கடல்நீரில் வெப்பமண்டல புயல்கள் உருவாகின்றன. கடல் மேற்பரப்பில் இருந்து சூடான, ஈரப்பதமான காற்று மேல்நோக்கி உயரும்போது, கீழே ஒரு குறைந்த காற்று அழுத்தப் பகுதி உருவாகிறது. அதிக காற்று அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து காற்று இந்த குறைந்த அழுத்தப் பகுதிக்குள் சென்று, இறுதியில், அது சூடாகவும் ஈரப்பதமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.
— சூடான, ஈரப்பதமான காற்று மேலே செல்லும்போது, அது குளிர்ந்து, காற்றில் உள்ள நீரானது மேகங்களையும் இடியுடன்கூடிய மழையையும் உருவாக்குகிறது. மேகங்கள் மற்றும் காற்றுகளின் இந்த முழு அமைப்பும் கடலின் வெப்பத்தையும், அதன் மேற்பரப்பில் இருந்து ஆவியாகும் நீரையும் பயன்படுத்தி வலிமையையும் வேகத்தையும் பெறுகிறது.
— பலவீனமான வெப்பமண்டல புயல்கள் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதன் அதிகபட்ச நீடித்த காற்று மணிக்கு 39 மைல் [மணிக்கு 63 கிமீ] வேகத்தை எட்டும் அளவுக்கு தீவிரமடைந்தால், வெப்பமண்டல சூறாவளி வெப்பமண்டல புயலாக மாறும் என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) தெரிவித்துள்ளது. மணிக்கு 119 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட காற்றின் வேகத்தைக் கொண்ட புயல் அமைப்புகள் சூறாவளி (hurricanes), புயல் (typhoons) அல்லது வெப்பமண்டல புயல்கள் (tropical cyclones) என வகைப்படுத்தப்படுகின்றன.
— ஒரு வெப்பமண்டல புயலின் வகை அதன் நீடித்த காற்றின் வேகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இது சாஃபிர்-சிம்ப்சன் புயல் காற்றின் அளவுகோலின்படி (Saffir-Simpson Hurricane Wind Scale) அளவிடப்படுகிறது. இது ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
— வகை 1 முதல் வகை 5 வரை புயல்கள் உண்டு. வகை 1 புயல் → மணிக்கு 119–153 கி.மீ வேகம்; வகை 5 புயல் → மணிக்கு 252 கி.மீ அல்லது அதற்கு மேல் வேகம் கொண்ட புயல்கள். (இது மிகவும் ஆபத்தானது) வகை 3, 4, 5 புயல்கள் → நிறைய சேதத்தை உண்டாக்கும் என்பதால் இவற்றை “பெரிய புயல்” (Major Hurricane) என்று கூறுகின்றனர்.
Original Link:
What are the cyclone disaster management, mitigation and preparedness measures in India?