பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு அமைப்பில் ஒரு தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது எப்படி? - தீப்திமான் திவாரி

ஜம்மு & காஷ்மீரின் பாதுகாப்பு அமைப்புக்கு, ஏப்ரல் 22 துயரச் சம்பவம் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் சுற்றுலாப் பயணிகள் இவ்வளவு பெரிய அளவில் குறிவைக்கப்பட்டதில்லை. இது, அனுமானங்களையும், பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதையும் மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது.


ஓராண்டுக்கு முன்பு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரைச் சவாரிகளால் மட்டுமே கலைக்கப்பட்டிருந்த பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளின் அமைதி, தானியங்கித் துப்பாக்கிச் சூட்டினால் சிதைக்கப்பட்டது. ஏப்ரல் 22, 2025 அன்று, மூன்று பயங்கரவாதிகள் மரத்திலிருந்து வெளிப்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேரைக் கொன்றனர். ஜம்மு & காஷ்மீரின் பாதுகாப்பு அமைப்புக்கு, இந்தத் தாக்குதல் ஒரு துயரம் மட்டுமல்ல, அது ஒரு அமைப்புரீதியான அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் சுற்றுலாப் பயணிகள் இவ்வளவு பெரிய அளவில் குறிவைக்கப்பட்டதில்லை. இது, அனுமானங்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது.


பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், பஹல்காம் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது முன்னதாக, நகர்ப்புறங்களில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது, கவனம் மாறியுள்ளது. பாதுகாப்பு அமைப்பு மிகவும் பரவலாகவும், இது உளவுத் தகவல்களால் இயக்கப்படுகிறது. இந்த வலைப்பின்னல், உயரமான மலைப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதையும், உள்ளூர் வலையமைப்புகளை ஒருங்கிணைப்பதையும், மேலும் கண்காணிப்பு மற்றும் துல்லியமான செயல்பாடுகள் அதிகமாகச் சார்ந்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பாதுகாப்பு வலைப்பின்னல் தன்னை மாற்றியமைத்துக் கொண்ட போதிலும், பஹல்காம் சம்பவத்தால் வெளிப்பட்ட குறைபாடுகள், பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நடக்கும் உரையாடல்களைத் தொடர்ந்து வடிவமைத்து வருகின்றன.


இடைவெளிகளை அங்கீகரித்தல்


பஹல்காம் தாக்குதல், கடந்த ஆண்டுகளில் நிர்வாகக் கொள்கையை வழிநடத்தி வந்த “இயல்பு நிலை” என்ற கருத்தாக்கத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியது. காலப்போக்கில், நகர்ப்புற வன்முறையில் ஏற்பட்ட தொடர்ச்சியான சரிவும், சுற்றுலாவில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பும், பிர் பஞ்சால் மலைத்தொடர் முழுவதும் உள்ள தொலைதூர, உயரமான இடங்களைத் திறப்பதை ஊக்குவித்திருந்தன. பெருந்தொற்றுக்குப் பிறகு அணுகக்கூடியதாக மாற்றப்பட்ட சுமார் 75 இடங்களில், சிந்தன் டாப், பூட்டா பத்ரி மற்றும் பல இடங்களும் இதில் அடங்கும்.


"இந்த இடங்கள் பிரமிக்க வைக்கும் அழகுடையவையாக இருந்தபோதிலும், இராஜதந்திரரீதியாக அபாயகரமானவையாக இருந்தன. இந்தப் பகுதிகளில் தீவிரவாதிகளின் இருப்பு இடையிடையே இருந்தபோதிலும் ஒருபோதும் முழுமையாக மறையாத, வரலாற்றுரீதியான ஊடுருவல் வழித்தடங்களில் அல்லது அதற்கு அருகில் அமைந்திருந்தன" என்று ஒரு பாதுகாப்பு அமைப்பு அதிகாரி கூறினார்.


தீவிரவாதக் குழுக்கள், நகரங்களில் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் அல்லது பாதுகாப்புப் படைகளுடனான நேரடி மோதல்கள் போன்ற தங்களுக்குப் பழக்கமான வழிமுறைகளையே தொடரும் என்பதே பாதுகாப்பு அமைப்பின் அனுமானமாக இருந்து வந்தது. ஒப்பீட்டளவில் பாதுகாப்பற்ற புல்வெளிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் முக்கிய இலக்குகளாக மாறக்கூடும் என்ற சாத்தியக்கூறு முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


உண்மையில், இந்த இடங்களில் பலவும், பாதுகாக்கப்படுவதைவிட வேகமாகத் திறக்கப்பட்ட “மென்மையான எல்லைகளாக” (soft frontiers) செயல்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக 50-க்கும் மேற்பட்ட அத்தகைய இடங்கள் மூடப்பட்டதை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஒருவர் குறிப்பிட்டாரென்றால், அது “இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான உந்துதல், பாதுகாப்பு வலையமைப்பின் விரிவாக்கத்தை விஞ்சிவிட்டது என்பதற்கான ஓர் ஒப்புதல்” ஆகும்.


சாலைகளைக் கைப்பற்றுவதிலிருந்து மலைத்தொடர்களைக் கைப்பற்றுவது வரை


இந்தத் தாக்குதல் ஒரு பலவீனத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதில் ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு வழிவகுத்தது. கடந்த ஓராண்டில், பாதுகாப்புப் படைகள் பிர் பஞ்சால் மலைத்தொடரின் உயரமான பகுதிகளில் 43 தற்காலிக செயல்பாட்டுத் தளங்களை (Temporary Operating Bases (TOB)) நிறுவியுள்ளன. தற்போது சி.ஆர்.பி.எஃப் (CRPF) மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) படையினர் 3,000 முதல் கிட்டத்தட்ட 9,000 அடி வரையிலான உயரங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.


தீவிரவாதக் குழுக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் முறையைத் தடுக்க அவர்களுக்கு உதவுகிறது. மலைத்தொடர்களையும் அடர்ந்த வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பதன் மூலம், பாதுகாப்புப் படைகள் வழக்கமான ஊடுருவல் முதல் செயல்படுத்தல் சுழற்சியைச் (infiltration-to-execution cycle,) சீர்குலைக்க நோக்கம் கொண்டுள்ளன. அந்த நேரத்தில், சிறிய குழுக்கள் வனப் பாதைகள் வழியாக நுழைந்து, பதுங்கியிருந்து, வாய்ப்புகள் கிடைக்கும்போது தாக்குதல் நடத்தும்.


ஜம்மு & காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் விவரித்ததாவது, இந்த மாற்றம் என்பது “சாலையைக் காப்பதிலிருந்து” “மலைத்தொடரைக் காப்பதை” கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். அதாவது, கண்ணுக்குத் தெரியும், நெடுஞ்சாலையை மையமாகக் கொண்ட பாதுகாப்பிலிருந்து விலகி, முன்னர் இந்தப் பகுதிகள் குறைவாகக் கண்காணிக்கப்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கிய ஒரு நகர்வு ஆகும்.


தொழில்நுட்பமும் "மனிதப் பாதுகாப்பு அரணும்


பாதுகாப்புப் படைகளை இடமாற்றம் செய்வதோடு, பாதுகாப்பு அமைப்பு இப்போது அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டில், சுற்றுலாப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 50,000-க்கும் மேற்பட்ட நபர்களான குதிரைப் பராமரிப்பாளர்கள், வழிகாட்டிகள், புகைப்படக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆதார் இணைக்கப்பட்ட தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கியூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டைகள் (QR-coded ID) வழங்கப்பட்டுள்ளன.


இந்த இலக்கிற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. முதலாவதாக, சுற்றுலாப் பகுதிகளில் உடனடிச் சரிபார்ப்பைச் சாத்தியமாக்குவதும், தரைவழிப் பணியாளர் (over-ground worker (OGW)) வலையமைப்புகள் சேவைப் பொருளாதாரத்திற்குள் ஊடுருவி விடுமோ என்ற அபாயத்தைக் குறைப்பதும் ஆகும். முக்கிய சுற்றுலா வழித்தடங்களைச் சுற்றி ஒரு “மனிதப் பாதுகாப்பு அரணை” (human firewall) உருவாக்குவதாக அதிகாரிகள் இதை விவரிக்கின்றனர்.


கண்காணிப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மையங்களில் முகத்தை அடையாளம் காணும் கருவிகள் (Facial Recognition Devices) நிறுவப்பட்டுள்ளன. அதேசமயம், ஆளில்லா விமான வழித்தடங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய புல்வெளிகள் மற்றும் மலையேற்றப் பாதைகளின்மீது தொடர்ச்சியான வான்வழி கண்காணிப்பை வழங்குகின்றன. பார்வையாளர்களைத் தடுக்கக்கூடிய வெளிப்படையான இராணுவமயமாக்கல் இல்லாமல், ஒரு பாதுகாப்பு இருப்பைப் பேணுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இந்த அணுகுமுறையானது, தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட பல தளங்களை நிர்வாகம் படிப்படியாக மீண்டும் திறக்க வழிவகுத்துள்ளது. ஆனால் இது தனியுரிமை மற்றும் இத்தகைய தீவிர கண்காணிப்பின் நீண்டகால நிலைத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தப் பிரச்சினைகள் அதிகாரப்பூர்வ உரையாடல்களில் பெரும்பாலும் விவாதிக்கப்படாமலேயே இருக்கின்றன.


உளவுத்துறை சார்ந்த துல்லியம்


ஒருவேளை, மிக முக்கியமான மாற்றம் என்பது புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை நோக்கியதாகவே அமைந்துள்ளது. ஜூலை 2025-ல், 'ஆபரேஷன் மகாதேவ்' (Operation Mahadev) திட்டத்தின் கீழ், பாதுகாப்புப் படைகள் மனிதப் புலனாய்வு மற்றும் ஆளில்லா விமானக் கண்காணிப்பு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி, ஹர்வான் மலைப்பகுதிகளில் நடந்த பஹல்காம் படுகொலைகளுக்குப் பின்னணியில் இருந்த மூன்று பேர் கொண்ட குழுவைக் கண்டுபிடித்து அழித்தன.


அதன்பிறகு, அதிகாரிகள் தொடர்ச்சியான இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை, 'உளவுத்துறைக்கு முன்னுரிமை' (intelligence-first) அளிக்கும் அணுகுமுறைக்கான சான்றாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இதில், நவம்பர் 2025-ல் 'மருத்துவர் மாதிரி' (Doctor Module) என்று அழைக்கப்படும் பகுதி கலைக்கப்பட்டதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஜம்மு & காஷ்மீரில் இருந்து வந்த தீமூட்டும் சுவரொட்டிகள் குறித்த விசாரணையின் விளைவாக, ஹரியானாவில் 350 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதோடு, ஒரு பரந்த வலையமைப்பை முடக்குவதற்கும் வழிவகுத்தது. இது, நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிகழவிருந்த தாக்குதல்களைத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் தொடங்கி, அதிலேயே முடிவடைந்தது.


கிஷ்வார்-டோடா பகுதியில் சைஃபுல்லா குழுவைச் செயலிழக்கச் செய்ததும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லஷ்கர்-இ-தைபாவின் (Lashkar-e-Taiba) பன்னாட்டு ஆள்சேர்ப்புப் பிரிவு ஒன்றை முறியடித்தது போன்ற மிகச் சமீபத்திய நடவடிக்கைகள், குறைந்தபட்ச சேதங்களுடன் கூடிய துல்லியமான, உளவுத்துறை ஆதரவுடனான தாக்குதல்கள் என்ற ஒரே மாதிரியான நிலையையே பின்பற்றியுள்ளன.


தனிப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட, புவியியல் ரீதியாகப் பரந்துள்ள வலையமைப்புகளை வலுவாகக் கண்காணிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஏற்றுக்கொள்வதற்கான வரம்புகள்


இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்பு கட்டமைப்பு இன்னும் முழுமையாக ஊடுருவ முடியாததாக இல்லை. ஊடுருவல் மற்றும் கடினமான சூழல்களில் நிலவும் உளவுத்துறை இடைவெளிகள் ஆகிய இரண்டு கட்டுப்பாடுகளே உள் மதிப்பீடுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.


சமீபத்திய செயற்கைக்கோள் திட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து, அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற பிரத்யேக கண்காணிப்புத் திறன்களை நிறுவுவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) நெடுகிலும், குறிப்பாக மோசமான வானிலையின்போது, ​​தொடர்ச்சியான கண்காணிப்பைப் பேணுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது. தரைவழி உணர்விகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் திறம்படச் செயல்பட்டாலும், அவை பள்ளத்தாக்கின் தீவிரமான காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடியவையாகவே இருக்கின்றன.


இன்னும் அடிப்படையாக, அடர்ந்த வனப் பகுதிகளில் மனித உளவுத்துறை தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. பிர் பஞ்சால் மலையின் அடர்ந்த விதானம், சிறிய, நகரும் "கலப்பின" குழுக்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது, கண்டறியப்படுவதைத் தவிர்க்கப் போதுமான மறைப்பை இன்னும் வழங்குகிறது.


"ஒரு பயங்கரவாதி உள்ளே நுழைந்துவிட்டால், அவன் ஏதாவது செய்துவிடுவான். பாகிஸ்தான் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வரை, ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருக்கும். தலிபான்களுடனான தொடர் போரின் காரணமாக, அது தற்போது தனது மேற்கு எல்லையில் மும்முரமாக இருப்பது ஒரு நல்ல விஷயம்" என்று மத்திய பாதுகாப்பு அமைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

Original link:

How the Pahalgam attack forced a radical security shift in J&K?


Share: