தேக்கநிலைப் பணவீக்கம் (Stagflation) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


•  அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் 1974-ஆம் ஆண்டில் முறையே -0.5% மற்றும் -1.7% என்ற அளவிலும், 1975-ஆம் ஆண்டில் முறையே -0.2% மற்றும் -0.7% என்ற அளவிலும் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் பதிவானது. 1974-ல் நுகர்வோர் விலை பணவீக்கம் (consumer price inflation) அமெரிக்காவில் 11.1% ஆகவும், ஐக்கிய இராச்சியத்தில் 16% ஆகவும், 1975-ல் அமெரிக்காவில் 9.1% ஆகவும், ஐக்கிய இராச்சியத்தில் 24.2% ஆகவும் பதிவானது.


• 1979, 1980, 1981 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் மட்டும் 3.2%, -0.3%, 2.5% மற்றும் -1.8% என்ற அளவுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியையும், 11.3%, 13.5%, 10.3% மற்றும் 6.1% என்ற அளவுகளில் ஆண்டு நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் பதிவானது. ஆங்கிலேய கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியான இயன் மெக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்ட 'தேக்கநிலைப் பணவீக்கம் (Stagflation)' என்ற சொல்லின்  இரண்டு நிகழ்வுகளிலும், எண்ணெய் நெருக்கடிகளே முக்கியக்  காரணியாக இருந்தன.


• முதல் எண்ணெய் நெருக்கடி, 1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலுக்கும் எகிப்து-சிரியாவுக்கும் இடையே நடைபெற்ற யோம் கிப்பூர் போருக்குப் (Yom Kippur War) பிறகு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவளித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, அரபு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு முழுமையான எண்ணெய் தடை விதித்தது. இரண்டாவது எண்ணெய் நெருக்கடியானது 1979-ல் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் ஈராக் ஈரானின் மீது படையெடுத்தது.


• அதன் பிறகு, உலகம் குறைந்தது மூன்று எண்ணெய் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. நெருக்கடிகள் 2008, 2022 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்தன. 2008-ஆம் ஆண்டின் நெருக்கடியானது பொருளாதார தேக்கத்திற்கு (எதிர்மறையான அல்லது மிகக் குறைந்த ஒற்றை இலக்க மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) வழிவகுத்தது. ஆனால், அது கட்டுப்பாடற்ற (runaway) பணவீக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2022-ல் நிகழ்ந்த ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக குறைந்தபட்ச பணவீக்கம் ஏற்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருளாதார மந்தநிலை (great recession) ஏற்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


• வழக்கமான பொருளாதாரப் பாடநூல்களில் இடம்பெறும் கோட்பாடுகளின்படி, 'வழங்கல் வளைகோடு' (Supply curve) மற்றும் 'தேவை வளைகோடு' (Demand curve) என இரண்டு வளைகோடுகள் உள்ளன. இவற்றில் செங்குத்து அச்சில் விலைகளும் (P), கிடைமட்ட அச்சில் அளவுகளும் (vertical and quantity (Q)) காட்டப்படுகின்றன. வழங்கல் வளைவு இடமிருந்து வலமாக மேலே ஏறும் (upward sloping) வகையில் இருக்கும். இது நேர்மறை தொடர்பைக் காட்டுகிறது. விலைகள் உயரும்போது, ​​ஒரு குறிப்பிட்ட பொருளின் விநியோக அளவை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்கு மாறாக, தேவை வளைகோடு கீழ்நோக்கிச் சரிகிறது. நுகர்வோர் குறைந்த விலையில் ஒரு பொருளை அதிகமாகவும், அதிக விலையில் குறைவாகவும் வாங்குகின்றனர்.


• அதனுடன் உள்ள வரைபடத்தில் ஆரம்ப வழங்கல் வளைவு (supply curve (S0)) மற்றும் தேவை வளைவு (demand curve (D0)) காட்டப்படுகின்றன. இவை சந்திக்கும் இடமே சந்தை சமநிலை (Market Equilibrium) ஆகும். அந்த சமநிலை விலை, நுகர்வோர் கேட்கும் அளவு சமநிலை அளவு மற்றும் உற்பத்தியாளர்கள் வழங்கும் அளவு இரண்டும் சமமாக இருக்கும்.


• தேக்கவீக்கம் பொதுவாக “எதிர்மறை விநியோக அதிர்ச்சிகளால்”  (negative supply shocks) ஏற்படுகிறது. பொதுவாக, ஒரு பொருளின்   வழங்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் அல்லது குறைவும் அதன் விலையில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.  உள்ளீட்டுச் செலவுகள், உற்பத்தி நிலைமைகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிற காரணிகள் மாறாமல் இருக்கும். இங்கு நடைபெறும் மாற்றம், அதே வழங்கல் வளைவில் (supply curve) ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்கிறது.

• முன்னதாகக் குறிப்பிடப்பட்டபடி, தேக்கநிலைப் பணவீக்கம் (Stagflation) ஏற்படுவதில் வழங்கல் அதிர்ச்சிகளின் அளவு மட்டும் அல்ல, அந்த கால அளவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வந்தால், மேற்கு ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு பதப்படுத்தும் வசதிகள் மீதான தாக்குதல்கள், உற்பத்தியை மீட்டெடுக்கும் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று வைத்துக்கொண்டால் — விநியோக வளைவரையானது S1-லிருந்து S0-க்கு, 1970-களின் தேக்கநிலைப் பணவீக்கத்தைத் (stagflation) தவிர்க்கும் அளவுக்கு விரைவாக  திரும்பக்கூடும்.


Original article: What is the stagflation? -Priya Kumari Shukla

Share: