கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறைக்கு எதிரான இந்தியாவின் விமர்சனங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) எனப்படும் இந்த புதிய வரி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுசுழற்சி கொள்கையுடன் இணைந்து, 27 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிற்கு உலோக ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உள்நாட்டுத் தொழிலை ஆதரிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு பழைய உலோக ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் ஒரு "வரியல்லாத தடையாக" (non-tariff barrier) செயல்படுகிறது என்று இந்திய உற்பத்தியாளர்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த கார்பன் எஃகு உற்பத்திக்கு ஒரு முக்கிய மூலப்பொருளான எஃகு கழிவுகளின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகும். எஃகு உற்பத்தியில் இருந்து வெளியாகும் உமிழ்வுகள் பொதுவாக வெடிப்பு உலை-அடிப்படை ஆக்ஸிஜன் உலை (Blast furnace (BF-BOF)) வழிமுறைகளில் மிக அதிகமாகவும், வாயு அடிப்படையிலான நேரடி ஒடுக்கப்பட்ட இரும்பு (Gas-based direct reduced iron (DRI)) வழிமுறைகளில் குறைவாகவும், மற்றும் கழிவு அடிப்படையிலான மின்சார வில் உலை (Electric arc furnace (EAF)) வழிமுறைகளில் மிகக் குறைவாகவும் உள்ளன. இந்திய உற்பத்தியாளர்கள் ஊது உலை வழிமுறையையே பயன்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் தற்போது கார்பன் எல்லை சரிசெய்தல் முறையை எதிர்கொள்ளத் தயாராகவில்லை.


தனது “பசுமை எஃகு” (green steel initiative) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, பழைய உலோகக் கழிவுகள் மற்றும் மின்சார வில் உலைகளைப் பயன்படுத்தி எஃகு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் அனுமதிப்பதைவிட அதிக கார்பன் உமிழ்வை வெளியிடும் மற்ற நாடுகளின் தயாரிப்புகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் ஒரு வரியாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா செய்யும் இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளைப் பாதிக்கக்கூடும் என்றும், சில இறக்குமதிகளுக்கு 20–35% கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.



இருப்பினும், பசுமை எஃகு முன்னெடுப்பின் கீழ், 2047-ஆம் ஆண்டுக்குள் எஃகு உற்பத்தியில் கழிவு இரும்பின் பங்கை 50 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக எஃகு சங்கத்தின்படி, தூய இரும்புத் தாதுவைப் பயன்படுத்தும் பாரம்பரிய வெடிப்பு உலை-அடிப்படை ஆக்ஸிஜன் உலை முறைகளுடன் ஒப்பிடும்போது, ​​கழிவு இரும்பைப் பயன்படுத்தி மின்சார வில் உலை மற்றும் தூண்டல் உலை வழிகளில் எஃகு உற்பத்தி செய்வது, பயன்படுத்தப்படும் ஒரு டன் கழிவு இரும்பிற்கு 1.5 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைக் குறைத்து, ஆற்றல் நுகர்வையும் 75 சதவீதம் குறைக்க முடியும்.


இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) அறிக்கையின்படி, எஃகு கழிவுகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் போதிலும், தற்போது இந்தியாவில் எஃகு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களில் கழிவு இரும்பு 20 சதவீதமாக மட்டுமே உள்ளது.


இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு கழிவு இறக்குமதி நாடாகும். முதன்மையாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து எஃகு கழிவு இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகளில் பல, தங்களின் சொந்த கார்பன் வெளியேற்றக் குறைப்பு இலக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, தற்போது ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தி வருகின்றன. மேலும், முக்கிய ஏற்றுமதி நாடுகள் உள்நாட்டில் அதிக கழிவுவை பயன்படுத்தத் தொடங்குவதால், உலக அளவில் வர்த்தகத்திற்கான கழிவின் இருப்பு 2030ஆம் ஆண்டுக்குள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு ஐரோப்பிய எஃகு மற்றும் உலோகங்கள் செயல் திட்டம்’ (A European Steel and Metals Action Plan) என்ற தலைப்பிலான ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission (EC)) அறிக்கை, உலோகத் தொழில்களைக் கார்பன் அற்றதாக்குவதற்கும், குறைந்துவரும் உலோகக் கழிவுகளின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரும்பு உலோகக் கழிவுகளின் ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு  மேல் அதிகரித்துள்ளது என்றும், 2021-ஆம் ஆண்டில் அது அதிகபட்சமாக 19.43 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்றும் ஐரோப்பிய ஆணையம் கூறுகிறது.


இந்த போக்கை மாற்றுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய வளங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் தேவையை அதிகரிக்க செய்வதை முதல் நோக்கமாக வைத்துள்ளது. இதை அடைவதற்கு, வாகனத் துறை போன்ற உயர்தரப் பயன்பாடுகளில் அதன் உபயோகத்தை உறுதிசெய்யும் வகையில், கழிவுப் பொருட்கள் சிறப்பாகப் பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


Original Article : What are India’s reservations against CBAM? -Roshni Yadav

Share: