தற்போதைய செய்தி?
இந்தியச் சாலைகளில் குழிகள் (Potholes) எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகின்றன. இவை போக்குவரத்து வேகத்தைக் குறைப்பதோடு, பயணங்களைச் சிரமமானவையாக மாற்றுகின்றன. இவை கடுமையான விபத்துகளுக்கு முக்கிய காரணியாக அமைகின்றன. மழைக்காலத்தில், இந்த குழிகள் தண்ணீர் நிரம்பிய குளங்களாக மாறி, இன்னும் அபாயகரமானகதாக மாறுகின்றன. இந்தப்பிரச்சினையை சரி செய்யும் வகையில், டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD)) இந்த ஆண்டு, அறிவியல் பூர்வமான மற்றும் மிகவும் பயனுள்ள ஒரு தீர்வைத் தேடி வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. சாலைகளில் உள்ள குழிகளைச் சீரமைப்பதற்காக, மூன்று தொழில்நுட்பங்களை டெல்லி மாநகராட்சி பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சாலைகளின் பராமரிப்பு, கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக இருந்து வரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒன்றிய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Council of Scientific and Industrial Research-Central Road Research Institute (CSIR-CRRI)), இந்தத்தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
2. சாலை சீரமைப்பில் இரண்டு அடிப்படைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன: அவை, ஒரு சாலைக்கு கட்டமைப்பை வழங்கும் நொறுக்கப்பட்ட கல்லான ஜல்லிக்கற்கள் மற்றும் கலவையை கொண்டு உறுதியாக இருக்கும் தார் போன்ற பிணைப்புப் பொருள் ஆகும். சாலைக்கு மீண்டும் புதிய தளம் அமைக்கும்போது, பழைய சாலையின் பாகங்களை எந்த அளவிற்கு மீண்டும் பயன்படுத்த முடியும், புதிய பொருட்களை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
தொடர்ந்து வரும் மேற்கு ஆசிய நெருக்கடியானது, சாலை கட்டுமானத்திற்கான தார் (Bitumen) கிடைப்பதையும் பாதித்துள்ளது. தார் (Bitumen) கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுவதோடு, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள தடையால், பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியா தனது உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக 33.79 சதவீத தாரை (Bitumen) இறக்குமதி செய்துள்ளது.
3. தற்போது பரிசீலனையில் உள்ள தொழில்நுட்பங்கள்: 'Ecofix' ஆகும். இது குழிகளைச் சீரமைக்கப் பயன்படும், எஃகு கசடை (steel slag) அடிப்படையாகக் கொண்ட, பயன்படுத்தத் தயாரான ஒரு கலவையாகும். பழைய தார் சாலையை புதுப்பிக்கும் பொருள் ‘Rejupave’ என்பது சாலைகளில் அடர்த்தியான மேல் பகுதிகள் அமைப்பதற்கும், சாலைகளைப் புதுப்பிப்பதற்கும் பயன்படும் ஒரு பொருளாகும் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)) இது சாலைப் பொருட்களைச் சூடுபடுத்த வேண்டிய தேவையைக் குறைக்கும் ஒரு 'குளிர்க் கலவை' (cold-mix) சாலையை அமைக்கும் தொழில்நுட்பமாகும்.
4. பசுமை சாலைப் பழுதுபார்ப்பு தொழில்நுட்பம்: ‘Ecofix’ என்பது, சாலையின் சேதமடைந்த பகுதியில் வைத்து, ஒரு சிறிய அதிர்வுக்கருவி அல்லது கையால் தட்டும் கருவி மூலம் இறுக்கக்கூடிய, பயன்படுத்தத் தயாராக உள்ள ஒரு பொருளாகும். சீரமைக்கப்பட்ட சாலையின் மேற்பரப்பு 10 நிமிடங்களில் போக்குவரத்திற்குத் தயாராகிவிடும்.
இது பதப்படுத்தப்பட்ட எஃகு கசடுகளிலிருந்து (Steel slag) தயாரிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தும்போது சாலைக் குழிகளில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்ட குழி சீரமைப்பு தொழில்நுட்பத்தின்படி, பழுதுபார்ப்பது என்பது சாலை சீரமைப்பில் பதப்படுத்தப்பட்ட உலோகவியல் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது கற்கள் மற்றும் மண் போன்ற இயற்கை வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
5. பழைய தார் சாலையை புதுப்பிக்கும் பொருள் (Rejupave Rejuvenator): அடர்த்தியான தரைவிரிப்பு என்பது, ஏற்கனவே உள்ள சாலையின் மேற்பரப்பின் மீது போடப்படும் ஒரு தார் சாலையின் மேற்பரப்பு அடுக்கு ஆகும். இது சாலையின் பயணத் தரத்தை (riding surface) மேம்படுத்தவும், மேல் அடுக்கை புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ஒரு சாலை பழுதடைந்து அல்லது மேற்பரப்பில் சிதைவு ஏற்பட்டிருக்கும்போது, ஆனால் முழுமையாகப் புதிதாகத் தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CRRI) கூற்றுப்படி, இந்த அடர்த்தியான தரைவிரிப்பு கலவையில் மிகக் குறைந்த அளவு (0.5% முதல் 1% வரை) 'Rejupave Rejuvenator' எனும் பொருளைச் சேர்ப்பதன் மூலம், பழைய சாலையில் உள்ள ஜல்லிக் கற்கள் (Aggregate) மற்றும் தார் (Binder) ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தும் திறனை தற்போதைய 25%-லிருந்து சுமார் 60-70% வரை அதிகரிக்க முடியும்.
6. மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)): மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)) அல்லது MSS+ என்பது அடர்த்தியான தரைவிரிப்பு வேலைகளுக்கான ஒரு குளிர்-கலவை முறையாகும். வழக்கமான சாலைப் பணிகளை செய்வதற்க்கு முன்பு தார் மற்றும் ஜல்லிக்கற்களைச் சூடுபடுத்திப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (MSS+) முறையில், தார் மற்றும் ஜல்லிக்கற்களைச் சாதாரண அறை வெப்பநிலையிலேயே (Ambient temperature) பயன்படுத்த முடியும்.
வழக்கமான முறைகள் 150-160°C வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மேம்படுத்தப்பட்ட முறைகளுக்கு 120-125°C மட்டுமே தேவைப்படுகிறது. இது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது.
சாலை விபத்து மரணங்களுக்கு வழிவகுக்கும் குழிகள்
1. பிப்ரவரி மாதத்தில் மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) சமர்ப்பித்த தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டிலிருந்து சாலைக் குழிகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 53 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
2. 2020-ஆம் ஆண்டில் சாலைக் குழிகள் தொடர்பான சாலை விபத்துகளில் மொத்தம் 1,555-பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 2,385-ஆக அதிகரித்தது. அதாவது, இந்தியாவில் தினசரி சராசரியாக ஆறுக்கும் மேற்பட்டோர் சாலைக் குழிகளால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
3. மாநில வாரியான தரவுகளின் பகுப்பாய்வின்படி, சாலைக் குழிகளால் ஏற்பட்ட தேசிய அளவிலான மொத்த மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. மாநிலம் நாட்டிலேயே தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்து வருகிறது. 2020-ஆம் ஆண்டில் 759-ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 1,369-ஆக உயர்ந்துள்ளது.
4. மத்தியப் பிரதேசத்தில் 2020-ஆம் ஆண்டில் 96-ஆக இருந்த உயிரிழப்புகள், 2024-ஆம் ஆண்டில் 277-ஆகக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்கள் உள்ளன. இந்த முதல் ஐந்து மாநிலங்கள் இணைந்து, சாலைக் குழிகளால் ஏற்படும் மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் 82%-க்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளன.
5. ஆண்டுதோறும் ஏற்படும் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாகச் சீனா (இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் 36%) மற்றும் அமெரிக்கா (25%) ஆகியவை இடம்பெற்றுள்ளன. உலகின் 2-வது மிகப்பெரிய சாலைப் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. 63.45 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகள் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இதில் 1.46 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும், 1.80 லட்சம் கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன.
உயிரி-தார் சாலை (Bio-bitumen technology) தொழில்நுட்பம்
1. ஒன்றிய அரசின் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், நீடித்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சாலைகள் அமைப்பதற்காக, நெல் வைக்கோலை ((parali)) வெப்பச் சிதைவு முறையில் உயிரி-தார் சாலை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்வின்போது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “வெப்பச் சிதைவு மூலம் ஒன்றிய பண்ணைக் கழிவுகளிலிருந்து சாலைகள் வரை” என்ற இந்த வெற்றிகரமான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து, இந்தியா “தூய்மையான, பசுமையான நெடுஞ்சாலைகள்” யுகத்தில் நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
2. இந்தியா ஆண்டுதோறும் தார் (bitumen) இறக்குமதிக்காக சுமார் ₹25,000 கோடி அந்நியச் செலாவணியைச் செலவிடுகிறது. தற்போதைய உலகளாவிய (மேற்கு ஆசிய) நெருக்கடிகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல்கள் இந்தத் துறையை நேரடியாகப் பாதிக்கின்றன.
3. இந்தியாவில் ஆண்டுதோறும் 600 மில்லியன் டன்களுக்கும் அதிகமான வேளாண் கழிவுகள் உருவாகின்றன. இந்த உயிரிப்பொருளின் கணிசமான பகுதி, குறிப்பாக நெல் வைக்கோல், பொருளாதார ரீதியாக தேவையான பயன்பாட்டு வழிகள் இல்லாததால் திறந்தவெளிகளில் எரிக்கப்படுகிறது. இதனால் கடுமையான காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயு வெளியேற்றம், மண் ஊட்டச்சத்து இழப்பு மற்றும் பொது சுகாதார பாதிப்புகள் ற்படுகின்றன.
4. உயிரி-தார் சாலை (Bio-bitumen technology) தொழில்நுட்பம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வை வழங்குகிறது. இது தார் (Bitumen) இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வைக்கோல் எரிப்புப் பிரச்சினையையும் தணிக்கிறது. நிலையான, மீள்திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சாலைக் கட்டமைப்பை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாகும்.
5. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் இணைந்து (Indian Institute of Petroleum (IIP)), நெல் வைக்கோலை வெப்பச் சிதைவு செய்வதன் மூலம் உயிரி-தார் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாகக் கிடைக்கும் உயிரி-எண்ணெய், வேதியியல் அலகு செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தப்பட்டு, வழக்கமான தார் சாலைக்குப் பகுதி மாற்றாகவோ அல்லது அதன் தரத்தை மேம்படுத்தும் காரணியாகவோ சாலைப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அவை, நெல் வைக்கோல் → வெப்பச் சிதைவு → உயிரி எண்ணெய் → உயிரிப் பிணைப்புப் பொருள் → நெகிழ்வுத் தன்மை கொண்ட நடைபாதைகள் ஆகும்.
6. இந்த உயிரி-தார் சாலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை-6-ல் (ஜோராபாத்-ஷில்லாங் விரைவுச்சாலை) ஒரு சோதனைச் சாலை வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இது போக்குவரத்து நெரிசலின் போதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Original article : What are the pothole repair technologies developed by CSIR-CRRI? -Khushboo Kumari