16-வது நிதி ஆணையம் — விடுபட்ட அம்சங்களும் கவலைகளும் -சி. ரங்கராஜன், டி.கே. ஸ்ரீவஸ்தவா

 பதினாறாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் கூட்டாட்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல்.


முந்தைய நிதி ஆணையங்கள் மத்திய அரசின் விரிவான வழிகாட்டுதல்களின்கீழ் செயல்பட்டன. ஆனால், பதினாறாவது நிதி ஆணையத்தின் அதிகாரங்கள் நேரடியாக அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டதால், அதன் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையைத் தீர்மானிப்பதில் அதற்கு மிகுந்த சுதந்திரம் இருந்தது. முந்தைய ஆணையங்களைப் போலவே, இதுவும் நிதிப் பகிர்வின் இரண்டு முக்கிய அம்சங்களான செங்குத்துப் பகிர்வு (Vertical) மற்றும் கிடைமட்டப் பகிர்வு (Horizontal) ஆகியவற்றை கையாண்டதாகக் கூறப்படுகிறது. 


செங்குத்து பரிமாணம்


ஒன்றிய அரசின் வரிகளில் மாநிலங்களுக்கான பங்கினை 14-வது நிதி ஆணையம் 32%-லிருந்து 42%-ஆக உயர்த்தியதை தற்போதைய நிதி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காலகட்டத்தில் மாநில திட்டங்களுக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டதாலும், அந்த மானியங்கள் மொத்த வரி வருவாயில் 3% மட்டுமே இருந்ததாலும் இந்த உயர்வு நியாயப்படுத்தப்பட்டது. பின்னர், ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்து மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பங்கு 41%-ஆகக் குறைக்கப்பட்டது. மாநிலங்களுக்கான பங்கு பெருமளவு உயர்த்தப்பட்டதால், ஒன்றிய அரசு தனது நிதி மேலாண்மைக்கான வாய்ப்புகளை (fiscal space) இழப்பது குறித்து கவலை தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத 'செஸ்' (cess) மற்றும் கூடுதல் கட்டணங்களை (surcharge) அதிகரித்ததுடன், ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கான தனது பங்களிப்பைக் குறைத்தது. மேலும், 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது மாநிலம் சார்ந்த மானியங்களையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இருப்பினும், 16-வது நிதிக்குழு இறுதியில் மாநிலங்களின் பங்கினை 41% என்ற அளவிலேயே தக்கவைத்து, அதற்கு ஒரு நிலையான தன்மையை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


பதினாறாவது நிதி ஆணையம் (16th Finance Commission), ஒன்றிய அரசு வசூலிக்கும் கூடுதல் வரிகள் (Cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharges) குறித்து நேரடியான பரிந்துரைகளை வழங்கவில்லை. பொதுவாக, இத்தகைய வசூல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக விதிக்கப்பட வேண்டும்; அவை மத்திய அரசின் பொதுவான நிதித்தொகுப்பில் சேர்க்கப்படக் கூடாது என்பதே விதியாகும். ஆனால், நடைமுறையில் இவை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இதற்குத் தீர்வாக, இந்த ஆணையம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு "பெரிய பரஸ்பர ஒப்பந்தத்தை" (Grand Bargain) முன்மொழிந்துள்ளது. அதாவது, ஒன்றிய அரசு தனது பெரும்பாலான கூடுதல் வரிகளையும் கட்டணங்களையும் வழக்கமான வரிகளோடு இணைக்கச் சம்மதித்தால், மாநிலங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த வரிப்பகிர்வில் ஒரு சிறிய சதவீதக் குறைப்பை ஏற்றுக்கோள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறையாது, அதே சமயம் வரி விதிப்பு முறையில் ஒரு தெளிவும் வெளிப்படைத்தன்மையும் உருவாகும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்கீடு குறித்து முடிவெடுக்கும் போது, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 270 மற்றும் 280-ன்கீழ் தனக்கு வழங்கப்பட்ட கடமையை நிதி ஆணையம் சரியாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.  பெருகி வரும் 'செஸ்' (Cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharges) அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானது என்று ஒன்றிய அரசிடம் இந்த ஆணையம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மேலும், வருவாய் பற்றாக்குறை மானியங்களை நிறுத்தியதுடன், குறிப்பிட்ட மாநிலங்களுக்கோ அல்லது துறைகளுக்கோ எவ்வித சிறப்பு மானியங்களையும் இது பரிந்துரைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக, ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் மாநிலங்களுக்குக் கிடைக்கும் பங்கானது 15-வது நிதி ஆணையத்தின் காலத்தைவிடக் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். 


ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் வரிப் பங்கீடு மற்றும் நிதி ஆணையத்தின் மானியங்கள் என மாநிலங்களுக்குக் கிடைக்கும் உண்மையான நிதிப் பகிர்வு, 11-வது, 12-வது மற்றும் 13-வது நிதி ஆணையக் காலங்களில் முறையே 27.0%, 27.2% மற்றும் 28.3% என்ற அளவில் இருந்தது. இது 14-வது நிதி ஆணையக் காலத்தில் 35.6%-ஆக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 15-வது நிதி ஆணையக் காலத்தில் (2020-21 முதல் 2024-25 வரை) இது 34.4% எனச் சற்றே குறைந்திருந்தாலும், 11 முதல் 13-வது காலகட்டங்களைவிட மிக அதிகமாகவே உள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வருவாய் வரவுகளில் இருந்து மாநிலங்களுக்கு மாற்றப்படும் நிதியாதாரங்களின் பங்கில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய உயர்வை அலட்சியப்படுத்த முடியாது என்கின்றனர். 


பதினாறாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைக்காலத்தின் முதல் ஆண்டான 2026–27-ஐப் பார்க்கும்போது, ஒன்றிய அரசின் நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளின்படி இந்த விகிதம் 32.7%-ஆக உள்ளது. இருப்பினும், நிதி ஆணையம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்காகக் கணித்துள்ள புள்ளிவிவரங்கள் மிகையான மதிப்பீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். ஏனெனில், 2026–27 நிதியாண்டில் நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 11% வளர்ச்சி அடையும் என ஆணையம் கருதியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் நிதிநிலை திட்ட மதிப்பீடானது இது 10%-ஆக மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிதி ஆணையத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்களால் வருவாய் குறையக்கூடும் என்பதை ஆணையம் தனது கணக்கீட்டில் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


கிடைமட்ட பரிமாணம்


பதினாறாவது நிதி ஆணையம், மாநிலங்களின் செயல்திறனை (efficiency) அளவிடுவதற்காக 'பங்களிப்பு' என்ற ஒரு புதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக, ஒரு மாநிலம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை அங்கீகரிக்க இந்த முறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும், ஒரு மாநிலத்தின் பங்களிப்பை அந்த ஆணையம் எவ்வாறு கணக்கிடுகிறது என்றால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)), குறிப்பிட்ட அந்த ஒரு மாநிலத்தின் பங்கு எவ்வளவு சதவீதமாக உள்ளது என்பதை வைத்தே முடிவு செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு மாநிலத்தின் பொருளாதார உற்பத்தி அளவு பெரியதாக இருந்தால், அதன் 'பங்களிப்பும்' அதிகமாகக் கருதப்படுகிறது. 


இருப்பினும், உற்பத்தி அமைப்பின் செயல்திறனுக்கும், நிதி மேலாண்மை அமைப்பின் செயல்திறனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியமாகும். உற்பத்தி முறையைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு இடையேயான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) பகிர்வு என்பது நிதி மற்றும் மனிதவள இடப்பெயர்வு உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்துள்ளது. இது பெரும்பாலும் சந்தை சக்திகளால் (Market forces) தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக, லாபம் தரக்கூடிய மூலதனம் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மக்கள் பொதுவாகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களிலிருந்து அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காக இடம்பெயர்வதையும்  சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்த மாற்றமானது, மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பை இரண்டு நேர்மாறான வழிகளில் பயன்படுத்தியது. முதலாவதாக, 'வருமான இடைவெளி' முறையின்படி, தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதிப்பகிர்வு வழங்கப்பட்டது. அதேசமயம், 'பங்களிப்பு' (Contribution) என்ற அளவுகோலின்படி, அதிக தனிநபர் வருமானம் ஈட்டும் மாநிலங்களுக்கு அதிக பங்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சில மாநிலங்களின் பங்களிப்பை அளவிடும்போது மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதைத் தவிர்க்க, நிதி ஆணையம் உண்மையான மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அப்படியே பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அதன் 'வர்க்க மூலத்தை' (Square root) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது என்றும் இது மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வைச் சமநிலைப்படுத்த உதவியதாகவும் தெரிவிக்கின்றனர். 


நிதிப்பகிர்வு முறையில், மற்ற சில அளவுகோல்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் முழுக்க முழுக்க நிதி ஆணையத்தின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மைத் திறனை அளவிடும் 'வரி முயற்சி/நிதி ஒழுக்கம்' (Tax effort/Fiscal discipline) என்ற அளவுகோல் நீக்கப்பட்டுள்ளது. இது நிதி ஆணையம் ஏற்கனவே முன்வைத்த கருத்துகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஏனெனில், ஒரு மாநிலத்தின் திறமையான நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்ற ஆணையத்தின் சொந்த வாதத்திற்கே இது எதிராக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. 


இழப்புகளும் ஆதாயங்களும்


இதன் விளைவாக, 15-வது நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்வு முறையுடன் ஒப்பிடும்போது, 16-வது நிதி ஆணையத்தின் புதிய முறைகளால் அதிக நிதி இழப்பைச் சந்தித்துள்ள முக்கிய மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகும். மற்றொருபுறம் அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மற்றும் கோவா போன்ற வடகிழக்கு மற்றும் மிகச்சிறிய மாநிலங்களும் நிதிப் பகிர்வு முறையில்  இழப்பைச் சந்தித்துள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மற்ற மாநிலங்கள் பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் ஒரே சீராக அமையவில்லை என்றும் அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 


பொதுவாக, சில மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ‘வருவாய் இடைவெளி மானியங்கள்’ மூலம் சரியாகக் கணக்கிட்டு ஈடுகட்டியிருக்க முடியும் என்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே காணப்படும் செலவினங்கள் மற்றும் தேவைகளில் உள்ள நுணுக்கமான வேறுபாடுகளை 'வரிப் பகிர்வு' மூலமாக மட்டுமே முழுமையாகச் சரிசெய்துவிட முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். மேலும், நிதி ஆணையம் வரிப்பகிர்வு முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்போது, அதன் விளைவாகச் சில மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை இந்த வருவாய் இடைவெளி மானியங்கள் மூலம் சமன் செய்ய வழிவகை உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


உண்மையில், மாநிலங்களின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நிதி பரிமாற்றம் செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் 275-வது பிரிவு ஒரு முக்கியமான வழியாகும். இதனை மாநிலங்களின் 'வருவாய் பற்றாக்குறை'யுடன்  குழப்பிக்கொள்ளக் கூடாது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தரத்தை உறுதி செய்வதற்காக, இந்தச் சிறப்புத் தேவைகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப நிதி வழங்கப்படலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இந்த அணுகுமுறையானது, மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையை ஏற்படுத்தும் இலக்கைச் சிதைக்காமல், அதே சமயம் அதிக வருவாய் ஈட்டும்  மாநிலங்களின் செயல்திறன் குறித்த கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள உதவியிருக்கும் என்கின்றனர். பொதுவாக, ஒரு மாநிலத்தின் தேவை மற்றும் ஆதாரங்களைச் சீர்திருத்தமுறைப்படி மதிப்பீடு செய்ய வேண்டியிருப்பதால், 'வருவாய் பற்றாக்குறை மானியங்களை' (Revenue gap grants) துல்லியமாகக் கணக்கிடுவது கடினமானதுதான் என்கின்றனர். இருப்பினும், கடினம் என்பதற்காகவே 16-வது நிதி ஆணையம் அவற்றை முழுமையாகக் கைவிட்டிருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட மாநிலங்களுக்கான தற்காலிகமான (Ad hoc) மானியங்கள் பொருத்தமற்றவை என்றாலும், மாநிலங்களைச் சமமாக முன்னேற்றுவதற்கான 'சமநிலைப்படுத்தும் மானியங்கள்' (Equalisation grants) இப்போதும் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.


சி. ரங்கராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகவும், பன்னிரண்டாவது நிதி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். டி.கே. ஸ்ரீவஸ்தவா, இந்தியாவின் தலைமை கொள்கை ஆலோசகராகவும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் இயக்குநராகவும் மற்றும் பன்னிரண்டாவது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.


Original article : Sixteenth Finance Commission — misses and concerns -C. Rangarajan, D.K. Srivastava

Share:

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் விரைவான நீதியை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றன? -ஃபர்கான் கமர், சமீர் அகமது கான்

 புதிய விதிகளில் உள்ள தெளிவற்ற தன்மையைப் பயன்படுத்தி, விளிம்புநிலை பிரிவினர் உயர்சாதியினருக்கு எதிராக இந்த ஒழுங்குமுறையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், இந்த ஒழுங்குமுறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


உயர்கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) கொண்டு வந்த 2026-ஆம் ஆண்டு விதிமுறைகளுக்கு எதிராகப் பொதுப் பிரிவைச் சேர்ந்த சில மாணவர்களும், ஒரு சாதுக்கள் அமைப்பும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், இந்த விதிமுறைகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் கூறி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.


விதிமுறைகள் தெளிவாக இல்லாத காரணத்தினால், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி மேல்சாதியயினருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர். இது சமூகத்தில் நிலவும் ஆழமான அவநம்பிக்கையையும் பாதுகாப்பற்ற உணர்வையுமே காட்டுகிறது. அதாவது, ஒரு பிரிவினருக்கு நீதி கிடைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றொரு பிரிவினருக்கு அநீதியாக முடிந்துவிடுமோ என்ற கவலையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


விரைவான நீதியால் ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை


இந்த ஒழுங்குமுறை ஒரு நிதர்சனமான உண்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, பாலினம் மற்றும் மதம் சார்ந்த பாகுபாடுகள் அரிதானதாகவோ அல்லது எப்போதோ ஒருமுறை நடப்பதாகவோ இல்லை, மாறாக இத்தகைய சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. மேலும், புகார்களைத் தீர்க்கும் முறைகள் மிகவும் மந்தமாகவும், ஒருதலைப்பட்சமாகவும், சில நேரங்களில் வெறும் பெயரளவுக்காகவும் மட்டுமே செயல்படுவதால், விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படும்  சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தப் புதிய ஒழுங்குமுறையை கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட இத்தகைய தலையீடு அவசியம் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், நீதி வழங்குவதில் வேகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தவறான பாதையாக அமையக்கூடும் என்பதே அவர்களின் கவலையாக உள்ளது. குறிப்பாக அடுக்குமுறை படிநிலைகள், மறைமுக அதிகார அமைப்புகள் மற்றும் சமமற்ற செயல்திறன் கொண்ட நிறுவனங்களில், வேகம் மற்றும் நீதிக்கு இடையிலான தொடர்பு மிகவும் சிக்கலானதாகப் பார்க்கப்படுகிறது. நீதி கிடைப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அது தன் அர்த்தத்தை இழந்துவிடும்; அதே சமயம், அது மிக விரைவாக வழங்கப்பட்டால், சரியான தீர்ப்பு வழங்கும் தன்மையை முழுமையாக இழக்க நேரிடும் என்கின்றனர். 


2026-ஆம் ஆண்டு விதிமுறைகள் உடனடி நடவடிக்கை, கடுமையான பொறுப்புணர்வு மற்றும் மௌனம் அல்லது செயலற்றத் தன்மைக்கான பின்விளைவுகளை வலியுறுத்துகின்றன. புகார்கள் உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், குழுக்கள் விரைவாகக் கூட வேண்டும் மற்றும் விசாரணைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும்; வேகமும் நீதியும் இயற்கையாகவே ஒன்றையொன்று ஆதரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை அமைந்துள்ளது. இருப்பினும், அவசரம் என்பது தெளிவான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் திணிக்கப்படும்போது, விரைவான முடிவுகள் ஆழமான சிந்தனையை முடக்கிவிடும் என்பதை உலகெங்கிலும் உள்ள நீதி அமைப்புகள் காட்டுகின்றன. தெளிவான பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி அவசரத்தன்மை திணிக்கப்படும்போது, ஆழமான சிந்தனைக்குப் பதிலாகத் அவசர முடிவுகள் எடுக்கப்படும் சூழல் உருவாகிறது. முறையான நடைமுறைகள் இல்லாத நிலையில், கடுமையான காலக்கெடுவும் மத்திய கண்காணிப்பும் பயத்தை ஏற்படுத்துகின்றன. புகார்கள் மிக விரைவாகவும் அநீதியாகவும் கையாளப்பட்டால், தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம் குறித்து நிறுவனங்கள் கவலை கொள்கின்றன. புதிய விதிமுறையானது, முறையான ஆய்வு மற்றும் நடைமுறை நடவடிக்கைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை கல்வி நிறுவனத்தின் தாமதமாகவே கருதுகிறது. விரைவான நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, அங்கீகாரத்தை ரத்து செய்தல் மற்றும் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பறித்தல் போன்ற கடுமையான விளைவுகளைக் காட்டி இது கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துகிறது. இருப்பினும், இந்த மாற்றம் நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது அதன் நோக்கத்தை மட்டும் பொறுத்தது அல்ல, மாறாக அந்த அமலாக்க அமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அமையும் என்கின்றனர். 


தெளிவற்ற நடைமுறை


2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சந்தித்த அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. வளாகங்களில் நடக்கும் முறையற்ற செயல்கள்மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால், பல கல்வி நிறுவனங்கள் வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தன. ஆனால், தெளிவற்ற ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க போதிய உரிமைகள் வழங்கப்படாமை மற்றும் விசாரணை முடிவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது போன்ற காரணங்களைக் சுட்டிக்காட்டி நீதிமன்றங்கள் பின்னாளில் அந்த நடவடிக்கைகளை நிராகரித்தன. இந்த எதிர்ப்பு பாதுகாப்பான சூழல் தேவையில்லை என்பதற்காக அல்ல, மாறாக அந்த விசாரணை முறை மிகவும் பலவீனமாக இருந்ததாலேயே உருவானது.


விரைவாகவும் ஆனால் தெளிவின்றியும் வழங்கப்படும் நீதி நம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்கின்றனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகள் அதிகாரத்தைப் பிரித்து வைத்துள்ள விதம் இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. அந்த விதிமுறைகள் குற்றங்களையோ அல்லது அவற்றுக்கான தண்டனைகளையோ தெளிவாக வரையறுக்கவில்லை. விசாரணைகள் ‘உள்நிலை சமத்துவக் குழுக்களால்’ (Internal Equity Committees) மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தண்டனைகளோ ஏற்கனவே உள்ள நிறுவன அல்லது ஒழுங்குமுறை விதிகளின்கீழ் வழங்கப்படுகின்றன. அங்கீகாரம் அல்லது நிதி உதவியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், பல்கலைக்கழகங்கள் ஒரு வழக்கின் தன்மையை நிதானமாக ஆராய்வதற்குப் பதிலாக, விரைவான நடவடிக்கையை வெளிப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தக்கூடும் என்கின்றனர். இந்தச் சூழல் ஒருவித அச்ச உணர்வை உருவாக்குகிறது. ஒழுங்குமுறை அமைப்புகளைப் பொறுத்தவரை, அச்சம் என்பது ஒருபோதும் நீதியை நிலைநாட்ட உதவாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


சலுகைகளை வழங்குதல்


இந்த நிலையில், சட்டப்பூர்வமான வடிவமைப்புகள் சமூக எதார்த்தத்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகிறது. ஒரு பாதிப்பைப் பதிவு செய்வதும், அதை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொழியில் வெளிப்படுத்துவதும், விசாரணைக் குழுக்களைக் கையாள்வதும் அனைவருக்கும் சமமானதாக இருப்பதில்லை. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையினர் தங்களின் அன்றாடப் பிரச்சனைகளை நிர்வாகம் அங்கீகரிக்கக்கூடிய புகார்களாக மாற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதே சமயம், நிறுவனக் கலாச்சாரத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்—சில சமயம் இடஒதுக்கீடு பெற்ற பிரிவினருக்குள்ளேயே இருக்கும் ஆதிக்கக் குழுக்கள்—இந்த நடைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு அமைதியான முரண்பாட்டை உருவாக்குகிறது: விளிம்புநிலை மக்களின் குரல்களைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, இறுதியில் நிறுவன நடைமுறைகளில் அதிகப் பரிச்சயமும் வசதியும் கொண்டவர்களுக்கே சாதகமாக முடிகிறது. இந்த அழுத்தங்கள் வகுப்பறைகளிலும் எதிரொலிக்கின்றன. முறையான வழிமுறைகள் இன்றி கல்விசார் முடிவுகள் ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்படும்போது, ஆசிரியர்கள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க நினைக்கிறார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களைக் மென்மையாக்குகிறார்கள், கடினமான உரையாடல்களைத் தவிர்க்கிறார்கள், மற்றும் மதிப்பீடுகளைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறார்கள். காலப்போக்கில், நிறுவனங்கள் இந்தச் சிக்கல்களைக் கையாள மாற்று வழிகளைக் கண்டறிகின்றன. குழுக்கள் அதிகரிக்கின்றன, காகிதப் பணிகள் (paperwork) வளர்கின்றன, மேலும் விதிகளுக்குக் கீழ்ப்படிதல் என்பது வெறும் பெயரளவுச் செயலாக மாறுகிறது. அறிஞர்கள் இதை "இணக்க நாடகம்" (compliance theatre) என்று அழைக்கிறார்கள். அதாவது நிறுவனங்கள் அவற்றின் அடிப்படை அதிகார படிநிலைகளை மாற்றாமல், தங்களைச் சீர்திருத்திக் கொண்டது போலப் போலித் தோற்றத்தை ஏற்படுத்துவதையே இது குறிக்கிறது.



பல்கலைக்கழகங்களில் நீதி என்பது ஏதோ ஒரு நிகழ்விற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றுவது மட்டும் கிடையாது என்றும் அது நீண்ட மற்றும் சவால்கள் நிறைந்த ஒரு உரையாடலாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அதில் வேகம் தேவைப்படும் அதே வேளையில், துல்லியம், பொறுமை மற்றும் தவறை மறுபரிசீலனை செய்யும் மனப்பக்குவமும் அவசியமாகிறது.  இந்தச் சமநிலை இல்லையென்றால், நாம் எதிர்பார்க்கும் சமூகநீதி என்பது மெல்ல மெல்ல மறைந்து காணமால் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original article : How UGC rules prioritise quick justice? -Furqan Qamar, Sameer Ahmad Khan

Share:

நிலையான வேளாண்மைக்கான நிதி இடைவெளிகளைக் குறைத்தல். -ஏ.அமரேந்தர் ரெட்டி, துளசி லிங்கரெட்டி

 உலகளவில், தகவமைப்பு நிதி குறைந்து வருகிறது. இந்தியா தனது உள்நாட்டு ஆதாரங்களை, குறிப்பாக தனியார் துறையிலிருந்து வலுப்படுத்த வேண்டும்.


நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், முக்கிய சிறு வேளாண் பணிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வேளாண் உணவு உற்பத்தி முறையில் மீள்தன்மைக்கான நிதியுதவிக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டும். தொடர்ச்சியான தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நவம்பர் 2025-ல் ஜெர்மன்வாட்ச் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு காலநிலை ஆபத்து குறியீட்டின்படி, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.               

                 

  சர்வதேச பொது நிதி ஓட்டங்களிலிருந்து தகவமைப்புக்குத் தேவையான நிதிக்கும் உண்மையான நிதிக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) வெளியிட்ட சமீபத்திய Adaptation Gap Report 2025 படி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பருவநிலை மாற்ற ஒழுங்கீட்டு நிதி (Adaptation Finance) தேவைகள் 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு $310–365 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஆண்டுக்கு $26 பில்லியன் என உள்ள நடப்பு நிதியோட்டத்துக்கு 12–14 மடங்கு அதிகமானது. இந்த சூழலில், இந்தியா உள்ளூர் பருவநிலை நிதி சூழலை (Domestic Climate Finance Ecosystem) பலப்படுத்தி, எதிர்கால உணவு பாதுகாப்பையும், உழவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.


உலகளவில், தகவமைப்பு நிதி திரட்டுதல் கணிசமாகக் குறைந்துள்ளது. இது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், பிரேசிலின் பெலெமில் நடந்த COP30 மாநாட்டின் போது, ​​குறிப்பாக வேளாண்மையில் தகவமைப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) ஆகியவற்றால் நவம்பர் 2025-ல் வெளியிடப்பட்ட 'தேசிய தகவமைப்பு திட்டங்களில் வேளாண் உணவு அமைப்புகள் - ஒரு பகுப்பாய்வு' அறிக்கையின்படி, வேளாண் உணவு முறை மொத்த தகவமைப்பு நிதியில் 20 சதவீதத்தை மட்டுமே பெறுகிறது.


புதிய தளம்


இதைக் கருத்தில் கொண்டு, COP30-ல் இந்தியாவும் 13 வளரும் நாடுகளும் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund (GCF)) ஆதரவுடன் தேசிய தகவமைப்புத் திட்டத்திற்கான (NAP) செயல்பாட்டு வாகனமாக மாறக்கூடிய ஒரு புதிய நாட்டு தளத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டன. உள்நாட்டு பொது நிதி, தனியார் முதலீடு மற்றும் சர்வதேச பருவநிலை நிதிகளை இணைக்கும் ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியாவில், வேளாண் துறையில் தகவமைப்பிற்கான உள்நாட்டு காலநிலை நிதி ஓட்டங்களின் நிலை குறித்து விரிவான மதிப்பீடு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், காலநிலை கொள்கை முன்முயற்சி (Climate Policy Initiative (CPI)) மூலம் கண்காணிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2021-22-ஆம் ஆண்டில் தகவமைப்பிற்கான மொத்த நிதியில் 24 சதவீதம் மட்டுமே ₹265 பில்லியன் ($3.6 பில்லியன்) ஆகும்.  இது ₹1,092 பில்லியன் ஆகும். வேளாண் காடுகள் வளர்ப்பு, பயிர் காப்பீடு, திறமையான நீர்ப்பாசனம், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு, மீள் பயிர் அமைப்பு மற்றும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பண்ணையில் விவசாய தகவமைப்பு நடவடிக்கைகளை இந்த மதிப்பீடு கண்காணித்தது. இருப்பினும், இந்தியாவில் வேளாண்மைக்கான தகவமைப்பு நிதியளிப்பு 2015ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு  வரை ஆண்டுதோறும் தேவையான $67 பில்லியனை விட  குறைவாகவே இருந்தது. இந்த பெரிய நிதி இடைவெளிக்கான முக்கிய காரணங்கள் தனியார் துறையின் மிகக் குறைந்த பங்கேற்பு மற்றும் சர்வதேச பொது ஆதாரங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட நிதி உதவி ஆகும்.


பொதுத்துறை நிதி ஆதாரங்கள், முக்கியமாக ஒன்றிய மற்றும் மாநில அரசு வரவு செலவுத் திட்டங்களிலிருந்து, 98-99 சதவீதமாக இருந்தன. அதே நேரத்தில் தனியார் நிதி,  ₹2.7 பில்லியனாக, வேளாண்மையில் தகவமைப்பிற்கான மொத்த உள்நாட்டு நிதியில் 1 சதவீதம் மட்டுமே உள்ளது.


தனியார் துறையின் மோசமான பங்களிப்புக்கு வேளாண்மையில் உள்ளார்ந்த முதலீட்டு அபாயங்கள் முக்கிய காரணமாகும். தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரித்த அதிர்வெண், வருமானத்திற்கான நீண்ட கர்ப்ப காலங்கள், தெளிவான வணிக நிகழ்வுகளை வரையறுப்பதில் சிரமங்கள் உள்ளன. மேலும், இத்தகைய முதலீடுகளிலிருந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துபவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு உழவர்களாக உள்ளனர். சிறிய மற்றும் சிதறிய நிலப்பரப்புகள் காரணமாக, பொருளாதார அளவுகளை (Economies of Scale) அடைவது கடினமாகிறது. இதனால் தனியார் துறையில் பெரிய அளவிலான முதலீடுகள் செய்யும் ஆர்வம் குறைகிறது.


இத்தகைய சூழ்நிலையில், பொது நிதி, தனியார் நிதிகளை விட  முன்னுரிமை பெற வேண்டும். இருப்பினும், தனியார் துறை, கலப்பு நிதி, பொது-தனியார் கூட்டாண்மை, குறைந்தபட்ச உறுதியான வருமானத்துடன் கூடிய திட்டங்கள் போன்ற பொருத்தமான நிதி உத்திகள் மற்றும் கருவிகளுடன் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.


மேலும், நன்கு செயல்படும், திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான உள்ளூர் பருவநிலை நிதி சூழலை (Domestic Climate Finance Ecosystem) உருவாக்குவது முக்கியம். இதனால் நிதி தடையின்றி கிடைக்கும் மற்றும் பருவநிலை ஆபத்துகளை மதிப்பிடுவதற்கான முழுமையான அறிவு மற்றும் தரவுகள் உருவாகும்.


ரெட்டி, ராய்ப்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (indian agricultural research institute (ICAR)) தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனத்தின் கொள்கை ஆதரவு ஆராய்ச்சியின் இணை இயக்குநராக உள்ளார். மேலும், லிங்கரெட்டி மும்பையில் நிலையான நிதி மற்றும் வேளாண்மைக்கான மூத்த பொருளாதார நிபுணராக உள்ளார்.


Original article : Bridging funding gaps for sustainable farming. -A Amarender Reddy, Tulsi Lingareddy

Share:

2022–23 அடிப்படை ஆண்டாகக் கொண்டு புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) தேசிய வருமானக் கணக்குகளின் புதிய தொடரை வெளியிட்டுள்ளது. இது 2011-12-ஆம் ஆண்டிலிருந்து 2022-23-ஆம் ஆண்டுக்கு அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது. மேலும், தேசிய கணக்குகளை தற்போதுள்ள பொருளாதார நிலைகளுடன் சீரமைக்கும் நோக்கில் வழிமுறை சீர்திருத்தங்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடைசியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது ஆண்டிற்கு ஆண்டான பொருளாதார வளர்ச்சி அல்லது ஒரு நாட்டின் பொருளாதார அளவை மதிப்பீடு செய்யும் முக்கியமான அளவுகோல் ஆகும். “அடிப்படை ஆண்டு (base year)” என்பது கணக்கீடுகளுக்கான துவக்க ஆண்டாகக் குறிப்பிடப்படும் ஆண்டு ஆகும். இப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2022-23 ஆகும். 2022-23-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அடுத்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கான "அடிப்படையாக" பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டது 8-வது திருத்தமாகும்.


2. மொத்த மதிப்பு கூட்டளிற்கான இரட்டை பணவாட்ட முறை (Double-deflation method): 2022-23-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் முக்கியமான மாற்றங்களையும் கண்டுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது, பெயர் மதிப்பிலான  விலை மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்து நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியாக மாற்றும் முறை ஆகும். வேளாண்மை மற்றும் சுரங்கத் துறை (mining and quarrying) தவிர மற்ற அனைத்து துறைகளின் மொத்த மதிப்பு சேர்க்கை (Gross Value Added (GVA)) கணக்கிடுவதற்கு புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பயன்படுத்திய “ஒற்றை விலைச் சீரமைப்பு முறை” (single-deflator), சில சமயங்களில் பொருள் விலைகள் குறைந்திருந்தாலும் அல்லது நுகர்வோர் விலைகளைப் போல வேகமாக உயராத நிலையிலும், வளர்ச்சி அளவு அதிகமாக காட்ட வேண்டிய சுழலிற்கு வழிவகுக்கும்.



ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் ஒற்றை விலைச் சீரமைப்பு முறையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இரட்டை விலைச் சீரமைப்பு முறையை பயன்படுத்துகிறது. உள்ளீடு மற்றும் வெளியீடுகளை அந்தந்த பணவீக்க விகிதங்களால் சரிசெய்கிறது. விலைச் சீரமைப்பு முறைகளும் மிகவும் நுணுக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை துல்லியமாக தெரிந்து கொள்ள அனுமதிக்கிறது.


3. தரவு மற்றும் கணக்கெடுப்புகளின் புதிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன: இது சரக்கு மற்றும் சேவை வரி, இ-வாகன், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு போன்றவற்றிலிருந்து தரவை இணைத்துள்ளது. மேலும், தேசிய கணக்கியல் தரவுகளை விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் (Supply and Use Tables) உடன் இணைப்பதன் மூலம், உற்பத்தி முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி  மற்றும் செலவின முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி  ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படும் வேறுபாட்டை குறைக்க புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) முயற்சி செய்கிறது.


4. இந்தியாவிற்கான தேசிய வருமானம் (GDP) பற்றிய முதல் மதிப்பீடுகள் 1949ஆம் ஆண்டு PC மஹலனோபிஸ் தலைமையில் “தேசிய வருமானக் குழுவால்” (National Income Committee) தொகுக்கப்பட்டன. இந்தக் குழுவின் தேசிய வருமானம் பற்றிய முதல் மற்றும் இறுதி அறிக்கைகள் முறையே 1951ஆம் ஆண்டு மற்றும் 1954-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.


5. பின்னர், அதிகமான மற்றும் தரமான புதிய தகவல்கள் கிடைத்ததால், மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)) மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையை முழுமையாக மறுபரிசீலனை செய்தது. தேசிய கணக்குத் தொடரின் அடிப்படை ஆண்டுகளை மாற்றுவதைத் தவிர, செயல்பாடுகளின் பாதுகாப்பு, சமீபத்திய தரவுத்தொகுப்புகளை இணைத்தல் மற்றும் சமீபத்திய சர்வதேச வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய கணக்குத் தொடரின் தொகுப்பில் மாற்றங்களை செய்ய மத்திய புள்ளிவிவர அலுவலகம்  முயற்சித்தது.


6. அடிப்படை ஆண்டை திருத்துவதற்காக, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை வகுப்பிற்கான நோக்கங்களுக்காக தேசிய கணக்கு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்குவதற்கான வழிமுறைகளில் புதிய தரவு மூலங்களைச் சேர்ப்பது மற்றும் மேம்பாடு குறித்து அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் பணியைக் கொண்ட தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவை (Advisory Committee on National Account Statistics (ACNAS)), பேராசிரியர் பி.என். கோல்டர் தலைமையில், மத்திய நிதி அமைச்சகம் இந்த ஆலோசனைக் குழுவை அமைத்தது.


7. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உட்பட தேசிய கணக்குகளின் பல்வேறு மதிப்பீடுகளைத் தொகுப்பதில் உள்ள வழிமுறை மாற்றங்களை மையமாகக் கொண்ட வழிமுறை மேம்பாடுகள் குறித்த துணைக் குழுவின் அறிக்கையை வெளியிட்டது.


base year

8. தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, வரவிருக்கும் தொடருக்கான அடிப்படை ஆண்டாக நிதியாண்டு 2022–23-ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019–2021-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு, “சாதாரண” நிலைக்கு திரும்பிய சமீபத்திய ஆண்டாக 2022–23 இருப்பதால், அதையே புதிய அடிப்படை ஆண்டாக தேர்வு செய்துள்ளனர். 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகள் COVID-19 தொற்றுநோயால் பாதிப்புகளை சந்தித்தன. இது தற்காலிகமாக நுகர்வு முறைகள் மற்றும் தொழில்துறை உற்பத்தியை மாற்றியது.

9. 2011-12-ஆம் ஆண்டு தொடரில் பயன்படுத்தப்பட்ட விகிதாசார முறைக்கு பதிலாக சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட டென்டன்-விகிதாசார தரப்படுத்தல் முறையைப் பின்பற்றவும் இது பரிந்துரைத்தது. காலாண்டு தேசிய கணக்குகள் (Quarterly National Accounts (QNA)) தொடரில் செயற்கையான தொடர்ச்சிகளை நீக்குவதற்கும் குறிகாட்டிகளின் இயக்கத்தைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது காலாண்டு தேசிய கணக்குகளின் மதிப்பீடுகளை வருடாந்திர தேசிய கணக்குகள் (annual national accounts (ANA)) மதிப்பீடுகளுடன் சீரமைக்கிறது.

10. புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் காதின் கூற்றுப்படி, “தேசிய கணக்குகளில் தரப்படுத்தல் முறை, உயர் அதிர்வெண் தகவல்களை வருடாந்திர அளவுகோலால் வரையறுக்கப்பட்ட குறைந்த அதிர்வெண் தகவல்களின் தொகுப்புடன் (வருடாந்திர மாறிகளின் அடிப்படையில்) தொகுப்போடு இணைப்பதன் மூலம் காலாண்டு தொடர்களைப் பெறப் பயன்படுத்தப்படுகிறது. தரப்படுத்தல் முறை, காலாண்டு தேசிய கணக்குகள் (QNA) தரத்தை மேம்படுத்துகிறது. அவை வருடாந்திர தேசிய கணக்குகள் அளவுகோல்களுடன் ஒத்துப்போகும் மற்றும் காலாண்டு பொருளாதார குறிகாட்டிகளின் குறுகிய கால பரிமாணத்திற்கு ஏற்ப இருக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம், பொருளாதார நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அறிவிப்பது ஆகும். இது உண்மையான பொருளாதார வளர்ச்சியை (real economic growth) வெளி காட்ட உதவுகிறது. இது பணவீக்கத்தின் விளைவை நீக்கிய பின் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியாகும். சரியான தகவல் அளிப்பது மிக முக்கியம். ஏனெனில், அது அரசின் கொள்கை உருவாக்குனர்களுக்கு  (policymakers) உதவுகிறது. இது பெரிய நிறுவனங்களிடமிருந்து புதிய தொழில்முனைவோர் (entrepreneurs) உட்பட அனைவருக்கும் பயன்படும்.

2. இந்தியா முதலில்  வேளாண்  பொருளாதாரமாகத் தொடங்கியது.  பெரும்பாலான மக்கள் வேளாண்மை அல்லது தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பெரும்பாலான மொத்த உள்நாட்டு உற்பத்தி அந்த நடவடிக்கைகளிலிருந்தே வந்தது. ஒவ்வொரு ஆண்டையும்  கடந்து செல்லும்போது, ​​இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறிக்கொண்டே வருகிறது.

3. இன்றைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பெரும்பகுதி 55% சேவைத் துறையிலிருந்து (services sector) வருகிறது. ஆனால், வேளாண்மை மற்றும் பிற துறைகள் 20%-க்கும் குறைவாக பங்களிக்கின்றன.  வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை தற்போதைய காலகட்டத்திலும் குறையவில்லை. வேளாண்மை துறையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை  கணக்கிடுவதற்கும், சேவைத் துறையிலிருந்து கணக்கிடுவதற்கும் வேறு தரவுத்தொகுப்புகள் மற்றும் வேறு முறைகள் தேவைப்படுகிறன.

4. மேலும், தரவுகளில் முன்னேற்றம் ஏற்படும்போதும், பொருளாதார இணைப்புகள் பற்றிய நமது புரிதல் சிறப்பாகும்போதும் இந்த முறைகளும் மாறுகின்றன. உதாரணமாக, 1999 வரை, இந்தியா ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரைத் திருத்தியது. ஒவ்வொரு முறையும், அடிப்படை ஆண்டு 1 என்ற இலக்கத்துடன் முடிவடையும் ஆண்டாக மாற்றப்பட்டது.

5. இந்திய பொருளாதாரத்தில் அங்கீகரிக்கப்படாத (informal/unorganised) துறை மற்றும் அமைப்புசாரா துறைக்கான பணியாளர் மதிப்பீடுகள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டன. எனவே, ஒவ்வொரு திருத்தத்திற்கும் அத்தகைய ஆண்டுகளை அடிப்படை ஆண்டுகளாக மாற்றுவது இயல்பான நடவடிக்கையாகும்.

6. இருப்பினும், 1993-94 தொடரிலிருந்து, மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)), ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organisation (NSSO)) வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து பணியாளர் மதிப்பீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.

7. இதனால், 1999ஆம் ஆண்டு முதல், அடிப்படை ஆண்டு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் (2015-ஆம் ஆண்டு வரை) மாற்றப்பட்டது. இது, தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் (National Statistical Commission) பரிந்துரையின் படி, அனைத்து பொருளாதார குறியீடுகளும் குறைந்தது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை “மீண்டும் அடிப்படை மாற்றப்பட வேண்டும்” என்ற ஆலோசனைக்கு ஏற்ப செய்யப்பட்டது .

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான மூன்று அணுகுமுறைகள்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் ஒரு ஆண்டில் உருவாகும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். தற்போதைய விலைகளில் கணக்கிடப்படும் GDP பெயர்மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) என அழைக்கப்படுகிறது. ஆனால், விலை உயர்வால் மதிப்பு அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால், இது சரியான அளவீடாக இருக்காது.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக அளவிட பொருளாதார வல்லுநர்கள் மூன்று அணுகுமுறைகளை நம்பியுள்ளனர்: அவை செலவு, வருமானம் மற்றும் தயாரிப்பு ஆகும். அனைத்து அணுகுமுறைகளிலிருந்தும் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடும் பொருளாதாரத்தின் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.

3. செலவு அணுகுமுறை: இது நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. அவை தனிப்பட்ட நுகர்வுச் செலவு (personal consumption expenditure (C)), முதலீட்டுச் செலவு (investment expenditure (I), அரசாங்கச் செலவு (government expenditure (G)) மற்றும் உலகின் பிற துறையின் (rest of the world sector (ROW)) மற்ற பகுதிகளின் நிகர ஏற்றுமதிகள் (X-M) ஆகும்.

4. வருமான அணுகுமுறை: இது அனைத்து மூலங்களிலிருந்தும் ஈட்டப்படும் வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. மேலும், ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள், உரிமையாளர்களின் வருமானம் (சுயதொழில் மற்றும் இணைக்கப்படாத வணிகங்களிலிருந்து கிடைக்கும் வருவாய்), வாடகை வருமானம், நிறுவன இலாபங்கள் மற்றும் ஈட்டப்படும் நிகர வட்டி (ஈட்டப்படும் வட்டியைக் கழித்தல் செலுத்தப்படும் வட்டி) ஆகியவை அடங்கும். கூடுதலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கருத்தில் நிகர மறைமுக வரிகள், புள்ளிவிவர முரண்பாடு, தேய்மானம் மற்றும் உலகின் பிற துறைக்கு செய்யப்படும் நிகர கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.

5. தயாரிப்பு அணுகுமுறை: வெளியீட்டு முறை (output method) அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முறை (value-added method) என்றும் அழைக்கப்படுகிறது. இது உற்பத்தியின் இடைநிலை நிலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தவிர்த்து, உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பையும் சேர்க்கிறது.


Original article : New series of GDP estimates with base year 2022-23 released. -Khushboo Kumari

Share:

நலிவடைந்த நிலையில் உள்ள குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்ளுக்காக (PVTGs) அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் யாவை? -குஷ்பூ குமாரி

 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (Pradhan Mantri Awaas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதிகளில் வீடுகள் கட்டுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது; வன உரிமைச் சட்டம் (Forest Rights Act (FRA)), 2006-ன் படி தனிநபர் வன உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று Indian Express நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act (FRA)) பிரிவு 3-ன் கீழ், வன உரிமைகளை அங்கீகரிப்பது என்பது வன நிலத்தை உடைமையாக வைத்திருப்பது மற்றும் அங்கு வசிக்கும் உரிமையை உள்ளடக்கியது என்றும்,  கிராம சபையினால் உரிய நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புகள் பின்பற்றப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறது.


— ஒன்றிய அரசின் கருத்துக்கள் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட்டன. வனப்பகுதிக்குள் வீடுகள் கட்டுவதற்கு அனுமதிப்பதற்கான நோக்கம் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இது வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act), 1980-ன் விதிகளைக் கருத்தில் கொண்டும். அதே, சமயம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


— 2006ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act), பழங்குடியினர் மற்றும் இதர வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் வரலாற்றுப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கிறது. அதேவேளையில், வனப் (பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) (Van (Samvardhan Evam Sanrakshan) Adhiniyam) பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act) என்பது வன நிலங்களைப் பயன்படுத்துவதையும், வனப் பகுதி அல்லாத பணிகளுக்காக வன நிலங்களை பயன்படுத்துவதையும் முறைப்படுத்துகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஆவணங்களில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PM Awas-Gramin Yojana) திட்டத்தின் கீழ் வீடுகள் போன்ற பயன்களைப் பெறுவது என்பது, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளின் ஒரு விரிவாக்கமே ஆகும் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Tribal Affairs Ministry) தெரிவித்திருந்தது.


— மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி  மாவட்டத்தில் உள்ள பினேகா கிராமத்தில் வசிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி பிரிவைச் சேர்ந்த (Particularly Vulnerable Tribal Group (PVTG)) சிறிய சகரியா (Sahariya) சமூகத்தினருக்கு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (Pradhan Mantri Awas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதியில் வீடுகள் கட்டுவது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு குடிமை மேல்முறையீடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.


— தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் வனப் பாதுகாப்புச் சட்டத்தை (FCA) மீறுவதாகத் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 63 குடும்பங்களைக் கொண்ட அந்தச் சமூகம் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.


— இந்த வழக்கின் தீர்ப்பானது, நலிந்த நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அனைத்துப் பயனாளிகளையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். 


உங்களுக்குத் தெரியுமா:


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) என்பது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (Scheduled Tribes) ஒரு துணைப் பிரிவாகும். இவர்கள் சாதாரண பழங்குடியினரை விட அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் பாதிக்கப்படக்கூடிய  பழங்குடியின  குழுக்களின் பட்டியல் உருவாக்கப்பட்டது.


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) எனப்படும் நலிவடைந்த பழங்குடியின மக்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடம், குறைந்த மக்கள் தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார, கலாச்சார பண்புகளால் பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பழங்குடியின மக்கள் அடிப்படை சேவைகளைப் பெறுவதில் சிரமம், சமூகப் பாகுபாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அல்லது இயற்கை பேரிடர்களால் தங்களது இடங்களை விட்டு வெளியேற்றப்படும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே அரசியல் பிரதிநிதித்துவம் இருப்பதால், முக்கிய முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இவர்களால் பங்கேற்க முடிவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது நாட்டின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கும் குறைந்த வருமானக் குழுக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக 2015-ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை வீட்டுக் கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும்.


— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஒன்று நகர்ப்புறங்களுக்கான திட்டம் (Pradhan Mantri Awas Yojana-Urban) மற்றும் மற்றொன்று கிராமப்புறங்களுக்கான (Pradhan Mantri Awas Yojana-Gramin/Rural) திட்டமாகும். இதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா   திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதேவேளையில் PMAY-G/R யோஜனா  கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின்  தேவைகளைப் பூர்த்தி  செய்கிறது.


Original article :What are the efforts made by the government for PVTGs? ( COMPLETED) -Khushboo Kumari

Share:

இந்தியத் தொண்டு நிறுவனங்கள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்க உதவும். -ரோகிணி நிலேகனி

 கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, வேளாண்மை அல்லது மற்ற எந்தத் துறையாக இருந்தாலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சவால்களை நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சூழலில், எதிர்காலத்தை மறுசீரமைக்கத் தேவையான அதிக நிதி அபாயம் கொண்ட முதலீடுகளையும் (high-risk capital) மற்றும் நீண்ட காலப் பொறுமையுடன் கூடிய மூலதனத்தையும் (long-term patient capital) வழங்குவதில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கின்றனர். 


பேரிடர் நிவாரணத்திற்காக நீங்கள் கடைசியாக எப்போது ஒரு நிறுவனத்திற்கு காசோலை அனுப்பினீர்கள்? இந்தக் கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், பலர் தாங்கள் அனுப்பியதாகச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அதன் பிறகு, நாட்டில் அதிகரித்து வரும் "பேரிடர் சோர்வை" (disaster fatigue) நாம் காண்கிறோம். இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும் கவலைக்குரிய விஷயமாகப் பாரக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பேரிடர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இந்திய நாட்டின் தொண்டு நிறுவனம் ஒன்று டால்பெர்க் (Dalberg) நிறுவனத்துடன் இணைந்து 'பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் - காலநிலை பேரிடர்களில் இருந்து உயிர் பிழைப்பதோடு மட்டுமின்றி, சமூகங்கள் செழிக்க ஆதரவளித்தல்' (Resilience — Moving beyond surviving climate disasters to supporting communities to thrive) என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யும் மனநிலையை இந்த அறிக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போதைய காலநிலை மாற்றம் நம் அனைவரையும், குறிப்பாகப் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ள எளிய மக்களைப் பெருமளவில் பாதித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

2023-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 85 சதவீத மாவட்டங்கள் வெள்ளம், வறட்சி அல்லது சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இமயமலைத் தொடர் முதல் கடற்கரைப் பகுதிகள் வரை அனைத்துப் பகுதிகளும் இன்று அபாயகட்டத்திலேயே உள்ளன. அந்த ஆண்டில் 86 சதவீத நாட்களில் கடுமையான வெப்பம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. நாம் முன்வைத்துள்ள தரவுகளும் கணிப்புகளும் உண்மையானால், வருங்காலத்தில் இதைவிட மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மிகவும் மோசமானது; நாடு தழுவிய அளவில் ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ஏழைக் குடும்பங்கள் ஒரே ஒரு பேரிடரின் மூலம் தங்கள் ஆண்டு வருமானத்தில் 85 சதவீதம் வரை இழக்க நேரிடுகிறது. எனவே, சமூக அளவில் வலுவான தற்காப்பு மற்றும் மீண்டெழும் திறனை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சூறாவளி மற்றும் வெள்ளத்தின் போது உயிர்களைக் காப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது உண்மைதான் என்றாலும் அது மட்டுமே இப்போது போதுமானதல்ல என்றும், மக்கள் வெறுமனே உயிர் பிழைக்க மட்டும் விரும்பவில்லை என்றும், அவர்கள்  பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 


உறுதியான மீள்திறனை உருவாக்க, நாம் வளர்ச்சியைப் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும். உதாரணமாக, அணைகளை மாற்றி வடிவமைப்பது மற்றும் உள்ளூர் அளவில் நம்பிக்கை மற்றும் திறனை வலுப்படுத்துவதன் மூலம் சமூகம்  பேரிடர்களுக்கு முன்னும் பின்னும் திறம்பட செயல்பட முடியும் என்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் நிதி ரீதியாக அதிகாரம் பெற வேண்டும். மேலும், சந்தைகளும் இதில் ஒரு ஆக்கபூர்வமான பங்கினை வகிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய முதலீடுகள் புத்திசாலித்தனமானவை என்பதற்கு உலகளாவிய சான்றுகள் உள்ளன: பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு 1 டாலரும், பேரிடருக்குப் பிந்தைய மீட்புச் செலவுகளில் 15 டாலர் வரை மிச்சப்படுத்த உதவும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். 



கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்துவதற்குத் தயாராக உள்ள பல புதுமையான யோசனைகள் உள்ளன. சுயதொழில் புரியும் பெண்களின் சங்கம் (Self-Employed Women’s Association (SEWA) வெப்பக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 40°C-க்கு மேல் இருக்கும்போது தானாகவே இழப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்போது மூன்று மாநிலங்களில் 50,000 பெண் உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கிறது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு (Council on Energy, Environment and Water (CEEW)) ஒரு தேசிய காலநிலை மற்றும் வெப்ப அபாய வரைபடத்தை உருவாக்கியுள்ளதுடன், நடைமுறைச் செயல் திட்டங்களை உருவாக்க அரசாங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. ASAR மற்றும் Equinoct ஆகிய அமைப்புகள் கேரளாவின் எர்ணாகுளத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் கடல் அலை வெள்ளத்தைப் பதிவு செய்ய அந்தந்த சமூகங்களுக்கு ஆதரவளித்துள்ளன. நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகம் (Sustainable Environment and Ecological Development Society (SEEDS) செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘e-disaster wallet’ ஒன்றை உருவாக்கியுள்ளது. இது ஒரு பேரிடருக்கு முன்பே ஏற்படக்கூடிய சொத்து இழப்புகளைச் சரிபார்க்க மக்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் பேரிடருக்குப் பிறகு அரசாங்க மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் விரைவாக அவர்களைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் பிற துறைகளில் காலநிலை தொடர்பான சவால்களுக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது; எதிர்காலத்தை மறுசீரமைக்க அதிக நிதி அபாயம் கொண்ட நிதி முதலீடுகள் (high-risk funding) மற்றும் நீண்ட கால பொறுமை தேவைப்படும் மூலதனத்தை (long-term patient capital) வழங்குவதன் மூலம் பல தொண்டு நிறுவனங்கள் இதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


இதுவரை, பேரிடர்கள் மேலிருந்து-கீழ் நோக்கிய, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை (top-down approach) மூலமே கையாளப்பட்டு வருகின்றன. அரசாங்கங்கள் பொதுவாக சமூகங்களுக்காகப் பணியாற்றுகின்றன. ஆனால், அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். மக்கள் தங்களின் சொந்த மீள்திறனை (resilience) உருவாக்குவதில் வெறும் பயனாளிகளாக இல்லாமல், செயலில் ஈடுபடும் முக்கியப் பங்குதாரர்களாக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புற அளவில் உடல்நலம், நிதி, மனித வளம், சமூகம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் ஒரு நாடு தழுவிய முயற்சியைத் தொடங்க இதுவே சரியான தருணம் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொற்று காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் காட்டிய அந்தப் பரிவுணர்வையும் பிணைப்பையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Panchayati Raj Institutions (PRI)) மூலமாக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புகளையும் எதிர்கொள்ள இந்தியா முழுத் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


ரோகிணி நிலேகனி, Rohini Nilekani Philanthropies (RNP) அமைப்பின் தலைவராகவும், 'Samaaj, Sarkaar, Bazaar: A citizen-first approach’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


Original article : Indian philanthropy can step in to mitigate climate disasters’ effects -Rohini Nilekani

Share:

சி.வி. ராமனின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.

 1986-ஆம் ஆண்டு முதல், சி.வி.ராமன் அவர்கள் 'ராமன் விளைவை' (Raman Effect) கண்டறிந்ததைப் போற்றும் வகையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இந்தியா தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை அவருக்குப் பெற்றுத் தந்த இந்த முக்கிய கண்டுபிடிப்பு, ஒளியைப் பற்றிய நமது புரிதலையே மாற்றியமைத்தது. பள்ளிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சிகளுடன் நாடு இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், நம்மிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிய  அவரை நினைவு கூர்வோம்.


அசாத்தியத் திறமை கொண்ட மாணவர்


1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்த சந்திரசேகர வெங்கட ராமன், சிறுவயதிலேயே விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினார். அவரது தந்தை ஆர். சந்திரசேகர் ஐயர், இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால், ராமனுக்கு இயல்பாகவே இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அவருக்கு வெறும் 18 வயது இருக்கும்போது, "செவ்வகத் துளையினால் ஏற்படும் சமச்சீரற்ற விளிம்பு விளைவு பட்டைகள்" (Unsymmetrical diffraction-bands due to a rectangular aperture) என்ற தனது முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை ஆங்கில இதழான ‘Philosophical Magazine’ இதழில் வெளியிட்டார்.


அந்தக் காலத்தில், அறிவியல் ஆராய்ச்சியை ஒரு முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. இராமன் லோகசுந்தரியை மணந்திருந்ததால், அவருக்கு நிலையான வருமானம் தரும் ஒரு வேலை தேவைப்பட்டது. 1907-ஆம் ஆண்டுப் படிப்பை முடித்த பிறகு, அவர் தனது மனைவியுடன் கல்கத்தாவிற்குச் சென்று, இந்திய நிதிச் சேவை (Indian Finance Service (IFS)) பிரிவில் துணை கணக்குத் தலைவராகப் (Assistant Accountant General) பணியில் சேர்ந்தார். தனது ஓய்வு நேரங்களில்,  இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கம் (Indian Association for the Cultivation of Science (IACS)) நிறுவனத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1917-ஆம் ஆண்டில், இயற்பியல் மீதான தனது ஆர்வத்தைப் பின்பற்றுவதற்காகத் தனது அரசு  வேலையை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முழுநேர இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்த அவர், அங்குள்ள புகழ்பெற்ற ‘Palit Chair’ பதவியை 15 ஆண்டுகள் வகித்தார். அந்தப் பதவியின் ஒரு நிபந்தனை என்னவென்றால், சர்வதேச அறிஞர்களுக்கு இணையாகக் கருதப்படுவதற்கு அவர் வெளிநாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்பதாகும். இருப்பினும், இராமன் தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தமக்கு வெளிநாட்டுப் பயிற்சி தேவையில்லை என்றும், மாறாக மற்ற நாட்டு அறிஞர்களுக்கே தம்மால் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.


ராமன் விளைவின் கண்டுபிடிப்பு


1921-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற ஆங்கிலயேப் பேரரசு பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சி.வி.ராமன் லண்டனிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அந்த கடல் பயணத்தின் போது, மத்திய தரைக்கடல் ஏன் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது என்று அவர் வியந்து சிந்தித்தார். கடலின் நீல நிறம் என்பது வானத்தின் பிரதிபலிப்பு மட்டுமே என்ற பொதுவான விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. உண்மையை கண்டறியும் உறுதியுடன், அவரும் அவரது மாணவர் கே.எஸ். கிருஷ்ணனும் பல ஆய்வக சோதனைகளை மேற்கொண்டனர். அவர்கள் பல்வேறு திரவங்களின் வழியாக ஒளியைச் செலுத்தி, சிதறிய ஒளியைக் கவனித்தனர். அதில் பெரும்பாலான ஒளி அதே நிறத்தில் இருந்தது, ஆனால் ஒரு சிறிய பகுதி மட்டும் சற்று மாறியிருந்தது. ஒளியானது மூலக்கூறுகளுடன் ஆற்றலைப் பரிமாறிக் கொண்டது என்பதை இது நிரூபித்தது. இந்த கண்டுபிடிப்பு தற்போது 'ராமன் விளைவு' (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.


சி.வி. ராமன் அவர்கள்,  மாணவர்களை ஆர்வத்துடனும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஊக்குவித்த ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவரது ஆய்வகத்தில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள், அவர்களின் அடிப்படை அறிவு மற்றும் தனித்துவமான சிந்தனையைச் சோதிக்கும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்க அவர் உதவினார். அவர் தனது மாணவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார். மேலும், அவர்களின் சோதனைகளுக்கான புதிய யோசனைகளையும் மேம்பாடுகளையும் நேரில் வழங்கினார். அவர் தன் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். மேலும், மாணவர்களும் எந்த நேரத்திலும் அவரது வழிகாட்டுதலைப் பெறலாம் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.


1930-ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையை சி.வி.ராமன் பெற்றார். இந்தச் சாதனை அவருக்குப் உலகளாவிய புகழைத் தேடித்தந்ததோடு, இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது. ஒளிச்சிதறல் குறித்த தனது ஆராய்ச்சியின் போதே, அதாவது 1925-ஆம் ஆண்டிலயே, இப்பணிக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர் கணித்திருந்தார். ஸ்பெக்ட்ரோஸ்கோப் (spectroscope) கருவியை வாங்குவதற்கு நிதி திரட்டியபோது, இந்தக் கருவி கிடைத்தால் இந்தியாவிற்கு நோபல் பரிசைப் பெற்றுத் தருவேன் என்று தனது ஆதரவாளரிடம் அவர் உறுதியளித்தார். போதிய வசதிகள் இல்லாத காலக்கட்டத்திலும், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு மிகப்பெரிய அறிவியல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு ராமனின் இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக் குறிப்பிடப்படுகிறது. 


சி.வி. இராமன் 1933-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை இந்திய அறிவியல் நிறுவனத்தின் (Indian Institute of Science (IISc)) இயக்குநராகப் பணியாற்றினார். அங்கு அவரே இயற்பியல் துறையை நிறுவி, தொடக்கத்தில் அதன் ஒரே ஒரு பேராசிரியராகவும் இருந்தார். அக்காலகட்டத்தில், விக்ரம் சாராபாயின் விண்வெளி கதிர் (cosmic rays) குறித்த ஆராய்ச்சிக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 1948-ஆம் ஆண்டு பெங்களூரில் இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தைத் (Raman Research Institute) தொடங்கிய அவர், 1970-ஆம் ஆண்டில் அவரின் இறுதி காலம் வரையிலும், ஒளியியல், படிக இயக்கவியல், வைரத்தின் அமைப்பு, மலர்களின் நிறங்கள் மற்றும் மனித பார்வைத் திறன் ஆகிய துறைகளில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 


காலப்போக்கில், ராமன் விளைவின் கோட்பாடுகள் பல்வேறு அறிவியல் துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று இந்த விளைவு புற்றுநோய் கண்டறிதல், மருந்து மேம்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற முக்கிய பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக அவரது மரபு இன்றும் நிலைத்திருப்பதோடு, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளையும் சோதனைகளையும் மேற்கொள்ள பல தலைமுறை அறிவியல் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.


Original article : Shining a light on the life of C.V. Raman


Share: