வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (BIMSTEC) என்பது என்ன, அதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் அது ஏன் கவனம் பெற்றுள்ளது?

BIMSTEC என்பது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பு, மாறிவரும் புவிசார் அரசியல்  மற்றும் பாதுகாப்புச் சவால்கள் நிறைந்த சூழலில், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளுக்கு இடையேயான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அடுத்த ஆண்டு வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு தனது 30-வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ள நிலையில், இந்த அமைப்பு பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், கடல் பாதுகாப்பு போன்ற புதிய பாதுகாப்புச் சவால்களை குறைத்து உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.


வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், 7 உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள், கடல்சார்ந்த சட்ட அமலாக்கம் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். இது பிராந்தியப் பாதுகாப்பின்மீது அந்த அமைப்பு செலுத்திவரும் வளர்ந்து வரும் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC))  என்றால் என்ன?


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு என்பது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். இது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட  முயற்சி செய்து வருகிறது.


1997-ஆம் ஆண்டில் வங்கதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பு (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Cooperation (BIST-EC)) என முதலில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மியான்மர் இணைந்த பிறகு BIMST-EC ஆகவும், 2004-ஆம் ஆண்டில் நேபாளம் மற்றும் பூட்டானுடன் இணைந்து வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக (BIMSTEC) ஆகவும்  மாறியது.


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யூரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ஆதரவைத் திரட்டுவதற்கான இந்தியாவின் புதிய முயற்சி மற்றும் அதே ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, BIMSTEC அமைப்பு செயல்பாடு குறைந்த அமைப்பாகவே இருந்தது. கோவாவில் நடைபெற்ற BRICS உச்சிமாநாட்டோடு இணைந்து, பிம்ஸ்டெக் தலைவர்களுடன் இந்தியா ஒரு கலந்துரையாடல் உச்சிமாநாட்டை நடத்தியது.


BRICS  அமைப்பு என்றால் என்ன?


BRICS என்பது B – பிரேசில்; R – ரஷ்யா; I – இந்தியா; C – சீனா; S – தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இது முதலில்  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC) என்று இருந்தது. 2010-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா இணைந்த பிறகு அது (BRICS) என்று மாறியது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) ஏன் உருவாக்கப்பட்டது?


தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) செயலிழந்துவிட்டதால், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் BIMSTEC ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், இந்தியா–பாகிஸ்தான் இடையேயான சிக்கலான உறவில் முன்னேற்றம் இல்லாததால், தெற்காசியாவின் பிற நாடுகளுக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூடான் போன்ற நாடுகளும், வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) நாடுகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் வங்காள விரிகுடா கடல் வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 7 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, உலகின் மக்கள் தொகையில் 22% ஆன ஏறத்தாழ 1.7 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி $5 டிரில்லியன்களாகும்.


சீனாவின் அச்சுறுத்தல் மற்றொரு முக்கிய காரணியாகும். கடந்த 10- ஆண்டுகளில், பூட்டான் மற்றும் இந்தியாவைத் தவிர அனைத்து BIMSTEC நாடுகளிலும், 'பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative (BRI)) திட்டத்தின்மூலம் உள்கட்டமைப்பிற்கு நிதியளிப்பதிலும் அவற்றை உருவாக்குவதிலும் சீனா ஒரு மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.






இந்தியாவைப் பொறுத்தவரை, BIMSTEC அமைப்பானது, சீனாவிற்கு ஒரு மாற்றாக பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதோடு, தென்சீனக் கடலில் சீனாவின் நடத்தைக்கு மாறாக, வங்காள விரிகுடாவைத் திறந்த மற்றும் அமைதியான ஒன்றாக எடுத்துக்காட்டுகிறது.


ஆனால், இதிலும் சில சவால்கள் உள்ளன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியரான சி. ராஜா மோகன், வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையேயான தொடர்ச்சியான பிரச்சினைகளையும், ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து இந்தியா–வங்கதேசத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். மியான்மரில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவை இணைக்கும் நிலப் பாலமாக செயல்படும் அந்நாட்டின் திறனும் குறைந்துள்ளது. BIMSTEC அமைப்பு உடனடியாக  முன்னேற்றங்களை காணாமல் இருக்கலாம் என்றாலும், “ஒருபோதும் உண்மையில் முன்னேறாத SAARC அமைப்பைப் போல அல்லாமல், BIMSTEC மெதுவாக இருந்தாலும் அதிகமான ஒத்துழைப்பை நோக்கி நகரும் ஒரு படகு போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


கூட்டத்தின் முடிவு என்னவாக இருந்தது?


பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், இணையவழி, கடல்சார்ந்த மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த 7 நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், கடல்சார் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களையும், கடலில் உள்ள கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அங்கீகரித்தன.


வங்காள விரிகுடாவில் உறுப்பு நாடுகளின் கடல்சார் முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளின்போது, ​​கூட்டுப் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் வேகப்படுத்துவதையும், முன்கணிப்புத் தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதையும் இந்தக் கடல்சார் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், தற்போதைய புவிசார் அரசியல் சூழல், பல்வேறு மோதல்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் உருவாகிவரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை, நாடுகளுக்கிடையே நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை  பற்றி வலியுறுத்தி வருவதாக  கூறினார்.


Original Link: What is BIMSTEC, and why is it in focus ahead of its 30th anniversary?

Share: