நம் நாட்டில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் முன்னேற்றம் என்பது அதிக மேமோகிராம்கள் (mammograms) செய்வதால் வராது. சரியான பெண்ணுக்கு சரியான நேரத்தில் சரியான பரிசோதனை செய்வதன் மூலம் அது வரும்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, மார்பகப் புற்றுநோய் பரிசோதனையின் முதுகெலும்பாக மேமோகிராபி (mammography) இருந்து வருகிறது. இது 50 முதல் 69 வயதுக்குட்பட்ட பெண்களிடையே இறப்பு விகிதத்தை 25-30 சதவீதம் குறைத்ததாகக் கூறப்படுகிறது. மார்பகப் புற்றுநோயின் ஆபத்து வயதுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கிறது என்ற கருத்துகணிப்பின் அடிப்படையில் ஸ்கிரீனிங் நெறிமுறை (screening protocol) கட்டமைக்கப்பட்டது. இந்த நம்பிக்கையின் காரணமாக, யாருக்கு எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வயது ஒரு முக்கிய காரணியாகப் பயன்படுத்தப்பட்டது.
மார்பகப் புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் அல்ல என்பதை இப்போது நாம் அறிவோம். இதில் உயிரியல்ரீதியாகப் பல வேறுபட்ட துணை வகைகளின் தொகுப்புகள் ஆகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு வளர்ச்சி மற்றும் ஆபத்தைக் கொண்டுள்ளன என்பதை இப்போது நாம் அறிவோம். இவற்றில் குடும்ப வரலாறு, மார்பக அழுத்தநிலை, இனப்பெருக்க காரணிகள், வாழ்க்கை முறை மற்றும் மரபியல் அனைத்தும் மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்தில் பங்களிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.
இதை உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, பாரம்பரிய வயது அடிப்படையிலான மாதிரியானது, மாறுபட்ட பாதைகள் மற்றும் விளைவுகளைக் கொண்ட ஒரு சிக்கலான நோயின் மிகைப்படுத்தப்பட்ட எளிமைப்படுத்தலாகும்.
ஆபத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பரிசோதனை முறை நோக்கிய மாற்றம்
ஆபத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பரிசோதனை செய்வது நிலையான வயது அடிப்படையிலான விதிகளிலிருந்து விலகி, பெண்ணின் தனிப்பட்ட ஆபத்துக்கு ஏற்ப பரிசோதனையை மாற்றியமைக்கிறது. குடும்ப வரலாறு, மார்பக அழுத்த நிலை, இனப்பெருக்க வரலாறு மற்றும் மரபியல் போன்ற காரணிகளும் சேர்க்கப்படுகின்றன. இந்தக் காரணிகள் யாருக்குக் கூடுதல் கண்காணிப்பு தேவை, ஆபத்து இல்லாமல் யார் குறைந்த இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்பதையும் கண்டறிய அவை உதவுகின்றன.
டிசம்பர் 12, 2025 அன்று, பெண்கள் ஆபத்து அளவுகளைப் பொறுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் (Women Informed to Screen Depending on Measures of Risk(WISDOM)) சோதனையின் முதல் முடிவுகள் Journal of the American Medical Association (JAMA) இதழில் வெளியிடப்பட்டன. இது அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு முக்கிய சீரற்ற ஆய்வு, ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையுடன் ஒப்பிட்டது. வருடாந்திர மேமோகிராமி என்பது பாரம்பரிய வயது அடிப்படையிலான முறையாகும். இந்த ஆய்வில் 40 முதல் 74 வயதுடைய பெண்கள் சேர்க்கப்பட்டனர். தனிப்பயனாக்கப்பட்ட முறை தனிப்பட்ட மார்பகப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகளைப் பயன்படுத்தியது. அவற்றில் மார்பக அழுத்த நிலை, குடும்ப வரலாறு மற்றும் மரபணு ஆபத்து ஆகியவை அடங்கும்.
இந்தக் ஆய்வுகள் ஊக்கமளிப்பதாக இருந்தன. ஆபத்து அடிப்படையிலான பரிசோதனை சாத்தியமானதாகவும், பெண்களுக்கு ஏஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மருத்துவரீதியாகவும், மேம்பட்ட புற்றுநோய்களைக் கண்டறிவதில் இது வழக்கமான பரிசோதனைக்கு நிகராக இருந்தது. சுருக்கமாக, தனிநபரின் ஆபத்துக்கு ஏற்ப பரிசோதனையை மாற்றியமைத்தல் பாதுகாப்பை குறைக்கவில்லை. மேலும், சுகாதார அமைப்புகள் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் உதவும்.
ஐரோப்பிய ஆய்வுகளிலிருந்து வரும் புதிய தரவுகள் மேலும் ஆதாரங்களைச் சேர்க்கும். அத்தகைய ஒரு ஆய்வுதான் ‘மை பெர்சனலைஸ்டு பிரெஸ்ட் ஸ்கிரீனிங் (My Personalised Breast Screening (MyPeBS))’. இந்த ஆய்வுகள், இந்த அணுகுமுறையை எவ்வாறு பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டும்.
இது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?
இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையிலான தேசிய அளவிலான மேமோகிராஃபி திட்டம் (mammography programme) ஒருபோதும் இருந்ததில்லை. இன்று இருப்பது சந்தர்ப்பவாத பரிசோதனை மற்றும் ஆங்காங்கே சில தனியார் முயற்சிகளும் உள்ளன. இந்தக் குறைபாடு பெரும்பாலும் ஒரு தோல்வியாக விவரிக்கப்படுகிறது. ஆனால் இந்த "தோல்வி" இந்தியாவின் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தால் என்ன செய்வது?
மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படுகிறது. இது இந்தியாவில், நோய்க் கண்டறிதலுக்கான சராசரி வயது வெறும் 47 ஆண்டுகள் ஆகும். இது மேற்கத்திய நாடுகளைவிட கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகாலம் குறைவு. இந்தக் குறைந்த வயது காரணமாக, மேமோகிராமின் உணர்திறன் குறைவாக உள்ளது. இது புற்றுநோயைக் கண்டறியத் தவறவிடும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey(NFHS)) மற்றும் இந்தியாவில் நீடித்த முதுமை ஆய்வு நிலை-1 (Longitudinal Ageing Study(LASI)) ஆகியவற்றின் தரவுகள், 0.9 சதவீத பெண்கள் மட்டுமே மருத்துவ மார்பகப் பரிசோதனையை மேற்கொண்டதாகக் காட்டுகின்றன. மேலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் 1.3 சதவீதம் பேர் மட்டுமே மேமோகிராம் பரிசோதனை செய்துள்ளனர்.
இந்தக் கட்டுப்பாடுகளை உணர்ந்து, உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய மார்பகப் புற்றுநோய் முயற்சி (Global Breast Cancer Initiative (GBCI)), குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், முழுமையான மக்கள்தொகைத் திட்டங்களை அல்லாமல், ஆரம்பகால நோயறிதலில் கவனம் செலுத்தி முன்னுரிமை அளிக்க வேண்டும். இலக்கு வைக்கப்பட்ட, ஆபத்து அடிப்படையிலான பரிசோதனையைப் பயன்படுத்துமாறும் அது அறிவுறுத்துகிறது. அதாவது, முழு மக்களுக்கும் பொதுவான பரிசோதனை செய்வதை அது ஆதரிக்கவில்லை.
மொத்தத்தில், இந்தியாவின் "தவறவிட்ட வாய்ப்பு" உண்மையில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கலாம்.
முன்னேற்றச் செயல்பாடு எப்படி இருக்கும்?
40 ஆண்டுகள் பழமையான ஒரு அமைப்பை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. அது புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க முடியும். இந்த அமைப்பு ஆபதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது இந்தியாவின் மக்கள்தொகை யதார்த்தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இது இந்தியாவின் தற்போதைய சுகாதார அமைப்பின் பலங்களையும் பயன்படுத்திக்கொள்ளும்.
பல கட்டுமானத் தொகுதிகள் (building blocks) ஏற்கனவே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), துணை செவிலியர் மருத்துவத் தாதியர் (ANMs), மற்றும் முதன்மை சுகாதார செவிலியர்கள் ஆகியோரைக் கொண்ட பரந்த சமூக சுகாதாரப் பணியாளர் குழு, தாய்சார் மற்றும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. இது மார்பக சுகாதார ஆபத்து மதிப்பீட்டை இயல்பான கூடுதலாகச் சேர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (Ayushman Bharat Digital Mission), பரிசோதனை (screening), பரிந்துரை (referrals), மற்றும் பின்தொடர்தல் (follow-up) ஆகியவற்றை கண்காணிப்பதற்கு ஆதரவளிக்க முடியும். ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) இறக்குமதி செய்யப்பட்ட அனுமானங்களுக்குப் பதிலாக, இந்திய மரபணு தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மார்பக புற்றுநோய் ஆபத்து மாதிரிகளை (breast-cancer risk models) உருவாக்குவதற்கு நீண்டகால வாய்ப்பை வழங்குகிறது. தேசிய புற்றுநோய் கட்டமைப்பு (National Cancer Grid) தர நிலைகள், பரிந்துரை பாதைகள், மற்றும் மருத்துவ மேற்பார்வைக்கான அடித்தளத்தை வழங்குகிறது. இதனால் ஆரம்பக் கண்டறிதல் (early detection) சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சையுடன் (timely diagnosis and treatment) இணைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
போலியோ ஒழிப்பு மற்றும் கோவிட் தடுப்பூசி மூலம், இந்தியா தனது பெரிய, பரவலாக்கப்பட்ட பொது சுகாதாரத் திட்டங்களை துல்லியமாகவும் திறமையாகவும் செயல்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.
பல ஆண்டுகளாக, அக்டோபர் மாதம் பெண்கள் "விழிப்புடன் இருங்கள்" be (aware) வலியுறுத்தும் பிரச்சாரங்களால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. விழிப்புணர்வு மிக முக்கியமானது. ஆனால் விழிப்புணர்வு மட்டுமே உயிர்களைக் காப்பாற்றாது. உள்ளமைக்கப்பட்ட நுண்ணறிவு கொண்ட அமைப்புகள் தேவை. இந்த அமைப்புகள் ஆபத்தில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, முன்கூட்டியே பதிலளித்து, எந்தப் பெண்ணும் பாதுகாக்கப்படாமல் விடப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய முடியும்.
ஆபத்தின் அடிப்படையிலான பரிசோதனை என்பது இனி ஒரு யோசனை மட்டுமல்ல. WISDOM ஆய்வின் ஆரம்ப முடிவுகள் அதற்கு மருத்துவ நம்பகத்தன்மையை அளித்துள்ளன. நம் நாட்டிற்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில் முன்னேற்றம் என்பது அதிக மேமோகிராம்களைச் செய்வதன் மூலம் வராது. சரியான நேரத்தில் சரியான பெண்ணுக்கு சரியான பரிசோதனையை வழங்குவதன் மூலமே அது வரும்.
எழுத்தாளர், ஆலோசகர் மற்றும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்.
Original Article : India has lagged on breast cancer screenings. Now, an opportunity to leapfrog -Nisha Hariharan