இது உலகில் உள்ள தெற்கு நாடுகளுக்கும், விரிவாக்கப்பட்ட (Brazil, Russia, India, China and South Africa (BRICS)) கூட்டமைப்புக்கும் மிக முக்கியமான தேவையாகும்.
அடுத்த BRICS உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டில் G-20 மாநாட்டை நடத்திய அனுபவத்தின் காரணமாக, உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புரீதியான செயல்முறைகள் தயாராக உள்ளன. இருப்பினும், இந்தியா இந்த உச்சி மாநாட்டின் முக்கியக் கவனத்தை விரைவாகத் தீர்மானிக்க வேண்டும். இது இந்தியா மற்றும் BRICS நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் உலகளாவிய தெற்கு நாடுகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் அதிக அளவில் அதிகரித்துள்ள நிலையில், மீள்திறன் (resilience) என்பது ஒரு மிக முக்கிய முன்னுரிமையாக உள்ளது. மேலும், இது அனைவரையும் உள்ளடக்கிய பசுமைத் திட்டத்தை முன்னெடுப்பதில் இந்தியாவின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது..
நிலைப்படுத்தும் சக்தியின் தேவை
டிரம்ப் கால அரசியல் வடிவங்கொண்ட ஒரு பிளவுபட்ட உலகில், உலகளாவிய ஒத்துழைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, பருவநிலை மாற்றம் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளது. அது ஒரு ஏமாற்று வேலை (a hoax) என்று அழைக்கப்படுவதோடு, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரு தெளிவான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இந்தியா தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப்போவதாக கூறியுள்ளது. நவம்பர் 2025-ல் பிரேசிலின் Belém நகரில் நடைபெற்ற 30-வது கால நிலை மாநாட்டில் அமெரிக்கா விலகி இருந்தது. இதுவே காலநிலை மாநாட்டு செயல்முறை தொடர்வதை உறுதி செய்திருக்கலாம். நீண்டகாலமாக தங்களை காலநிலை பாதுகாவலர்களாக நிலைநிறுத்திக்கொண்ட ஐரோப்பியர்கள், உள்நாட்டில் காலநிலையில் ஏற்பட்ட பின்னடைவும், வெளிநாட்டுக் கொள்கையில் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில், நிலைத்தன்மை மற்றும் மீள்திறன் குறித்த கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒரு நிலைப்படுத்தும் சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் உருவாகியுள்ளது. BRICS அமைப்பு இந்த திசையில் முயற்சி செய்யலாம்.
இருப்பினும், 'BRICS' என்ற சொல் அதிபர் டிரம்பை அதிருப்தியடையச் (hackles) செய்கிறது. அவர் அதை அமெரிக்காவிற்கு எதிரானதாகவும், அமெரிக்க டாலருக்கு ஒரு சவாலாகவும் பார்க்கிறார். அமெரிக்காவுடனான இந்தியாவின் பரந்த அளவிலான உறவுகள், அதாவது ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தின் தேவை, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான அதிக வரிகளைத் தவிர்ப்பது மற்றும் வாஷிங்டனில் நல்லெண்ணத்தைப் பேணுவது போன்ற காரணங்களால், BRICS உச்சிமாநாட்டில் இந்தியா கவனமான இராஜதந்திரத்தைக் கையாள வேண்டியிருக்கும். டெல்லியில் நடைபெற்ற G-20 உச்சிமாநாட்டில் அத்தகைய இராஜதந்திரம் தெளிவாகத் தெரிந்தது. உச்சிமாநாட்டில் இந்தியா உலக அரசியலையும் தனது சொந்த நலன்களையும் வெற்றிகரமாக சமநிலைப்படுத்தியது. தனது இராஜதந்திர சுதந்திரத்தைப் பாதுகாத்தது மற்றும் உலக தெற்கு நாடுகளின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது.
காலநிலை மாற்றம் ஒரு பொதுவான கவலையாக எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), முன்னதாக இருந்த BASIC குழுவான பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை பயனுள்ளதாக இருந்துள்ளன. மேலும், அவை தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். இருப்பினும், முக்கிய வளரும் நாடுகளின் ஒரு பெரிய குழு அதிக செல்வாக்கைக் கொண்டிருக்க முடியும். Belém நகரில் இது காணப்பட்டது. அங்கு புதைபடிவ எரிபொருட்கள் தொடர்பான விதிகள் ஏழை நாடுகளின் வளர்ச்சித் தேவைகளைத் தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. BRICS நாடுகள் முழுவதும் காலநிலைத் தாக்கங்கள் வேறுபட்டாலும், உறைபனி உருகுதல், அமேசான் மற்றும் இமயமலை மீதான அழுத்தம் மற்றும் கடலோர மற்றும் நதிப் பகுதிகளில் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால் உள்கட்டமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதம் போன்ற கடுமையான அபாயங்கள் அனைத்தையும் எதிர்கொள்கின்றன. எனவே, காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதும், மீள்திறனுடன் இருப்பதற்கும், சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு வலுவான உலகளாவிய திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றிணைந்து செயல்படுவது அனைவருக்கும் நன்மை அளிக்கும்.
பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபிறகு, உலகளாவிய காலநிலை செயல்முறையை வழிநடத்தும் பொறுப்பை பல BRICS உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த பங்கு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசில், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates (UAE)) போன்ற நாடுகள் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் காலநிலை மாநாடுகளுக்குத் தலைமை தாங்கி, காலநிலை நடவடிக்கை மீதான வேகத்தைப் பாதுகாக்க உதவியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை போன்ற, UNFCCC கொள்கைகளை ஒருதலைப்பட்சமாகப் புறக்கணிக்கும் விவகாரங்களிலும் BRICS அமைபின் நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும். வர்த்தகம் உட்பட ஒரு பரந்த காலநிலை விவாதத்திற்கான தொடக்கம் Belém-ல் தொடங்கப்பட்டது.
ஜூலை 2025-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற BRICS உச்சிமாநாட்டின் முக்கிய விளைவாக, BRICS தலைவர்களின் காலநிலை நிதி குறித்த கட்டமைப்பு பிரகடனம் இருந்தது. இதில் இந்தியா உலகளாவிய தெற்கின் தேவைகளை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்தியது.
காலநிலை நடவடிக்கைகளுக்கு நிதி முக்கியமானது என்பதால், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் BRICS உச்சிமாநாட்டில் சேர்க்கப்பட வேண்டும். BRICS அமைப்பு தன்னை புதிய மேம்பாட்டு வங்கிக்குள்ளேயே சுருக்கிக்கொள்ளக் கூடாது அல்லது இந்த அமைப்புகளை G-7 அல்லது G-20 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானவையாகக் கருதக்கூடாது. அவர்கள் இல்லாமல் உலகளாவிய காலநிலை நிதிக்கு அழுத்தம் கொடுப்பது சாத்தியமற்றது. ஏனெனில், அமெரிக்கா வலுவான காலநிலை நடவடிக்கைகளை எதிர்க்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, Social, and Governance (ESG)) விதிகள், பசுமைப் பத்திரங்கள் மற்றும் பிற காலநிலை தொடர்பான முதலீடுகளிலிருந்து பின்வாங்குவதிலும் இது காணப்படுகிறது.
தற்போது BRICS அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து உலகின் மக்கள்தொகையில் பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26% பங்கையும் கொண்டுள்ளன. அதற்கு அதிக செல்வாக்கும் அதிகாரமும் உள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்பு
இந்த ஆண்டு BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, மீள்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பசுமைத் திட்டம் போன்ற விவகரங்களில், இதில் இணையும் உலகின் பெரும்பாலான நாடுகளிடையே கூட்டு உலகளாவிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முக்கிய நிலையில் உள்ளது. இது இந்தியாவின் நலனுக்கும், உலக தெற்கு நாடுகளுக்கு ஒரு முக்கியமான கட்டாயத் தேவைக்கும் ஏற்றதாக இருக்கும்.
மேலும், புவிசார் அரசியல்ரீதியாக, இந்தியாவைப் பொறுத்தவரை, BRICS கூட்டமைப்பின் முன்னெடுப்பு, உலகளாவிய தலைமைத்துவத்திற்கான சீனாவின் லட்சியங்களை ஒரு பசுமைத் திட்டத்தின்கீழ் கட்டுக்குள் வைக்கிறது. 2026-ஆம் ஆண்டு BRICS உச்சிமாநாட்டில் இந்தியாவின் பசுமைத் திட்டத்தில் மீள்திறனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், 2027-ல் COP-32 மாநாட்டை நடத்தவிருக்கும் எத்தியோப்பியாவுக்கு பயனுள்ளதாக அமையும்.
தூதர் மன்ஜீவ் சிங் பூரி, டெரி (TERI) அமைப்பின் சிறப்புமிகு ஆய்வாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) இந்தியாவின் முன்னாள் முதன்மைப் பேச்சுவார்த்தையாளராகவும் உள்ளார். ஷைலி கேடியா, டெரி அமைப்பின் மூத்த ஆய்வாளராகவும், உலக நிலையான வளர்ச்சி உச்சிமாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
Original Article : BRICS India summit needs a green and resilient agenda -Manjeev Singh Puri, Shailly Kedia