நாம் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கற்க உதவுவதன் மூலம், இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறோம். -அமிதாப் காந்த்

 இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அரசாங்கம், சமூகங்கள் மற்றும் கூட்டமைப்புகள் மத்தியில் துணிச்சலான நடவடிக்கை, சீரான கவனம் மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு தேவைப்படும். இது இந்தியாவின் முழுமையான பொருளாதார மற்றும் சமூக ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான பாதையாகும்.


இந்தியாவின் வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் மக்கள்தொகை ஈவு ஆகியவை சக்திவாய்ந்த ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத முதலீட்டைச் சார்ந்ததுள்ளன. ஆனால், இதுதான் ஆரம்பத்திலேயே சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுவது. இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட 250 மில்லியன் குழந்தைகளுடன், ஒரு முக்கியமான மக்கள்தொகை காலகட்டத்தில் உள்ளது. இன்றைய இளைஞர்களில் 137 மில்லியன் பேர் 2047-ம் ஆண்டுக்குள் பணியாளர் தொகுப்பில் இணைவார்கள். அவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். ஆரம்பகால ஆண்டுகளில் கட்டமைக்கப்படும் அடித்தளமே இறுதியில் நாட்டின் நீண்டகால உற்பத்தித்திறன், புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்குகிறது. இது ஆரம்பக் கல்வியை 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற கருத்தாக்கத்திற்கு முக்கியப் பங்களிக்கிறது.


தரமான ஆரம்பகால கற்றல் அறிவாற்றலை 1.9 புள்ளிகள் அதிகரிக்கிறது என்பதை வேலூரில் இருந்து வெளிவந்த நீண்டகால ஆராய்ச்சி (2024) தெளிவான முடிவுகளைக் காட்டுகிறது. இருப்பினும், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (Early Childhood Education (ECE)) என்பது ஒரு முதல்படி மட்டுமே. குழந்தைகள் முறையான வகுப்பறைகளுக்குள் நுழையும்போதுதான் உண்மையான சவால் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (Foundational Literacy and Numeracy (FLN) மிகவும் முக்கியமானது. இவை படிக்க, புரிந்துகொள்ள மற்றும் எண்களைப் பயன்படுத்தும் திறன் போன்றவற்றை உள்ளடக்கியது. எதிர்காலத்தில் குழந்தைகள் கல்வியுடன் எவ்வளவு சிறப்பாக ஈடுபட முடியும் என்பதை இவை தீர்மானிக்கின்றன. தேசிய கல்விக் கொள்கை-2020 (National Education Policy (NEP) இந்த முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இது 3-ம் வகுப்புக்குள் தரமான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான உலகளாவிய அணுகலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது இந்தியாவின் மனித மூலதன உத்தியின் இரண்டு முக்கிய தூண்களாகும். இவை வலுவான அங்கன்வாடிகள், பால்வாடிகைகள் மற்றும் ஆரம்ப தொடக்க வகுப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன.


3–5 வயதுக் குழந்தைகள்: ஆர்வத்தையும் பராமரிப்பையும் வளர்த்தல் — அங்கன்வாடிகளை வலுப்படுத்துதல்


3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் முக்கியமாக அங்கன்வாடிகளில் பராமரிப்பு மற்றும் கல்வியைப் பெறுகிறார்கள். இது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி பெறும் ஆரம்பகால குழந்தைப் பருவ அமைப்பாகும். இது 14 லட்சம் மையங்களைக் கொண்டுள்ளது. இது தகுதியான 60 சதவீத குழந்தைகளுக்கு சேவை செய்கிறது. இருப்பினும், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஊட்டச்சத்து, நிர்வாகம், முன்பள்ளிக் கல்வி (pre-school education) போன்ற ஒரே நேரத்தில் பல பணிகளைச் கையாளுகிறார்கள். இந்த பல பொறுப்புகள் காரணமாக, உயர்தரக் கற்றலை வழங்குவதற்கான அவர்களின் திறன் பெரும்பாலும் சவாலுக்கு உள்ளாகிறது.


இந்தியாவில், கட்டமைக்கப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early Childhood Care and Education(ECCE)) திட்டங்கள் தெளிவான நன்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. ஐந்து மற்றும் ஒன்பது வயதிற்குள் நுண்ணறிவு அளவில் (Intelligence quotient(IQ)) 3 முதல் 19 புள்ளிகள் வரை அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலூர் ஆய்வு (2024) மற்றும் கே. முரளிதரன் மற்றும் பிறரின் ஆராய்ச்சி இதை ஆதரிக்கிறது. இந்தத் திட்டங்கள் அறிவாற்றல் திறனை மட்டுமல்லாமல், கவனம், உந்துதல் மற்றும் சமூக-உணர்ச்சி வளர்ச்சியையும் வலுப்படுத்துகின்றன.


தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டங்களையும் JPAL ஆய்வுகளின் சான்றுகள் இந்த அணுகுமுறையை ஆதரிக்கின்றன. ஒரு பிரத்யேகக் கல்வியாளரைச் சேர்ப்பது குழந்தைகளின் கற்றல் நேரத்தை இருமடங்காக அதிகரிக்கிறது. இது அறிவாற்றலை மேம்படுத்துகிறது, வளர்ச்சி குன்றிய நிலையை குறைக்கிறது மற்றும் பள்ளிக்குச் செல்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. கே. முரளிதரன் குறிப்பிட்டபடி, இது இரண்டு மணி நேர கண்காணிப்புக் காலத்திற்குள் கற்பித்தல் நேரத்தை 18 நிமிடங்களிலிருந்து 75 நிமிடங்களாக அதிகரிக்கிறது.


இந்தியாவில், தற்போதுள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 12 லட்சம் மையங்களுக்கு ஒரு கூடுதல் கல்வியாளர் தேவைப்படுகிறது. தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களில் அடுத்த சில ஆண்டுகளில் 12 லட்சம் பெண் கல்வியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.13,000 கோடி (ரூ.1.1 லட்சம்/நபர்/ஆண்டு) முதலீடு செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு அங்கன்வாடியையும் 1:20 சிறந்த கல்வியாளர்-குழந்தை விகிதத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான விளையாட்டுப் பள்ளியாக மாற்றவும், ஆண்டுதோறும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை (ECE) மேம்படுத்தவும் உதவும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test), குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி (Nursery Teacher Training) மற்றும் வீட்டு அறிவியல் படிப்புகளை (Home Science courses) முடித்தவர்களிடமிருந்து இந்தத் தகுதியுள்ளவர்களை வழங்குகிறது.


இந்த மேம்படுத்தப்பட்ட கல்வியாளர் மாதிரியைச் செயல்படுத்துவது மில்லியன் கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். இது ஆரம்பகால கற்றல் தரத்தை உயர்த்தும். மேலும், வளர்ந்த இந்தியாவின் ஒரு முக்கியத் தூணாக அங்கன்வாடிகளை நிலைநிறுத்தும்.


3–5 வயதுக் குழந்தைகள் : பள்ளி தயார்நிலையை உருவாக்குதல் — பால்வாடிகளை விரிவுபடுத்துதல்


குழந்தைகள் ஐந்து வயதை நெருங்கும்போது, ​​பலர் அங்கன்வாடிகளை விட்டு வெளியேறிவிடுகின்றனர். 5 வயது குழந்தைகளில் 37 சதவீதத்தினரும் 6 வயது குழந்தைகளில் 11 சதவீதத்தினரும் மட்டுமே தொடர்ந்து அங்கன்வாடிகளில் சேர்ந்துள்ளனர். வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை-2024 (Annual Status of Education Report (ASER)) அறிக்கையின்படி, இது நான்கு வயதுக் குழந்தைகளிடையே இருந்த ஏறத்தாழ 60% பதிவிலிருந்து ஒரு பெரும் வீழ்ச்சியாகும். இதன் விளைவாக, பல குழந்தைகள் பள்ளியில் வெற்றிபெறத் தேவையான அடிப்படைக் கல்வித் திறன்கள் இல்லாமல் முதல் வகுப்பில் சேர்கின்றனர். உள்ளூர் பள்ளிகள் அர்ப்பணிப்புள்ள இடம், பணியாளர்கள் மற்றும் வளங்களைக் கொண்ட இடங்களில், முன்-தொடக்கப் பிரிவுகளை நிறுவுவது இந்த இடைவெளியைக் குறைத்து, முறையான பள்ளிப்படிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்தும்.


தற்போது, ​​முன்பருவப் பள்ளிக் கல்விப் பிரிவுகளைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் 9 சதவீதம் மட்டுமே அர்ப்பணிப்புள்ள ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியர்களைக் கொண்டுள்ளன. மேலும், குழந்தை-ஆசிரியர் விகிதமும் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த ஆதாரங்கள், குறைந்த செலவிலான, பிரத்யேக முன்பருவக் கல்வி ஆசிரியரை நியமிப்பது கற்றலில் தெளிவான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த மேம்பாடுகள் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் (randomised controlled trials (RCT)) மூலம் மதிப்பிடப்பட்ட மாதிரிகள் வழியாக அளவிடப்பட்டன. இது பயிற்சி பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்களில் முதலீடு செய்வது குழந்தைகளின் பள்ளித் தயார்நிலையை மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. கல்வி அமைச்சகம் இதை அங்கீகரித்து, நிபுன் பாரத் திட்டத்தின் (NIPUN Bharat mission) கீழ் பால்வடிகளைச் (Balvatika) சேர்த்துள்ளது. 2025 முதல் பள்ளிக்கு ரூ.2 லட்சம், கூடுதலாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ரூ.1 லட்சம் மற்றும் கற்றல் உபகரணங்களுக்காக ஒரு குழந்தைக்கு ரூ.500 தொடர்ச்சியான மானியங்களுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.


பல மாநிலங்கள் இதில் விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளன. உத்தரபிரதேசம் 20,000 பால்வாடிகளின் கல்வியாளர்களை (Balvatika educators) பணியமர்த்தி வருகிறது. மேலும், சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) பட்ஜெட்டில் இருந்து ரூ.260 கோடியை முதலீடு செய்து ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) கல்வியாளர்களை பணியமர்த்துகிறது. ஒடிசா 45,000-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் முன்-தொடக்க வகுப்புகளை (pre-primary classes) அறிமுகப்படுத்தியுள்ளது. அதே எண்ணிக்கையிலான பிரத்யேக உதவியாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இது வகுப்பறைகளுக்குள் பயனுள்ள ஆதரவை உறுதி செய்கிறது. ஹரியானா முன்-தொடக்கக் கல்வியை 8,000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளாக விரிவுபடுத்தியுள்ளது.


இந்த மாநிலங்களின் செயல்படுத்தலின் அனுபவத்தை இந்தியா பயன்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் தயார்நிலைக் இடைவெளிகளை வெற்றிகரமாக நிரப்ப முடியும். ஒவ்வொரு "உயர்நிலைப் பள்ளியிலும்" (100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தொடக்கப் பள்ளி) கூடுதலாக ஒரு ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியரைப் பணியமர்த்துவது, ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,600 செலவில் அடைய முடியும். சமக்ர சிக்ஷாவின் கீழ் அதிகரித்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இந்த நிரூபிக்கப்பட்ட மாதிரிகளை அளவிடுவதில் கவனம் செலுத்துவது உயர்தர பால்வாடிகளை நிறுவுவதற்கு முக்கியமாகும்.


6 முதல் 10 வயது : அடிப்படைகளில் தேர்ச்சி பெறுதல் — அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை விரைவுபடுத்துதல்


ஆறு முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்கின்றனர். இந்தக் கட்டத்தில், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (FLN) வாழ்நாள் கற்றலுக்கு அடிப்படையாகிறது. வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை-2024 மற்றும் தேசிய சாதனை ஆய்வு-2024 (National Achievement Survey (NAS)) போன்ற தேசிய மதிப்பீடுகள் ஊக்கமளிக்கும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இந்த முன்னேற்றங்கள் நிபுன் பாரத் திட்டத்தின்கீழ் ஏற்பட்ட கவனம் சார்ந்த முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்த முன்னேற்றம், சிறந்த கற்றல் பொருட்கள், வலுவான ஆசிரியர் பயிற்சி மற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்புகளில் வழக்கமான வகுப்பறை கண்காணிப்பு ஆகியவற்றிலிருந்து வருகிறது.


அடுத்த கட்டமாக, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவின் (FLN) கவனத்தை 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்துவதாகும். இது குழந்தைகள் நம்பிக்கையுடன் படிக்கவும், பகுத்தறியவும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க நடுநிலைப் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்வது. உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மாவட்டத் திட்டக் கண்காணிப்பு அலகுகள் (PMU), வலுப்படுத்தப்பட்ட இடைநிலை மேலாண்மைக் கட்டமைப்பு, வித்யா சமிக்ஷா கேந்திரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தலைமையிலான திருத்தப் பயிற்சிகள் போன்ற நம்பிக்கைக்குரிய கொள்கை புதுமைகளை வழங்குகின்றன. இவை கண்காணிப்பை மேம்படுத்தி, தெளிவான, விளைவு சார்ந்த இலக்குகளை நிர்ணயிக்க உதவியுள்ளன.


இந்த முன்னேற்றங்களைத் தக்கவைத்துக் கொள்ள, விமர்சன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற உயர்நிலை திறன்களை உருவாக்கும் மேம்பட்ட வாசிப்பு மற்றும் கணிதப் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், அடிப்படைக் கற்றலைச் சுற்றி பெற்றோர்களையும் சமூகங்களையும் அணிதிரட்ட நாடுதழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கான ஆதரவு, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் உயர் தொடக்கக் கல்வி ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தை (FLN) விரைவுபடுத்துவது, கற்றல் விளைவுகளை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் நீண்டகால உற்பத்தித்திறன் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாக இருக்கும்.


இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையில் உள்ளது. வலுவான அங்கன்வாடிகள், அர்ப்பணிப்புள்ள ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி (ECE) ஆசிரியர்களைக் கொண்ட பால்வாடிகள் மற்றும் அடிப்படைக் கற்றல் ஆகியவற்றின் தடையற்ற தொடர்ச்சியானது ஒரு கல்வி உத்தியைவிட மேலானது. இது உற்பத்தித்திறன், புதுமை மற்றும் வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் மையமான உள்ளடக்கிய வளர்ச்சியின் செயல்பாடாகும். இந்த தொலைநோக்குப் பார்வையை உணர, அரசாங்கம், சமூகங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களிடையே துணிச்சலான நடவடிக்கை, நிலையான கவனம் மற்றும் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு தேவைப்படும். இது இந்தியாவின் முழு பொருளாதார மற்றும் சமூக ஆற்றலைத் திறப்பதற்கான பாதையாகும்.


எழுத்தாளர் இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original Article : When we help children learn early and well, we lay a solid foundation for India’s future -Amitabh Kant

Share: