முக்கிய அம்சங்கள்:
— டெல்லியின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு திட்டப் பணியை மேற்கொள்ள மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டதற்காக காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தை நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
— இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சி ஆகியோரைக் கொண்ட அமர்வு, காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) போன்ற நிபுணர் குழு முதலில் மாசுபாட்டின் காரணங்களை அடையாளம் காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த காரணிகள் எவ்வளவு பங்களிக்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டும், பின்னர் அவற்றை ஒவ்வொன்றாகச் சமாளிக்க நீண்ட கால தீர்வுகளைத் திட்டமிட வேண்டும் என்று கூறியது. மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணத்தை முன்னுரிமை அடிப்படையில் கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
— காற்றுத் தர மேலாண்மை ஆணையமானது இரண்டு வாரங்களுக்குள் நிபுணர்கள் குழுவைக் கூட்டி, அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை அடுத்த விசாரணை தேதிக்கு முன் முடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தை நீண்டகாலத் தீர்வுகளை, ஒவ்வொரு படிநிலைகளாக அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கத் தொடங்குமாறும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
— தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India (NHAI)) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி மாநகராட்சியால் (Municipal Corporation of Delhi (MCD)) பராமரிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக உள்ளதாகக் கூறியது. இதனால், உச்சநீதிமன்றம் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) கருத்துக்களைத் தெரிவுக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ பரிசீலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் டெல்லி மாநகராட்சியிடம் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது
— கடந்த செவ்வாய்கிழமையன்று, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி, ஒரு விரிவான தீர்வைக் கொண்டு வர இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கோரினார்.
உங்களுக்குத் தெரியுமா:
— காற்று மாசுபாடு என்றால், வீட்டுக்குள் அல்லது வெளியே உள்ள காற்று வேதியியல், இயற்பியல் அல்லது உயிரியல் காரணிகளால் மாசுபடுவதாகும். இந்தக் காரணிகள் காற்றின் இயற்கையான தன்மையை மாற்றிவிடுகின்றன. உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) அளவீடுகளின்படி, உலகில் ஏறக்குறைய அனைவரும் (99%) உலக சுகாதார அமைப்பு வகுத்த வழிகாட்டு அளவுகளைவிட அதிக மாசுபொருள்கள் கொண்ட காற்றையே சுவாசிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
— வண்ணக் குறியீடு கொண்ட காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. மேலும், இது பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் காற்றின் நிலை மற்றும் அதன் தீவிரத்தின் அடிப்படையில் நிலைமையை எதிர்த்துப் போராட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது.
— அளவிடப்படும் மாசுக்களில் PM 10, PM 2.5, (PM Particulate Matters (10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள்) நைட்ரஜன் டை ஆக்சைடு (Nitrogen Dioxide), ஓசோன் (Ozone), கார்பன் (Carbon) போன்றவைகள் அடங்கும். காற்று தரக் குறியீட்டில் (AQI) ஆறு பிரிவுகள் உள்ளன, அவை:
(i) 'நல்லது' (0-50),
(ii) 'திருப்திகரமானது' (51-100),
(iii) 'மிதமான மாசுபாடு' (101-200),
(iv) 'மோசம்' (201-300),
(v) 'மிகவும் மோசமானது' (301-400),
(vi) 'கடுமையானது' (401-500).
Original Article : What is the Commission for Air Quality Management (CAQM)? -Roshni Yadav , Khushboo Kumari