முன்மொழியப்பட்ட திட்டத்தின் வரலாறு என்ன? தமிழக அரசு எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது?
நவம்பர் 18-ஆம் தேதி, கர்நாடக அரசு, மாநிலங்களுக்கு இடையேயான காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு சமநிலை அணை (balancing reservoir) திட்டத்திற்கான “திருத்தப்பட்ட” விரிவான திட்ட அறிக்கை (Revised Detailed Project Report - DPR) யை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது என முடிவு செய்தது. ஐந்து நாட்களுக்கு முன்னதாக, கர்நாடகா முன்மொழிந்த இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் “முதிர்ச்சியற்றது” (premature) என்று கூறி நிராகரித்தது. இந்த இரு முக்கியமான முன்னேற்றங்களால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (CWMA) மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission (CWC)) ஆகியவை கர்நாடகாவின் இத்திட்ட முன்மொழிவை ஆராய்வதற்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு எவ்வாறு எதிர்வினையாற்றியது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசையே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அணை கட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியான செய்திகளை தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மறுத்து, இந்தத் திட்டத்தைத் தொடர கர்நாடகாவின் ஒவ்வொரு முயற்சியையும் தனது அரசு எதிர்க்கும் என்று வலியுறுத்தினார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நீதிமன்றத்தின் உத்தரவை தங்கள் "மாநிலத்திற்கான நீதி" என்று அழைத்தார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள மேகதாதுவில், கர்நாடகா ₹9,000 கோடி செலவில் ஒரு சமநிலை நீர்த்தேக்கத்தை (Balancing Reservoir) கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் 67.16 டி.எம்.சி (TMC) தண்ணீரை சேமிக்க முடியும். இதில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீர்மின் அலகும் (Hydro Power Unit) அடங்கும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். இதில் பெரும்பாலும் காடுகள் மற்றும் வனவிலங்கு பகுதிகள் அடங்கும். 2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கூடுதல் 4.75 டி.எம்.சி தண்ணீரை பெங்களூருவின் அதிகரித்து வரும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ள இந்த திட்டம் கர்நாடகாவிற்கு உதவுகிறது. இந்தத் திட்டம் முதலில் 1948-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது என்றாலும், பெங்களூரு சமீபத்தில் கடுமையான கோடைக்கால நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், இது சமீபத்தில் தான் உண்மையான வேகத்தைப் பெற்றது.
இந்த திட்டம் ஏன் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது?
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சையின் வரலாறு, தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே கடுமையான நம்பிக்கையின்மையைப் ஏற்படுத்தியுள்ளது. நீர் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜூன் முதல் மே வரை) தண்ணீரை விடுவிப்பதில் கர்நாடகாவின் சாதனை திருப்திகரமாக இல்லை என்று கருதப்படுவதால், மேல் நதிநீர் மாநிலம் மீதான கீழ் நதிநீர் மாநிலம் கொண்டிருக்கும் புகார் மேலும் தீவிரமடைகிறது. இதனால்தான், இந்தத் திட்டம் பலனளிக்கும்போது, கர்நாடகா அதிகப்படியான தண்ணீரை சேமித்து, அதன் விருப்பப்படி அதை வெளியிட வழிவகுக்கும் என்று தமிழ்நாடு அஞ்சுகிறது. இருப்பினும், கர்நாடகாவிற்குள்ளும், மாநிலத்தின் சொந்த வளங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவின்படி, "மோசமான மழை ஆண்டுகளில் கூட" தனது மாநிலத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உதவும் என்று சிவகுமார் வாதிடுகிறார்.
திட்டம் எவ்வளவு முக்கியமானது?
கர்நாடக முதல்வர் சித்தராமையா மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அளித்த தகவலின்படி, நகரத்திற்கு ஒரு நாளைக்கு 2,600 மில்லியன் லிட்டர் (million litres a day (MLD)) தேவைப்படுகிறது. அதே நேரத்தில் கிடைக்கும் அளவு 2,100 MLD ஆக இருந்தது, இதனால் 500 MLD பற்றாக்குறை உள்ளது. காவிரி நதி 1,450 MLD தேவையை பூர்த்தி செய்கிறது, அதில் 650 MLD நிலத்தடி நீரில் இருந்து பெறப்படுகிறது. தற்போது 13 மில்லியனாக இருக்கும் பெங்களூருவின் மக்கள் தொகை ஆறு ஆண்டுகளில் 20 மில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; பின்னர் நகரத்திற்கு 4,000 MLD தேவைப்படும். இந்தப் பின்னணியில்தான் சிவகுமார் மேகதாது திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதை நியாயப்படுத்தினார். ஆனால், உச்ச நீதிமன்றம் பெங்களூருக்கு ஆண்டுக்கு 4.75 TMC மட்டுமே (சுமார் 370 MLD க்கு சமம்) வழங்கியது.
இருப்பினும், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க வேறு வழிகள் உள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் (Indian Institute of Science (IISc)) சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் மூத்த கல்வியாளர் டி.வி. ராமச்சந்திரா, நகரத்திற்கு ஆண்டுக்கு 700-850 மிமீ மழைப்பொழிவு கிடைக்கிறது. இதன் விளைவாக சுமார் 15 டிஎம்சி (சுமார் 1,160 எம்எல்டி) நீரைக் கொடுக்க முடியும்.. மேலும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் சுமார் 16 டிஎம்சி (1,240 எம்எல்டி) கிடைக்கும் என்று கூறி வருகிறார்.
இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசு எவ்வாறு பார்க்கிறது?
ஜனவரி 2019-ஆம் ஆண்டில், கர்நாடகா DPR ஐ CWC-க்கு சமர்ப்பித்தது, அதை CWMA-க்கு அனுப்பியது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரியபோது, அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, ஜூலை மாதம் 2019-ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இரு மாநிலங்களுக்கிடையில் ஒரு "இணக்கமான தீர்வு" தேவை என்று முடிவு செய்தது. பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (CWMA), ஒரு "விரிவான விவாதத்திற்கு" பிறகு, திட்டத்தை மீண்டும் மத்திய நீர்வள ஆணையத்துக்குப் (Central Water Commission (CWC)) பரிந்துரைக்க முடிவு செய்தது.
இப்போது, இந்த ஆணையமும் மத்திய நீர்வள ஆணையமும் (CWC) அந்த இரு மாநிலங்களுக்கும் திட்டத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடலுக்கும், முடிந்தால், ஒரு புரிதலுக்கும் ஒரு தளத்தை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Original Article: What is the Mekedatu dam project dispute?