பாரம்பரிய மருத்துவத்தை அறிவியல் மற்றும் சமூகச் சொத்தாக அங்கீகரிப்பதை வலுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு உதவுகிறது.
உலகம் அதிகரித்துவரும் வாழ்க்கை முறை நோய்கள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூகப் பிளவு ஆகியவற்றுடன் போராடிவரும் வேளையில், மக்களுக்கும் பூமிக்கும் இடையிலான சமநிலையையும், முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை, புதுமை மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றிற்கு இடையேயான சமநிலையையும் மீட்டெடுப்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.
உடல்நலம் எப்போதும் மனித உடலுக்குள்ளும், மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாகும். இதுவே உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளின் மையக் கொள்கையாகும். அவை, ஆரோக்கியத்தை வெறும் நோயின்மை என்று பார்க்காமல், சமநிலையின் இருப்பு என்று பார்க்கின்றன. எனவே, நல்வாழ்வின் அறிவியல் என்பது புதியது அல்ல. இது ஒரு பாரம்பரிய புரிதலை மீண்டும் கண்டுபிடிப்பதாகும். இப்போது ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியின் மூலம் அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) அறிக்கையின்படி, WHO உறுப்பு நாடுகளில் சுமார் 90% பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்துவதாகப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அணுகல் மற்றும் மலிவு விலை மிக முக்கியத்துவம் வாய்ந்த குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், இதுவே முதல் நிலை சிகிச்சையாக உள்ளது.
பாரம்பரிய மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்புக்காக மட்டும் மதிப்புமிக்கது அல்ல. இது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க உதவுகிறது, ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கிறது. மேலும், வாழ்வாதாரங்களையும் வழங்குகிறது. இந்தியாவின் ஆயுர்வேதம், யோகம் & இயற்கை வைத்தியம், யூனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி (Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha, Homeopathy (AYUSH)) துறை இப்போது $43.4 பில்லியன் மதிப்புடையதாக உள்ளது. இது அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்த வளர்ச்சி பொதுமக்களின் மாறிவரும் விருப்பத்தேர்வுகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் ஒரு பெரிய மாற்றத்தின் மூலம் வருகிறது. அதாவது, நோய் வந்த பிறகு சிகிச்சையளிப்பதில் இருந்து, நோயைத் தடுத்தல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பை நோக்கி நகர்கிறது. உலகம் முழுவதும், உண்மையான நல்வாழ்வுக்கு மனம் மற்றும் உடல், மனிதர்கள் மற்றும் இயற்கை, அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையான, முழுமையான அணுகுமுறை தேவை என்பதை இப்போது மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தியா புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது. இது உலகளாவிய பாரம்பரிய மருத்துவத் துறையை வடிவமைக்க உதவுகிறது.
இந்த மாற்றத்தை ஆதரிக்க, WHO இன் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் (Global Traditional Medicine Centre (GTMC)) சான்றுகள் சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் புதுமைக்கான அறிவு மையமாக செயல்படுகிறது. ஆதாரங்கள் மற்றும் கற்றல், தரவு மற்றும் பகுப்பாய்வு, நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் GTMC, உலகளாவிய சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பாரம்பரிய மருத்துவத்தின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகமயமாக்கல் காலத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத உள்ளூர் பாரம்பரியங்கள், வளங்கள் மற்றும் உரிமைகளின் வழிகாட்டும் கொள்கையையும் இது நிலைநிறுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் (Global Traditional Medicine Centre (GTMC)) ஆனது, ஆதார அடிப்படையிலான ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலம், இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அறிவு மையமாகச் செயல்படுகிறது. இது உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி, தரவு, நிலைத்தன்மை மற்றும் சமபங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும், உலகமயமாக்கப்பட்ட உலகில் உள்ளூர் மரபுகள், வளங்கள் மற்றும் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
இந்திய அரசின் ஆதரவுடன் குஜராத்தின் ஜாம்நகரில் நிறுவப்பட்ட உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் (Global Traditional Medicine Centre (GTMC)) உலகளாவிய கூட்டுத் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. ஆதாரம், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் பாரம்பரிய மருத்துவம் ஆதரிக்கப்படும்போது, அது ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்த முடியும் என்ற உலக சுகாதார அமைப்பின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் இந்த தொலைநோக்குப் பார்வைக்கான அர்ப்பணிப்பு, அறிவு என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்து உருவானது. இந்தியாவில் இந்த மையம் நிறுவப்பட்டது, இந்த மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும்.
பிரதமரின் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியின் மீதான கவனம், இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards (BIS)) ஒரு சிறப்பு ஆயுர்வேதம், யோகம் & இயற்கை வைத்தியம், யூனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி (AYUSH) துறையை உருவாக்குதல் மற்றும் ஒரு துணைக் குழு (ISO/TC 249/SC 2) மூலம் உலகளாவிய AYUSH தரநிலைகளை உருவாக்குதல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இந்த முயற்சிகள் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் உலக அளவில் பரந்த அங்கீகாரத்தைப் பெற உதவுகின்றன.
ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டில், ஜி-20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் இணைந்து, குஜராத் மாநிலம் காந்திநகரில் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய மாநாடு (Global Summit on Traditional Medicine) நடைபெற்றபோது, பாரம்பரிய மருத்துவத்திற்கு ஒரு பெரிய உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது. அரசியல் ஆதரவை உருவாக்கவும், தரவு அடிப்படையிலான நடவடிக்கையை ஊக்குவிக்க உதவியது. மேலும் பாரம்பரிய மருத்துவத்தை தேசிய சுகாதார அமைப்புகளில் சேர்ப்பதற்குத் தயாராவதற்கும் பல நாடுகளிலிருந்து அமைச்சர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்று கூடினர். இந்த மாநாட்டின் 'குஜராத் பிரகடனம்' (Gujarat Declaration), பல்லுயிர்களைப் பாதுகாத்தல், பயன்களைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளுதல், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் பாரம்பரிய சுகாதார அறிவுக்குச் சமமான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை நவீன உலகளாவிய சுகாதார இலக்குகளுடன் இணைப்பதன் மூலம் உலகம் இப்போது முன்னோக்கி செல்லத் தயாராக உள்ளது. எனவே, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் இந்திய அரசாங்கம் இணைந்து டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி , 2025-ஆம் ஆண்டு வரை புது டெல்லியில் இரண்டாவது பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மைக்கான உலகளாவிய ஒத்துழைப்பின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. “சமநிலையை மீட்டமைத்தல்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அறிவியல் மற்றும் நடைமுறை” (Restoring balance: The science and practice of health and well-being) என்ற கருப்பொருளுடன், இந்த உச்சி மாநாடு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட, உலக சுகாதார அமைப்பின் புதிய 10 ஆண்டு கால (2025–34) உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்தியை ஆதரிக்க பல நாடுகளை ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சிகள் பாரம்பரிய மருத்துவத்தை கௌரவிப்பதுடன் மட்டுமல்லாமல், அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இது அறிவியலின் ஆதரவுடனும், தொழில்நுட்பத்தால் பலப்படுத்தப்பட்டும், நெறிமுறைகளால் வழிநடத்தப்பட்டும் உள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிஃபா (Sowa-Rigpa) ஆகியவற்றின் தாயகமாக இந்தியா இருப்பதால், பாரம்பரிய அறிவானது நவீன அறிவியலுடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.
இதன் அணுகுமுறை பல விஷயங்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. அதாவது, பாரம்பரியத்துடன் தொழில்நுட்பத்தையும், ஆராய்ச்சியுடன் சமூகப் பங்களிப்பை நல்வாழ்வு நிலைத்தன்மையையும் இணைப்பதாகும். உலகமே சமநிலையை மீட்டெடுக்க ஒன்றிணையும்போது, இந்தியாவின் செய்தி தெளிவாக உள்ளது: ஆரோக்கியம் குணப்படுத்த வேண்டுமே தவிர, அது தீங்கு விளைவிக்கக் கூடாது; முன்னேற்றம் நிலைத்திருக்க வேண்டுமே தவிர, அழித்துவிடக் கூடாது; மற்றும் அறிவியல் பிரிவினை இல்லாது, சேவை செய்ய வேண்டும்.
இந்த உச்சி மாநாடு வெறும் நிகழ்வு என்பதைவிட, ஆரோக்கியத்தின் எதிர்காலம் நல்லிணக்கத்தில் தான் உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இது ஒரு உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகும்.
பிரதாப்ராவ் ஜாதவ், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சராகவும் உள்ளார்.
Original Article: The future of health lies in harmony