ஐரோப்பா கார்பன் விதிமுறைகளை வகுக்கும்போது, இந்தியா விலை ஏற்றுக்கொள்ளும் நாடாக மட்டும் இருந்து விடக் கூடாது
2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிமுகப்படுத்திய கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அமலுக்கு வந்தது. தற்போது செயல்முறை முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதை ஐரோப்பா “நியாயமான நடத்துதல்” (fairness) என்று அழைக்கிறது: ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் கார்பன் விலை ஒன்றைச் செலுத்துகின்றனர். எனவே, இறக்குமதிப் பொருட்களும் அந்தவிலையைச் செலுத்த வேண்டும். காகிதத்தில் இது சமமாகத் தோன்றினாலும், நடைமுறையில் இந்தியாவுக்கு நியாயமான போட்டிக்கான வாய்ப்பு பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது.
ஐரோப்பிய எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அதிக கரியமில வாயு நீக்க மானியங்களையும், மானியத்துடன் கூடிய பொது நிதியையும் பெற்று மகிழ்கின்றனர். மேலும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தக அமைப்பின்கீழ் இலவசங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இந்த அமைப்பு 2026 முதல் 2034 வரை படிப்படியாக நீக்கப்படவுள்ளது. இதனால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் நிலையிலும்கூட, அவர்களின் உண்மையான கரியமில வாயு செலவுகள் குறைகின்றன. இதற்கு மாறாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அதற்கு இணையான அரசு ஆதரவு ஏதுமின்றி, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) கட்டணங்களின் முழு சுமையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த போக்கு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை நியாயமான போட்டியிலிருந்து பாதுகாக்க உள்நாட்டுக் கட்டணங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Tariffs and Trade (GATT)) மூன்றாம் பிரிவின் நோக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது.
ஆழமான பிரச்சினை என்னவென்றால்
ஜனவரி 27, 2026 அன்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த புதிய இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)), கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பதிலிருந்து இந்தியாவிற்கு எந்த விலக்கையும் வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது: எந்த நாட்டிற்கும் நாடு சார்ந்த நெகிழ்வுத்தன்மை இல்லை. இருப்பினும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கார்பன் எல்லை நடவடிக்கைகள் மீதான இணைப்பு 14-A, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை குறித்து ஒரு முறையான தொழில்நுட்ப உரையாடலை உருவாக்குகிறது. இதில், இந்தியாவில் செலுத்தப்படும் பயனுள்ள கார்பன் விலையை ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், “மிகவும் விருப்பமான நாடு” (Most-Favoured-Nation) என்ற உறுதிமொழியும் இந்த செயல்முறையில் உள்ளது. பிற நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து தளர்வும் இந்தியாவுக்கும் தானாகவே வழங்கப்படும். இது போன்ற குறுகிய கால நடவடிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
காலநிலை நீதி மற்றும் இறையாண்மை என்பதே ஆழமான பிரச்சினையாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), ஐரோப்பாவின் கரியமில நீக்கச் (decarbonisation) சுமையின் ஒரு பகுதியை வளரும் நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் மீது சுமத்துகிறது. அதே, சமயம் அதன் விளைவாகக் கிடைக்கும் வருவாயை ஐரோப்பியர்களிடமே வழங்குகிறது. தனது ஏற்றுமதிகளின் மீதான கரியமில விலையை நிர்ணயிக்கவோ அல்லது அதனுடன் தொடர்புடைய வருவாயை வழிநடத்தவோ முடியாத ஒரு நாடு, பசுமை மாற்றத்தில் விதிகளை உருவாக்குபவராக இல்லாமல், விதிகளைப் பின்பற்றுபவராக மாறும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
இந்தியா பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கவில்லை. 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), வர்த்தகம் செய்யக்கூடிய சான்றிதழ்கள் மூலம் ஒரு உள்நாட்டு கார்பன் விலையை உருவாக்குகிறது. காலப்போக்கில், எஃகு உட்பட முக்கிய தொழில்துறை துறைகளையும் அது உள்ளடகியுள்ளது. CBAM ஒழுங்குமுறையின் பிரிவு 9-ன் கீழ், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள், ஒரு தயாரிப்பு அதன் சொந்த நாட்டில் ஏற்கனவே கார்பன் விலை செலுத்தியிருந்தால், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்கள் கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம். இதுவே, இந்தியாவின் கார்பன் விலையை CBAM கட்டணத்திற்கு எதிராக இருக்கும் சட்டமாகும். இந்தக் கொள்கையும், அதை செயல்படுத்தும் சட்ட முறையும் சரியாக உள்ளன.
பிரிவு 9-இன் கீழ் கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை (Carbon Credit Trading Scheme (CCTS)), கணக்கில் எடுத்துக்கொள்வது சட்டரீதியாகவும் சுற்றுச்சூழலிற்கு ஏற்றதாகவும் இருக்கும். கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS) என்பது ஒழுங்குமுறை தரச் சந்தையாகும். தொழிற்சாலைகள் தங்களின் அளவிடப்பட்ட உமிழ்வுகளுக்கு ஏற்ப கார்பன் தொடர்பான கடன்களை வைத்திருக்க வேண்டும். மேலும், இது ஒரு டன்னுக்கு ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. இந்த பயனுள்ள கார்பன் விலையை கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறைகளுக்கு (CBAM) எதிராக கணக்கில் எடுத்துக்கொள்வது வலுவான கண்காணிப்பு, வெளிப்படையான மாற்று விகிதக் கணக்கீடு மற்றும் ஏற்றுமதி சலுகைகள் மூலம் சுமை நீக்கப்படாததற்கான உறுதிப்பாடுகள் ஆகியவற்றுடன் இரு முறை செலுத்தபடும் கட்டணத்தைத் தவிர்க்க உதவும். அதேநேரத்தில், CBAM-ன் முக்கிய நோக்கமான சமமான போட்டி சூழலை உருவாக்குவதையும் இது பாதுகாக்கும்.
ஒரு எதிர் சரிசெய்தலாக
இந்தியாவின் அடுத்த நகர்வு ஒரு எதிர் நடவடிக்கையாக இருக்க வேண்டும்: இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை (India Border Adjustment Mechanism (IBAM)) கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை ஒரு தவிர்க்க முடியாத வெளிப்புற நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, CBAM-ன் கீழ் வரும் ஏற்றுமதிகள் மீது இந்தியா தனது சொந்த கார்பன் அடிப்படையிலான கட்டணத்தை விதிக்கும் செயல்முறையாகும். ஏற்றுமதி செய்யப்படும் இடத்திலேயே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை ஒருதலைபட்சமாக அறிவிக்கப்படவோ கூடாது. இது இணைப்பு 14-A மூலமாக மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், அதன் வடிவமைப்பு முன்கூட்டியே “மூல நாட்டில் செலுத்தப்பட்ட கார்பன் விலை” என CBAM இணைப்பு 9-ன் நோக்கத்திற்கு ஏற்ப அங்கீகரிக்கப்படும். கார்பன் கடன் வர்த்தகத் திட்ட(Carbon Credit Trading Scheme (CCTS)), கொடுப்பனவுகள் மற்றும் இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை கட்டணங்கள் எவ்வாறு வரவு வைக்கப்படும் என்பதை இணைப்பு 14-A-ஐப் பயன்படுத்தி இந்தியா கவனமாக வரிசைப்படுத்தினால், இந்திய ஏற்றுமதியாளர்கள் CBAM மட்டும் விதிக்கும் ஒட்டுமொத்த கார்பன் செலவைவிட அதிகமான செலவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது. அவர்கள் ஐரோப்பாவில் மறைமுகமாக செலுத்தும் வரியை, உள்நாட்டு வரிகள் மூலம் வெளிப்படையாகச் செலுத்துவார்கள். இது ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் முழுமையாக ஈடுசெய்யப்படும். இதனால், ஏற்றுமதியாளர்களின் மொத்த கார்பன் சுமை CBAM செயல்முறை என்ற அளவிற்குள் கட்டுப்படுத்தப்படும்.
இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை (India Border Adjustment Mechanism (IBAM)) ஒரு ஆக்கப்பூர்வமான சலுகையாக மாற்றுங்கள்.
முக்கியமான வேறுபாடு பணம் எங்கு செல்கிறது என்பதில் உள்ளது. இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை மூலம் வரும் வருமானங்கள் இந்தியாவிலேயே இந்தியாவிற்குள் இருக்கும். சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், சரிபார்க்கக்கூடிய பசுமைத் திட்டங்களுக்காக மட்டுமே வெளிப்படையாக நிர்வகிக்கப்படும் ஒரு பிரத்யேக நிதியில் ஒதுக்கப்பட வேண்டும். ஊது உலைகளை நவீனமயமாக்குதல் (modernising blast furnaces), குறைந்த கார்பன் மின்சாரத்தை விரிவுபடுத்துதல், ஹைட்ரஜன் மற்றும் உலோகக் கழிவு அடிப்படையிலான எஃகு உற்பத்தியைப் அதிகரித்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற அனைத்துத் திட்டங்களும் கடுமையான, அளவிடக்கூடிய, அறிக்கையிடக்கூடிய மற்றும் சரிபார்க்கக்கூடிய தரநிலைகளுக்கு ஏற்ப, தன்னிச்சையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு பார்க்கும்போது, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை ஒரு தடையாக அல்ல, மாறாக அது ஒரு பயனுள்ள முன்மொழிவாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பது வருவாயைப் பாதுகாப்பதைவிட, கார்பன் கசிவைத் தடுப்பதைப் பற்றியது என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உண்மையாக இருந்தால், அது பிரிவு 9-ன் கீழ் நம்பகமான இந்திய கார்பன் விலை நிர்ணயத்தை அங்கீகரித்து, அந்த கட்டணங்களை உண்மையான சரிசெய்தல்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், ஐரோப்பிய நுகர்வோர் இன்னும் கார்பன் விலை கொண்ட பொருட்களைப் பெறுவார்கள். இந்திய உற்பத்தியாளர்கள் கூடுதல் கார்பன் செலவைச் சந்திக்க வேண்டியதில்லை.
முக்கியமாக, இந்தியா தனது கார்பன் வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் பகுதியளவிலாது தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு 'பசுமை மாற்றத்திற்கு' நிதியளிக்க வரும் வருவாயைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியா, “IBAM மூலம் CBAM-ஐ எதிர்கொள்ள வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இணைப்பு 14-A மற்றும் CBAM-ன் பிரிவு 9 ஆகியவற்றை குறிப்புகளாக மட்டும் கருதாமல், கார்பன் விலை நிர்ணயம் நடைமுறை உலகத்துடன் தீவிரமாக பயன்படுத்தபடும் அதே வேளையில், கார்பன் சார்ந்த நிதியை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்வதற்கான அளவுகோலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆர்ச்சி பார்னெல், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியராக உள்ளார்.
Original article : Keeping India’s carbon money at home.