முக்கியத்துவம் பெறும் வெள்ளி -ரோஷ்ணி யாதவ்

 2025ஆம் ஆண்டில் வெள்ளி 160%-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும் 2026ஆம் ஆண்டிலும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும், இந்த உலோகம் தங்கத்தை வேகமாக ஏன் உயர்ந்து  வருகிறது? இது நகைகளுக்கான தேவையா அல்லது செயற்கை நுண்ணறிவு, சூரிய சக்தி மற்றும் விநியோகத் தடைகளா?


தற்போதைய செய்தி?


2025ஆம் ஆண்டில் 160 சதவீதம் அதிகரித்ததற்குப் பிறகு, வெள்ளியின் விலை இந்த ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே 7 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத  உச்சத்தை எட்டியது. வெள்ளியின் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் தங்கத்தின் காரணங்களைப் போலவே இருந்தாலும், சில வேறுபாடுகளும் உள்ளன. இந்தச் சூழலில், வெள்ளியின் விலை உயர்வுக்கு வழிவகுத்த காரணிகளைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், வெள்ளி ஏன் ஒரு விலைமதிப்பற்ற உலோகம் மற்றும் ஒரு தொழில்துறை உலோகம் என விவரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியமானதாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. மக்கள் மற்றும் மத்திய வங்கிகள் முக்கியமாக மதிப்பைச் சேமிப்பதற்காகவோ அல்லது முதலீடு செய்வதற்காகவோ வாங்கும் தங்கத்தைப் போல் இல்லாமல், வெள்ளிக்கு முக்கிய இயற்பியல் பண்புகள் உள்ளன. அதன் இயற்பியல் பண்புகள், பேட்டரிகள் மற்றும் சூரியத் தகடுகள் போன்ற தயாரிப்புகளைத் தயாரிப்பதற்கு அதை முக்கியமானதாக ஆக்குகின்றன. இந்தத் தொழில்கள் இன்று வளர்ந்து வருகின்றன. இந்தத் துறைகள் இப்போது முக்கியமானதாக இருப்பது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானவையாக இருக்கும்.


2. வெள்ளிக்கான தேவையின் அடிப்படைக் (“bedrock of demand) காரணங்களில் செயற்கை நுண்ணறிவும் அடங்கும். வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், தங்கத்துடன் ஒப்பிடும்போது மக்கள் அதிக அளவில் வெள்ளியை வாங்குகிறார்கள்.


3. வெள்ளியின் விநியோகமும் தங்கத்திலிருந்து வேறுபட்டது. மற்ற கனிமங்கள் வெட்டி எடுக்கப்படும்போது ஒரு துணைப் பொருளாகக் கிடைக்கும் வெள்ளி, பல ஆண்டுகளாகத் தொழில் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப அதன் விநியோகம் அதிகரிக்கவில்லை.


4.வெள்ளி விலை உயர்வுக்கு மிகவும் உடனடியான ஒரு காரணம், அது சில அதிகாரப்பூர்வப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டிருப்பதுதான். நவம்பர் மாதம், அமெரிக்கா வெள்ளியைத் தனது முக்கிய கனிமங்களின் பட்டியலில் சேர்த்தது. வெள்ளி சேர்க்கப்பட்டதன் மூலம், அந்தப் பட்டியலில் உள்ள கனிமங்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.




5. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் சீனாவால் விதிக்கப்பட்டுள்ள புதிய அரிய உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் (rare metals export restrictions) வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. இந்த பட்டியலில் வெள்ளி இடம்பெற்றிருப்பது அதன் பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Tesla தலைமை நிர்வாகி எலான் மஸ்க் டிசம்பர் 27 அன்று X தளத்தில், “இது நல்லதாக இருக்காது என்று பதிவிட்டிருந்தார். பல தொழில்துறை செயல்முறைகளுக்கு வெள்ளி தேவைப்படுகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.


வெள்ளி மற்றும் அதன் பயன்கள்


1. வெள்ளி என்பது மென்மையான மற்றும் பளபளப்பான ஒரு உலோகமாகும். இது ஒரு உன்னத உலோகமாக (noble metal) வகைப்படுத்தப்படுகிறது. அதன் வெள்ளை நிறம், வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் வளிமண்டல ஆக்சிஜனேற்றத்திற்கு எதிர்ப்பு ஆகியவை பல தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் விரும்பப்படும் விலைமதிப்பற்ற உலோகமாக அதன் மதிப்பை மேம்படுத்தியுள்ளன.


2. அதன் பண மற்றும் அலங்கார பயன்பாடுகளைத் தவிர, வெள்ளி அனைத்து உலோகங்களிலும் மிக உயர்ந்த மின் கடத்துத்திறனைக் (electrical conductivity) கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது அச்சிடப்பட்ட மின்சுற்றுகள், மின்னணு பாகங்களுக்கான பூச்சுகள், தங்கம் மற்றும் தாமிரக் கலவைகளால் செய்யப்பட்ட மின் இணைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் இதை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.


3. இதன் குளோரைடு மற்றும் அயோடைடு போன்ற வெள்ளிச் சேர்மங்கள் ஒளிக்கு வினைபுரியும் தன்மை கொண்டவை. இதனால்தான் அவை புகைப்படத் துறையில் (photographic material) பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி பொதுவாக சூரிய மின்கலங்களிலும் ஒரு பசையாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி மிகவும் வெண்மையான தனிமம் ஆகும். மேலும், இது அனைத்து உலோகங்களிலும் மின்சாரம் மற்றும் வெப்பத்தை சிறந்த முறையில் கடத்தும் தன்மையுடையது.


4. இந்தியாவில், ராஜஸ்தானில் உள்ள சிறிய மற்றும் தனித்துவமான பரக் படிவைத் தவிர, வேறு எந்தப் பூர்வீக வெள்ளிப் படிவுகளும் இல்லை. இது பொதுவாக ஈயம், துத்தநாகம், தாமிரம் (குறிப்பாக அவற்றின் சல்பைட் தாதுக்கள்) மற்றும் தங்கத் தாதுக்களுடன் காணப்படுகிறது. மேலும், இது மின்னாற்பகுப்பு அல்லது வேதியியல் முறைகள் மூலம் ஒரு துணைப் பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பொதுவாக வெள்ளி கலந்த ஈயத் தாதுவை (அர்ஜென்டிஃபெரஸ் கலீனா கொண்ட தாதுவை) உருக்குவதன் மூலம் பிரித்தெடுக்கப்பட்டது.


5. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2022-ன் படி, இந்தியாவில் வெள்ளி சுரங்கத் தொழிலின் போது ஒரு முக்கிய துணைப் பொருளாகவும், ஒரு உப-பொருளாகவும் பெறப்படுகிறது. கடந்த காலங்களில் கர்நாடகாவில் உள்ள KGF Complex மற்றும் Hutti தங்கச் சுரங்கங்களில் தங்கச் சுத்திகரிப்புக்கு இணைப் பொருளாகவும், ராஜஸ்தானில் உள்ள சந்தேரியா மற்றும் டெபாரி உருக்காலைகளிலும், ஜார்க்கண்டில் உள்ள துண்டூ மற்றும் மௌபந்தர் (காட்சிலா) உருக்காலைகளிலும், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் உருக்காலையில் ஈயம், துத்தநாகம் மற்றும் தாமிரக் கலவைகளை உருக்கிச் சுத்திகரிக்கும்போது ஒரு துணை விளைபொருளாகவும் மீட்டெடுக்கப்பட்டது.



தங்கம் - அதன் பண்புகள் மற்றும் இந்தியாவின் இறக்குமதிச் சார்புநிலை


1. தூய தங்கம் என்பது ஒரு பிரகாசமான, சற்று சிவப்பு மஞ்சள் நிற, அடர்த்தியான, மென்மையான, இணக்கமான மற்றும் இழுவைத்தன்மை கொண்ட உலோகமாகும். தங்கம் மற்ற பொருட்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை. மேலும், சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திட நிலையில் இருக்கும்.


2. தங்கம் பெரும்பாலும் தனிம நிலையில், கட்டிகளாகவோ அல்லது துகள்களாகவோ, பாறைகளிலும், தாதுப் படிவுகளிலும் மற்றும் வண்டல் படிவுகளிலும் அதிகமாக காணப்படுகிறது. தங்கம் துருப்பிடிப்பதில்லை, பெரும்பாலான அமிலங்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. மற்ற உலோகங்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டும் சிறப்புப் பண்புகளையும் இது கொண்டுள்ளது.


3. தங்கம் என்பது உலக அளவிலும் இந்தியாவிலும் ஒப்பீட்டளவில் ஒரு அரிய உலோகம் ஆகும். உள்நாட்டுத் தேவை பெரும்பாலும் இறக்குமதியின் மூலம் பூர்த்தி  செய்யப்படுகிறது.


Original Article : Silver in spotlight -Roshni Yadav

Share: