டெல்லி சுல்தானகத்தின் வரலாறு என்ன? -குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

பழைய டெல்லியில் உள்ள துர்க்மேன் வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாக டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD))) மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கை வன்முறையாக மாறியதை அடுத்து, அங்குள்ள மக்கள்மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.


முக்கிய அம்சங்கள்:


— முகலாய பேரரசர் ஷா ஜஹான் தனது புதிய தலைநகரை ஷாஜஹானாபாத் (இன்றைய பழைய டெல்லி) என்று உருவாக்கியபோது, 17-ஆம் நூற்றாண்டில் அவரது ஆட்சியில் துர்க்மன் கேட் கட்டப்பட்டது. ஆனால், இந்த இடத்தின் வரலாறு முகலாய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது. அது டெல்லியில் சூஃபி மதத்தின் முக்கியமான மையமாக இருந்த காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.


— வரலாற்றாசிரியர் ஸ்வப்னா லிடில் (Swapna Liddle)  தனது 'சந்தினி சௌக்: டெல்லியின் முகலாய நகரம்' ((Chandni Chowk: The Mughal City of Delhi) (2017) நூலில் கூறியது போல, ஷாஜஹானாபாத் வெறும் காலி நிலத்தில் கட்டப்படவில்லை என்றும் மாறாக, ஏற்கனவே இருந்த குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சாலைகளை அதன் நகர அமைப்பில் இணைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 


— 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில், வடமேற்கில் உள்ள ஃபதேபுரி மஸ்ஜித் (Fatepuri Masjid) முதல் துர்க்மன் வாயில் வரை செல்லும் சாலை, ஷா ஜஹான் தனது தலைநகரை நிறுவியபோது, ஏற்கெனவே இருந்த முக்கியமான ஒரு பிரதான சாலையாகும், அதன் இருபுறமும் பழமையான பல கட்டிடங்கள் இருந்தன என்று லிடில் விளக்கினார்.


— “இந்தச் சாலை அருகேதான் சூஃபி துறவி ஷா துர்க்மான் பயாபானி வாழ்ந்தார்; அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.” அவரது தர்கா (சமாதி) ஹவுஸ் காஸிக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அந்தத் தர்காவுக்கு மிக அருகிலேயே, 13-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானகத்தை ஆண்ட முதல் மற்றும் ஒரே பெண் ஆட்சியாளரான ரஸியா சுல்தானின் கல்லறை இருக்கிறது என்றும்  அந்தகக் கல்லறை மிகவும் பாரம்பரியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


— கலகம், காலனித்துவ ஆட்சி மற்றும் பிரிவினையின் எழுச்சிகளில் இருந்து இந்த நுழைவாயில் சேதம் எதுவும் இன்றி தப்பியது. 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகள், மதில்சூழ்ந்த நகரத்தைத் தானே அடைத்துக்கொள்வதைத் தடுக்க, நுழைவாயிலின் இருபுறமும் இருந்த நகரச் சுவரின் சில பகுதிகளை இடித்துத் தள்ளினர் என்றும் குறிப்பிடப்படுகிறது.


— அவசரநிலையின்போது (Emergency) துர்க்மான் வாயிலில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலான தகவல்கள் நினைவுக் குறிப்புகள், விசாரணைப் பதிவுகள், பத்திரிகைத் துறை ஆய்வுகள் மற்றும் பிற்கால வாய்வழி வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து தெரிய வருகின்றன.


— 1970-களின் நடுப்பகுதியில், சஞ்சய் காந்தி டெல்லி நகரத்தை “அழகாக்கும்” என்ற பெயரில் சர்ச்சைக்குரிய திட்டத்தை செயல்படுத்தினார். அதனால், துர்க்மன் வாயில் திடீரென அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இந்த திட்டம் நகர்ப்புற சேரிகளையும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது, நகர்ப்புற ஏழைகளை அதிகமாக பாதித்த கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


— அந்தக் காலத்திய தகவல்கள் மற்றும் பிற்கால சாட்சியங்களின்படி, துர்க்மன் வாயிலைச் சுற்றியுள்ள சேரி பகுதிகளையும் கட்டிடங்களையும் இடிப்பதற்குச் சிறிது காலத்திலேயே விரைந்து ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


— ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி, 1976-ஆம் ஆண்டு கட்டிடங்களை அகற்றும் பணிக்காக முதல் புல்டோசர் கொண்டுவரப்பட்டது. வெளிப்புற குடிசைகளை இடிக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் சிறிய எதிர்ப்பை சந்தித்தன. இருப்பினும், விரைவில், ஜமா மசூதிக்கு அருகிலுள்ள துஜானா ஹவுஸில் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ஒரு குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை திறக்கப்பட்டது என்கின்றனர்.


— இடிப்புப் பணிகள் மேலும் பத்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்தன. பத்திரிகையாளர்களான ஜான் தயாள் மற்றும் அஜோய் போஸ் ஆகியோர், For Reasons of State: Delhi under Emergency (2018) என்ற நூலில் “புல்டோசர்கள் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வரை, அதாவது துர்க்மான் கேட்டில் உயிரின் அனைத்து அறிகுறிகளையும், மரணத்தின் அனைத்து அறிகுறிகளையும் அழிக்கும் வரை, இரவு பகலாக வேலை செய்தன.” என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருந்தது. அதன் பிந்தைய ஆராய்ச்சிகளும், உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 400 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன.


— துர்க்மான் வாயில் சம்பவங்கள், அவசரநிலை (Emergency) காலத்தின்போது நடந்த அத்துமீறல்களை விசாரிக்க 1977-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஷா கமிஷனால் (Shah Commission) ஆராயப்பட்டன. அதன் கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், எந்தவிதமான வழக்கும் தொடரப்படவில்லை. மேலும், டெல்லியின் நவீன வரலாற்றில் நடந்த இந்த மிகவும் இருண்ட அத்தியாயங்களுக்காக எந்தவொரு மூத்த அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


—டெல்லி சுல்தானகம் என்பது மம்லுக், கில்ஜி, துக்ளக், சயீத், இறுதியாக லோடி வம்சம் உள்ளிட்ட பல வம்சங்களின் தொடர்ச்சியாகும். “இந்தோ-இஸ்லாமிய” கட்டிடக்கலை என்று அழைப்பதன் வளர்ச்சி இங்கிருந்துதான் குதுப் மினார் மற்றும் சிரி கோட்டை போன்ற புகழ்பெற்ற கட்டமைப்புகளுடன் தொடங்கியதாக வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


— குதுப் மினாரின் கட்டுமானப் பணியானது ஐபக்கின் காலத்தில் தொடங்கி, இல்துமிஷால் கட்டிமுடிக்கப்பட்டது. அதே சமயம், ஆப்கானிஸ்தானில் நிலவிய  மங்கோலியர்களின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பித்த மக்களுக்கு, அடைக்கலம் கொடுக்க அலாவுதீன் கில்ஜியால் சிரி கோட்டை கட்டப்பட்டது. மேலும், துக்ளக்குகள் துக்ளகாபாத், ஜஹபனா மற்றும் ஃபெரோசாபாத் போன்ற பல நகரங்களையும் கட்டினர்.


— பின்னர் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லோடி கல்லறைகளுடன் கூடிய லோடி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது இன்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகக் கூறப்படுகிறது. 1398-ஆம் ஆண்டில், மத்திய ஆசியப் படையெடுப்பாளரான தைமூர் (Timur), டெல்லி மீது படையெடுத்து, பெரும் அழிவையும் படுகொலையையும் ஏற்படுத்தினார். இது “டெல்லியின் சூறையாடல்” என்று அழைக்கப்படுகிறது. இதன்பிறகு, மங்கோலியர்களிடமும் தைமூரிடமும் வம்சாவழி உரிமை கோரிய முகலாயர்கள் வரும்வரை டெல்லி தன் பழைய பெருமையை இழந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.


— 16-ஆம் நூற்றாண்டில் வந்த முகலாயர்கள், டெல்லி சுல்தான்களைப் போலன்றி, ஆரம்பத்தில் டெல்லியைவிட ஆக்ராவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இருப்பினும், 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஷேர் ஷா சூரி ஹுமாயூனை தோற்கடித்து (இது முகலாய ஆட்சியை தற்காலிகமாகத் தடை செய்தது) புராணா கிலா என்று அழைக்கப்படும் பழைய கோட்டையைக் கட்டினார் என்று வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


— 1638-ஆம் ஆண்டில், ஷாஜஹான் முகலாய தலைநகரை ஆக்ராவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு மாற்றினார். இதுவே இன்று "பழைய டெல்லி" (Old Delhi) அல்லது ஷாஜஹானாபாத் என்று அழைக்கப்படுகிறது. செங்கோட்டை (Red Fort) மற்றும் ஜாமா மஸ்ஜித் (Jama Masjid) போன்ற சின்னச் சின்ன கட்டமைப்புகள் இதன் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகிறது.

 Original Article : What is the history of Delhi Sultanate? -Khushboo Kumari and Roshni Yadav

Share: