தற்போதைய செய்தி?
புதிய மின்சார வாகனக் கொள்கையின் கீழ், டெல்லி அரசாங்கம் மின்கல மின்சார வாகனங்கள் (battery electric vehicles (BEV)), வலுவான இணை மின்சார வாகனங்கள் (hybrid electric vehicles (HEV)) மற்றும் பிளக்-இன் இணை மின்சார வாகனங்கள் (plug-in hybrid electric vehicles (PHEV)) ஆகியவற்றுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சாலை வரி மற்றும் பதிவு கட்டண சலுகைகளை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில், மின்சார வாகனங்களின் வகைகளையும் அவற்றை ஆதரிக்கும் கொள்கை கட்டமைப்பையும் புரிந்துகொள்வது பொருத்தமானதாகிறது.
முக்கிய அம்சங்கள் :
மின்சார வாகனங்களின் வகைகளைப் புரிந்துகொள்வதற்கு முன், முதலில் பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
1. பெட்ரோல் வாகனங்கள் பெட்ரோல் இயந்திரங்கள் (petrol engines) மூலம் இயங்குகின்றன மற்றும் வாகனத்தை இயக்க எரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்த செயல்பாட்டில், எரிபொருள் இயந்திரத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் எரிப்பது வெப்பம் மற்றும் இயக்கம் இரண்டின் வடிவத்திலும் ஆற்றலை வெளியிடுகிறது. அதன் பின் பிஸ்டன்கள் (pistons), ஷாஃப்ட்கள் (shafts), கியர்கள் (gears) மற்றும் அச்சுகளின் (axles) சிக்கலான வழிமுறை மூலம் சக்கரங்களைச் சுழற்றுவதற்கு மாற்றப்படுகிறது. இதனால், பெட்ரோல் வாகனங்கள் எரிபொருளில் உள்ள வேதியியல் ஆற்றலை (chemical energy) எரிப்பு மூலம் இயந்திர ஆற்றலாக (mechanical energy) மாற்றுகின்றன.
2. மின்சார வாகனங்கள் எரிபொருள் அடிப்படையிலான இயந்திரங்களுக்குப் பதிலாக ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளால் இயக்கப்படும் மின்சார மோட்டார்களைப் பயன்படுத்தி இயங்குகின்றன. ஒரு மின்சார காரில், மின்சாரம் ஒரு ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியிலிருந்து வருகிறது. மேலும், வாகனம் ஒரு மின்சார மோட்டாரின் உதவியுடன் நகரும். மின்சார மோட்டார் மின் ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. இந்த இயந்திர ஆற்றல் சக்கரங்களைச் சுழற்றுகிறது. குறிப்பாக, பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் உள்ளன.
மின்சார வாகனங்களின் (EV) வகைகள்
e-AMRIT தரவுத்தளத்தின் படி, நான்கு வகையான மின்சார வாகனங்கள் உள்ளன. அவை,
1. பேட்டரி மின்சார வாகனம் (Battery Electric Vehicle (BEV)) : இது உள் எரிப்பு இயந்திரம் (internal combustion engine (ICE)) மூலம் வாகனங்களை இயக்குவதை மாற்றுகிறது. இது பொதுவாக, லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரி மூலம் வாகனத்தை முழுமையாக மின்சாரத்தால் இயக்குகிறது. இது இணை மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் இணை மின்சார வாகனங்களை விட திறமையானது.
2. பிளக்-இன் இணை மின்சார வாகனம் (Plug-in Hybrid Electric Vehicle (PHEV)) : இந்த வாகனங்கள் உள் எரிப்பு இயந்திரம் மற்றும் வெளிப்புற மின் சாக்கெட்டிலிருந்து (external power socket) சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி இரண்டையும் பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்களில் சார்ஜ் செய்வதற்கு ஒரு பிளக் வசதி உள்ளது. வாகனத்தின் பேட்டரி இயந்திரத்தின் (engine) மூலம் அல்ல, மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்படுகிறது.
நிதி ஆயோக்கின் e-Amrit தரவுத்தளத்தின்படி, ஒரு பிளக்-இன் இணை மின்சார வாகனம் (PHEV) முழு மின்சார பயன்முறையில் தொடங்கி, பேட்டரி முழுவதும் (battery pack) காலியாகும் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. பேட்டரி தீர்ந்தவுடன், இயந்திரம் (engine) அதையே கையாள்கிறது. அதன் பிறகு, வெளிப்புற சார்ஜிங் தேவையில்லாத ஒரு சாதாரண இணை மின்சார வாகனம் போல வாகனம் செயல்படுகிறது. இது இணை மின்சார வாகனத்தை (HEV) விட அதிக செயல்திறன் கொண்டது. ஆனால், பேட்டரி மின்சார வாகனங்களை (BEV) விட குறைவான செயல்திறன் கொண்டது.
3. இணை எலக்ட்ரிக் வாகனம் (Hybrid Electric Vehicle (HEV)) : இது ஒரு உள் எரிப்பு இயந்திரமான (ICE), பொதுவாக பெட்ரோல் இயந்திரம் (petrol engine) மற்றும் ஒரு பேட்டரியால் இயங்கும் மின்சார மோட்டார் (battery-powered electric motor) இரண்டையும் பயன்படுத்துகிறது. பெட்ரோல் இயந்திரம் (petrol engine) பேட்டரி காலியாக இருக்கும்போது இயங்கவும் சார்ஜ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் முழுமையாக மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் இணை வாகனங்களை விட குறைவான செயல்திறன் கொண்டவை.
4. எரிபொருள் செல் மின்சார வாகனம் (Fuel Cell Electric Vehicle (FCEV)) : இது மின்சாரத்தை உருவாக்க வேதியியல் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் செல் மின்சார வாகனம் (FCEV) மின்சாரத்தை உருவாக்க ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்துகிறது. இந்த செயல்பாட்டில், இது வெப்பத்தையும் நீரையும் மட்டுமே உற்பத்தி செய்கிறது. அவை முழுவதுமாக மின்சாரத்தால் இயக்கப்படுவதால், இது ஒரு மின்சார வாகனமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பேட்டரி மின்சார வாகனங்களைப் போலல்லாமல், அதன் ஓட்டுநர் வரம்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் நேரம் வழக்கமான கார்கள் மற்றும் லாரிகளைப் போன்றது.
அரசின் முன்முயற்சிகள்
உலகளாவிய EV30@30 முயற்சியுடன் இணைந்து, 2030-ம் ஆண்டுக்குள் 30% மின்சார வாகன ஊடுருவலை அடைய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45% க்கும் குறைவாகக் குறைத்து, இறுதியில் 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய நாடாக மாற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
1. இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ கூறுத் துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (PLI) (PLI-Auto): ஏப்ரல் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (PLI) திட்டம் தற்போது 14 துறைகளை உள்ளடக்கியது. குறைந்தபட்சம் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டல் (Domestic Value Addition (DVA)) கொண்ட மேம்பட்ட ஆட்டோமொடிவ் தொழில்நுட்ப (Advanced Automotive Technology (AAT)) தயாரிப்புகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வாகன உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் முதலீடுகளை ஈர்க்கவும் இந்தத் திட்டம் நிதி சலுகைகளை வழங்குகிறது.
2. e-AMRIT: இது கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்ட மின்சார வாகனங்கள் குறித்த ஒரு வலைதள தரவுத்தளம் ஆகும். இந்த தளம் நிதி ஆயோக் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த தரவுத்தளம், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளுதல், கொள்முதல், முதலீட்டு வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
3. புதுமையான வாகன மேம்பாட்டில் பிஎம் மின்சார இயக்கப் புரட்சி (PM E-Drive): மார்ச் மாதத்தில் காலாவதியான மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல் (Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME)) கொள்கை மற்றும் செப்டம்பர் 30, 2024 அன்று முடிவடைந்த மூன்று மாத மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டம் (Electric Mobility Promotion Scheme (EMPS)) போன்ற முந்தைய முதன்மை முயற்சிகளை மாற்றுவதற்காக இது அக்டோபர் 1, 2024 அன்று தொடங்கப்பட்டது. இது முக்கியமான மின்சார வாகனங்கள் (EV) சார்ஜிங் உள்கட்டமைப்பை வாங்குவதற்கும் நிறுவுவதற்கும் முன்கூட்டியே சலுகைகளை வழங்குகிறது.
4. பிஎம் மின்சார பேருந்து சேவை-கட்டண பாதுகாப்பு வழிமுறை (PSM) திட்டம்: பொதுப் போக்குவரத்து அதிகாரிகளால் (Public Transport Authorities (PTA)) மின்-பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும் இயக்குவதற்கும் ரூ. 3,435.33 கோடி செலவில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 38,000க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
இந்திய மின்சார இயக்கக் குறியீடு (India Electric Mobility Index)
1. மாநிலங்களும், ஒன்றியப் பிரதேசங்களும் தங்கள் மின்சாரப் போக்குவரத்து இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் இந்தக் குறியீடு கண்காணிக்கவும், அளவிடவும், ஒப்பிடவும் நிதி ஆயோக் ஆகஸ்ட் 2025-ல் இந்திய மின்சார இயக்கக் குறியீட்டை (India Electric Mobility Index (IEMI)) வெளியிட்டது.
2. போக்குவரத்து மின்மயமாக்கல் முன்னேற்றம், சார்ஜிங் உள்கட்டமைப்பு தயார்நிலை மற்றும் மின்சார வாகன ஆராய்ச்சி மற்றும் புதுமை நிலை ஆகிய மூன்று கருப்பொருள் பிரிவுகளின் கீழ் 16 தனித்துவமான செயல்திறன் குறிகாட்டிகளை இந்தக் குறியீடு கண்காணிக்கிறது.
3. அதிக மதிப்பெண் மின்சார இயக்கம் வலுவானதாகவும் மேம்பட்டதாகவும் இருப்பதைக் காட்டுகிறது. இந்த முடிவுகளின் அடிப்படையில், பகுதிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
முன்னணியில் இருப்பவர்கள் - வலுவான மற்றும் நன்கு வளர்ந்த அமைப்புகளைக் கொண்ட பகுதிகள்.
செயல்திறன் மிக்கவர்கள் - சீராக மேம்படும் பகுதிகள்.
ஆர்வலர்கள் - வேகமாக வளர சிறப்பு ஆதரவு தேவைப்படும் பகுதிகள்.
இந்த அமைப்பு காலப்போக்கில் தொடர்ந்து வளர்ந்து வளர்ச்சியடைகிறது.
4. காலாண்டு மதிப்பீடுகளின் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்திய மின்சார இயக்கக் குறியீடு (IEMI) மதிப்பெண்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன. சமீபத்திய இந்திய மின்சார இயக்கக் குறியீடு (IEMI) மதிப்பெண்ணில் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் சண்டிகர் 'முன்னணியில்' உள்ளன.
Original article : India’s Push for Electric Vehicles: Types of EVs and policy measures -Roshni Yadav