முக்கிய அம்சங்கள்:
இந்தியாவின் பெண் உழவர்களுக்கு, இது ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் வேளாண் தொழிலாளர் பிரிவில் பெண்கள் 43 சதவீதம் பங்களிக்கின்றனர். பெண்கள் பயிர் உற்பத்தியில் 50% மற்றும் கால்நடை தொடர்பான வேலைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றன.
இந்தியாவில் பெண்களுக்கான மிகப் பெரிய வேலைவாய்ப்பு துறையாக வேளாண்மைத்துறை உள்ளது. ஊரக பகுதிகளில் வசித்து வரும் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 55–60 சதவீதம் வரை வேளாண்மை துறை வழங்குகிறது.
இருப்பினும், பெண்கள் 13–14 சதவீதம் மட்டுமே நில உரிமைகளை (operational landholdings) வைத்துள்ளனர். அவர்களுக்கு நிறுவன அடிப்படையிலான கடன் வசதிகளுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது. மேலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் 15–20 சதவீதம் குறைவாக திறன் பேசி வைத்துள்ளனர். மேலும், இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு குறைவாக உள்ளது. டிஜிட்டல் பாகுபாட்டை (digital divide) குறைப்பது ஒரு சமூக இலக்காக மட்டுமல்ல, அது பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் ஒரு முக்கிய காரணியாகவும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உழவுத் தொழிலை மறுசீரமைத்து வருகிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான ரிமோட் சென்சிங் மற்றும் கணினி பார்வை அமைப்புகள் இப்போது பயிர் அழுத்தம், பூச்சி பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை துல்லியமாக கண்டறிந்து வருகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள், மண் சுகாதார அட்டைகள் மற்றும் பயிர் வரலாறுகளை ஒருங்கிணைக்கும் இயந்திர கற்றல் மாதிரிகள் மகசூல் முன்னறிவிப்புகளை மேம்படுத்துகின்றன.
இந்த தொழில்நுட்பங்கள் மூன்று நாள்பட்ட கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்கின்றன: அவை அறிவு மேலாண்மை சமச்சீரற்ற தன்மை, உள்ளீட்டு திறனின்மை மற்றும் காலநிலை மாறுபாடு ஆகும். இது போன்ற செயல்பாடுகள் பெண் உழவர்களுக்கு, நேரத்தை மிச்சப்படுத்துதல், குறைக்கப்பட்ட கடின உழைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனாக மாறுகின்றன.
சிறுதானியங்கள் (millets), பருப்புகள், தோட்டக்கலை, சிறிய கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத்தோட்ட/பின்னணியில் இருந்து பணி செய்யும் தொழில் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை வேளாண்மைத் துறையில், பெண்கள் அதிக பங்கு வகித்தாலும், அது இன்னும் போதுமான அளவில் ஆய்வு செய்யப்படாததாகவும், டிஜிட்டல் மயமாக்கப்படாததாகவும், திட்டமிடப்பட்ட மாதிரிகள் உருவாக்கப்படாததாகவும் உள்ளது.
இது வேளாண் நடைமுறைகளின் வரையறுக்கப்பட்ட பிரிவுகளுக்கு செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை சார்ந்து இருக்கும் சூழலிற்கு வழிவகுக்கும். இந்த ஏற்றத்தாழ்வு மாதிரி பயிற்சியை பாதிக்கலாம். தரவுத்தொகுப்புகள் ஆண்களை மையமாகக் கொண்ட பொருட்களை விகிதாசாரமாக காட்டினால், ஆலோசனைக் கருவிகள் தவறுதலாக அந்த மதிப்புச் சங்கிலிகளுக்கே (value chains) முன்னுரிமை அளிக்கக்கூடும்.
பன்முகப்படுத்தப்பட்ட பொருட்களின் டிஜிட்டல் மயமாக்கலில் முதலீடு செய்தல், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (Farmer Producer Organization (FPO))-நிலை தரவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பெண்களின் சுய உதவி குழுக்களை தரவு கூட்டாளர்களாகப் பயன்படுத்துதல் போன்றவை இந்த சமச்சீரற்ற தன்மையை சரிசெய்ய உதவும்.
முக்கியமான தொழில்நுட்ப மற்றும் நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகள் பின்வருமாறு: அவை குறைந்த அலைவரிசை அமைப்புகளை மேம்படுத்துதல்; பன்மொழி மற்றும் பேச்சுவழக்கு பயிற்சி பெற்ற மாதிரிகள்; பங்கேற்பு அடிப்படையிலான தரவு சேகரிப்பு மற்றும் பரிமாற்ற அமைப்புகள்; பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட செயல்திறன் அளவுகோல்கள் மற்றும் டிஜிட்டல் அணுகல் முதலீடுகள் ஆகும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை தோராயமாக 15-18 சதவீதம் பங்களிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் இயக்கப்படும் மேம்படுத்தல்களின் மூலம் 5–10 சதவீதம் அளவுக்குக் கூட உற்பத்தித்திறன் உயர்ந்தால், அது ஊரக வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தக்கூடும். பெண்களை முறையாகச் சேர்த்தால், வீட்டு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் உள்ளூர் நிறுவனங்களில் ஏற்படும் அதிக விளைவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாலின உணர்வுள்ள வடிவமைப்பு, சரியான தரவு சமச்சீரற்ற தன்மை மற்றும் டிஜிட்டல் அணுகல் இடைவெளிகளை மூடுவது போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவின் உத்திகளை ஒருங்கிணைத்தால், தொழில்நுட்பம் உற்பத்தித்திறனை மட்டுமல்ல, அதன் மூலம் சமத்துவத்தை வேகப்படுத்த முடியும். சர்வதேச பெண் உழவர்கள் ஆண்டில், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சியை உள்ளடக்கிய வேளாண் மாற்றத்திற்கு ஏற்ப மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும். இது தேசத்திற்கு உணவளிக்கும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா:
Bharat-VISTAAR என்பது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பல்வேறு மொழிகளை கொண்ட கருவியாகும். இது உழவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் திறன்பேசி அல்லது எளிய தொலைபேசி அழைப்பு மூலம் தகவல்களை வழங்குகிறது. இந்த கருவி பயிர் திட்டமிடல், வேளாண் நடைமுறைகள், பூச்சிகள், வானிலை முன்னறிவிப்புகள், சந்தைகள், திட்டத் தகவல், தகுதி, பயன்பாடுகள் மற்றும் குறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது. உழவர்களுக்கு தேவையான தகவல்களை அணுக இது ஒரு "டிஜிட்டல் வாசலாக" செயல்படுகிறது.
— கிசான் இ-மித்ரா (Kisan e-Mitra) என்பது பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்த உழவர்களின் கேள்விகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவால்-இயங்கும் உரையாடும் இயலி (Chatbot) ஆகும். இது PM-KISAN திட்டத்தின் செயல்திறனையும் அணுகலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உழவர்களின் கேள்விகளுக்கு "உடனடி, தெளிவான மற்றும் துல்லியமான" பதில்களை வழங்குகிறது. இது 11 பிராந்திய மொழிகளை மேம்படுத்துகிறது மற்றும் பிற அரசு திட்டங்களுக்கு உதவுவதற்காக உருவாகி வருகிறது.
வேளாண் துறையில் தரவை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான மையத்தின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) திட்டத்தின் ஒரு பகுதியாக AgriStack 2024-ல் தொடங்கப்பட்டது.
வேளாண் துறையில் மூன்று அடிப்படை பதிவேடுகள் அல்லது தரவுத்தளங்களை AgriStack கொண்டுள்ளது: அவை உழவர்கள் பதிவேடு, புவி-குறிப்பிடப்பட்ட ஊரக வரைபடங்கள் மற்றும் பயிர் விதைப்பு பதிவேடு ஆகும். இவை அனைத்தும் மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
Original article : What are the government schemes related to use of AI in agriculture? -Roshni Yadav, Khushboo Kumari