தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம், முறைசாரா (Gig) தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் வலியுறுத்துகிறது. -சங்கீதா கந்தவேல்

 "தமிழ்நாட்டில் இணையதளம் சார்ந்த முறைசாரா தொழிலாளர்களின் நிலை" (Status of Platform Based Gig Workers in Tamil Nadu) என்ற ஆய்வில், இணையதளம் அல்லது செயலி சார்ந்த பணிகளின் (platform-based work) வேகமான வளர்ச்சியை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்தகைய தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நீண்டகால வாழ்வாதார உறுதித்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


தமிழகத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் (Gig workers), அதாவது இணையதளச் செயலிகள் மூலம் தற்காலிகமாகப் பணியாளர்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு (State Planning Commission (SPC)) புதிய கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.


"தமிழ்நாட்டில் இணையதளம் சார்ந்த தற்காலிகத் தொழிலாளர்களின் நிலை" (Status of Platform Based Gig Workers in Tamil Nadu) என்ற தனது சமீபத்திய ஆய்வில், செயலி அல்லது இணையதளம் சார்ந்த வேலைவாய்ப்புகளின் அதிவேக வளர்ச்சியைச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்தகைய தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகக் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பேச்சுவார்த்தை (Collective bargaining) நடத்தவும், தங்களது கோரிக்கைகளை முன்வைக்கவும் ஏதுவாக தொழிற்சங்கங்களை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்தச் சங்கங்கள் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெற பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த அறிக்கையின்படி, சமூக பாதுகாப்பிற்கு தனி நிதியங்களை (Social Security Funds) உருவாக்கியும், தற்போதுள்ள நலத்திட்ட வளங்களைப் பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் விபத்துக் காப்பீடு போன்ற கூடுதல் சலுகைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


முறைசாரா பணியாளர்களின் (gig workers) நலனுக்காக, அவர்களின் நலன் சார்ந்த கொள்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மறுஆய்வு செய்யவும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து கருத்துகளைப் பெறவும் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயிற்சி இங்கு முக்கியமான கருதப்படுகிறது. டிஜிட்டல் அறிவு, நிதி மேலாண்மை மற்றும் குறிப்பிட்ட வேலைத்திறன் போன்றவற்றில் மானிய விலையில் பயிற்சி அளிக்க அரசாங்கம் இத்தகைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சி, வேகமாக மாறிவரும் தொழிலாளர் சந்தையில் முறைசாரா பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் பொருளாதாரத் தற்சார்பையும் வலுப்படுத்தும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது (SPC), முறைசாரா தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் (Platforms), ஒன்றிய அரசின் மின்னணு தொழிலாளர் தனிப்பட்ட அடையாள எண் (Electronic Shram Unique Identification (UID) (e-Shram UID)) அமைப்புடன் இணைக்கப்பட்ட 'தமிழ்நாடு இணையதளம் சார்ந்த முறைசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின்' இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கப் பரிந்துரைத்துள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்களுக்குள்ளேயே புகார்களைத் தீர்க்க 'உள்நிலை தகராறு தீர்வு குழுக்களை' (Internal dispute resolution committees) அமைக்க வேண்டும் என்றும், அங்குத் தீர்க்கப்படாத புகார்களைக் கையாளுவதற்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான 'குறைதீர்ப்பாளர்' (Ombudsman) இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


இந்த ஆய்விற்காக உபெர் (Uber), ஓலா (Ola), ரேபிடோ (Rapido), சொமாட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), பிளிங்கிட் (Blinkit), செப்டோ (Zepto), போர்ட்டர் (Porter), அமேசான் ஃபிளெக்ஸ் (Amazon Flex) மற்றும் அர்பன் கம்பெனி (Urban Company) போன்ற தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள 255 இணையதளம் அல்லது செயலி சார்ந்த தொழிலாளர்களிடம், வினாப்பட்டியல் ஒன்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் முறையான மற்றும் ஆழமான நேர்காணல்களை நடத்தினர். இதில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் 18-28 மற்றும் 29-38 வயதுக்குட்பட்டவர்கள் என்பது, ஏராளமான இளைஞர்கள் இத்தகைய செயலி சார்ந்த பணிகளைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டுகிறது. மேலும், பல தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கி வாழ்வதையே விரும்புவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இடப்பெயர்வு நிலையைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 98 பேர் (38%) புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் 157 பேர் (62%) உள்ளூர்வாசிகள் என்றும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 


ஆய்வுத் தரவுகளின்படி, பெரும்பாலான தொழிலாளர்கள் அதாவது 255 பேரில் 177 பேர் (சுமார் 69.4%) ஒரு நாளைக்கு ₹400 முதல் ₹1,000 வரை மட்டுமே சம்பாதிக்கின்றனர். இது 'முறைசாரா' (Gig) வேலைவாய்ப்புகள் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவிலான, அடிப்படை வாழ்வாதாரத்திற்கு மட்டுமே போதுமான வருமானத்தையே வழங்குகின்றன என்பதைக் காட்டுகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே அதிக வருமானம் ஈட்டுகின்றனர்; உதாரணமாக, 23 தொழிலாளர்கள் (9%) ஒரு நாளைக்கு ₹1,501 முதல் ₹3,000 வரையிலும், வெறும் 5 பேர் (2%) மட்டுமே ₹2,501-க்கு மேலாகவும் சம்பாதிக்கின்றனர். இத்தகைய அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரில் ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) ஓட்டுநர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 



முறைசாரா பொருளாதாரம் (Gig Economy) எனப்படும் பகுதிநேர அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலையில் பெண்கள் பங்கேற்பதன் ஒரு முக்கிய நன்மை அதன் நெகிழ்வான பணிநேரம் (Flexible schedule) ஆகும். இது அவர்கள் வீட்டுப் பொறுப்புகளையும் வேலையையும் சமமாக நிர்வகிக்க உதவுகிறது. நேரத்தைக் கட்டுப்படுத்தும் வசதி மற்றும் குடும்பக் கடமைகளை கவனித்துக் கொண்டே வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், பல பெண்களுக்கு இந்த இணையதளம் சார்ந்த வேலைகள் சாதகமானதாக உள்ளன. மேலும், இந்த இணையதளம் சார்ந்த பணிகள், பெண் தொழிலாளர்களாகிய எங்களுக்கு இந்த வேலையில் எந்த அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ ஏற்படுவதில்லை என்றும் மாறாகப் பொதுமக்களிடமிருந்து அதிகம் பாராட்டுகளே கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களது முந்தைய வேலைகளுடன் ஒப்பிடுகையில், இந்தச் சூழல் மிகவும் சாதகமாக இருப்பதோடு, ஆண்களுக்கு நிகரான ஊதியமும் அங்கீகாரமும் தங்களுக்குக் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.


Original article :  Tamil Nadu State Planning Commission calls for legal protection and social security for gig workers -Sangeetha Kandavel

Share: