Showing posts with label Gig workers. Show all posts
Showing posts with label Gig workers. Show all posts

ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. -குஷ்பூ குமாரி

ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை அறிவித்துள்ளது. இந்தச் சட்டங்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை?


தற்போதைய செய்தி?


ஒன்றிய அரசு இறுதியாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை, 2026-ஆம் ஆண்டு மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பல அரசாணைகள் வாயிலாக அறிவித்துள்ளது. ஊதியச் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் ஆகிய இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், முந்தைய 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. தொழிலாளர் சட்டம் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்தத் தொழிலாளர் சட்ட வீதிகளுக்கு ஏற்ப விதிகளை இறுதி செய்ய வேண்டும். இந்தச் சட்ட விதிகள், முதலாளிகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் விதிமுறை இணக்கத் தேவைகளை எளிதாக்குவதையும், தொழிலாளர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்புகளில் சீரான தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


2. ஊதியச் சட்டம் (Code on Wages): அறிவிக்கப்பட்ட இறுதி விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்களை, ‘ஊதியக் குறியீடு (மத்திய) விதிகள், 2025’-ன் இறுதி வடிவத்திலிருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இந்த அளவுகோல்கள் “ஒன்றிய அரசால் சிறப்பு அல்லது பொது ஆணை மூலம் தனியாகக் குறிப்பிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை ஊதியம்: புதிய ஊதிய விதிகளின்படி, “குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம், உடை, வீட்டுவசதி மற்றும் ஒன்றிய அரசால் அவ்வப்போது பொருத்தமானதாகக் கருதப்படும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் ஒரு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அடிப்படை ஊதியம் (floor wage) என்பது ஒரு குறைந்தபட்ச வரம்பாகச் செயல்படும். இந்த வரம்பிற்குக் கீழே மாநிலங்கள் தங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க இயலாது. நாட்டின் பல்வேறு தொழில் மையங்களில்  கடந்த சில ஆண்டு  காலமாகத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விதிமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு சாதாரண வேலை நாள் என்பது எட்டு மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற முறைகளில் (மாதாந்திர அல்லது வாராந்திர ஊதியம்) பணியாற்றுபவர்களுக்கு, அவர்களின் வாராந்திர மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாத வகையில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படும். இது தவிர, ஊழியர்களுக்கான ஓய்வு இடைவேளை நேரங்கள் 'தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020'-ன்கீழ் தனியாக நிர்ணயிக்கப்படும்.









அம்சம்

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்

தொழிலாளர் சட்ட

சீர்திருத்தங்களுக்குப்  பின் 

வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல்

கட்டாய நியமனக் கடிதங்கள் இல்லை

அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள் வழங்குவது வெளிப்படைத்தன்மை, வேலைப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலை உறுதி செய்கிறது.

சமூகப் பாதுகாப்பு காப்பீடு

வரையறுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு 

சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.

குறைந்தபட்ச ஊதியம்

பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதியம்; தொழிலாளர்களின் பெரும் பிரிவினர் இதன்கீழ் வரவில்லை.

ஊதியச் சட்டம் குறைந்தபட்ச ஊதியம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியதுடன், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையையும் வழங்குகிறது.

தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு

பணி வழங்குபவர்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற சட்டவிதிகள்  ஏதுமில்லை.

பணி வழங்குபவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனையை வழங்க வேண்டும்.

சரியான நேரத்தில் ஊதியம்

சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாததற்கான காரணம்

பணி வழங்குபவர்கள் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிதி நிலைத்தன்மையை அளிக்கிறது. பணி அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த மன உறுதியை அதிகரிக்கிறது.

பெண்களின் பணியிடப் பங்கேற்பு

இரவு நேரப் பணிகளிலும் குறிப்பிட்ட சில தொழில்களிலும் பெண்களின் வேலைவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

அனுமதி மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பெண்கள் அனைத்து நிறுவனங்களிலும் இரவிலும் அனைத்து வகையான பணிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

இணக்கச் சுமை

பல்வேறு தொழிலாளர் சட்டங்களின்கீழ் பல பதிவுகள், உரிமங்கள் மற்றும் வருவாய் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒற்றைப் பதிவு, அகில இந்திய ஒற்றை உரிமம் மற்றும் ஒற்றை வருமான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.


3. சமூகப் பாதுகாப்புச் சட்டம்: ஒன்றிய அரசின் சமூகப் பாதுகாப்பு விதிகள், 2025-ன்கீழ், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமைப்புசாராத் தொழிலாளியும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பதிவை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புதிய கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும், அத்தகைய பணியாளரை ஒன்றிய அரசின் குறிப்பிட்ட இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அந்தத் தொழிலாளர்கள் பணியிலிருந்து விலகும் விவரங்களையும் அந்த இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.


கிக் பணியாளர்கள் (Gig workers)


சமூகப் பாதுகாப்புச் சட்டம் முதன்முறையாக கிக் பணியாளர்களை அங்கீகரித்தது. கிக் பணியாளர்கள் என்பவர்கள், வழக்கமான முதலாளி-பணியாளர் உறவுகளுக்கு வெளியே பணிபுரிந்து அல்லது ஒரு பணி ஏற்பாட்டில் பங்கேற்று, அதன் மூலம் வருமானம் ஈட்டும் "சுயதொழில் செய்பவர்கள்" (self-employed) என வரையறுக்கப்படுகிறார்கள்.


கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்காக ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியமும் அமைக்கப்படவுள்ளது. அதில் மக்களவை, மாநிலங்களவை, அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள், மாநிலங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.


4. தொழிலாளர் உறவுகள் சட்டம்: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் உறவுகள் விதிகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள், சமமான முதலாளி-தொழிலாளர் பிரதிநிதித்துவம், அதிகபட்சம் 10 உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் ஒரு குறைதீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும்.


— 300 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்கள், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு (ஆட்குறைப்பு/தற்காலிகப் பணிநீக்கம்) இனி அரசாங்க அனுமதி தேவையில்லை. இதற்கு முன்பு இந்த வரம்பு 100 பணியாளர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


— வேலைநிறுத்தம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்போ அல்லது அறிவிப்பு கொடுத்த 14 நாட்களுக்குள்ளோ அறிவிப்பு கொடுக்காமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று சட்ட விதி கூறுகிறது.


— வேலைநிறுத்தம் என்பதற்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்செயல் விடுப்பு (Casual Leave) எடுத்தால், அதுவும் வேலைநிறுத்தமாகவே கருதப்படும். திடீர் வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


5. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (Occupational Safety, Health and Working Conditions (OSH)) விதிமுறை: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிகளின்படி, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிமுறையின்கீழ் இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்கு முன்பும் இரவுப் பணியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் அந்தப் பெண் ஊழியரிடமிருந்து முறையான எழுத்துப்பூர்வமான சம்மதத்தைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.


— பெண் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வெளிச்சம் நிறைந்த பணியிடத்தை வழங்குவதுடன், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அலுவலகத்திற்கு வந்து செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகளையும் நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும்.


— ஒவ்வொரு ஊழியருக்கும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பணி நியமனக் கடிதத்தை வழங்க வேண்டும். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இலவச உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும், வெவ்வேறு பணி நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்குச் சமமான ஊதியம், வேலை மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.


— புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விவரங்களை, முதலாளிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.


— 500 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு தொழிற்சாலையும் அல்லது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பிற வகை தொழிற்சாலைகளும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும்.


பல்வேறு வகையான ஊதியங்கள்


1. அடிப்படை ஊதியம் என்பது, ஒரு முதலாளி சட்டப்படி ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய மிகக்  குறைவான தொகையாகும். ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான முந்தைய அளவுகோல்கள் சேர்க்கப்பட்டிருந்தன, அவை இதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.

(i) ஒரு நபருக்கு ஒரு நாளைக்குச் நிகர அளவில் 2,700 கலோரிகள் உணவு கிடைக்க வேண்டும்.


(ii) தொழிலாளி, துணவி/துணைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு சாதாரண தொழிலாளர் குடும்பத்திற்கு, ஒரு ஆண்டிற்கு 66 மீட்டர் துணி வழங்கப்பட வேண்டும்.


(iii) உணவு மற்றும் உடைக்காகச் செய்யப்படும் செலவில் 10% தொகையை வீட்டு வாடகையாகக் கொள்ள வேண்டும். இது தவிர, எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர செலவுகளைக் குறைந்தபட்ச ஊதியத்தில் 20%-ஆகக் கருத வேண்டும்.


(iv) குழந்தைகளின் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் எதிர்பாராத அவசரச் செலவுகளுக்காக, குறைந்தபட்ச ஊதியத்தில் 25% தொகையை ஒதுக்க வேண்டும்.


இந்தச் சூத்திரம், 1991-ஆம் ஆண்டின் ரெப்டகோஸ் பிரெட் (Reptakos Brett) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புக்கும், 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற 15-வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (Indian Labour Conference (ILC)) பரிந்துரைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. 


2. வாழ்வாதார ஊதியம்: ஒரு தொழிலாளி தனது அடிப்படைத் தேவைகளான இருப்பிடம், உடை, உணவு மற்றும் போக்குவரத்து போன்றவற்றை நிறைவு செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியமே இதுவாகும். கல்வி, மருத்துவம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது அவர்களுக்கு வழிவகை செய்கிறது. இது பொதுவாக அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக இருக்கும்.


3. நியாயமான ஊதியம்: தொழில்துறையின் லாபம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இருவருக்கும் நியாயமாக இருக்கும் ஊதியமே இதுவாகும். பொதுவாக, இது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மற்றும் வாழ்வாதார ஊதியத்திற்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும்.


Original Link: Centre notifies rules for all 4 labour codes.


Share:

கர்நாடகாவின் புதிய கிக் தொழிலாளர் குறைதீர் அமைப்பு (new gig worker grievance system) என்பது என்ன? - ஷில்பா எலிசபெத்

 தற்போதைய நிகழ்வு :


சர்வதேசத் தொழிலாளர் தினமான (International Workers’ Day) மே 1, 2026 அன்று, கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட 'கிக்' தொழிலாளர்களுக்காக (platform-based gig workers), ஒரு பிரத்யேகக் குறைதீர்க்கும் அமைப்பைத் தொடங்குவதாக அறிவித்தது. இந்தியாவில் கிக் தொழிலாளர்களுக்காக அரசு ஆதரவுடன் செயல்படும் முதலாவது குறைதீர்க்கும் அமைப்பு இதுவே என்று அரசு கூறப்படுவதன் மூலம், அரசுத் திட்டங்கள் தொடர்பான குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான மாநிலத்தின் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர் அமைப்பு (Integrated Public Grievance Redressal System (IPGRS)) மூலம் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாகப் புகார்களைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.


இவ்வமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?


இணையத்தளச் சார்ந்த கிக் தொழிலாளர்கள் இனி ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர் அமைப்பு (IPGRS) வாயிலாகத் தங்கள் குறைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யலாம். இதில் ஊதியம், பணிச்சூழல் மற்றும் இணையத்தளச் சார்ந்த சேவைகளில் எழும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான புகார்களை இதில் பதிவு செய்ய இயலும்.


கர்நாடக இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தின் (Karnataka Platform-Based Gig Workers (Social Security and Welfare) Act) கீழ், ஒவ்வொரு ஒருங்கிணைப்புத் தளமும் ஒரு 'உள் முரண்பாடு குறைதீர்க்கும் குழுவை' (Internal Dispute Resolution Committee (IDRC)) அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர்ப்பு அமைப்பில் (IPGRS) பதிவு செய்யப்படும் குறைகள், அந்தந்தத் தளத்தின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழுவுக்குத் (IDRC) தானாகவே அனுப்பப்படும். இந்தத் தளம் புகாரைப் பெற்றவுடன், உள்-முரண்பாடு தீர்க்கும் குழு (IDRC) 15 வேலை நாட்களுக்குள் தீர்வு காண முயற்சிக்கும் என்றும், இறுதி உத்தரவைப் பிறப்பிக்க 45 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும், 30 நாட்களுக்குள் இவ்விஷயத்தை கர்நாடக கிக் தொழிலாளர்கள் நல வாரியத்திடம் (Karnataka Gig Workers Welfare Board) மேல்முறையீடு செய்யலாம்.


ஒரு கிக் தொழிலாளர் எத்தகைய குறைகளை எழுப்பலாம்?


கிக் தொழிலாளர்களின் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்படுதல், முடக்கப்படுதல் அல்லது செயலிழக்கச் செய்யப்படுதல், தளத்திலிருந்து நீக்கப்படுதல், ஊதியம் குறைக்கப்படுதல் அல்லது நிறுத்திவைக்கப்படுதல், நியாயமற்ற அபராதங்கள், பாகுபாடு காட்டுதல், பாதுகாப்பற்ற பணிச்சூழல்கள் அல்லது சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் மீறப்படுதல் ஆகியவை தொடர்பான புகார்களை எழுப்பலாம்.


இச்சட்டம் எத்தகைய இடைவெளியை நிரப்புகிறது?


பல தளங்களில் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் வழிமுறைகள் இருந்தாலும், இந்த அமைப்புகள் ஒரு முறையான முரண்பாடான தீர்வு கட்டமைப்பிற்கு வெளியேதான் செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, தற்காலிகப் பணியாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று அடிக்கடி தெரிவித்துள்ளனர். இந்த தளங்கள் பெரும்பாலும் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகப் பலர் புகார் கூறியுள்ளனர்.


கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, இச்செயல்முறைக்குக் கூடுதல் கட்டமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும், முறைசார் பொருளாதாரத்திற்கு வெளியே உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிக் தொழிலாளர்கள் இப்போது இந்த இணையதளம் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். பின்னர், அவை அந்தந்தத் தளத்தின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழுவுக்கு (IDRC) அனுப்பப்படும். அரசு ஒரு மைய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, இச்செயல்முறை முழுவதையும் கண்காணிக்கும்.


இதற்காகத் தளங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனவா?


கர்நாடக அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, 'நம்ம யாத்ரி' (Namma Yatri) மற்றும் 'யூலு' (Yulu) போன்ற தளங்கள் தங்களின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழு (IDRC) தொடர்புடைய விவரங்களை அரசு இணையதளத்துடன் ஒருங்கிணைத்துள்ளன. அதேநேரத்தில், அமேசான் (Amazon) உள்ளிட்ட மற்ற தளங்கள் இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும் பணியில் இன்னும் ஈடுபட்டுள்ளன.


இந்த நடைமுறை இப்போது ஏன் அமல்படுத்தப்படுகிறது?


கர்நாடக இயங்குதளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம்-2025 (Karnataka Platform-Based Gig Workers (Social Security and Welfare) Act), அதிகாரப்பூர்வமாகச் செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது.


மார்ச் 2026-ல், கிக் தொழிலாளர்களுக்கான இச்சட்டத்தை இயற்றுவதற்கான விதிகளை அறிவித்த முதல் இந்திய மாநிலமாக கர்நாடகா ஆனது. மாநிலத்தில் உள்ள கிக் தொழிலாளர்களுக்கான குறைதீர்க்கும் வழிமுறை, இந்தச் சட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக அமைகிறது. இது, கிக் தொழிலாளர்களின் தன்னிச்சையான பணிநீக்கங்கள் அல்லது கணக்கு முடக்கங்களைத் தடுப்பதோடு, அவர்களின் கவலைகளையும் நிவர்த்தி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தச் சட்டம் தொடர்பான மற்ற முக்கிய முன்னேற்றங்கள் என்னென்ன?


கிக் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம், கர்நாடக இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல மேம்பாட்டு வாரியம் (Karnataka Platform-Based Gig Workers Welfare Development Board) அமைக்கப்பட்டது.



நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிக் தொழிலாளர்கள் ஆகிய இருவரின் பெயர், வயது, தொலைபேசி எண், ஆதார் எண், யுஏஎன் (UAN) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை வாரியத்திடம் சமர்ப்பிக்குமாறு அரசு தளங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் வாரியத்தின் இணையதளத்தில் இணைக்கப்படும்.


அரசின் கூற்றுப்படி, இதுவரை மாநிலத்தில் உள்ள சுமார் 12 தளங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலத்தில் உள்ள சுமார் 12 லட்சம் செயலில் உள்ள கிக் தொழிலாளர்களின் விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.


இருப்பினும், பல பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இந்த எண்ணிக்கையில் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் தன்மைகள் இருக்கலாம். ஒவ்வொரு பணியாளருக்கும் அரசாங்கம் தனித்துவமான அடையாள எண்களை வழங்கியவுடன், இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்குவதற்காக, ஒருங்கிணைப்பாளர்கள் தளங்களில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் 1% வசூலிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.


நல உதவிக் கட்டணத்திற்கு உச்சவரம்பு ஏதேனும் உள்ளதா?


ஆம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விதிக்கப்படும் உச்சவரம்பு, வெவ்வேறு சேவைகளுக்கு மாறுபடுகிறது.


ஸ்விக்கி (Swiggy), ஸொமேட்டோ (Zomato), பிளிங்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto) மற்றும் பிக்பாஸ்கெட் (BigBasket) போன்ற உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவைகளுக்கு, உச்சவரம்பு ₹0.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராபிடோ (Rapido), நம்ம யாத்ரி (Namma Yatri) மற்றும் ஊபர் (Uber) போன்ற சவாரி முன்பதிவு சேவைகளுக்கு, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையே ₹0.5, ₹0.75 மற்றும் ₹1 உச்சவரம்பாக உள்ளது. போர்ட்டர் (Porter) போன்ற தளவாட சேவைகள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு முறையே ₹0.5, ₹0.75, ₹1 மற்றும் ₹1.5 செலுத்த வேண்டும். மின்-சந்தை சேவைகளுக்கு (e-marketplace services), இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு முறையே ₹0.5, ₹0.75 மற்றும் ₹1 உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அர்பன் கம்பெனி (Urban Company) போன்ற தொழில்முறைச் சேவை வழங்குநர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹1.5 என்ற மிக உயர்ந்த உச்சவரம்பு உள்ளது.


ஏப்ரல் மாதம் தொடங்கும் காலாண்டிலிருந்து இக்கட்டணம் அமலுக்கு வந்திருந்தாலும், அது அடுத்த காலாண்டின் தொடக்கமான ஜூலை 5-ம் தேதியிலிருந்து வசூலிக்கப்படும்.


இந்த நலத்திட்டக் கட்டணம் எதற்காகப் பயன்படுத்தப்படும்?


மாநிலத்தில் உள்ள இணையதளம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக, இந்த நலத்திட்டக் கட்டணம் 'கர்நாடக இணையத்தள-சார்ந்த கிக் தொழிலாளர்கள் நிதியத்திற்கு' (Karnataka Platform-Based Gig Workers’ Fund) செல்லும்.


அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கிக் தொழிலாளர்கள் பணிபுரியும் தளத்தைப் பொறுத்து அவர்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவை அடுத்த வாரியக் கூட்டத்தில் விவாதத்திற்காக முன்வைக்கப்படும். தற்போது பரிசீலனையில் உள்ள திட்டங்களில், கிக் பணியின் தன்மையைப் பொறுத்து ஆயுள் காப்பீடு, விபத்து உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.


Original article :  What is Karnataka’s new gig worker grievance system? - Shilpa Elizabeth

Share:

தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம், முறைசாரா (Gig) தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் வலியுறுத்துகிறது. -சங்கீதா கந்தவேல்

 "தமிழ்நாட்டில் இணையதளம் சார்ந்த முறைசாரா தொழிலாளர்களின் நிலை" (Status of Platform Based Gig Workers in Tamil Nadu) என்ற ஆய்வில், இணையதளம் அல்லது செயலி சார்ந்த பணிகளின் (platform-based work) வேகமான வளர்ச்சியை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்தகைய தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நீண்டகால வாழ்வாதார உறுதித்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


தமிழகத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் (Gig workers), அதாவது இணையதளச் செயலிகள் மூலம் தற்காலிகமாகப் பணியாளர்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு (State Planning Commission (SPC)) புதிய கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.


"தமிழ்நாட்டில் இணையதளம் சார்ந்த தற்காலிகத் தொழிலாளர்களின் நிலை" (Status of Platform Based Gig Workers in Tamil Nadu) என்ற தனது சமீபத்திய ஆய்வில், செயலி அல்லது இணையதளம் சார்ந்த வேலைவாய்ப்புகளின் அதிவேக வளர்ச்சியைச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்தகைய தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகக் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பேச்சுவார்த்தை (Collective bargaining) நடத்தவும், தங்களது கோரிக்கைகளை முன்வைக்கவும் ஏதுவாக தொழிற்சங்கங்களை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்தச் சங்கங்கள் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெற பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த அறிக்கையின்படி, சமூக பாதுகாப்பிற்கு தனி நிதியங்களை (Social Security Funds) உருவாக்கியும், தற்போதுள்ள நலத்திட்ட வளங்களைப் பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் விபத்துக் காப்பீடு போன்ற கூடுதல் சலுகைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


முறைசாரா பணியாளர்களின் (gig workers) நலனுக்காக, அவர்களின் நலன் சார்ந்த கொள்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மறுஆய்வு செய்யவும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து கருத்துகளைப் பெறவும் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயிற்சி இங்கு முக்கியமான கருதப்படுகிறது. டிஜிட்டல் அறிவு, நிதி மேலாண்மை மற்றும் குறிப்பிட்ட வேலைத்திறன் போன்றவற்றில் மானிய விலையில் பயிற்சி அளிக்க அரசாங்கம் இத்தகைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சி, வேகமாக மாறிவரும் தொழிலாளர் சந்தையில் முறைசாரா பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் பொருளாதாரத் தற்சார்பையும் வலுப்படுத்தும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது (SPC), முறைசாரா தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் (Platforms), ஒன்றிய அரசின் மின்னணு தொழிலாளர் தனிப்பட்ட அடையாள எண் (Electronic Shram Unique Identification (UID) (e-Shram UID)) அமைப்புடன் இணைக்கப்பட்ட 'தமிழ்நாடு இணையதளம் சார்ந்த முறைசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின்' இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கப் பரிந்துரைத்துள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்களுக்குள்ளேயே புகார்களைத் தீர்க்க 'உள்நிலை தகராறு தீர்வு குழுக்களை' (Internal dispute resolution committees) அமைக்க வேண்டும் என்றும், அங்குத் தீர்க்கப்படாத புகார்களைக் கையாளுவதற்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான 'குறைதீர்ப்பாளர்' (Ombudsman) இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


இந்த ஆய்விற்காக உபெர் (Uber), ஓலா (Ola), ரேபிடோ (Rapido), சொமாட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), பிளிங்கிட் (Blinkit), செப்டோ (Zepto), போர்ட்டர் (Porter), அமேசான் ஃபிளெக்ஸ் (Amazon Flex) மற்றும் அர்பன் கம்பெனி (Urban Company) போன்ற தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள 255 இணையதளம் அல்லது செயலி சார்ந்த தொழிலாளர்களிடம், வினாப்பட்டியல் ஒன்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் முறையான மற்றும் ஆழமான நேர்காணல்களை நடத்தினர். இதில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் 18-28 மற்றும் 29-38 வயதுக்குட்பட்டவர்கள் என்பது, ஏராளமான இளைஞர்கள் இத்தகைய செயலி சார்ந்த பணிகளைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டுகிறது. மேலும், பல தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கி வாழ்வதையே விரும்புவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இடப்பெயர்வு நிலையைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 98 பேர் (38%) புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் 157 பேர் (62%) உள்ளூர்வாசிகள் என்றும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 


ஆய்வுத் தரவுகளின்படி, பெரும்பாலான தொழிலாளர்கள் அதாவது 255 பேரில் 177 பேர் (சுமார் 69.4%) ஒரு நாளைக்கு ₹400 முதல் ₹1,000 வரை மட்டுமே சம்பாதிக்கின்றனர். இது 'முறைசாரா' (Gig) வேலைவாய்ப்புகள் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவிலான, அடிப்படை வாழ்வாதாரத்திற்கு மட்டுமே போதுமான வருமானத்தையே வழங்குகின்றன என்பதைக் காட்டுகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே அதிக வருமானம் ஈட்டுகின்றனர்; உதாரணமாக, 23 தொழிலாளர்கள் (9%) ஒரு நாளைக்கு ₹1,501 முதல் ₹3,000 வரையிலும், வெறும் 5 பேர் (2%) மட்டுமே ₹2,501-க்கு மேலாகவும் சம்பாதிக்கின்றனர். இத்தகைய அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரில் ஓலா (Ola) மற்றும் ஊபர் (Uber) ஓட்டுநர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 



முறைசாரா பொருளாதாரம் (Gig Economy) எனப்படும் பகுதிநேர அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலையில் பெண்கள் பங்கேற்பதன் ஒரு முக்கிய நன்மை அதன் நெகிழ்வான பணிநேரம் (Flexible schedule) ஆகும். இது அவர்கள் வீட்டுப் பொறுப்புகளையும் வேலையையும் சமமாக நிர்வகிக்க உதவுகிறது. நேரத்தைக் கட்டுப்படுத்தும் வசதி மற்றும் குடும்பக் கடமைகளை கவனித்துக் கொண்டே வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், பல பெண்களுக்கு இந்த இணையதளம் சார்ந்த வேலைகள் சாதகமானதாக உள்ளன. மேலும், இந்த இணையதளம் சார்ந்த பணிகள், பெண் தொழிலாளர்களாகிய எங்களுக்கு இந்த வேலையில் எந்த அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ ஏற்படுவதில்லை என்றும் மாறாகப் பொதுமக்களிடமிருந்து அதிகம் பாராட்டுகளே கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களது முந்தைய வேலைகளுடன் ஒப்பிடுகையில், இந்தச் சூழல் மிகவும் சாதகமாக இருப்பதோடு, ஆண்களுக்கு நிகரான ஊதியமும் அங்கீகாரமும் தங்களுக்குக் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.


Original article :  Tamil Nadu State Planning Commission calls for legal protection and social security for gig workers -Sangeetha Kandavel

Share: