சர்வதேச கடல்சார் சட்டங்கள்: UNCLOS, SOLAS முதல் MARPOL வரை -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி :


மார்ச் 4 அன்று, இலங்கை கடற்கரையில், அதன் கடல் எல்லைக்கு வெளியே, ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நீர்மூழ்கிக் குண்டுகள் (torpedoed) மூலம் தாக்கியது. இந்தக் கப்பல், இந்திய கடற்படையால் நடத்தப்பட்ட சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் பலதரப்பு கடற்படைப் பயிற்சியான MILAN-2026-ல் பங்கேற்ற பிறகு ஈரானிற்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில், முக்கிய கடல்சார் சட்டம் மற்றும் மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது.


முக்கிய அம்சங்கள்:


சர்வதேச அளவில், கடல்சார் மண்டலங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், கடல் சுற்றுச்சூழல் (maritime zones) அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், கடல் மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS))


1.  UNCLOS  என்பது கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் மீதான சட்டபூர்வமான நடத்தை மற்றும் பயன்பாட்டிற்கான  கட்டமைப்புகளை வகுக்கும் ஒரு  சர்வதேச சட்டமாகும். இந்த சட்டம் பெருங்கடல்களில் நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்கிறது. மேலும், இறையாண்மை, கடந்து செல்லும் உரிமைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார பயன்பாட்டு உரிமைகள் போன்ற பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்கிறது. UNCLOS சட்டத்தின் மூலம் பிராந்திய கடல் எல்லைகள் (Territorial Waters) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Economic Zone (EEZ)) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


2. UNCLOS சட்டத்தின்படி, பிராந்திய கடல் (territorial sea (TS)) என்பது ஒரு நாட்டின் கடற்கரையின் அடிப்பகுதியில் இருந்து 12 கடல் மைல்கள் வரை நீண்டுள்ள பகுதியாகும். பிராந்திய பகுதிக்குள் உள்ள கடல் பகுதிகளின் மீது அந்த நாட்டிற்கு முழு அதிகாரம் (sovereignty) உள்ளது.


3. UNCLOS சட்டத்தின்படி, ஒரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone (EEZ)) என்பது அதன் கடற்கரையின் அடிப்பகுதியில் இருந்து கடலுக்குள் 200 கடல் மைல்கள் (சுமார் 370 கிமீ) வரை நீண்டுள்ள பகுதியாகும். ஒரு நாடு அதன் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் உள்ள நீர்நிலைகளிலும் கடற்பரப்பிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களுக்கு சிறப்பு உரிமைகளைக் கொண்டுள்ளது.


4. UNCLOS சட்டம், கடல் வளங்களை சமமாக அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும், பல்லுயிர் மற்றும் கடல் சூழலியலைப் பாதுகாப்பதற்கும்  பொதுவான கொள்கைகளை உருவாக்குகிறது. ஆனால், இந்த இலக்குகளை எவ்வாறு அடைய வேண்டும் என்று அது குறிப்பிடவில்லை. இந்த சூழலில் தான் உயர் கடல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.


5. முக்கியமாக, UNCLOS சட்டத்தில்  ஆயுத மோதல்களின்போது போரில் ஈடுபடும் நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகள் இல்லை. ஏனெனில், இது அமைதிக்கால  நிர்வாகத்தில் (peacetime governance) மட்டுமே கவனம்  செலுத்துகிறது. அமெரிக்கா UNCLOS சட்டத்தில் கையெழுத்திடவில்லை. இந்தியா இந்த ஒப்பந்தத்தில் 10 டிசம்பர் 1982 அன்று கையெழுத்திட்டு, 29 ஜூன் 1995 அன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.


கடற்படைப் போர் சட்டம்


போரின்போது, கடற்படைப் போர் சட்டம் (Law of Naval Warfare) UNCLOS உடன் இணைந்து செயல்படும். ஆகவே, Dena கப்பல் நேரடியாக போரில் ஈடுபட்டதா இல்லையா என்பது முக்கியமில்லை. அது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் என்பதால் சட்டபூர்வமான இலக்காக கருதப்பட்டது.


கடலில் உயிர் பாதுகாப்புக்கான ஒப்பந்தம் (Convention for the Safety of Life at Sea (SOLAS)), 1974


1. வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களிலும் SOLAS மாநாடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியா இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளது.


2. கப்பல்களின் கட்டுமானம், உபகரணங்கள் மற்றும் இயக்கத்திற்கான குறைந்தபட்ச தரநிலைகளை, அவற்றின் பாதுகாப்புக்கு  ஏற்ப, உருவாக்குவதே SOLAS மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். ஒரு நாட்டின் கொடியின்கீழ் இயங்கும் கப்பல்கள் விதிகளை பின்பற்றுவதை அந்த நாடு  உறுதி செய்ய வேண்டும். இதை  உறுதி செய்ய  பல சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


உயர் கடல் ஒப்பந்தம் (High Seas Treaty)


1. உயர் கடல் ஒப்பந்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, அது 2015-ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துடன் அடிக்கடி  ஒப்பிடப்படுகிறது.


2. இந்த ஒப்பந்தம் மார்ச் 2023-ல் நிறைவேறியது மற்றும் இது எந்த நாட்டின் தேசிய அதிகாரத்திற்கும் உட்படாத கடல்களுடன் மட்டுமே தொடர்புடையது. ஒவ்வொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (Economic Zone (EEZ)) வெளிப்புற பகுதிகள் “உயர் கடல் ஒப்பந்தம்” அல்லது “சர்வதேச நீர்நிலைகள்” (international waters) என்று அழைக்கப்படுகின்றன. அவை மொத்த கடல் பரப்பளவில் 64%, தோராயமாக மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகளாவிய பொதுக்கடல்கள் (Global Commons) என கருதப்படுகின்றன. அவை யாருக்கும் சொந்தமான பகுதி அல்ல. அதில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. கடல் பயணம், விமானப் பயணம், பொருளாதார நடவடிக்கை, அறிவியல் ஆராய்ச்சி, அல்லது கடல் அடியில் கட்டமைப்புகளை அமைத்தல் போன்ற பணிகளை செய்யலாம் .


3. உயர் கடல் ஒப்பந்தம் (High Seas Treaty) நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: அவை,


➤ பாதுகாக்கப்பட்ட காடுகள் அல்லது வனப் பகுதிகள் இருப்பதைப் போல கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை (marine protected areas (MPAs)) வரையறுத்தல்,


➤ கடல் மரபணு வளங்களின் (Marine Genetic Resources) நிலையான பயன்பாடு மற்றும் அவற்றிலிருந்து வரும் நன்மைகளை சமமாகப் பகிர்தல்;


➤ பெருங்கடல்களில் உள்ள அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை (Environmental Impact Assessments) நடைமுறைப்படுத்தல்; மற்றும்


➤ திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதலாகும்.


4. செப்டம்பர் 25, 2024 அன்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் உள்ள பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity Beyond National Jurisdiction (BBNJ)) ஒப்பந்தம் அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது  முக்கியத்துவம் வாய்ந்தது.


5. செப்டம்பர் 19, 2025 அன்று, உயர் கடல் ஒப்பந்தம் (High Seas Treaty) அமலுக்கு வருவதற்குத் தேவையான 60 நாடுகளின் உறுதிப்படுத்தலை (ratification) பெற்ற முக்கிய நிலையை அடைந்தது. 120 நாள் காத்திருப்புக்கு பிறகு, 17 ஜனவரி 2026 அன்று இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது சட்டப்பூர்வமாக கட்டாயமக்கப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் இப்போது செயல்படுத்தலை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் உலகளாவிய கடல் பாதுகாப்பை வலுப்படுத்த தொடர்ந்து தேவையான ஒப்புதலை வழங்க வேண்டும்.


ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிப்பதற்கும் உள்ள வேறுபாடு

                  உறுதிப்படுத்தல் (Ratification) என்பது ஒரு நாடு ஒரு சர்வதேசச் சட்டத்தின் விதிகளை சட்டபூர்வமாக கடைபிடிக்க ஒப்புக்கொள்வது ஆகும். இது சட்டப்பூர்வமாக  கையெழுத்திடப்பட்ட சர்வதேச சட்டத்தைவிட வேறுபட்டது.

                 கையொப்பமிடுவது என்பது ஒரு நாடு சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டத்தின் விதிகளை ஏற்றுக்கொள்கிறது  என்பதாகும். அதைக் கடைப்பிடிக்க அந்த நாடு தயாராக உள்ளது என்பதைக் குறிக்கிறது. ஆனால், அந்த நாடு அதை அங்கீகரிக்கும் வரை, அதற்கான செயல்முறை நாட்டிற்கு நாடு மாறுபடும். அந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு அந்த நாடு சட்டப்பூர்வமாகக் கட்டுப்படவில்லை.


கப்பல்களிலிருந்து மாசுபாட்டைத் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் (The International Convention for the Prevention of Pollution from Ships (MARPOL))


1973-ஆம் ஆண்டில், கப்பல்களில் இருந்து மாசுபாட்டைத் தடுப்பதற்கான சர்வதேச மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது எண்ணெய், ரசாயனங்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் கப்பலில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் உட்பட கப்பல்களில் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களாலும் மாசுபடுவதைக் கையாள்கிறது. இந்தியா இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளது.



நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை மாநாடு (Ballast Water Management Convention)


கப்பல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஆபத்தான நீர்வேர் உயிரிகளை (invasive aquatic species) கட்டுப்படுத்த 2004-ல் நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கப்பல்களின் நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை மாநாடு (ballast water) மற்றும் படிமம் (sediments) நிர்வகிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. தற்போதுவரை இந்தியா நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை மாநாட்டில் கையெழுத்திடவில்லை.


2026-ஆம் ஆண்டு மிலன் பயிற்சி


1. இந்திய கடற்படை கடந்த மாதம் பிப்ரவரி 15 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு (International Fleet Review (IFR)), மிலன்-2026 மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு (Indian Ocean Naval Symposium (IONS)) உள்ளிட்ட மூன்று முக்கிய கடல்சார் நிகழ்வுகளை நடத்தியது.


2. 2026-ஆம் ஆண்டு மிலன் பயிற்சி, உலகம் முழுவதிலுமிருந்து கடற்படைகளை ஒன்றிணைத்து, இயங்குதன்மை, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் கூட்டு மறுமொழி திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


3. போர்ட் பிளேரில் நான்கு கடற்படைகளுடன் 1995-ல் தொடங்கப்பட்ட மிலன் பயிற்சி, 2024-ல் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் பங்கேற்கும் ஒரு  முக்கிய  பலதரப்பு பயிற்சியாக உருவெடுத்துள்ளது.


4. இது மிலன் பயிற்சியின் 13-வது பதிப்பு ஆகும். இதில் 74 நாட்களின் கடற்படைகளும்,  85 கப்பல்கப்பல்கள், 19 போர்க்கப்பல்கள் உட்பட மொத்தம் 85 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


Original article :  International Maritime Laws: From UNCLOS, SOLAS to MARPOL -Roshni Yadav

Share: