தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான 2023 சட்டம்: தலைமை தேர்தல் ஆணையரை (Chief Election Commissioner) பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனில், அது உச்சநீதிமன்ற நீதிபதியை (Judge of the Supreme Court) நீக்கும் முறையை போல குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இந்த வாரம் எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை "பாரபட்சமான நடத்தை" என்று வாதத்தை முன்வைத்து அவருக்கு எதிரான தீர்மானத்தை அறிமுகபடுத்தும்போது, உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் செயல்முறை இதற்கும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் வாதம் என்ன?
திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கிய இந்த முயற்சியில், எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்கம் (impeachment) தீர்மானத்தை முன்மொழிந்தன. தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெற அவர்கள் முயற்சித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை குறிவைத்து சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision (SIR)) செய்ததாக திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது. இதில், மாநிலத்தில் மட்டும் சட்டபூர்மாக எடுக்கப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நுண் பார்வையாளர்களை (micro-observers) நியமித்தது.
ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை (Chief Election Commissioner) நீக்குவதற்கான நடைமுறை என்ன?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324(5), உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் முறையை போல குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தேர்தல் ஆணையர்களை நீக்க முடியும் என்று சட்டப்பிரிவு கூறுகிறது.
இந்த செயல்முறை "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டவிதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்" என்று அந்த பிரிவு கூறுகிறது. அதன் பின்னர், டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) தொடர்பான சட்டத்தை சட்டம், 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. சட்டத்தின் பிரிவு 11 ராஜினாமா மற்றும் பதவி நீக்க செயல்முறைக்கு அதிகாரம் அளிக்கிறது. இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதே செயல்முறையையே பின்பற்றுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர், உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் முறையை போல குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான நடைமுறை அரசியலமைப்பின் பிரிவு 124 மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-ன் படி உள்ளது. பிரிவு 124 (4) கூறுகிறது, "நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையும் அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படும் உரைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட குடியரசுத்தலைவரின் உத்தரவின் மூலம், அந்த அவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையாலும், நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது இயலாமையின் அடிப்படையில் அத்தகைய நீக்கத்திற்கான வாக்கெடுப்பு அதே அமர்வில் குடியரசுத்தலைவரிடம் சமர்பிக்கப்படுகிறது.
அடுத்த பிரிவு, ஒரு நீதிபதியின் அத்தகைய உரை, விசாரணை மற்றும் தவறான நடத்தை அல்லது இயலாமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றலாம் என்று கூறுகிறது.
நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் பிரிவு 3, ஒரு நீதிபதியை நீக்குவதற்கான உரையை குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கும் தீர்மானத்தில் மக்களவை வழக்கில் குறைந்தது 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். மக்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்கவோ அல்லது மறுக்கலாம். இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சபாநாயகர் அல்லது தலைவர் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்களில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்றத்தின் ஒரு தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஆகியோர் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
குழுவின் அறிக்கையை பின்னர் சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதிபதி தவறான நடத்தை அல்லது இயலாமையால் பாதிக்கப்பட்டதாக குழு கண்டறிந்தால், அந்த தீர்மானம் நிலுவையில் உள்ள அவைகளால் பரிசீலிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. நிறைவேற்றப்பட்டால், நீதிபதியை நீக்குவதற்கான உரை குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும்.
Original article : As Opposition plans on motion to impeach CEC Gyanesh Kumar, here is what the law says -Damini Nath