மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஏன் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளன? - ரோஷ்னி யாதவ்

13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா ஏன் இறுதியாக மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது? மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை உலகின் மிக முக்கியமான பல்லுயிர் வளம் கொண்ட  பகுதிகளில் (biodiversity hotspots) ஒன்றாக மாற்றுவது எது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.

தற்போதைய செய்தி :


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 'சுற்றுச்சூழல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளை' (Ecologically Sensitive Areas (ESA)) வரையறுப்பதற்கான முதல் வரைவு அறிவிப்பை வெளியிடப்பட்டு 12 ஆண்டுகளான  பிறகும், ஒன்றிய அரசு இறுதியாக அதனை இறுதி செய்து வெளியிட தயாராகியுள்ளது; குறைந்தது, கருத்து வேறுபாடுகள் அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்கள் ஓரளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களிலாவது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று 'The Indian Express' செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டப் பணிக்குழுவின் 2013-ஆம் ஆண்டு பரிந்துரைகளின் அடிப்படையில், 6  மாநிலங்களில் 56,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு, உணர்திறன் மிக்கப்  பகுதியாக (ESA) வரையறுக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.


2. புதிய சுரங்க மற்றும் கல் குவாரித் திட்டங்கள், அனல் மின் நிலையங்களை அமைத்தல், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் 'சிவப்பு பிரிவுப் பட்டியலில்' உள்ள (red-category) தொழிற்சாலைகளை இயக்குதல் மற்றும் 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட புதிய கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் அல்லது அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் போன்ற பணிகளுக்கு முழுமையான தடை அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.


3. ஒன்றிய அரசின் அசல் வரைவு அறிவிக்கை 2014-ல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அது ஐந்து முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், மாநில அரசுகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளாக (Ecologically Sensitive Areas (ESAs)) அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.  தற்போது வரை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. கேரளா, தனது மாநிலத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்கப்படவுள்ள பரப்பளவை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், கர்நாடகா இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை பற்றிய கேள்வியை தொடர்ந்து எழுப்பி  வருகிறது.


சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதி  (Ecologically Sensitive Areas (ESAs)) என்றால் என்ன?


சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதி (ESA) என்பது சுரங்கத் தொழில், நீர்மின் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்காக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஆகும்.


4. எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய பகுதிகள் குறித்து குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஆறாவதாக உள்ள தமிழ்நாட்டிற்கு, இந்தச் சிக்கலில் பெரிய அளவிலான மாறுபட்ட கருத்துகள் எதுவும் இல்லை.


5. கேரளா மற்றும் கர்நாடகாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள அல்லது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள மாநிலங்களில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை அறிவிக்க ஒன்றிய அரசு தயாராகி வருவதாகத் தெரிய வருகிறது. இதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிக்களுக்கான வரைவு அறிவிப்புகளை ஒன்றிய அரசு வெளியிட்ட முயற்சிகளிலிருந்து இது மாறுபட்டதாக உள்ளது.


6. இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 (Environment Protection Act, 1986)-ன் கீழ் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளம் மிக்க மற்றும் மிகவும் நுட்பமான பகுதிகளுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், அந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய சுரங்கத் திட்டங்கள், அதிக மாசு ஏற்படுத்தும் தொழில்கள், அதிக வெப்பம் கொண்ட மின் நிலையங்கள் போன்ற செயல்பாடுகளுக்கு தடை  விதிக்கப்படும்.


மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சூழலியல் முக்கியத்துவம் என்ன?


1. உலகில் உள்ள 36 பல்லுயிர்ச் சூழல் மண்டல மையங்களில் (biodiversity hotspots) இந்தியாவில் அமைந்துள்ள நான்கு மையங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். மற்ற மூன்று மையங்கள் இமயமலை, இந்தோ-பர்மா மற்றும் சுண்டாலாந்து பகுதி போன்றவையாகும்.


2. இமயமலையைவிட மேற்குத் தொடர்ச்சி மலை பழமையான, 1,600 கி.மீ. நீளமுள்ள மலைத்தொடராகும். 2018-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) உலகின் 8 உயிரியல் பன்முகத்தன்மை மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.


3. Sahyadri hills என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அளவற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பைக் கொண்டுள்ளன. இதனால், அவை இந்தியாவிற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தப்பகுதி, அதன் தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கம், பகுதிகளுக்கே உரிய உயிரினங்கள் மற்றும் முக்கியமான சூழலியல், காலநிலை செயல்முறைகளைப் பாதுகாப்பதில் அதன் பங்கு போன்றவற்றின் காரணமாக  சிறந்த உலகளாவிய மதிப்பைக் கொண்டுள்ளது.


4. இது இந்தியத் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையோரமான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்கள் வழியாகப் பரவியுள்ளது.


5. சுற்றுச்சூழல் ரீதியாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் தென்னிந்தியாவின் காலநிலையை ஒழுங்குபடுத்தும் முக்கிய இயற்கை அமைப்பாக விளங்குகின்றன. தென்மேற்கு பருவமழைக்கு தடுப்பு சுவாராகச் செயல்பட்டு, அதிக மழைப்பொழிவு ஏற்படுவதை உறுதி செய்கின்றன. இதன் விளைவாக அடர்ந்த காடுகளும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் பல நதிகளும் உருவாகின்றன.


6. இந்த மலைத்தொடர் வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், சாதிக்காய் (Myristica) சதுப்புநிலங்கள் மற்றும் தனித்துவமான 'சோலா' காடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழலமைப்புகளின் தாயகமாகத் திகழ்கிறது. இது போன்ற சூழலமைப்புகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. இவற்றில் உள்ள பல்வேறு இனங்கள் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத தனித்துவமான  இனங்களாகும்.


7. சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடு மற்றும் புலி போன்ற அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் வாழ்விடமாக உள்ளன.


8. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, மண்டோவி, பெரியாறு மற்றும் சராவதி போன்ற மேற்கு நோக்கிப் பாயும் பல ஆறுகளின் பிறப்பிடமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் திகழ்கின்றன. இதனால் இது 'தீபகற்ப இந்தியாவின் நீர்க்களஞ்சியம்' (water tower) என்று அழைக்கப்படுகிறது.


மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பான குழுக்கள் (Committees on the Western Ghats)


1. மேற்குத் தொடர்ச்சி மலையில் சூழலியல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளை (ESA) வரையறுப்பதற்கான முயற்சிகள், 2010-ல் மாதவ் காட்கில் குழு அமைக்கப்பட்டதோடு தொடங்கின. இந்தியாவின் மிகச்சிறந்த சூழலியலாளர்களில் ஒருவரான காட்கில், 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அன்று குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தப் பரப்பளவான 1,29,037 சதுர கிலோமீட்டர் பகுதியையும் சூழலியல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்தப்பகுதிகளின் சூழலியல்த்தன்மைக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.


2. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு இந்த அறிக்கையை 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முன்னாள் இஸ்ரோ  தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது.


3. கள ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டும் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்கலாம் என்று கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்தது. குடியிருப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர்கள் அதிகம் நிறைந்த 'கலாச்சார நிலப்பரப்புகளுக்கு' (cultural landscapes) மாறாக, மலைத்தொடர் முழுவதும்  1,500 கி.மீ. தூரத்திற்குத் தொடர்ந்து பரவியுள்ள தாவரங்கள் மற்றும் காடுகளைக் கொண்ட 'இயற்கை நிலப்பரப்புகளை' (natural landscapes) அடிப்படையாகக் கொண்டே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது.



Original Link: Why are the Western Ghats back in headlines?


Share: