இந்தியாவில் துரித உணவுகளுக்கான, தடையற்ற விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டு வருதல் -அருண் குப்தா

அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் (ultra-processed food (UPF)) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (high in fat, sugar, and sodium (HFSS)) உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது ஒரு பொது சுகாதாரத்திற்கு அவசியமான ஒன்றாகும்.


கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, இந்திய அரசு சட்டங்களில் திருத்தம் செய்யத் திட்டமிட்டிருந்தாலும், அத்தகைய தயாரிப்புகள் தொடர்ந்து பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், சில சமயங்களில் அடிமையாக்கும் தன்மையுடனும் வடிவமைக்கப்பட்ட, தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் தொடர்புடைய உடல்நலப் பாதிப்புகளுக்கான சான்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அவை சென்றடைவதைக் கட்டுப்படுத்துவது இனி தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.


அரசியல் தொடர்பான ஒரு யூடியூப் (YouTube) காணொளியைப் பார்த்தாலோ, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Instagram Reels) ஸ்க்ரோல் செய்தாலோ அல்லது செய்தித்தாள் படித்தாலோ, நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்கட், காலை உணவுக்கான தானிய உணவுகள் (cereals), சாக்லேட், இனிப்பு கலந்த பானங்கள் அல்லது பிற அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் (UPF) பொருட்களின் விளம்பரங்களை நீங்கள் காண நேரிடலாம். சமீபத்தில், இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு 'பொட்டலமிட ப்பட்ட' (baked) சிப்ஸ் பிராண்டிற்கான யூடியூப் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரம், நுகர்வோரை ஈர்க்கும் வகையில், பொருளின் சீஸ் மற்றும் தக்காளி சுவைகளையும் அதன் "மொறுமொறுப்பையும்" (crunchiness) வலியுறுத்தியது. ஆனால், அந்தப் பொருள் மால்டோடெக்ஸ்ட்ரின் (maltodextrin), போன்றவை இயற்கையை ஒத்த சுவையூட்டிகள், சுவையூட்டும் பொருட்கள், உப்புக்கு மாற்றான பொட்டாசியம் குளோரைடு (KCl), அமிலத்தன்மையைச் சீராக்கும் பொருட்கள் (627, 631) மற்றும் குழம்பாக்கி - (emulsifier) (322) போன்ற மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPF) தயாரிப்பு என்பதை அது வெளிப்படுத்தவில்லை. 'பொட்டலமிட ப்பட்டது' (baked) போன்ற குறிப்பிட்ட அம்சங்களை முன்னிலைப்படுத்திய அதே வேளையில், அதிக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இருப்பது போன்ற முக்கியமான உடல்நலம் சார்ந்த தகவல்களை அந்த விளம்பரம் மறைத்துவிட்டது. இத்தகைய சந்தைப்படுத்தல் நடைமுறைகள், இந்தத் தயாரிப்புகளுடன் தொடர்புடைய ஊட்டச்சத்து அபாயங்களை மறைத்து, ஆரோக்கியமானது என்ற தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடும்.


வாசகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை நினைவுகூர முடிந்தாலும், ஊடகங்களில் வேறு சில உதாரணங்களும் உள்ளன. ஒரு பெண் திரைப்படப் பிரபலம், அதிக சர்க்கரை கொண்ட தயாரிப்பாக இருந்தபோதிலும், தனது மகனுக்கு பல தானியங்கள் கொண்ட, "மைதா இல்லாத சாக்லேட் தானியத்தை" (no-maida choco cereal) பரிந்துரைப்பதைக் காணலாம். நடிகர் குடும்பம் ஒன்று '12-தானியங்கள்' கொண்ட காலை உணவுத் தானியத்தை விளம்பரப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு பிரபலமான திரைப்பட நடிகர் ஒரு பிஸ்கட்டை “ஒரு நல்ல தேர்வு” என்று அங்கீகரிக்கிறார். இருப்பினும், இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை சர்க்கரை, கொழுப்பு மற்றும்/அல்லது உப்பு அதிகமாகக் கொண்டிருப்பதால், இதுபோன்ற அங்கீகாரங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் செய்திகள் குறித்து கேள்விகள் எழுகின்றன. இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் ஆரோக்கியம் குறித்த தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதோடு, நுகர்வோரையும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரையும், சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்கின்றன.


கட்டமைப்புகளை மறுஆய்வு செய்தல்


தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புகள் பொது நலனுக்குப் போதுமான அளவு சேவை செய்கின்றனவா என்பதை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதற்குத் தெளிவான சட்ட விதிகள் தேவைப்படலாம்.


விளம்பரமானது, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) உட்கொள்வதற்கும் விளம்பரங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மேலும், இத்தகைய உணவுப் பழக்கம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிப்பதோடு வலுவான தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இவ்வகை விளம்பரங்களில் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுவதோடு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவரையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான செய்திகள் இடம்பெறுகின்றன; இது அத்தகைய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்குகிறது. 2024-ம் ஆண்டில், மூன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக 13.2 பில்லியன் டாலர் செலவிட்டன என்ற உண்மை, உணவுப் பொருள் விளம்பரங்களின் அளவையும் சக்தியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விளம்பரம் தேவையை வெறுமனே பிரதிபலிப்பதில்லை. அது தேவையை உருவாக்க உதவுகிறது. இந்தியாவில் மட்டும், ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துரித உணவு (junk food) விளம்பரங்களுக்கு சுமார் ₹170 கோடி செலவிடப்பட்டுள்ளது.


போதைப்பழக்க அறிவியலில் கண்டறியப்பட்ட வழிமுறைகளைப் போன்றே, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) அதிகப்படியான நுகர்வை ஊக்குவிக்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் (UPFs) தொடர்புடைய உடல்நலக் கேடுகள், அவற்றின் தொழில்துறை வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், உணவுத் தொழில் இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கத் தவறுகிறது. சமீபத்தில், சான் பிரான்சிஸ்கோ நகரம் 10 முக்கிய அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) உற்பத்தியாளர்களுக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த நிறுவனங்கள் தங்கள் சந்தைப்படுத்தல் மூலம் குழந்தைகளைக் குறிவைத்ததாக அந்த வழக்கு குற்றம் சாட்டியது. மேலும், அவை மிகவும் கவர்ச்சிகரமான தயாரிப்பு விதிமுறைகளை உருவாக்கி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நல அபாயங்களை போதுமான அளவு வெளிப்படுத்தத் தவறியதாகவும் அது குற்றம் சாட்டியது. மற்ற தீர்வுகளுடன், இந்த வழக்கு மேலும் ஏமாற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளைத் தடுக்கவும், கடந்தகால தவறான விளம்பரங்களின் விளைவுகளைச் சரிசெய்ய சட்டத்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியது.

ஒரு கொள்கை இடைவெளி


இந்திய அரசின் பொதுவான தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பல்துறை செயல் திட்டம் 2017-2022 (National Multisectoral Action Plan (NMAP)), கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) கொண்ட உணவுகளின் விளம்பரங்களுக்குத் தடை/கட்டுப்பாடுகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பல முன்-பொட்டலமிடப்பட்ட உணவுகள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டவை. அவற்றில் நிறங்கள் (colours), சுவைகள் (flavours), குழம்பாக்கிகள் (emulsifiers) மற்றும் இனிப்பூட்டிகள் (sweeteners) போன்ற சேர்க்கைகள் உள்ளன. மேலும், அவை பெரும்பாலும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) வகையைச் சேர்ந்தவை. இந்தப் பிரச்சினை கொள்கைரீதியான கவனத்தைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 2026-ல், பொட்டலமிடப்பட்ட உணவுகளுக்கான எச்சரிக்கை லேபிள்கள் குறித்த ஒரு பொதுநல மனுவிற்குப் பதிலளித்த இந்திய உச்சநீதிமன்றம், சுகாதார உரிமையைப் பாதுகாக்க பொட்டலம் செய்யப்பட்ட பொருட்களின் முன்புறத்தில் அடையாளமிடுவது அவசியம் என்று குறிப்பிட்டது. 2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் குறித்த கவலைகளை எடுத்துரைத்தது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொட்டலமிடப்பட்ட பொருட்களின் முன்புற எச்சரிக்கை லேபிள்கள், விளம்பரக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் (UPFs) வரி விதிப்பு உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 2024-ல், தவறான விளம்பரங்கள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை ஊக்குவிக்கக்கூடும் என்றும், அது கடுமையான உடல்நலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்ற அங்கீகாரம் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


'தி லான்செட் சீரிஸ் ஆன் யுபிஎஃப்ஸ் அண்ட் ஹியூமன் ஹெல்த்' (The Lancet Series on UPFs and Human Health), நவம்பர் 2025-ல் மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. அவை, பொட்டலமிடப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கும், மோசமான உணவுத் தரம், உண்மையான உணவுகளுக்குப் பதிலாகப் புதிய உணவுகள் ஒதுக்கப்படுதல், மற்றும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், வகை-2 நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றா நோய்களின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பை அறிவியல் சான்றுகளுடன் முன்வைத்தன. உலகளாவிய மற்றும் இந்தியத் தரவுகள், அதிகரித்துவரும் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) நுகர்வு, உடல் பருமன் விகிதங்கள் உயர்வதுடன் ஒத்துப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) நுகர்வைக் குறைப்பதற்கான கொள்கைகளை உணவுச் சூழல்களில் வகுக்க வேண்டும் என்று 'தி லான்செட்' இதழ் வலுவாக வாதிட்டதுடன், கூடுதல் சான்றுகளுக்காகக் காத்திருக்காமல், கொள்கை வகுப்பாளர்கள் இப்போதே செயல்பட வேண்டும் என்று பல வல்லுநர்கள் நம்புகிறார்கள்.


உணவுச் சூழலில் சீர்திருத்தம் தேவை


இந்தியாவில் உள்ள குழந்தைகளும் இளம் பருவத்தினரும் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், விளையாட்டு ஒளிபரப்புகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் மூலம் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகளுக்கான விளம்பரங்களுக்குத் தினமும் ஆளாகின்றனர். இந்தத் தொடர்ச்சியான மற்றும் நுட்பமான சந்தைப்படுத்தல், வணிக அடையாள  நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் வாழ்நாள் நுகர்வுப் பழக்கங்களை வடிவமைப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுத் (UPFs) தொழில்துறையின் நோக்கம் தெளிவாக உள்ளது. இலாபத்திற்காக உண்மையான சமையல் அல்லது கலாச்சார உணவுகளைப் பின்னுக்குத் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகள் அல்லது இளைஞர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை, பள்ளிகள், பணியிடங்கள், திரையரங்குகள், பிற பொது இடங்கள் அல்லது வீட்டில்கூட அவர்கள் விரும்பத் தூண்டப்படும் உணவுகளிலிருந்து பிரிக்க முடியாது.


ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் தீவிரமான சந்தைப்படுத்தலால் நிறைந்திருக்கும் ஒரு சூழலில், ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் நடத்தை மாற்றத் திட்டங்கள் மட்டும் வெற்றிபெற முடியாது என்று 'தி லான்செட் சீரிஸ்' நிபுணர்கள் வாதிடுகின்றனர்.


இந்தச் சூழல் ஒரு முக்கியமான அரசியலமைப்புத் தத்துவத்தை வலியுறுத்துகிறது. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள சூழலிலும், மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும்போதும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்துவதும் அரசின் கடமையாகும். இத்தகைய விளம்பரங்களைக் கட்டுப்படுத்த இந்தியா 2017-ல் உறுதியளித்தது. ஆனால், இந்த இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​சந்தை சக்திகளோ அல்லது நிறுவனங்களின் சுய-கட்டுப்பாடோ இதற்குப் போதுமானதாக இருக்காது. எனவே, 2017-ல் திட்டமிடப்பட்டவாறு, விளம்பரச் சட்டங்களில் திருத்தம் செய்வதன் மூலம், அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மீது இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகும்.


பள்ளிகளை, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகள் மற்றும் தவறான ஊட்டச்சத்துத் தகவல்கள் இல்லாத பாதுகாப்பான இடங்களாக மாற்ற விரும்பினால், பள்ளிக்கு வெளியே குழந்தைகளின் உணவுத் தேர்வுகளை வடிவமைக்கும் வணிகச் சூழலைப் புறக்கணிப்பது முரணானதாக அமையும். பள்ளிச் சூழலுக்கும் வெறும் அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது, பிரேசில் சமீபத்தில் மேற்கொண்டது போல தெளிவான கொள்கை வழிகாட்டுதல் தேவை. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மீது வலுவான கட்டுப்பாடுகள் தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) வலியுறுத்தியுள்ளது. சிலி முதல் மெக்ஸிகோ வரையிலான சர்வதேச அனுபவங்கள், தன்னார்வ சுய-கட்டுப்பாடு பெரும்பாலும் பயனற்றதாக இருப்பதையும், அதேசமயம் சட்டப்பூர்வமான கட்டாய நடவடிக்கைகள் அதிக பலனளிப்பதையும் காட்டுகின்றன. குழந்தைகளின் உணவுத் தேர்வுகளில் விளம்பரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பரந்த அளவிலான 'ஆரோக்கியத்திற்கான உரிமை'யின் ஒரு பகுதியாக விளம்பரங்கள் மீது வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.




ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதை, தொழில்துறைக்கு எதிரானதாகவோ அல்லது லாபத்திற்கு எதிரானதாகவோ பார்க்க வேண்டியதில்லை. உண்மையில், இது விளம்பரங்களுக்கான நிறுவனங்களின் செலவைக் குறைக்கக்கூடும். அத்துடன், குறைந்த அளவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உள்ளூர் சந்தைகளை நோக்கித் தங்கள் வளங்களை மாற்றியமைக்க நிறுவனங்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய மாற்றம், எதிர்காலத்தில் நிலையான மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவு முறைகளை உருவாக்க உதவும்.


அருண் குப்தா ஒரு குழந்தைகள் நல மருத்துவர் ஆவார். இவர் 'நியூட்ரிஷன் அட்வகேசி இன் பப்ளிக் இன்ட்ரஸ்ட்' (NAPi) அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், லான்செட் (Lancet) தொடர் வெளியீட்டின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

Original Link: End the free rein of junk food advertising in India 


Share: