தேர்தல்களின் உண்மையான குறைபாடுகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. வரம்பற்ற கட்சிச் செலவுகள், வாக்காளர்களுக்குப் பண விநியோகம், அரசியலைக் குற்றமயமாக்குதல் மற்றும் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை. இதுபோன்ற குறைபாடுகளைக் குறைக்க குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இந்தியாவில், மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பின் 129-ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ளது. இந்த மசோதா, புதிய 82A-வது அரசியலமைப்புச் சட்டப்பிரிவை சேர்ப்பதுடன், 83 மற்றும் 172-வது சட்டப்பிரிவுகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள முன்வைக்கிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு பெறவேண்டும். மேலும், குறைந்தபட்சம் பாதி மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் ஒப்புதலும் (Ratification) முக்கியமான ஒன்றாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் (High-Level Committee (HLC)) பரிந்துரையைத் தொடர்ந்து, அரசு இந்த முன்னெடுப்பை மேற்கொள்ளவதற்கு உறுதியாக உள்ளது. இது போன்ற பெரிய அளவிலான அரசியலமைப்புச் சட்டத் தலையீடு மேற்கொள்ளப்படுவதால், அதனால் கிடைக்கும் எனக் கூறப்படும் நன்மைகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.
உயர்மட்டக் குழுவின் அறிக்கை நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: செலவு சேமிப்பு, மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) காரணமாக ஏற்படும் 'கொள்கையை பற்றி முடிவெடுப்பதில் உள்ள தேக்க' (policy paralysis) நிலையிலிருந்து விடுதலை, அரசு ஊழியர்கள் மீதான பணிச்சுமை குறைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பலன் ஆகியவை ஆகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு பொருளாதார அடிப்படையாக முன்வைக்கப்படும் முக்கிய வாதம் என்னவெனில், பிராச்சி மிஸ்ரா, என். கே. சிங் மற்றும் அவர்களுடன் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரேநேரத்தில் தேர்தல்கள் நடைபெறும் காலகட்டங்களுக்குப் பிறகு, நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.5 சதவீதப் புள்ளிகள் அதிகமாக உள்ளது என்பதாகும். இருப்பினும், இந்த ஒரு ஆய்வின் முடிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல், அதனை மிகுந்த கவனத்துடனும் ஆழமான ஆய்வுடனும் பரிசீலிக்க வேண்டும்.
இந்த ஆய்வு, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டமான 1952–1967 (ஓரளவு 1980-களின் நடுப்பகுதி வரை) மற்றும் அதற்குப் பிறகு வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தை ஒப்பிடுகிறது. ஆனால், புள்ளியியல் ஆய்வுகளுக்குச் செல்லும் முன், வரலாற்று உண்மைகளைப் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்ற அந்தக் காலகட்டமே, பொருளாதார வல்லுநர்கள் “இந்து வளர்ச்சி விகிதம்” (Hindu Rate of Growth) என்று குறிப்பிடும் காலமாக இருந்தது. அப்போது இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.5% மட்டுமே இருந்தது. மேலும், அது உரிமம்–அனுமதி ஆட்சி (Licence Raj), இறக்குமதி மாற்றுக் கொள்கை (Import Substitution) மற்றும் மூடிய பொருளாதாரம் (Closed Economy) ஆகியவற்றின் காலமாகவும் இருந்தது. மாறாக, இந்தியா உண்மையான அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்த காலம், வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தில்தான் வந்தது. 2003 முதல் 2011 வரை, ஆண்டுக்கு 8%–9% என்ற உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவானது. அந்தக் காலத்தில், மாநிலத் தேர்தல்கள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதால்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்ற வாதத்தை இந்த வரலாற்று உண்மைகள் எளிதில் ஏற்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. மேலும், வர்த்தக தாராளமயமாக்கல் (Trade Liberalisation), தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) வளர்ச்சி, உலகளாவிய மூலதனப் பரிமாற்றங்கள் (Global Capital Flows), நிதி தொடர்பான ஆழப்படுத்தல் (Financial Deepening) மற்றும் 1991-ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்ற மிகப் பெரிய காரணிகளை புறக்கணித்து, தேர்தல் முறையை மட்டும் பொருளாதார வளர்ச்சிக்கான காரணமாகக் கூறமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த ஆய்வின் முடிவுகளிலேயே, பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அதிக நிதிப் பற்றாக்குறை (Higher Fiscal Deficits) மற்றும் அரசின் அதிக செலவினங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையான கட்டமைப்புரீதியான பொருளாதார முன்னேற்றமா? அல்லது அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை முன்னிட்டு அரசுச் செலவுகள் அதிகரிக்கும் ‘அரசியல் வணிகச் சுழற்சியா என்பதன் ஒரு சுருக்கப்பட்ட வடிவமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் சொந்த வரலாற்று அனுபவத்திற்கே முரணாக இருக்கும் வெறும் தொடர்பு (Correlation) அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை வைத்து, இது போன்ற மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தை நியாயப்படுத்த முடியாது.
தேர்தல் செலவினங்களைக் குறைக்கும் என்ற வாதமும், ஒரு எளிய கேள்வியை எழுப்பும்போது பலவீனமடைகிறது. உண்மையில் தேர்தலுக்காக அதிகமாகச் செலவிடுவது யார்? தேர்தல் ஆணையத்தின் கணக்குகளின்படி, அரசின் தேர்தல் செலவு, அதன் மொத்த பட்ஜெட்டில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, "அதிகப்படியான தேர்தல் செலவு" (excessive) வேட்பாளர்களாலும் கட்சிகளாலும் செய்யப்படுகிறது, அரசால் செய்யப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட (Audited) கணக்குகளின்படி, வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகக் காட்டும் தேர்தல் செலவு, அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பில் (Permissible Ceiling) சராசரியாக 50% மட்டுமே ஆகும். ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், வேட்பாளர்கள் அதிகமாகச் செலவிடவில்லை. மாறாக, குறைவாகவே செலவிட்டதாகக் காட்டுகின்றனர். இதிலிருந்து தவிர்க்க முடியாத ஒரு முடிவு வெளிப்படுகிறது. உண்மையான தேர்தல் செலவினம் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இடம்பெறவில்லை. அது கணக்கில் வராத, கண்காணிக்க முடியாத கறுப்புப் பணமாக (Black Money) செலவிடப்படுகிறது. சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் (Centre for Media Studies (CMS)) மதிப்பீட்டின்படி, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மட்டும் ரூ.1,00,000 கோடிக்கும் அதிகமான கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது போன்ற பிரச்சினையை தேர்தல் கால அட்டவணையை (Electoral Calendar) மாற்றுவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில், பணம், அரசியல் ஆதரவு மற்றும் சலுகை வழங்கும் நடைமுறை (Patronage), வெளிப்படைத்தன்மையின்மை (Opacity) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அதே அரசியல்–பொருளாதார அமைப்பு, தேர்தல்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றாலும் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றாலும் மாறுவதில்லை. எனவே, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" தேர்தல் செலவினத்தைக் குறைப்பதில்லை. மாறாக, அந்தச் செலவினத்தை ஒரே காலகட்டத்தில் குவிப்பதற்கே வழிவகுக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் குறித்து: தேர்தல் நடத்தை விதிகள், ஒவ்வொரு தேர்தலுக்கும் 45 முதல் 60 நாட்கள் வரை அரசாங்கம் புதிய அறிவிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இந்தியாவில் மாநிலத் தேர்தல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சில பகுதிகள் நான்கு மாதங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பிடுகிறது. தேர்தல் அல்லாத தேர்தல் விதிகளின்கீழ், அந்தத் தொடர்ச்சியான கட்டுப்பாடு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தேசிய கட்டுப்பாடக மாறுகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளை ஒரே நேரத்தில் நிறுத்துகிறது. இந்த இடையூறு முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை. அது தேசிய அளவில் நிகழும்போது, கடுமையானதாக உள்ளது. இதை "கொள்கைக் கட்டுப்பாடு" என்று அழைப்பது, ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிர்வாகச் செயலிழப்புடன் குழப்பிக்கொள்வதாகும்.
ஆழமான ஆட்சேபனைகள் அரசியலமைப்பு தொடர்பானவையாகும். கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும், அரசியலமைப்புத் திருத்தங்கள்கூட இந்த அடிப்படை கட்டமைப்பை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மூன்று குறிப்பிட்ட முரண்பாடுகள் எழுகின்றன. முதலாவதாக, நாடாளுமன்ற ஆட்சிமுறை என்பது கூட்டுப் பொறுப்புக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. சட்டமன்றத்தின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை மட்டுமே ஒரு அரசு தொடரமுடியும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை இழந்தால், அதற்கு மக்கள் அளித்த சட்டபூர்வமான ஆணையின்றி (Legitimate Mandate) தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டிய நிலை அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை (President’s Rule) அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துடனும், அதற்கு மாற்றாக மற்றொரு கட்சிக்கு ஆதரவாக ஒரே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றுக் கூறப்படும் ஒரு கூற்று, உயர் சட்ட மன்றத்தின் முன்மொழியப்பட்ட “கட்டமைப்பு நம்பிக்கையில்லாத் தீர்மானம்” (constructive no-confidence motion), ஜெர்மனியிலிருந்து பெறப்பட்டதாகும். மேலும் இது இந்தியாவின் நாடாளுமன்ற மரபைச் சிதைக்கிறது. விதி சட்டக் கொள்கை மையத்தின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போல, இது மக்கள் ஆதரவு இல்லாத நிலையிலும், சிறுபான்மை அரசுகள் பதவியில் தொடர ஊக்கமளிக்கும்.
இரண்டாவதாக, முதல் ஒருங்கிணைந்த தேர்தல் சுழற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு, பல மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டியிருக்கும். ஆனால், அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது சட்டப்பிரிவுகளில் வேண்டுமென்றே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இல்லை (no longer) என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சபை, எந்த அரசின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த வார்த்தைகளைச் சேர்த்தது. எனவே, புதிய மக்கள் ஆணை பெறாமல் பதவிக்காலத்தை நீட்டிப்பது, வாக்காளர்களுடன் செய்யப்பட்ட ஜனநாயக ஒப்பந்தத்தை (Voters’ Contract) மீறுவதாகும். அதேபோல், பதவிக்காலத்தைக் குறைப்பது, வாக்காளர்கள் வழங்கிய காலவரையறையை அவர்களிடமிருந்து பறிப்பதாகும். எந்த வழியிலும், மக்களின் விருப்பமே (Electorate’s Will) புறக்கணிக்கப்படுகிறது.
மூன்றாவதாக, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவது, மாநில அரசியல் கட்சிகளுக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கும் (Federal Character) கட்டமைப்புரீதியாக பாதகமானதாக அமையும். ஆய்வுகள், தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும்போது “அலை விளைவு” (Wave Effect) தொடர்ந்து ஏற்படுவதை காட்டுகின்றன. வாக்காளர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலும் ஒரே அரசியல் கட்சிக்கே வாக்களிக்கும் போக்கு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பெரிய தேசியக் கட்சிகள் குறிப்பிடத்தக்க முன்னிலை பெறுகின்றன. விதர்பாவின் வேளாண் நெருக்கடி, கேரளாவின் கடலோர மக்களின் வாழ்வாதாரம், அசாமின் வெள்ள மேலாண்மை போன்ற மாநில பிரச்சினைகள், மாநிலக் கட்சிகள் மூலமாகவே நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரல் பெறுகின்றன. தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது, இது போன்ற மாநிலக் கட்சிகளின் குரல்களை தேசிய அளவிலான தேர்தல் பிரச்சாரத்தின்கீழ் மறைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கட்டமைப்பு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மூன்றாம் அடுக்கு அரசாங்கத்திற்கான தேர்தல்களையும் புறக்கணிக்கிறது. 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தின்கீழ் அல்லாமல், மாநிலத் தேர்தல் ஆணையங்களின்கீழ் கொண்டு வந்து, அவற்றின் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளித்தன. இவை சாதாரணப் போட்டிகள் அல்ல. மும்பை, புனே மற்றும் பெங்களூரு ஆகியவை பல இந்திய மாநிலங்களைவிட பெரிய நிதிநிலை அறிக்கைகளைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் தேர்தல்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் போர்களாகும். அவற்றை ஒரே நாடு ஒரே தேர்தலிற்குள் இணைப்பது இந்தத் திருத்தங்களின் நோக்கத்தை மீறுவதாகும். அவற்றை தனியாக வைத்திருப்பது ஒரே நாடு ஒரே தேர்தலின் நியாயத்தன்மையையே பலவீனப்படுத்துகிறது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தலின்போது, கணிசமான தேர்தல் செலவுகள், பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்துதல்மற்றும் நிர்வாகப் பணிகளில் ஏற்படும் இடையூறுகள் தொடர்ந்து இருக்கும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிக அளவில் செலவு சேமிக்கப்படும் என்ற வாதம், பெரும்பாலும் மாயை தோற்றம் (Illusory) கொண்ட ஒன்றாகவே இருந்து விடுகிறது.
தேர்தல் முறையில் உள்ள உண்மையான அடிப்படை குறைபாடுகள் எதுவும் தீர்க்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் வரம்பற்ற தேர்தல் செலவுகள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல், அரசியலின் குற்றமயமாக்கல் மற்றும் அரசின் நிர்வாக இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்குத் துல்லியமான தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அனைத்து நன்கொடைகளையும் கட்டாயமாக தெரிவித்தல், நடைமுறையில் கண்டிப்பாக அமல்படுத்தக்கூடிய தேர்தல் செலவு வரம்புகள், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்தல் மற்றும் உண்மையான தன்னாட்சி கொண்ட தேர்தல் ஆணையத்தை உருவாக்குதல் போன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானதாகின்றன. இவை அனைத்தையும் இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி (Federalism) மற்றும் நாடாளுமன்ற ஆட்சிமுறைகளை மாற்றாமலேயே நடைமுறைப்படுத்த முடியும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இந்திய ஜனநாயகத்தின் தேர்தல்கால அட்டவணையை (Democratic Calendar) மறுசீரமைக்கிறது. ஆனால், தேர்தல் முறையில் உண்மையாக உள்ள அடிப்படை குறைபாடுகளை அது சரிசெய்யவில்லை.
இந்தக்கட்டுரையை எழுதியவர்கள் முறையே, புனே சர்வதேச மையத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஆவர்.
Original Link: One Nation, One Election will not fix what is broken.