சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் இந்தியாவின் பலவீனமான சூழல் மண்டலங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன? - ரவீனா பனேட்டா

பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச்சுற்றி ஏன் 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள்' (Eco-Sensitive Zones (ESZs)) அறிவிக்கப்படுகின்றன? பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஏன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன? மேலும், காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் குழுக்களின் பரிந்துரைகள் எவ்வாறு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலக்கொள்கையை வடிவமைத்துள்ளன? 


தற்போதைய செய்தி 


குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு  போன்ற மாநிலங்களில் அதிகமாக உள்ள பல்லுயிர் பெருக்க மையமான மேற்குத்தொடர்ச்சி மலையின் 56,825.7 சதுர கிலோமீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (ESA) அறிவித்து, மத்திய அரசு வரைவு அறிவிக்கையின் 7-வது பதிப்பை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களின் எல்லைகளை வரையறுப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இடையே தொடரும் கருத்து வேறுப்பாட்டின்  காரணமாக 6-வது பதிப்பு வெளியிடுவது காலாவதியானது.


முக்கிய அம்சங்கள்:


1. இந்த மாநிலங்களில் முன்மொழியப்பட்டுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள், குஜராத்தில் 449 சதுர கி.மீ., மகாராஷ்டிராவில் 17,340 சதுர கி.மீ., கோவாவில் 1,461 சதுர கி.மீ., கர்நாடகாவில் 20,668 சதுர கி.மீ., தமிழ்நாட்டில் 6,914 சதுர கி.மீ., மற்றும் கேரளாவில் 9,993.7 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன.


2. குஜராத் மற்றும் கோவா மாநிலங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (ESA) இறுதி செய்யப்பட வேண்டிய பகுதிகள் குறித்து ஒருமித்தக் கருத்தை எட்டியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சமீபத்தில் அளித்துள்ள திருத்தப்பட்ட முன்மொழிவு  பரிசீலனையில் உள்ளது. கர்நாடகா மாநிலம் இன்னும் வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுடன் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் தகவல் முரண்பாடுகளைத் தீர்க்கும் பணியை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


3. மேலும், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் தலைமையிலான, ஏப்ரல் 2022-ல் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு, மத்திய அரசு ஜூன் மாதம் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. பேரிடர் அபாயம் நிறைந்த சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு அம்சங்களையும், அந்தப்பகுதியின் உரிமைகள், சலுகைகள், தேவைகள் மற்றும் வளர்ச்சி வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆறு மாநில அரசுகளின் கருத்துக்களை இந்தக்குழு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.


4. முந்தைய அறிவிப்பைப் போலவே, தற்போதைய வரைவு அறிவிப்பும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் (ESAs) சுரங்கப்பணிகள், கல் குவாரி மற்றும் மணல் அள்ளுதல் ஆகியவற்றிற்கு முழுமையான தடை விதிக்கவும், அத்துடன் இறுதி அறிவிப்பு வெளியாகும் தேதி அல்லது குத்தகை முடிவடையும் தேதி  இவற்றில் எந்தப்பணி முன்னர் மேற்கொள்ளபட்டதோ அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள அனைத்து சுரங்கப் பணிகளையும் படிப்படியாக நிறுத்தவும் பரிந்துரைத்துள்ளது.


5. மேலும், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் (ESZ) புதிய அனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்களை விரிவுபடுத்துவதற்கும் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் ‘சிவப்பு வகை’ (Red Category) தொழில்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கமும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் தடை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிடப் பரப்பளவு கொண்ட புதிய கட்டிடங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கங்கள், அதேபோல் 50 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட புதிய மற்றும் விரிவாக்க நகரித் திட்டங்கள் ஆகியவையும் தடை செய்யப்படும் என்று அந்த வரைவு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து அமைக்கப்பட்ட குழுக்கள்


மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் சூழலியல் உணர்திறன் மிக்க பகுதிகளை வரையறுக்கும் முயற்சிகள், 2010-ஆம் ஆண்டில் மாதவ் கட்கில் குழு (Madhav Gadgil committee) அமைக்கப்பட்டதன் மூலம் தொடங்கின. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சூழலியலாளர்களில் ஒருவரான கட்கில், ஆகஸ்ட் 2011-ல் தனது குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.  அந்த அறிக்கையில், 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முழு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையும் சூழலியல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்தப்பகுதிகளின் சூழலியல் தன்மைக்கு ஏற்ப பல்வேறு அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு 2012 ஆகஸ்ட் மாதம் அந்த அறிக்கையை, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டக்குழுவிற்கு அனுப்பியது. கள ஆய்வுப் பணிக்குப் பிறகு, 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்தது.


இதன் பகுப்பாய்வில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் 60% ஏற்கனவே 'கலாச்சார நிலப்பரப்பாக' (cultural landscape) இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப்பகுதி மனித நடவடிக்கைகளுக்கு மேற்கொள்வதற்கும், குடியிருப்புகள், தோட்டப்பயிர்கள் அல்லது வேளாண்மை சார்ந்த நிலப்பயன்பாட்டைக் கொண்டதாகவும் இருந்தது. மீதமுள்ள 40% பகுதி 60,000 சதுர கி.மீ 'இயற்கை நிலப்பரப்பாக' (natural landscape) வகைப்படுத்தப்பட்டது. இந்தப்பகுதிகள் அதிக உயிரியல் வளம், குறைந்த மனித தலையீடு, குறைந்த மக்கள் அடர்த்தி மற்றும் தேசியப்பூங்காக்கள், புலிகள் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை கொண்டுள்ளது.


இந்த 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சூழலியல் உணர்திறன் மண்டலமாக (ESA) அறிவிக்கவும், அந்தப் பகுதியில் சுரங்கம் தோண்டுதல், கல்குவாரி, சிவப்பு வகை மாசுபடுத்தும் தொழில்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றைத் தடை செய்யவும் குழு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 6  மாநிலங்களில் பரவியுள்ள 56,825.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சூழலியல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கும் முதல் வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டது.




இருப்பினும், 2022-ஆம் ஆண்டு வரை நீடித்த ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால், மத்திய அரசு, மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு மற்றும் அந்தப்பகுதியின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 6 மாநிலங்களின் ஆட்சேபணைகளை மறுபரிசீலனை செய்யும் பணியுடன் ஒரு புதிய நிபுணர் குழுவை அமைத்தது.


சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் (eco-sensitive zones) என்றால் என்ன?


6. 2002-2016-ஆண்டுகளின், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 'தேசிய வனவிலங்கு செயல் திட்டத்தின்' படி, தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் எல்லைகளிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள நிலப்பகுதிகள் 'சுற்றுச்சூழல்ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மண்டலங்கள்' (Eco-Sensitive Zones (ESZ)) என்று அறிவிக்கப்பட வேண்டும். பொதுவாக எவ்வித கட்டுமானப்பணிகளும் அனுமதிக்கப்படாத இந்தப் பூங்காக்கள் மற்றும் சரணாலயப் பகுதிகளைச் சுற்றியுள்ள செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இது போன்ற  மண்டலங்கள்  உருவாக்கப்படுகின்றன.


7. 10 கி.மீ. விதி ஒரு பொதுவான கொள்கையாகச்செயல்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாட்டின் அளவு மாறுபடலாம். சுற்றுச்சூழல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 'உணர்திறன் மிக்க வழித்தடங்கள்' (sensitive corridors) அமைந்திருக்கும் பட்சத்தில், 10 கி.மீ தாண்டி உள்ள பகுதிகளையும் மத்திய அரசால் உணர்திறன் கொண்ட வழித்தடங்களாக அறிவிக்க முடியும்.


8. Live Law செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஜூன் 3, 2022 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2011-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்களை 'நியாயமானவை' என்று சுட்டிக்காட்டியதுடன், அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைகளிலிருந்து கட்டாயமாக 1 கி.மீ தூரத்திற்கு உணர்திறன் கொண்ட வழித்தடத்தை கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



9. இருப்பினும், முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களுக்குள் (ESZs) மனித குடியிருப்புகள் அமைவது குறித்த கவலைகளை இந்த உத்தரவு எழுப்பியதால், சில வழிகாட்டுதல்களைத் திருத்தக் கோரி மத்திய அரசு நீதிமன்றத்தை அணுகியது. 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தனது முந்தைய உத்தரவில் மாற்றம் செய்து, அந்த உத்தரவு நடைமுறையில் இருந்தால் அந்தப்பகுதிகளில் சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை அரசு அமைப்பதைத் தடுக்கும் என்று குறிப்பிட்டது.


சூழலியல் உணர்திறன் மண்டலங்ககளை (Ecologically Sensitive Areas (ESA)) அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும்  சட்ட விதிகள்


— 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 5 C(1) -ன் படி, வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காகத் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது 'தேசிய வனவிலங்கு வாரியத்தின்' (National Board for Wildlife) பணியாகும்.


1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 3, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதன் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலின் தரத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) அதிகாரம் வழங்குகிறது.


— சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், 1986 (Environment (Protection) Rules(EPR))-ன் பிரிவு 5(1), ஒரு பகுதியின் உயிரியல் பன்முகத்தன்மை, ஒரு பகுதிக்கான மாசுபடுத்திகளின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்புகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலப் பயன்பாடு மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருப்பது போன்ற கருத்துகளின் அடிப்படையில், தொழிற்சாலைகள் அமைவதையும், சில செயல்பாடுகள் அல்லது செயல்முறைகளை மேற்கொள்வதையும் மத்திய அரசு தடைசெய்யலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறது.



சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன?


10. 2011-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி,  அருகில் நடைபெறும் சில மனிதச் செயல்பாடுகளால் "பலவீனமான சூழல் அமைப்புகளுக்கு" ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைப்பதற்காக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு "அபாயங்களை தாங்கும் திறன் கொண்டவையாக" (fragile ecosystems) சூழல் மண்டலங்கள் (ESZs) உருவாக்கப்படுகின்றன.


11. மேலும், இந்த மண்டலங்கள் அதிக பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளுக்கும், குறைவான பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளுக்கும் இடையிலான மாற்று மண்டலமாக (Transition Zone) செயல்படுகின்றன. வழிகாட்டுதல்கள் மேலும், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் அந்தப்பகுதியில் வசித்து வரும் மக்களின் தினசரி வாழ்க்கை பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக அல்ல. மாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப்பாதுகாத்து, அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவே (Refine the Environment Around Them) உருவாக்கப்பட்டவை என்று தெளிவுபடுத்துகின்றன.


12. இரண்டாம் நிலை சட்டப்பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மண்டலங்கள் (ESZs), உட்கட்டமைப்புத் திட்டங்களின் எதிர்மறையான தாக்கங்களுக்கு எதிராக ஒரு தடுப்பாகச் செயல்படுகின்றன. ஏனெனில், பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் உள்ள வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி வெளியேறுகின்றன. மேலும், அவை அந்தப் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களையும் சுற்றுச்சூழலியலையும் பாதுகாக்கின்றன.


13. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் (ESZs) வணிகச்சுரங்கம், மர அறுவை ஆலைகள் (Sawmills), அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்கள்  மற்றும் பெரிய நீர்மின் திட்டங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டவையாகவும், அனுமதிக்கப்பட்டவையாகவும் ஊக்குவிக்கப்படுபவையாகவும் (Promoted) உள்ளன.




மேற்குத் தொடர்ச்சி மலைகள் — சூழல் உணர்திறன் மண்டலம் குறித்த விவாதம்


1. மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தியாவில் அமைந்துள்ள உலகின் 36 உயிரியல் பன்முகத்தன்மை மிகுந்த பகுதிகளில் நான்கில் ஒன்றாகும். மற்ற மூன்று உயிரியல் பன்முகத்தன்மை மையங்கள் இமயமலை, இந்தோ–பர்மா பகுதி மற்றும் சுண்டாலாந்து ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள், இந்தியத் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் பரவியுள்ளன.


2. இமயமலையை விடப் பழமையானதும், 1,600 கி.மீ. நீளமுள்ளதுமான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், தனித்துவமான தாவரங்களையும் வனவிலங்குகளையும் கொண்டுள்ள உலகின் 8 மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றாகும். வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள், புல்வெளிகள், மிரிஸ்டிகா சதுப்பு நிலங்கள் (Myristica swamps) மற்றும் தனித்துவமான சோலைவனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சூழல் அமைப்புகள் இங்கு உள்ளன. இந்தச் சூழலியல் அமைப்புகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைத் கொண்டுள்ளதுடன், அதிக அளவிலான உள்ளூர் இனங்களை  வெளிக்காட்டுகின்றன.


3. மேற்குத்தொடர்ச்சி மலைக் வனப்பகுதிகளில் ஏறத்தாழ 2,000 தாவர இனங்கள், 84 மீன் இனங்கள், 87 இருவாழ்வி இனங்கள், 89 ஊர்வன இனங்கள், பல பறவை இனங்கள் மற்றும் இந்தப்பகுதியில் மட்டுமே காணப்படும் 12 பாலூட்டிகள் உள்ளன. சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடு மற்றும் புலி போன்ற பல அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்கள் இங்கு அதிகமாக காணப்படுவதால், இந்தப்பகுதி இந்தியாவிற்கும் உலகிற்கும் மிக முக்கியமான இயற்கைச் சொத்துக்களில் ஒன்றாக இருந்து வருகின்றன.


4. சூழலியல்ரீதியாக, மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியத் தீபகற்பத்தின் காலநிலையை ஒழுங்குபடுத்தும் மிகவும் முக்கியமான இயற்கை பாதுகாப்பு அமைப்பாக விளங்குகின்றன. தென்மேற்கு பருவமழைக்கு தடையாக செயல்படும் இந்த மலைத்தொடர், அதிக மழைப்பொழிவு கிடைப்பதை உறுதி செய்து, அடர்ந்த பசுமைக்காடுகள் வளரவும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள ஏராளமான நதிகள் உருவாகவும் முக்கியப் பங்காற்றுகிறது.


5. மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி , மாண்டோவி, பெரியாறு மற்றும் ஷராவதி உள்ளிட்ட பல முக்கிய நதிகளின் பிறப்பிடமாக விளங்குகின்றன. எனவே, இம்மலைத்தொடர் “இந்தியத் தீபகற்பத்தின் நீர் கோபுரம்” (Water Tower of Peninsular India) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

 

Original Link : How do eco-sensitive zones protect India’s fragile ecosystems? -Raveena Baneta

Share: